உறவை பேணுதல்

உறவுகளை இழிவாக பேசும் இந்த இக்காலத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் உறவுகளை சார்ந்து நடத்தல் நமது நல்வாழ்வுக்கு மிக இன்றி அமையாதது. இரத்த உறவுகளை அனுசரித்து இணக்கமாக நடப்பதில் உள்ள நன்மைகளாக உலக வேதங்கள் சொல்வதை வாசிப்போம் வாருங்கள்.

தமிழர் சமயம் 


மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. - (குறள் 459)
 
கருத்துரை - மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது. 
 

இஸ்லாம் 


யார் தனக்கு செல்வம் பெருகுவதையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள். அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி) (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ் இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) (ஆதாரம் : புகாரி)

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

கிறிஸ்தவம் 

“தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர்” (1 திமோத்தேயு 5:8)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக