தொல்லியல் ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொல்லியல் ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழர் சமுதாயம் சாதி இல்லா சமுதாயம்

சாதிக்கு எதிராக தமிழர் மறைகள் 


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி.  (நல்வழி)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே – (திருமந்திரம் 2104)

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.(குறள். 972) 

குறிப்பு - இக்குறளை மேற்கோள் காட்டி வருணாசிரமத்தை உண்டென்று வாதிடுவோர் உண்டு.. ஆனால் வருணம்/சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருவது. இங்கே 'தொழில்' என்பது ஒருவர் செய்யும் செயல்/வேலை அறம் சார்ந்ததா இல்லையா என்பதை பொறுத்து வேற்றுமை படும் என்கிறது. சாதி இல்லை எண்டு கூறும் குறளை சாதிக்கு ஆதரவாக மாற்றுவது அறியாமை அல்லது நயவஞ்சகம்.

பாணன் பறையன் துடியன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை” – (புறநானூறு 335)

குறிப்பு: ஒரு சிலர் இத்தனையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆனால் இது மக்களை குறிப்பிட்டு காட்டவே பயன்படுத்தப்பட்ட ஒருக்குறியீடு.. இன்று சாதி என்று சொல்லப்படும் அந்த கட்டமைப்புக்கும் ஏற்றதாழ்வுக்கும் தீண்டாமைக்கு இதற்கும் அணு அளவு கூட தொடர்பில்லை..

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195)

பொருள்: நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும்.

"குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே
வழிபடுதெய்வமு மொன்றேயாதலால்" (கபிலர் அகவல்)

 

தொல்பொருள் ஆய்வு  


தென்இந்தியாவிற்கு தோல்பொருள் ஆய்வு பிரிவு 2001-இல் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது.. அதிலும் தென்இந்தியாவிற்கு என பொதுவான பிரிவு, தமிழரின் தொன்மையை ஆய்வு செய்ய பிரிவு ஏதும் தனியே இதுவரை அமைக்கப்படவில்லை.
வரலாறு என்பது தொல்பொருள் ஆய்வு முடிவு நெறி நூல்கள் மற்றும் இலக்கிய நூல்களில் உள்ள தகவல்களை கொண்டே ஒரு முழு ஆய்வு முடிவை தரமுடியும். இல்லையெனில் கொடுக்கப்படும் ஆய்வு முடிவு பொருளற்றதாக நிறைவுபெறாததாக மட்டுமே கருத முடியும்.

கிமு 600 காலத்தவை என அறியப்பட்ட கீழடி ஆய்வு முடிவுகள் 
    1. சாதிக்கு ஒரு இடுகாடு இருந்து இருக்கவில்லை எனவே சாதி என்ற ஒன்று  நயவஞ்சகர்கள் ஏற்படுத்திய கொடுஞ்செயல்.
    2. மண்ணறையை குறிக்க கற்களை பயன் படுத்தி உள்ளனர். அதனை பூசவோ உயர்த்தி கட்டவோ கல்லறையாக கட்டவோ சுடுகாடோ அமைக்க வில்லை.
தமிழினம் இந்து இல்லை என்பதற்கு சான்றுகள் இன்னும் பல.. சாதி நம்மை பிரித்தாள செய்யப்பட்ட சதி. அறிவுள்ள தமிழன் சாதிச் சதியில் விழமாட்டான். அனைத்து மொழி வேதங்களிலும் இறைவன் பெருமையை வெறுப்பதாக சொல்கிறான். பெருமையின் மாற்று சொல்லான சாதி-யை நம்புபவன் எப்படி கடவுள் நம்பிக்கை உள்ளவனாவான்.  

எனவே இது போன்ற வரலாற்று உண்மைகளை நமது பண்பாடுகளை அறிய தோல் பொருள் ஆய்வு மிக மிக அவசியமான ஒன்று. அதற்க்கு வழிவிடாத மத்திய அரசோ அல்லது தமிழிசையோ துரோகிகள் என்பதில் மாற்றுக கருத்து இல்லை.  

கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் தமிழரின் தொன்மை!

இங்கே 10000 வருடம் என்பது மிகை படுத்தப்பட்ட எண்ணிக்கை என்பது நம் கருத்து. தொல்லியல் துறையின் மூலம் நிரூபிக்கபட்டால் எற்கலாம். ஆனால் பழமையானது என்பதில் மாற்று கருத்து இல்லை. 


 
பத்தாயிரம் ஆண்டு பழமையான துறைமுக நகரம் கண்டுபிடிப்பு!! 
 
சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில்டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். ஒருமுறை கடலுக்கு அடியில் சென்ற பொழுது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு அரவிந்த் வால்என்று பெயரிட்டேன்என்றார்.

 

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார். 
 
தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். 
 
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம். 
 
புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்என்றார். 
எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் மதிலொடு பெயரியப் பட்டினம்என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது. 
 
மதில் என்னும் சொல்லுக்கு எயில்என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை சோபட்மாஎன்று குறிப்பிட்டுள்ளனர். சோஎன்னும் சொல் மதிலைக் குறிக்கிறது. 
 
நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் மரிக்கனாஎன்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்....

மேலும் தொடர.. 

 

முடிவுரை


எனவே சாதியை தூக்கி பிடிப்பது தவறு மட்டுமல்ல அது தமிழர் பண்பாட்டிற்கு செய்யும் துரோகம். இங்கே தமிழையும் நாம் அழுத்தி சொல்லவில்லை மாறாக மனித குல பண்பாட்டிற்கே செய்யும் துரோகம்.. ஏனென்றால் அறிவுள்ள பண்பட்ட சமூகம் மொழி கொண்டோ சாதி கொண்டோ நிறம் கொண்டோ பிரிவினைகளை ஏற்காது. பிரிவுகள் கொள்கையில் ஏற்படுமே தவிர வேறெதிலும் இல்லை.. பண்பட்ட சமூகம்கொள்கைப் பிரிவிலும் இணக்கம் ஏற்பட வழியை கண்டே தீரும்.