குடும்ப உறவைச் சேர்ந்து நட

தமிழர் சமயம் 


கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய. - (தொல்காப்பிய சூ. 154)

பொருள்: தன்னைக் கொண்டவனைப் பேணித்தொழுதெழுதல் முதலாகத் தன் உயிரினும் சிறந்தவனாகக் குறிக்கொண்டொழுகும் மனத்திண்மையும் நிறைந்தியலும் காதற் பண்பும் நன்றின் பாலுய்க்கும் அறிவானே ஒழுகுதலும், மென்மைத் தன்மையாற் பிறர் குறையினைப் பாராட்டாத பொறையுடைமையும் மறைபிறரறியாமை நெஞ்சினை நிறுக்கும் திறனும், இன்னலும் இடும்பையும் நோக்காமல் ஒல்லும் வகையான் விருந்தினரைப் போற்றியளித்தலும் தலைவற்கும் தனக்கும் கேளிராயினாரையும் உறவாயின ரையும், ஆட்சிக்கு அங்கமாயினாரையும் பேணிக்காத்தலும் அவை போல்வனவாகிய தெய்வத்தையும் தென்புலத்தாரையும் தலைவனொடு அமர்ந்து ஓம்புதலும் குலமரபான் வந்த காமக்கிழத்தியரை வெறாது அவரான் மதிக்கப்பெறுதலும் பாணர் முதலாய வாயில்கட்கு அருளுதலும் ஊடலும் ஊடல்உணர்தலும் ஆகிய சால்புகளமைந்த தலைவியின் மாட்சிமைகளை முன்னின்று தலைவன் முகனமர்ந்து செவிமடுக்கும் முறையமையான் கூறும் கூற்றுக்கள், மனையகத்துப் புக்கு உரையாடும் மரபுரிமையுடைய பாணன் பாடினி, முதலாய வாயில்கட்கு உரியவாகும்.

இஸ்லாம் 

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி))

அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான். - (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புகாரி)

கிறிஸ்தவம் 

ஆதாரம் : புகாரி, முஸ்லிம்"கடவுளை நேசிப்பதாகக் கூறிக்கொண்டு சகோதரனையோ சகோதரியையோ வெறுக்கிறவன் பொய்யன். ஏனென்றால், தான் கண்ட சகோதரனையும் சகோதரியையும் நேசிக்காதவன், தாங்கள் காணாத கடவுளை நேசிக்க முடியாது."  (யோவான் 4:20)

"கடவுளின் மக்கள் ஒற்றுமையாக வாழும்போது அது எவ்வளவு நல்லது மற்றும் இனிமையானது!" (சங்கீதம் 133:1)


8 கருத்துகள்:

  1. குடும்ப உறவுகளை மட்டுமல்ல, தாய் தந்தை மனைவி மக்களுடன் கூட பிரிவினையை இன்றைய சமூகம் சந்தித்து வருகிறது. அவ்வாறு அவர்கள் திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், யூடியூப் காணொளிகள் என அனைத்து ஊடகங்களிலும் உறவுகளை தரம் தாழ்த்தி பரப்புரை செய்யும் நிலை தொடருகிறது. உறவுகளோடு இணங்கி வாழாத மனிதன் எப்படி பிற மனிதர்களோடு இணக்கமாக வாழ்வான்? இந்த கசப்புகளும் சிறு தொல்லைகளையும் தாங்க முடியாதவன், தனிமை என்று இறக்கி வைக்க இயலாத துன்ப நிலைக்கு ஒருநாள் ஆளாவான். அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் அதுதான் இன்று நடைபெறுகிறது. உறவுகள் கெட்டவர்களாகவே இருக்கட்டும் நாம் நல்லவர்களாக தடுப்பது எது? ஒரு நேர்மறை சிந்தனை கொண்ட மனிதன் ஒரு ஊரை அல்ல ஒரு நாட்டையும் வசீகரிக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

    (அல்குர்ஆன் 47:22)

    பதிலளிநீக்கு
  3. ‘யார் தம்முடைய ஆயுளும், செல்வமும் அதிகப்பட விரும்புகிறாரோ அவர் தம் உறவினர்களைச் சேர்த்துக் கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
    நூல்: புகாரி-2067

    பதிலளிநீக்கு
  4. உறவினர்களை வெறுப்பவன் சுவனம் புக மாட்டான் (புகாரி, முஸ்லிம்)

    எவன் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டானோ அவன், தன் உறவினர்களை இணைத்து நடப்பானாக! (புகாரி, அபூதாவூத், திர்மிதீ)

    பதிலளிநீக்கு
  5. குடும்பத்தார்களை பராமரிக்காமல் விட்டுவிடுவது(குடும்பத்தார்களை பராமரிக்காமல் விட்டுவிடுவது ஒருவனின் பாவத்திற்கு போதுமானது- முஸ்லிம், அஹ்மது)

    பதிலளிநீக்கு



  6. இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக் மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர். (17:26)


    மூதுரை பாடல் 17 :
    அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
    உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; –அக்குளத்தில்
    கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
    ஒட்டி உறவார் உறவு.

    பொருள்:

    குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும்
    பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர். அந்தக் குளத்திலேயே அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து கொள்பவர்களே நம் உறவு.



    பாடல் 20 :
    உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
    உடன் பிறந்தே கொல்லும் வியாதி–உடன் பிறவா
    மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
    அம் மருந்து போல் வாரும் உண்டு.

    ” இராவண காவியம் ” படிக்க இங்கே …

    பொருள்:

    வியாதி நம்முடனேயே பிறந்து நம்மைக் கொன்று
    விடுகிறது. எனவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு என்று நினைக்க முடியாது. உடன் பிறக்காது எங்கோ பெரிய மலையில் இருக்கும் மருந்து நம் வ்யாதியைத் தீர்ப்பது போல, அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும்.



    உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்(உலக நீதி 60)

    பதிலளிநீக்கு
  7. அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
    உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
    கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
    ஒட்டி உறவார் உறவு. மூதுரை

    பொருள்: குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும்
    பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு
    விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர். அந்தக் குளத்திலேயே
    அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல்
    கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து
    கொள்பவர்களே நம் உறவு.

    பதிலளிநீக்கு
  8. உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
    உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
    மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
    அம் மருந்து போல் வாரும் உண்டு. மூதுரை

    பொருள்: வ்யாதி நம்முடனேயே பிறந்து நம்மைக் கொன்று
    விடுகிறது. எனவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு
    என்று நினைக்க முடியாது. உடன் பிறக்காது எங்கோ பெரிய
    மலையில் இருக்கும் மருந்து நம் வ்யாதியைத் தீர்ப்பது போல,
    அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு