சிறிய பொய் கூறலாமா?


கிறிஸ்தவம் 

''மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர், பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்'' (லூக்கா 16:10)

இஸ்லாம் 

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: – “நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)

தமிழர் சமயம் 


பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (கற்பியல்,4)

மற்ற நூல்கள் 

https://www.tamilvu.org/library/nationalized/pdf/89-vellaivaranar/tholkappiyamkarpiyal.pdf 

https://www.tamilvu.org/ta/courses-degree-p104-p1043-html-p1043225-26816 

6 கருத்துகள்:


  1. பொய்யான், பொய் மேவான், புலால் உண்ணான், யாவரையும்
    வையான், வழி சீத்து, வால் அடிசில் நையாதே
    ஈத்து, உண்பான் ஆகும் - இருங் கடல் சூழ் மண் அரசாய்ப்
    பாத்து உண்பான், ஏத்து உண்பான், பாடு. ஏலாதி 44


    தான் பொய்யுரையாது, பிறர் சொல்லும் பொய்க் குடன்படாது, புலாலுண்ணாது, யாவரையும் வையாது, பலர் போம் வழிகளையுந் திருத்தி, நல்ல வடிசிலை யொழியாதே யீத்துண்பானாகு மிருங்கடல்சூழ் மண்ணரசாய்ப் பகுத்துண்பான் பிறராற் றன் பெருமை யேத் துண்பானும்.

    கருத்து: பொய்யாமை முதலிய உடையவன் பெருமையும் புகழும் ஐம்புலவின்பங்களும் நுகரும் அரசனாவான்.

    பதிலளிநீக்கு
  2. குறள் எண் – 295
    பால் – அறத்துப்பால்
    இயல் – துறவறவியல்
    அதிகாரம் – வாய்மை
    மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

    தானஞ்செய் வாரின் தலை.

    மு. வரதராசன் உரை : ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

    பதிலளிநீக்கு
  3. அருங்கலச் செப்பு

    ஐந்து அனர்த்த தண்ட விரத இறப்பு

    96. நகையே நினைப்பு மொழியின்மை கூறல்
    மிகைநினைவு நோக்கார் செயல்.

    * நகைச்சுவைப் பேச்சு, குரும்பு செயல், பயனற்ற சொற்கள் துய்ப்புணர்வு, சிந்தனையற்ற செயல் ஆகியவை அனர்த்தண்ட விரதத்தின் அதிசாரங்களாம்..

    பதிலளிநீக்கு
  4. நீதிமொழிகள் 17:4
    துன்மார்க்கன் பொல்லாத உதடுகளுக்குச் செவிகொடுக்கிறான், பொய்யன் குறும்புக்கார நாவுக்குச் செவிகொடுக்கிறான்.

    பதிலளிநீக்கு
  5. கிறிஸ்தவம்

    பறக்கும் ஓலைச்சுருள் - சகரியா 5

    1 நான் மறுபடியும் மேலே பார்த்தேன். நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்த்தேன்.

    2 தூதன் என்னிடம், “என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான். “நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்க்கிறேன். அந்த புத்தகச்சுருள் 30 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்டது” என்று நான் சொன்னேன்.

    3 பின்னர் தூதன் என்னிடம் சொன்னான்: “அந்த புத்தகச்சுருளில் சாபம் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகச்சுருளின் ஒரு பக்கத்தில் திருடிய ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. புத்தகச்சுருளின் இன்னொரு பக்கத்தில் வாக்குறுதி அளிக்கும்போது பொய் சொன்ன ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது.

    4 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: நான் இந்தப் புத்தகச்சுருளை திருடர்களின் வீடுகளுக்கும் கர்த்தருடைய நாமத்தால் பொய் சத்தியம் செய்தவர்களின் வீடுகளுக்கும் அனுப்புவேன். அந்தப் புத்தகச்சுருள் அங்கே தங்கி அது அவ்வீடுகளை அழிக்கும். அவ்வீட்டிலுள்ள கற்களும் மரத்தூண்களும் அழிக்கப்படும்.”

    பதிலளிநீக்கு
  6. நீதிமொழிகள் 11:13 அடுத்தவனது இரகசியங்களைச் சொல்லும் யாரையும் நம்ப இயலாது. ஆனால் நம்பத் தகுந்த ஒருவன் பொய்ச் செய்திகளைப் பரப்பமாட்டான்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2011&version=ERV-TA

    பதிலளிநீக்கு