கற்பழிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்பழிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கற்பழிப்பு

தமிழர் சமயம் 


கற்பழித்தவனுக்குத தண்டனை அகநானூறு 256

1.       பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில்
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு 5
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! 
 
விளக்கம்: பழமையான சேற்று வயலில் ஆமை மேயும் ஊரனே!
வள்ளைக்கொடி மண்டிக்கிடக்கும் நீர்ச்சோலை.
அதில், வளைந்த நகம் கொண்ட ஆமை உறங்கும்.
கல்லில் மோதிய கல் போல் அது நகரும்.
கிழிந்த வாய் நிறையக் கள் உண்டவன் தள்ளாடி நடப்பது போல அது நடக்கும்.
வயல்களை நாசமாக்கும்.
ஆம்பல் இலைக்கடியில் பதுங்கிக்கொள்ளும்.
இப்படிப்பட்ட நிலம் கொண்ட ஊரன் நீ. 
 
2.       பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே
கையகப்பட்டமை அறியாய்; நெருநை 
 
விளக்கம்: பொய் சொல்லாதே.
உன் மாயம் எனக்குத் தெரியும்.
கையும் களவுமாக நீ பிடிபட்டுக்கொண்டது எனக்குத் தெரியும் என்பது உனக்குத் தெரியாது. 

3.       மை எழில் உண்கண் மடந்தையொடு வையை 10
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் 
 
விளக்கம்: நேற்று வையைப் புனலில் உன்னவளோடு நீராடி அவளை உரிய முறையில் துய்த்தாய்.
அதனை அவளது உடன்பரத்தைத் தோழிமார் மறைத்தனர்.
என்றாலும் அதனை ஊரெல்லாம் பலபடப் பேசுகிறது. 
 
4.       தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், 15
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்,''அறியேன்'' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை, 20
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. 
 
விளக்கம்கள்ளூர் என்னும் ஊரில் வாழ்ந்த சிறுமி நல்லவளை ஒருவன் தன் வலிமையைப் பயன்படுத்தி அவள் பெண்மையை நுகர்ந்துவிட்டான்.
அந்தக் கொடுமைக்காரன் ஊரார் முன்னிலையில் “அவளை எனக்குத் தெரியாது” என்றான்.
ஊரார் கரியாளர்களை (சாட்சியாளர்களை) வினவினர்.
அவன் அவளைக் கெடுத்தது உண்மை எனத் தெரியவந்தது.
ஊர் மன்றத்தார் அவனது உறவினர்களைக் கூட்டினர்.
அவர்கள் முன்னிலையில் கொதிக்கும் சுண்ணாம்பு நீற்றை அவன் தலையில் கொட்டினர்.
அப்போது ஊரே ஆரவாரம் செய்தது.
அந்த ஆரவாரம் போல உன் பரத்தை-உறவு பற்றி ஊரார் பேசிக்கொள்கின்றனர். 
 

இஸ்லாம் 


இஸ்லாத்தில் கற்பழிப்புக்கான (இத்திஷாப் / ஜினா பில்-ஜப்ர்) தண்டனையும் விபச்சாரத்திற்க்கான (ஜினா) தண்டனையும் ஒன்றுதான். குற்றவாளி திருமணம் செய்தவராக இருந்தால் கல்லெறியும் தண்டனையும், திருமணம் ஆகவில்லை என்றால் நூறு கசையடிகளும், ஓராண்டுக்கு நாடு கடத்தப்படுதலும் ஆகும். 
 
பலாத்காரம் கத்தி முனையிலோ அல்லது துப்பாக்கி முனையிலோ நடத்தப்படாவிட்டாலும், கற்பழிப்பாளர் ஜினாவுக்கான ஹுதுத் தண்டனைக்கு உட்பட்டவர். இஸ்லாமிய சட்டத்தில்,  ஹத் என்பது சர்வவல்லமையுள்ள அல்லாஹ் அல்லது சுன்னாவால்  விதிக்கப்படும் தண்டனையைக் குறிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின் மூலம் ஒரு ஹத்  உத்தரவாதம் அளிக்கப்பட்டால், நீதிமன்றம் அல்லது அரசு அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்தத் தண்டனைகளைச் செயல்படுத்துவதில் எந்தச் சலுகையும் அளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆயுதம் பயன்படுத்தப்படுவது அச்சுறுத்தப்பட்டால், அவர் ஒரு முஹாரிப் ஆவார், மேலும் அல்லாஹ் கூறும் வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஹத் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் (விளக்கம்): 
 
“அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர் செய்து, தேசத்தில் அக்கிரமம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் கூலி அவர்கள் கொல்லப்படுவது அல்லது சிலுவையில் அறையப்படுவது அல்லது அவர்களின் கைகளும் கால்களும் எதிரெதிர் பக்கங்களிலிருந்து துண்டிக்கப்படுவதும் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதும் மட்டுமே. அதுவே இவ்வுலகில் அவர்களுக்கு இழிவு, மறுமையில் பெரும் வேதனை அவர்களுக்கு உண்டு” [அல்-மாயிதா 5:33] (IslamQA
 

கிறிஸ்தவம் & யூதம் 

“ஆனால், ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளி இடங்களில் கண்ட ஒருவன் அவளைப் பலவந்தமாகப் பிடித்துக் கற்பழித்ததாக அறிந்தால், அவனை மட்டும் (கல்லெறிந்து) கொன்றுவிட வேண்டும். அந்தப் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவள், மரிக்கும் தண்டனையைப் பெறும் அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லை. இது ஒரு நபர் தன் பக்கத்து வீட்டுக்காரனை தீடீரெனத் தாக்கி அவனைக் கொல்வதற்குச் சமமானது. வெளி இடத்திலே அவன் அவளைக் கண்டதும் அவளைத் தன் பலத்தினால் பிடிக்க, அவள் தனக்கு உதவிட கூக்குரலிட்டபோதும் அவளைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லாததால் அவளைத் தண்டிக்க வேண்டாம். (உபாகமம் 22:25-27)