தமிழர் சமயம்
கற்பொழுக்கத்துக்கு ஆகாத செயல்கள்
தலைமகனில் தீர்ந்துஉறைதல் தான்பிறர்இல் சேர்தல்நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் - கலன்அணிந்துவேற்றுஊர்ப் புகுதல் விழாக்காண்டல் நோன்பிடுதல்கோல்தொடியாள் கோள் அழியுமாறு. (பாடல் - 161)
விளக்கவுரை: கணவனிடமிருந்து பிரிந்து வாழ்தல், அடிக்கடி அயலார் வீடுகளுக்குப் போதல், நெறியில் நீங்கிய தீய மகளிருடன் சேர்ந்து பழகுதல், அணிகளை அணிந்து அயலூர்க்குத் தனியே செல்லுதல், தனியே சென்று திருவிழாவைக் காணுதல், கணவன் ஆணையின்றி விரதம் மேற்கொள்ளுதல் ஆகிய இவை பெண்ணின் கற்புக் கெடுதலுக்குரிய வழிகளாகும்.
கற்பற்ற மனைவியர் கணவர்க்கு இயமன் பாடல் - 162
அயல்ஊர் அவன்போக அம்மஞ்சள் ஆடிக்
கயல்ஏர்கண் ஆர எழுதிப் - புயல்ஐம்பால்
வண்டுஓச்சி நின்றுஉலாம் வாள்ஏர் தடங்கண்ணாள்
தண்டுஓச்சிப் பின்செல்லும் கூற்று.
விளக்கவுரை: கணவன் வேற்றூரை அடைந்த சமயம் பார்த்து, அழகுடைய மஞ்சளைப் பூசி நீராடி, கயல் மீனைப் போன்ற அழகுடைய கண்கள் எழில் பெற மையைத் தீட்டி, கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மலரில் உள்ள வண்டுகளை ஓட்டிக் கொண்டு, வெளியில் உலவும் ஒளியுடைய அழகிய பெரிய கண்களை உடையவள், தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு அவன் அறியாமல் செல்லும் இயமனாவாள்.
இஸ்லாம்
“மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1862)
கிறிஸ்தவம்
அப்பொழுது இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்தனர். இயேசு ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். ஆனால் எவரும், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றோ “ஏன் நீங்கள் அவளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றோ கேட்கவில்லை. (யோவான் 4:27)
குறிப்பு: பெண்ணோடு தனியே பேசுவது கூட யூத சமுதாயத்தில் வழக்கமாக இருந்திருக்கவில்லை என்று இந்த வசனம் காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக