அல்லாஹ்வே மிக அறிந்தவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அல்லாஹ்வே மிக அறிந்தவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நமது விருப்பமும் இறைவனின் நாட்டமும்

தமிழர் சமயம் 

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல் - (நல்வழி 27)

விளக்கம்: ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும், நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும். 
 
இஸ்லாம் 

நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்;
நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்;
நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன் - (அல்-குர்ஆன் 2:216)

கிறிஸ்தவம் 

"ஏனெனில், உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன், உங்களுக்கு எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தருவதற்காக நலனுக்காகத் திட்டமிடுகிறேன், தீமைக்காக அல்ல என்று கர்த்தர் கூறுகிறார். அப்போது நீங்கள் என்னைக் கூப்பிட்டு, என்னிடம் வந்து ஜெபிப்பீர்கள், நான் உங்களுக்குச் செவிசாய்ப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்போது நீங்கள் என்னைத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள். - (எரேமியா 29: 11-13) 

உன் சுயபுத்தியில் சாயாதே, உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு; உன் வழிகளிலெல்லாம் அவரை ஏற்றுக்கொள், அவன் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவான். - (நீதிமொழிகள் 3:5-6)