அகத்தியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகத்தியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அகத்தியர்

அகத்தியர் என்பவர் தமிழுக்கு இலக்கணம் எழுதிய முனைவன். ஆனால் அந்நூல் இன்று கிடைக்கப் பெறவில்லை. அகத்தியர் என்ற பெயரில் வரலாற்றில் பலர் காணப்படுகின்றனர். அதோடு அவர்கள் வெவ்வேறு இனத்தையும் தத்துவத்தையும் கொண்டவர்களாக இருந்து உள்ளனர்.

வாசி: அகத்தியர்

அகத்தியரின் பெயரில் பொய்யாக நூல்கள் எழுதப்பட்டதற்க்கான் ஆதாரம்?

வாசி: அகத்தியர் 100

எனவே அகத்தியர் பெயரில் உள்ள நூல்கள் அனைத்தும் நாம் அறிந்த தமிழுக்கு உரை செய்த அகத்தியர் எழுதியதல்ல. எனவே பொய் அகத்தியர்கள் எழுதிய நூல்களில் பொருள் குற்றம் இருக்கலாம் அல்லது நூலின் நோக்கமே பிழையாக இருக்கலாம் என்று அறிதல் நலம்.

ஒருவேளை அகத்தியரின் உண்மை நூல் ஒன்றை நாம் கண்டறிந்தால் அதோடு மற்ற நூல்கள் முரண்படுகிறதா என்ற கோணத்திலும், தொல்காப்பியரின் முதல் நூல் வழினூல் விதியை அடிப்படையாக கொண்ட ஆராய்ந்தால் பொய் நூல்களை கண்டறிய முடியும். 

அகத்தியர் ஆய்வு நூல்



அகத்தியர் பற்றி அகத்தியம் 

நடுவுநில்லாது இவ்வுலகஞ் சரிந்து
கெடுகின்றது எம்பெருமான் என்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே.
 
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல் பாலவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. (இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம், பாடல் எண் : 2)

பொழிப்புரை:`புறத்தும் அகத்தும் சுடர் விட்டுளன் எங்கள் சோதி` (தி.3 ப.54 பா.5) என்றபடி, புறத்தும், அகத்தும் தீயை உண்டாக்கி வளர்க்கின்ற, மேற்றிசைக்கண் ஞானாக்கினியாய் விளங்கிய அகத்திய முனிவர் தென்றிசையிலும், தவம் உடையவரே காணத்தக்காராக அரிதில் விளங்குகின்ற தவக் கோலத்தை உடைய முனிவனாகிய சிவபெருமான் வடதிசையிலும் வீற்றிருந்து உலகமுழுவதையும் விளக்குகின்ற ஒளியாய்த் திகழ்கின்றார்கள்.

 மனுதர்மம் கூட அகத்தியர் பற்றி பேசுகிறது

22. Beasts and birds recommended (for consumption) may be slain by Brahmanas for sacrifices, and in order to feed those whom they are bound to maintain; for Agastya did this of old.

22. (நுகர்வதற்கு) பரிந்துரைக்கப்பட்ட மிருகங்கள் மற்றும் பறவைகள் பிராமணர்களால் பலிகளுக்காகவும், தாங்கள் பராமரிக்க வேண்டியவர்களுக்கு உணவளிப்பதற்காகவும் கொல்லப்படலாம்; அகஸ்தியர் இதை பழங்காலத்திலிருந்தே செய்தார். மனுதர்மம்