சிவவாக்கியருடன் சில நிமிடங்கள்..!

 

இந்து சாமானியன்: ஐயா சித்தரே, சாமி, சிலை, வழிபாட்டு தளங்கள் பெயரால் சண்டை சச்சரவு நாளுக்கு நாள் அதிகமாக பெருகி கொண்டே போகிறதே.. பூ போன்ற காணிக்கைகளை செய்து மந்திரங்கள் சொல்லி தெய்வத்தை குளிர செய்தால் நிலைமை சீரடையுமா?

சிவவாக்கியர்:
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ - 494

இந்து சாமானியன்: ஐயா, லிங்கம், சிவன் சிலை போன்றவைகள் ஈசன் இல்லையா? வெறும் கல்லா? அப்போ ஈசன் யாருங்க? எத்தன இறைவன் தான் இருக்குங்க ஐயா?

சிவவாக்கியர்: 
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மை இரண்டு இல்லையே? - 22

உம்பர்(சொர்க்கம்) வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே. - 308

இந்து சாமானியன்: ஐயா சித்தரே தெய்வம் ஒன்றுதான், அவன் ஏழாம் சொர்க்கத்தில் உள்ளான் என்கிற உண்மை ஆச்சரியமாக உள்ளது. எனவே இங்கு உள்ள சிலைகள், மிருகங்கள், படங்கள் எல்லாம் வழிபட தகுதி அற்றவைகள் என தங்கள் வாயிலாக அறிகிறேன்..

சாதி சண்டை தீர வழி சொல்லுங்க..!

சிவவாக்கியர்:
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே. - 39

சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்
பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?  - 46

சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே. -  44

சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே. - 45

இந்து சாமானியன்: சாதியே இல்லையா? அப்போ தாழ்ந்த சாதியில் பிறந்வர்கள் மீண்டும் பிறப்பெடுத்து பிராமணர்களானால் தான் பிறப்பு முடியும் என்கிறார்களே..! 

சிவவாக்கியர்:
கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - 47

இந்து சாமானியன்: செத்தவன் பிறப்பதே இல்லையா? அப்போ முன்பிறவி, அடுத்தபிறவி, ஏழுபிறவி--னுல்லாம் சொல்லி குறி, சோதிடம் சொல்லுவதெல்லாம் பொய்யா? பேய் பிசாசு பற்றி ? 

சிவவாக்கியர்:
பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள்,
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. - 252

இந்து சாமானியன்: ஐயா சித்தரே உங்கள் கொள்கை விளக்கப்படி ஒருவன் இந்துவாக இருத்தல் இயலாது. உங்கள் கொள்கைகளை ஆப்படியே அச்சு பிசகாமல் சொல்வதோடு அதை அப்படியே பின்பற்றச் செய்யும் இஸ்லாம் தான் ஒரே வழி..! 

குறிப்பு  : மற்ற வேதங்களை போலவே  சிவவாகியர் பாடல்களிலும் இதற்கு முரணான கருத்துக்கள்  திணிக்க பட்டும் இருக்கிறது.. ஒரே நபர் இருவேறு முரண்பட்ட கருத்துகளை ஒரே நூலில் சொல்ல இயலாது என்பது எதார்த்தம். எனவே கருத்து  முரண்  இல்லாத  வேதமான திருக்குர்ஆனே  பின்பற்ற தகுதியானது. சகோதரர்கள் இறைவனை மத ரீதியாக அணுகுவதை விடுத்தது கொள்கை ரீதியாக அதாவது இறைவனுக்கான வரையறை மற்றும் இலக்கண அடிப்படையிலும் வேதாந்த அடிப்படையில் அணுகுவதே உண்மை அறிய உதவும்.

மேலும் ஆழமான ஆய்வுக்கு வாசிக்க வாய்மை

2 கருத்துகள்:

  1. புரட்சிச் சித்தர்கள் !!!
    -------------------
    நான்கு வேதங்களை ஓதினாலும் வெண்ணீறு
    பூசித் திகழ்ந்தாலும்,
    மனமுருகத்துதித்தால் அன்றி சோதி வடிவான
    இறைவனை அடைய முடியாது என்று கூறிய
    சித்தர் சிவவாக்கியர், 'பறைச்சி' என்றும் 'பார்ப்
    பனத்தி' என்றும்
    தோலிலும் எலும்பிலும் குறித்து
    வைத்திருக்கிறதா? 'பறைச்சி' தரும் போகமும்
    'பார்ப்பனத்தி' தரும் போகமும் வேறு வேறா?
    என்று கேள்வி கேட்டு
    சனாதனிகளின் முகத்தில் அறைகிறார்

    "இருக்கு நாலு வேதமும் எழுத்தையுற ஓதினும்
    பெருக்க நீறு பூசினும் பிதற்றினும் பிரானிரான்!
    உருக்கிநெஞ்சை உட்கலந்திங் குண்மைகூற வல்லிரேல்
    சுருக்க மற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே!" (பாடல்: 36)

    "பறைச்சியாவ தேதடா? பனத்தியாவ தேதடா?
    இறைச்சிதோலெ லும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ?
    பறைச்சிபோகம் வேறதோ? பனத்திபோகம் வேறதோ?
    பறைச்சியும்ப நத்தியும் பகுத்துபாரும் உப்ப்முலோ!" (பாடல்: 38)

    (பனத்தி - பார்ப்பனத்தி, போகம் - இன்பம்)


    பகவத் கீதை, ஆத்மா அழிவற்றதென்றும், அது வினைப் பயனுக்கேற்ப பல பிறவிகள் எடுக்கும் என்றும், உடல் அழியும் என்றும் பலவாறு விவரிக்கிறது. ஆனால் சிவவாக்கியர் மறு பிறப்பில்லை என்பதை எளிய தர்க்கவாத நியாயத்தின் மூலம் மறுக்கிறார்.

    "கறந்தபால்மு லைப்புகா! கடைந்தவெண்ணெய் மோர்புகா!
    உடைந்தபோன சங்கின் ஓசைஉயிர்களும் உடற்புகா!
    விரிந்தபூஉதிர்ந்து காயும் மீண்டும்போய்ம ரம்புகா!
    இறந்தவர்பிறப்ப தில்லை! இல்லை இல்லை இல்லையே! (பாடல்: 46)

    கயவர்கள் மனத்தூய்மையின்றிப் புறத்தூய்மை போற்றி, 'தீட்டு' என்று கூறித்
    தீண்டாமை பாராட்டி, பெண்களை இழிவுபடுத்தும் பொய்யொழுக்கத்தை ஆரவாரமற்ற எளிய சொற்களால் மறுக்கிறார் சிவவாக்கியர்

    "தூய்மைதூமை யென்றுளே துவண்டலையும் ஏழைகாள்!
    தூமையான் பெண்ணிருக்க தூமைபோன தெவ்விடம்!
    ஆமைபோல முழுகிவந்து அனேக வேதம் ஓதுறீர்!
    தூமையும் திரண்டு ருண்டு சொற்குருக்கள் ஆனதே! (பாடல்: 48)

    (தூமை - தீட்டு)
    "மாத மாதம் தூமைதான் மறந்துபோன தூய்மைதான்
    மாதமற்று நின்றாலோ வளர்ந்துரூபம் ஆனது?
    நாதமேது? வேத மேது? நாற்குலங்கள்ஏதடா?
    வேதம் ஓதும் வேதியா! விளைந்த வாறும் பேசடா!" (பாடல்: 131)

    (ரூபம் - வடிவம்/உருவம், நாதம் - ஓசை/இசை/பிரணவ எழுத்து/ஓங்காரம்/ சிவதத்துவம்)

    எச்சில் -அழுக்கு என்றும்,
    ஆசாரம் - தூய்மை என்றும்,
    வேதம் - உபநிடதம் என்றும்,
    தீர்த்தம் - புனித நீராடல் என்றும் பசப்பி, கல்வியறிவற்ற பாமர மக்களை ஏய்த்துத் திரிபவர்களைக் கன்னத்தில் அறைந்தாற்போல் கேட்கும் சிவ
    வாக்கியரின் கேள்விகள், வேடதாரிகள் யாவர்க்கும் பொருந்தும்.

    "உண்ட கல்லை எச்சிலென் றுள்ளெறிந்து போடுறீர்!
    கண்டஎச்சில் கையலோ? கருமனுக்கும் வேறதோ?
    கண்டஎச்சில் கேளடா? கலந்த பாணி அப்பிலே
    கொண்ட சித்தம் ஏதடா? குறிப்பிலாத மூடனே!" (பாடல்: 146)

    (கருமன்-கொல்லன், கருமர்-கொல்லர்/இங்கு பிற சாதியார் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். பாண் - இசைப் பாட்டு/ தாளம்/ கூத்து, கை,
    நீர், அப்பு- நீர், கடவுள்)

    "இட்ட குண்டம் ஏதடா! இருக்கு வேதம் ஏதடா?
    சுட்ட மட்க லத்திலே சுற்று நூல தேதடா?
    முட்டி நின்ற தூணிலே முளைத்தெ ழுந்த சோதியைப்
    பற்றி நின்ற தேதடா? பட்ட நாத பட்டனே!" (பாடல்: 306)

    (குண்டம் - ஓமகுண்டம், பட்டன் - கோயில் அர்ச்சகன்)

    பதிலளிநீக்கு
  2. சாத்திர சம்பிரதாயங்கள் என்றும், சாதிமத பேதம் என்றும் பேசித்திரியும்
    வைதீகர்களின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டும் சிவவாக்கியரின்
    ஆவேசக் குடல் இன்றும் தேவைப் படுகிறது.

    "ஓதும் நாலு வேதமும் உரத்த சாத்தி நங்களும்
    பூத தத்து வங்களும் பொருந்தும் ஆக மங்களும்
    சாதி பேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
    பேதபேதம் ஆகியே பிறந்து ழன்று இருந்தவே!" (பாடல்: 460)

    ( தயங்கல்-அசைதல், இளைத்தல், ஒளிசெய்தல், திகைத்தல்
    தயங்குகின்ற-ஒளி செய்கின்ற, இங்கு 'அறிவு தருகின்ற' என்று பொருள் கொள்ளல் வேண்டும். அறிவு தரும் நூல்களும் பலப்பல பேசிப் பேதப் பட்டன என்பது பொருள்)
    ------
    " சாத்திரங்கள் பார்த்துப் பார்த்துத் தாங்குரு டாவதால்
    நேத்தி ரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள்!
    பாத்தி ரமறிந்து மோன பத்திசெய்ய வல்லிரேல்,
    சூத்தி ரப்படி யாவரும் சுந்தராவர் அங்ஙனே!" (பாடல்: 525)

    ( நேத்திரம்-கண், வெய்யோன்-சூரியன், பாத்திரம்-தகுதி/கொள்கலம்,
    மோனம்-மெளனம்/ பேசாமை)

    இங்கு, பகவான் புத்தர் தனது தம்மபதத்தில், 'யார் பிராமணன்?' என்ற
    கேள்விக்குப் பிறப்பை அடிப்படையாக வைத்துக் கூறியிருப்பது சிந்திக்கத்
    தக்கதாகும்.

    "வெகுளியை விட்டவன், கடமைகளிலே கனமுள்ளவன், ஒழுக்க விதிகளின்படி நடப்பவன், பரிசுத்தமானவன், தன்னடக்கம் உள்ளவன் எவனோ, எவன், இவ்வுடலைக் கடைசி உடலாகக் கொண்டுள்ளானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்".

    'தாமரை இலைமேல் தண்ணீர் போலவும், ஊசிமுனை மேல் கடுகு போலவும்,
    இன்பங்களோடு ஒட்டமல் உள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்'.(இயல்: 26, பிராமணன், சூத்திரம் - 18,19)

    "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறிமுறையில்- மேதினியில்
    இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
    பட்டாங்கில் உள்ளபடி!" (பாடல்: 2)

    (சாற்றுதல்- உணர்த்துதல், சாற்றுங்கால்-உணர்த்தும்பொழுது/கூறும்பொழுது, மேதினி-உலகம், பட்டாங்கு-உலகவழக்கு)

    என வரும் ஒளவையாரின் நல்வழிப் பாடல், பிறப்பின் அடிப்படையில் சாதி
    பேதத்தைக் கற்பிக்காமல், வாழ்வியல் அடிப்படையில் 'கொடுப்பவர்/கொடாதவர்' என மக்களை இரண்டாகப் பாகுபடுத்துவது கவனிக்கத்தக்கதாகும்.

    பதிலளிநீக்கு