உரிமையில்லா பெண்ணை

தமிழர் சமயம்


பெருமை உடையார் இனத்தின் அகறல்,
உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும்
முழு மக்கள் காதலவை. - (திரிகடுகம் 9)

பொருள்: பெருந்தன்மை உடையாரிடம் நட்பு கொள்ளாதிருத்தலும், தமக்கு உரிமை இல்லாத பெண்களை விரும்புதலும், சிறந்தவை அல்லாதவற்றைச் செய்வதும் அறிவற்ற மூடர்கள் விரும்பிச் செய்வதாம்.

இஸ்லாம் - விரும்ப உரிமையில்லா பெண்கள்


உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன்:4:23)


கிறிஸ்தவம் & யூதமதம் - லேவியராகமம் 20 பாலியல் பாவங்களுக்கான தண்டனைகள்


10 “எவனாவது பிறனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் இருவரும் விபசாரம் என்னும் பாவத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அந்த ஆண், பெண் இருவரும் கொலைச் செய்யப்பட வேண்டும். 
 
11 எவனாவது தன் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்களின் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அது அவன் தன் தந்தையை நிர்வாணப்படுத்தியது போன்றதாகும்.

12 “ஒருவன் தன் மருமகளோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மிக மோசமான பாலியல் பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.

13 “ஒருவன் இன்னொரு ஆணோடு, பெண்ணோடு பாலின உறவு கொள்வது போன்று பாலின உறவு கொண்டால் (ஓரினப் புணர்ச்சி) அந்த இருவரும் பெரும் பாவம் செய்தபடியால் அவர்கள் கொல்லப்பட வேண்டும். அவர்களே தம் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.

14 “ஒருவன் ஒரு தாயோடும் மகளோடும் பாலின உறவு கொண்டால் இதுவும் பெரிய பாலியல் பாவமாகும். ஜனங்கள் அவர்கள் மூவரையும் நெருப்பிலே போட்டுக் கொல்ல வேண்டும். இது போன்ற பாலியல் பாவங்கள் உங்கள் ஜனங்களிடம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

15 “எவனாவது மிருகத்தோடு பாலின உறவு கொண்டிருந்தால் அவன் கொல்லப்பட வேண்டும். அந்த மிருகத்தையும் நீ கொன்றுபோட வேண்டும். 
 
16 ஒரு பெண் மிருகத்தோடு பாலின உறவு கொண்டால் நீ அவளையும் அந்த மிருகத்தையும் கொன்றுவிட வேண்டும். அவர்களே தங்கள் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.

17 “ஒருவன் தன் சகோதரியையோ, சகோதரி முறையுள்ளவளையோ மணந்துகொண்டு அவளோடு பாலின உறவு கொள்வது வெட்ககரமான பாவமாகும். அவர்கள் பொது ஜனங்கள் மத்தியில் தண்டிக்கப்படுவதுடன், மற்ற ஜனங்களிடமிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும். ஒருவன் தன் சகோதரியோடு பாலின உறவு கொண்ட பாவத்துக்காக அவன் தண்டிக்கப்பட வேண்டும்.

18 “ஒருவன் ஒரு பெண் மாதவிலக்காக இருக்கும்போது அவளுடன் பாலின உறவு கொண்டால் அவர்கள் இருவருமே தங்கள் ஜனங்களிடமிருந்து தனியே ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அவளது இரத்தப் போக்கை அவன் திறந்து விட்டிருக்கிறபடியால் அவர்கள் பாவம் செய்தவர்களாக ஆகிறார்கள்.

19 “நீங்கள் உங்கள் தந்தை அல்லது தாயின் சகோதரியோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. இது நெருங்கிய உறவோடு பாலின உறவு கொண்ட பாவத்திற்குரியது. உங்கள் பாவத்திற்கு நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

20 “ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் அது தகப்பனின் சகோதரனோடு பாலின உறவு கொண்டது போலாகும். அவனும் அவனுடைய தகப்பனின் சகோதரனின் மனைவியும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் குழந்தைகள் இல்லாமல் செத்துப்போவார்கள்.

21 “ஒருவன் தனது சகோதரனின் மனைவியை எடுத்துக்கொள்வது தவறானதாகும். இது அவன் தன் சகோதரனோடு பாலின உறவு கொள்வது போன்றதாகும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமற்போகும்.

22 “நீங்கள் எனது சட்டங்களையும் விதிகளையும் நினைவில் கொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் உங்கள் நாட்டிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அங்கு வாழும்போது எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிந்தால் அந்த நாடு உங்களை கக்கிவிடாது.

6 கருத்துகள்:

  1. எசேக்கியேல் 22

    9‘எருசலேமில், ஜனங்கள் பல பாலின உறவு பாவங்களைச் செய்கின்றனர். 10 எருசலேமில் ஜனங்கள் தம் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொள்கின்றனர். எருசலேமில் ஆண்கள் பெண்களின் மாதவிலக்கு நாட்களிலும் பலவந்தமாக பாலின உறவுகொள்கின்றனர். 11 ஒருவன் அருவருக்கத்தக்க இப்பாவத்தை தன் அயலானின் மனைவியோடேயே செய்கிறான். இன்னொருவன் தன் சொந்த மருமகளிடமே பாலின உறவுகொண்டு அவளைத் தீட்டுப்படுத்துகிறான். இன்னொருவன் தன் தந்தைக்குப் பிறந்த மகளை தன் சொந்த சகோதரியைக் கற்பழிக்கிறான்.

    பதிலளிநீக்கு
  2. பெருமை உடையார் இனத்தின் அகறல்,
    உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
    விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும்
    முழு மக்கள் காதலவை. . . . .[திரிகடுகம் 09]

    பெருமை யுடையா ரினத்தின் அகறல்
    உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
    விழுமிய வல்ல துணிதல் இம்மூன்றும்
    முழுமக்கள் காத லவை. . . . .[09]

    விளக்கம்: பெருந்தன்மை உடையாரிடம் நட்பு கொள்ளாதிருத்தலும்,
    தமக்கு உரிமை இல்லாத பெண்களை விரும்புதலும்,
    சிறந்தவை அல்லாதவற்றைச் செய்வதும் அறிவற்ற மூடர்கள் விரும்பிச் செய்வதாம்.

    பதிலளிநீக்கு
  3. திருமண மீறல்கள்
    13 ஒருவன் ஒரு மனைவியை மணந்து, அவளுடன் உறங்கிய பின், அவளைப் பிடிக்காமல், 14 அவளை அவதூறாகப் பேசி, அவளுக்குக் கெட்ட பெயரைச் சூட்டினால், “நான் இந்தப் பெண்ணை மணந்தேன், ஆனால் நான் அவளை அணுகியபோது, ​​அவளுடைய கன்னித்தன்மைக்கு ஆதாரம் கிடைக்கவில்லை. ” 15 இளம்பெண்ணின் தந்தையும் தாயும் அவள் கன்னிப்பெண் என்பதற்கான சான்றை வாயிலில் உள்ள ஊர் பெரியவர்களிடம் கொண்டு வரவேண்டும். 16 அவளுடைய தந்தை பெரியவர்களிடம், “நான் என் மகளை இவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தேன், ஆனால் அவன் அவளை விரும்பவில்லை. 17 இப்போது அவர் அவளைப் பற்றி அவதூறாகப் பேசி, 'உன் மகளை நான் கன்னிப் பெண்ணாகக் காணவில்லை' என்றார். ஆனால் இதோ என் மகளின் கன்னித்தன்மைக்கான ஆதாரம்” என்று கூறினார். அப்பொழுது அவளுடைய பெற்றோர் அந்தத் துணியை நகரத்தின் பெரியவர்களுக்கு முன்பாகக் காண்பிக்கக்கடவர்கள்; 18 பெரியவர்கள் அந்த மனிதனைப் பிடித்துத் தண்டிப்பார்கள். 19 இஸ்ரவேல் கன்னிப் பெண்ணுக்கு இவன் கெட்ட பெயரைச் சூட்டினான் என்பதற்காக, அவனுக்கு நூறு வெள்ளி வெள்ளியை அபராதமாக விதித்து , அந்த இளம் பெண்ணின் தந்தையிடம் கொடுக்க வேண்டும். அவள் அவனுடைய மனைவியாகத் தொடர வேண்டும்; அவன் வாழும் வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.

    20 ஆனால், அந்தக் குற்றச்சாட்டு உண்மையாகவும் , அந்த இளம்பெண்ணின் கன்னித்தன்மைக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றால், 21 அவள் தன் தந்தையின் வீட்டு வாசலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும், அங்கே அவளுடைய நகரத்தார் அவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். இஸ்ரவேலில் தன் தகப்பன் வீட்டில் இருந்தபடியே விபச்சாரம் செய்து மூர்க்கத்தனமான காரியத்தைச் செய்திருக்கிறாள் . உங்கள் நடுவிலிருந்து தீமையை நீக்க வேண்டும்.

    22 ஒருவன் வேறொரு ஆணின் மனைவியுடன் உறங்குவதைக் கண்டால், அவளுடன் உறங்கிய ஆணும் பெண்ணும் சாக வேண்டும். நீங்கள் இஸ்ரவேலிலிருந்து தீமையை அகற்ற வேண்டும்.

    23 ஒரு ஊரில் ஒருவன் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த கன்னிப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்தால், அவன் அவளுடன் உறங்கினால், 24 இருவரையும் அந்த ஊரின் வாயிலுக்குக் கொண்டுபோய், அந்த இளம்பெண் ஒரு ஊரில் இருந்ததால், அந்த இளம்பெண்ணைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். மற்றும் உதவிக்காக கத்தவில்லை, மேலும் அந்த மனிதன் மற்றொரு மனிதனின் மனைவியை மீறியதால். உங்கள் நடுவிலிருந்து தீமையை நீக்க வேண்டும்.

    25 ஆனால், வெளிநாட்டில் ஒரு ஆண், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த இளம் பெண்ணைச் சந்தித்து, அவளைக் கற்பழித்தால், அதைச் செய்த ஆண் மட்டுமே இறக்க வேண்டும். 26 பெண்ணுக்கு ஒன்றும் செய்யாதே; அவள் மரணத்திற்கு தகுதியான எந்த பாவமும் செய்யவில்லை. அண்டை வீட்டாரைத் தாக்கி கொலை செய்பவரைப் போன்றது இந்த வழக்கு, 27 ஆணுக்கு அந்த இளம் பெண்ணை நாட்டிற்கு வெளியே கண்டுபிடித்தார், நிச்சயமான பெண் அலறினாலும், அவளைக் காப்பாற்ற யாரும் இல்லை.

    28 திருமணம் செய்ய உறுதியளிக்கப்படாத கன்னிப் பெண்ணை ஒருவன் சந்திக்க நேர்ந்தால், அவளைக் கற்பழித்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 29 அவள் தந்தைக்கு ஐம்பது சேக்கல் வெள்ளி கொடுக்க வேண்டும் . அவர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஏனெனில் அவர் அவளை மீறினார். அவன் வாழும் வரை அவளை விவாகரத்து செய்யவே முடியாது.

    30 ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை மணந்துகொள்ளக்கூடாது; அவன் தன் தந்தையின் படுக்கையை அவமதிக்கக் கூடாது. [ ஈ ]

    https://www.biblegateway.com/passage/?search=Deuteronomy%2022&version=NIV

    பதிலளிநீக்கு
  4. சட்டசபையில் இருந்து விலக்கு
    23 [ அ ] நொறுக்கப்பட்டோ அல்லது வெட்டப்பட்டோ மாசுபடுத்தப்பட்ட எவரும் கர்த்தருடைய சபைக்குள் பிரவேசிக்க முடியாது .

    2 தடைசெய்யப்பட்ட திருமணத்தில் பிறந்த எவரும் [ b ] பத்தாம் தலைமுறையில் கூட, கர்த்தருடைய சபையில் நுழையக்கூடாது .

    https://www.biblegateway.com/passage/?search=Deuteronomy%2023&version=NIV

    பதிலளிநீக்கு
  5. லேவியராகமம் 18:8
    அவள் உனது தாயாக இல்லாவிட்டாலும் உனது தந்தையின் மனைவியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அது உனது தந்தையை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.

    லேவியராகமம் 18:11
    “உனது தந்தைக்கும் அவரது மனைவிக்கும் பிறந்தவளாக இருந்தாலும் அவள் உனது சகோதரிதான். நீ அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

    லேவியராகமம் 18:14
    நீ உனது தந்தையின் சகோதரனோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. நீ அவரது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவள் உனது அத்தை அல்லது சித்தி அல்லது பெரியம்மாள்.

    லேவியராகமம் 18:15
    “நீ உனது மருமகளோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவள் உனது மகனின் மனைவி. அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

    லேவியராகமம் 18:16
    “நீ உனது சகோதரனது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அது உனது சகோதரனை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.

    லேவியராகமம் 18:18
    “உனது மனைவி உயிரோடு இருக்கும்போது அவளது தங்கையை அடுத்த மனைவியாக வைத்துக்கொள்ளக் கூடாது. இது அந்தச் சகோதரிகளை விரோதிகளாக மாற்றிவிடும். உனது மனைவியின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

    லேவியராகமம் 18:20
    “பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை தீட்டுள்ளவனாக்கிவிடும்.

    லேவியராகமம் 20:10
    பாலியல் பாவங்களுக்கான தண்டனைகள்
    “எவனாவது பிறனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் இருவரும் விபசாரம் என்னும் பாவத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அந்த ஆண், பெண் இருவரும் கொலைச் செய்யப்பட வேண்டும்.

    லேவியராகமம் 20:11
    எவனாவது தன் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்களின் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அது அவன் தன் தந்தையை நிர்வாணப்படுத்தியது போன்றதாகும்.

    பதிலளிநீக்கு
  6. உபாகமம் 25:5
    வசன கருத்துக்கள்
    “சகோதரர்கள் ஒன்றாக வாழ்ந்து, அவர்களில் ஒருவர் இறந்துவிட்டால், மகன் இல்லாமல் இருந்தால், இறந்தவரின் மனைவியை குடும்பத்திற்கு வெளியே அந்நிய ஆணுடன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அவளது கணவனின் சகோதரன் அவளிடம் சென்று, அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, கணவனின் சகோதரனுடைய கடமையை அவளுக்குச் செய்வான்.

    Source: https://bible.knowing-jesus.com/topics/Strangers

    பதிலளிநீக்கு