கணவனுக்கு கட்டுப்படுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணவனுக்கு கட்டுப்படுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கணவனுக்கு கட்டுப்படுதல்

தமிழர் சமயம்  


கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய. - தொல்காப்பியம் சூ. 154

பொருள்தன்னைக் கொண்டவனைப் பேணித்தொழுதெழுதல் முதலாகத் தன் உயிரினும் சிறந்தவனாகக் குறிக்கொண்டொழுகும் மனத்திண்மையும் நிறைந்தியலும் காதற் பண்பும் நன்றின் பாலுய்க்கும் அறிவானே ஒழுகுதலும், மென்மைத் தன்மையாற் பிறர் குறையினைப் பாராட்டாத பொறையுடைமையும் மறைபிறரறியாமை நெஞ்சினை நிறுக்கும் திறனும், இன்னலும் இடும்பையும் நோக்காமல் ஒல்லும் வகையான் விருந்தினரைப் போற்றியளித்தலும் தலைவற்கும் தனக்கும் கேளிராயினாரையும் உறவாயின ரையும், ஆட்சிக்கு அங்கமாயினாரையும் பேணிக்காத்தலும் அவை போல்வனவாகிய தெய்வத்தையும் தென்புலத்தாரையும் தலைவனொடு அமர்ந்து ஓம்புதலும் குலமரபான் வந்த காமக்கிழத்தியரை வெறாது அவரான் மதிக்கப்பெறுதலும் பாணர் முதலாய வாயில்கட்கு அருளுதலும் ஊடலும் ஊடல்உணர்தலும் ஆகிய சால்புகளமைந்த தலைவியின் மாட்சிமைகளை முன்னின்று தலைவன் முகனமர்ந்து செவிமடுக்கும் முறையமையான் கூறும் கூற்றுக்கள், மனையகத்துப் புக்கு உரையாடும் மரபுரிமையுடைய பாணன் பாடினி, முதலாய வாயில்கட்கு உரியவாகும்.

இஸ்லாம்


சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறை வானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)

கிறிஸ்தவம்


அவ்வாறே மனைவியராகிய நீங்கள், உங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய போதனைகளை உங்களில் சிலரது கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கூட, எப்பேச்சுமில்லாமல் தம் நடத்தையின் மூலம் அவர்களின் மனைவிமார்கள் அவர்களை வலியுறுத்தவேண்டும். 2 உங்கள் பரிசுத்த மரியாதைக்குரிய நடத்தையை அவர்கள் காண்பார்கள். - (1 பேதுரு 3:1&2)