பல்வேறு காரணங்களால் பண்டைய நூல்கள் அது இயற்றப்பட்ட தன்மையோடு நம்மை வந்தடையவில்லை. அக்கரணங்களில் சில,
- மறுவுதல்: ஒரு சொல் காலவோட்டத்தில் வேறொரு சொல்லாக மாற்றமடைவது மரூஉ எனப்படும். உதாரணமாக, நாற்றம் என்பது நாத்தம் உருமாறியுள்ளது.
- சொற்திரிபு: தமிழ் விதிப்படி, தெய்வம் சுட்டும் பெயர்நிலை கிழவி (அதாவது அவன் அவள்) இல்லை என்று தொல்காப்பியம் கூறும்பொழுது, "இறை"யை இறைவன் இறைவி என்று அழைப்பது திரிபாகும். இவ்வாறு மரபு மாறிச் சொற்கள் வழங்குமாயின் இவ்வுலகத்துச் சொற்கள் எல்லாம் பொருளை இழந்து வேறு வேறாக ஆகிவிடும். தெய்வத்துக்கு பாலினம் இல்லை என்பதை நிறுவ வேண்டிய சூழ்நிலையை இத்திரிபு ஏற்படுத்தி உள்ளது.
- மரபுத்திரிபு: வேறு வேறு மரபுகள் இணைந்து திரிவதென்றால் அது முன்னுள்ள வேதத்தில் உரைக்கப்படாமல் நிகழமுடியாது. அவ்வாறு இல்லமால் மரபு நிலை திரியுமாயின் "மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும்." - (தொல்காப்பியம் 1585) அதாவது அது அந்த மரபை சார்ந்ததாக இருக்க முடியாது. சிவமரபும் விஷ்ணுமரபும் வெவ்வேறு ஆனால் ஒரே இறைவனை பேசுகிறது. இரண்டு மரபையும் இணைத்ததால் ஏற்பட்ட குழப்பம் இன்றளவும் தீரவில்லை.
- மூல நூலும் மொழிபெயர்ப்பு விதியும்: உதாரணமாக பைபிள் அதன் மூலமொழியிலிருந்து (ஹீப்ரு & அராமிக்) முதலில் கிரீக், லத்தீன், பிறகு ஆங்கிலம் மற்றும் கடைசியில் தமிழில் மொழிபெயர்த்த பொழுது மொழி பெயர்ப்பாளரின் அறிவுக்கு ஏற்ப அமைந்து போனது. தொல்காப்பிய மொழிபெயர்ப்பு விதிகளுக்கு ஏற்றவாறா பைபிள் மொழிபெயர்ப்பு இருந்தது? எனவே மூல மொழியில் உள்ள பைபிளும் இரண்டு மூன்று மொழிகளில் ஒன்றன் பின் ஒன்றாக மொழிபெயர்த்தபின் இருக்கும் உள்ள பைபிளுக்கு உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமானது, ஆனால் மூலமொழியில் நூல் பாதுகாக்கப் படவில்லை என்றால் அதை சரிகாணும் வாய்ப்பும் இல்லை.
- நூல்களில் இடைச்செருகல்: உதாரணத்திற்கு, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்றும் மொழியும் திருமந்திரத்தில் - "ஐந்துகாரத்தினை" என்கிற விநாயகர் துதியை வைத்தது போல பல்வேறு நூல்களில் பல்வேறு முற்றிலும் முரண்படும் கருத்துகளுடன் இடைச்சொருகல்கள் உண்டு.
- நீக்குதல் (அ) இழத்தல்: எடுத்துக்காட்டாக, நமக்கு கிடைத்த குறள், புறநானூறு போன்றவைகள் முழு நூலா இல்லையா என்பது நமக்கு தெரியாது. அதுபோல பைபிளில் இயேசுவின் 4 நேரடி சீடர்களின் நற்செய்திகள் மட்டும் உள்ளது மற்றவைகள் 200 வருடத்திற்கு பிறகு சேர்க்கப் பட்டது.
- பொழிப்புரையில் கருத்தை மாற்றி எழுதுவது: இது இரண்டு வகையில் நிகழ வாய்ப்புண்டு. முதல் வகை, கல்விப் பாரம்பரியம் தொடராமல், குருவின்றி கற்று தவறாக பொழிப்புரைத்தல்: உதாரணமாக, திருக்குறளுக்கு முதலில் விளக்கம் எழுதிய மனக்குடவருக்கும் வள்ளுவருக்கும் இடையேயான கால இடைவெளி குறைந்தது 1500 ஆண்டுகள் உள்ளது. அவரின் கருத்தே வள்ளுவருக்கு நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்கிற பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட பொழிப்புரைகள் பொழியபட்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணாக. இரண்டாம் வகை, வேண்டுமென்றே தனது கருத்தை பாடலில் உள்ள சொற்களுக்கு பொருளாக திணித்து பொழிப்புரைத்தல்: இதற்கு உதாரணம், கலைஞரின் குறள் விளக்கம்.
வயிர ஊசியும் மயன்வினை இரும்பும்
செயிரறு பொலிவினைச் செம்மைச்செய் ஆணியும்
தமக்கமை கருவியும் தாமமை பவைபோல்
உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே (அகத்தியம் 258)
நூற்பா விளக்கம்: கண்ணாடியை அறுக்கும் வயிரவூசி போலவும், தட்டான் பொன்னிரும்பால் அணிகலன் செய்வது போலவும், அணிகலன் செய்ய உதவும் அரம் என்னும் ஆணி போலவும், செயல்பட்டு, நூற்பாவுக்கு அமைந்த கருவியாகச் செயல்பட்டு ஆசிரியன் உரைத்த திறத்தை உணர்த்துவதே உரைநூலின் இயல்பாக இருக்கவேண்டும் என்கிற அகத்தியரின் இந்த கருத்து பொழிப்புரையாளர்கள் பொழிப்புரைக்கும் முன் நோக்கத் தகுந்தது.
- மனிதனால் வடிக்கப் பட்ட நூல்: மனிதன் தன அனுபவத்தை கொண்டு வடித்த நூல் மறை நூல் ஆகாது. ஏனென்றால் மனித அனுபவம் devine knowledge உடன் நிச்சயம் முரண் படும், எனவே அது வாய்மை ஆகா. உதாரணமாக, எனவே தொல்காப்பியம் வழி நூலாகலாம், ஆனால் நன்னூல் வழி நூலல்ல. சமயங்கள் இறைவனால் வழங்கப் பட்ட வேதத்தை அடிப்படையாக கொண்டது, ஆனால் சீக்கிய மதம், வள்ளலாரின் மதம் போன்ற மாதங்கள் வேதங்களை வாசித்து மனிதர்களால் ஏற்படுத்தப் பட்டது மேலும் அதன் நூல்களும் ஏற்கனவே உள்ள மறைநூலைகளை வாசித்து அதில் உள்ள கருத்துக்களும், அவரின் சொந்த அனுபவ கருத்துக்களும் சேர்த்து உருவாக்கப்பட்டது பட்டது.
மேலும் நாம் பயன்படுத்த வேண்டிய நூல்களின் வரையறையை வேறொரு கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. பொய் நூல்களையும் பொய் குருக்களையும் பற்றி ஒவ்வொரு மறைநூலும் எச்சரிப்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
பல்வேறு காரணங்களால் பண்டைய நூல்கள் அது இயற்றப்பட்ட தன்மையோடு நம்மை வந்தடையவில்லை. அக்கரணங்களில் சில,
- மறுவுதல்: ஒரு சொல் காலவோட்டத்தில் வேறொரு சொல்லாக மாற்றமடைவது மரூஉ எனப்படும். உதாரணமாக, நாற்றம் என்பது நாத்தம் உருமாறியுள்ளது.
- சொற்திரிபு: தமிழ் விதிப்படி, தெய்வம் சுட்டும் பெயர்நிலை கிழவி (அதாவது அவன் அவள்) இல்லை என்று தொல்காப்பியம் கூறும்பொழுது, "இறை"யை இறைவன் இறைவி என்று அழைப்பது திரிபாகும். இவ்வாறு மரபு மாறிச் சொற்கள் வழங்குமாயின் இவ்வுலகத்துச் சொற்கள் எல்லாம் பொருளை இழந்து வேறு வேறாக ஆகிவிடும். தெய்வத்துக்கு பாலினம் இல்லை என்பதை நிறுவ வேண்டிய சூழ்நிலையை இத்திரிபு ஏற்படுத்தி உள்ளது.
- மரபுத்திரிபு: வேறு வேறு மரபுகள் இணைந்து திரிவதென்றால் அது முன்னுள்ள வேதத்தில் உரைக்கப்படாமல் நிகழமுடியாது. அவ்வாறு இல்லமால் மரபு நிலை திரியுமாயின் "மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும்." - (தொல்காப்பியம் 1585) அதாவது அது அந்த மரபை சார்ந்ததாக இருக்க முடியாது. சிவமரபும் விஷ்ணுமரபும் வெவ்வேறு ஆனால் ஒரே இறைவனை பேசுகிறது. இரண்டு மரபையும் இணைத்ததால் ஏற்பட்ட குழப்பம் இன்றளவும் தீரவில்லை.
- மூல நூலும் மொழிபெயர்ப்பு விதியும்: உதாரணமாக பைபிள் அதன் மூலமொழியிலிருந்து (ஹீப்ரு & அராமிக்) முதலில் கிரீக், லத்தீன், பிறகு ஆங்கிலம் மற்றும் கடைசியில் தமிழில் மொழிபெயர்த்த பொழுது மொழி பெயர்ப்பாளரின் அறிவுக்கு ஏற்ப அமைந்து போனது. தொல்காப்பிய மொழிபெயர்ப்பு விதிகளுக்கு ஏற்றவாறா பைபிள் மொழிபெயர்ப்பு இருந்தது? எனவே மூல மொழியில் உள்ள பைபிளும் இரண்டு மூன்று மொழிகளில் ஒன்றன் பின் ஒன்றாக மொழிபெயர்த்தபின் இருக்கும் உள்ள பைபிளுக்கு உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமானது, ஆனால் மூலமொழியில் நூல் பாதுகாக்கப் படவில்லை என்றால் அதை சரிகாணும் வாய்ப்பும் இல்லை.
- நூல்களில் இடைச்செருகல்: உதாரணத்திற்கு, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்றும் மொழியும் திருமந்திரத்தில் - "ஐந்துகாரத்தினை" என்கிற விநாயகர் துதியை வைத்தது போல பல்வேறு நூல்களில் பல்வேறு முற்றிலும் முரண்படும் கருத்துகளுடன் இடைச்சொருகல்கள் உண்டு.
- நீக்குதல் (அ) இழத்தல்: எடுத்துக்காட்டாக, நமக்கு கிடைத்த குறள், புறநானூறு போன்றவைகள் முழு நூலா இல்லையா என்பது நமக்கு தெரியாது. அதுபோல பைபிளில் இயேசுவின் 4 நேரடி சீடர்களின் நற்செய்திகள் மட்டும் உள்ளது மற்றவைகள் 200 வருடத்திற்கு பிறகு சேர்க்கப் பட்டது.
- பொழிப்புரையில் கருத்தை மாற்றி எழுதுவது: இது இரண்டு வகையில் நிகழ வாய்ப்புண்டு. முதல் வகை, கல்விப் பாரம்பரியம் தொடராமல், குருவின்றி கற்று தவறாக பொழிப்புரைத்தல்: உதாரணமாக, திருக்குறளுக்கு முதலில் விளக்கம் எழுதிய மனக்குடவருக்கும் வள்ளுவருக்கும் இடையேயான கால இடைவெளி குறைந்தது 1500 ஆண்டுகள் உள்ளது. அவரின் கருத்தே வள்ளுவருக்கு நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்கிற பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட பொழிப்புரைகள் பொழியபட்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணாக. இரண்டாம் வகை, வேண்டுமென்றே தனது கருத்தை பாடலில் உள்ள சொற்களுக்கு பொருளாக திணித்து பொழிப்புரைத்தல்: இதற்கு உதாரணம், கலைஞரின் குறள் விளக்கம்.
வயிர ஊசியும் மயன்வினை இரும்பும்
செயிரறு பொலிவினைச் செம்மைச்செய் ஆணியும்
தமக்கமை கருவியும் தாமமை பவைபோல்
உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே (அகத்தியம் 258)
- மனிதனால் வடிக்கப் பட்ட நூல்: மனிதன் தன அனுபவத்தை கொண்டு வடித்த நூல் மறை நூல் ஆகாது. ஏனென்றால் மனித அனுபவம் devine knowledge உடன் நிச்சயம் முரண் படும், எனவே அது வாய்மை ஆகா. உதாரணமாக, எனவே தொல்காப்பியம் வழி நூலாகலாம், ஆனால் நன்னூல் வழி நூலல்ல. சமயங்கள் இறைவனால் வழங்கப் பட்ட வேதத்தை அடிப்படையாக கொண்டது, ஆனால் சீக்கிய மதம், வள்ளலாரின் மதம் போன்ற மாதங்கள் வேதங்களை வாசித்து மனிதர்களால் ஏற்படுத்தப் பட்டது மேலும் அதன் நூல்களும் ஏற்கனவே உள்ள மறைநூலைகளை வாசித்து அதில் உள்ள கருத்துக்களும், அவரின் சொந்த அனுபவ கருத்துக்களும் சேர்த்து உருவாக்கப்பட்டது பட்டது.
இஸ்லாம் கூறும் பொய் வேதங்கள்
இறைவனால் வழங்கப்படாத நூல்
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை (தாலமுத்) எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (குர்ஆன் 2:79)மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. (குர்ஆன் 2:78)
வேதத்தோடு பொய் செய்தியை கலப்பது
இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். - (குர்ஆன் 2:41,42)
பொருளை திரிப்பது
…இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர். (குர்ஆன் 2:75)
மக்கள் ஓதி உணர்ந்து ஒடுங்க வழங்கப்பட்ட நூலை அவர்களிடமிருந்து மறைப்பது
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். [அல்குர்ஆன் 2:159.]
தமிழர் சமயம்
இறைவனால் வழங்கப்படாத நூல்
தத்தமதுஇட்டம் திருட்டம் எனஇவற்றோடுஎத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் - பித்தர்அவர்நூல்களும் பொய்யேஅந் நூல் விதியின் நோற்பவரும்மால்கள் என உணரற் பாற்று. - (அறநெறிச்சாரம் பொய்ந்நூல்கள் பாடல் - 47)விளக்கவுரை தங்கள் தங்களின் விருப்பம், தத்தமது காட்சி/விளக்கம் என இவற்றுடன் ஒரு சிறிதும் பொருந்தாதபடி உரைப்பவரைப் பைத்தியக்காரன் எனவும் அவர்கள் கூறும் நூல்களைப் பொய்ந்நூல்கள் எனவும் அந்த நூல்கள் கூறும் நெறியில் நின்றுவணங்கி வழிபடுபவர் மயக்கம் உடையார் எனவும் உணரும் தன்மை உள்ளவர்கள் இல்லை.குறிப்பு: இது குர்ஆன் 2:79 வசனத்துக்கு ஒப்பானது
பொருள் திரிந்த நூல்கள்
மறஉரையும் காமத்து உரையும் மயங்கியபிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரைகேட்கும் திருவுடை யாரே பிறவியைநீக்கும் திருவுடை யார். - (பாயிரம் அறவுரையின் இன்றியமையாமை பாடல் - 2)விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், உண்மை பொருளிலிருந்து மயங்கி வேறு பொருள் தரப்பட்ட நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.
பொழிப்புரையும் நூலாசிரியர் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும், திரித்து எழுதுவது மறை நூலை பிற நூலாகவும், பிற நூலை மறை நூலாகவும் சித்தரிக்கும்.
வயிர ஊசியும் மயன்வினை இரும்பும்செயிரறு பொலிவினைச் செம்மைச்செய் ஆணியும்தமக்கமை கருவியும் தாமமை பவைபோல்உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே (அகத்தியம் 258)நூற்பா விளக்கம் கண்ணாடியை அறுக்கும் வயிரவூசி போலவும், தட்டான் பொன்னிரும்பால் அணிகலன் செய்வது போலவும், அணிகலன் செய்ய உதவும் அரம் என்னும் ஆணி போலவும், செயல்பட்டு, நூற்பாவுக்கு அமைந்த கருவியாகச் செயல்பட்டு ஆசிரியன் உரைத்த திறத்தை உணர்த்துவதே உரைநூலின் இயல்பாக இருக்கவேண்டும்.
உலக ஆசையை தூண்டும் இருண்ட நூல்கள்
கூரம்பு வெம்மணல் ஈர்ம்மணி தூங்கலும்ஈரும் புகையிருளோடு இருணூ லாராய்ந்தழிகதி இம்முறையான் ஆன்றார் அறைந்தார்
பொருள்: கூரிய அம்பு, சுடும் மணல், வயிரம் போன்ற பிளந்த மணிக்கல், தொங்கும் பொருள்கள், கண்ணை ஈர்த்தெரிக்கும் புகை, இருட்டு, இருண்ட கருத்துகளை உரைக்கும் நூல்கள் ஆகிய இந்த ஏழும் அழிவைத் தரும் கதிப்பொருள்கள் என்றும், அவற்றில் இறங்கி அகப்பட்டுக் கொள்ளக் கூடாது என்றும் ஆன்றார்கள் (தேவர்கள்) பறையறைவது போல் கூறியுள்ளனர்
வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்ஆக்கிய நூலினு மில். (ஞானக்குறள் 152)
விளக்கவுரை: வாக்கு வல்லமை உடையோராலும், பெயர் புகழுக்கு ஆசைப் படுபவராலும், ஐயம் முதலியவை நீங்காது மயங்கிக் கொண்டிருக்கும் மதத்தை யுடையோராலும் எழுதப்பட்ட நூல்களாலும் முத்தி கிடையாது.
மோகத்தை ஈன்று தவமழிக்கும் சொற்கேட்டல்பாவச் சுருதி எனல் - (அருங்கலச்செப்பு தீயன கேட்டல் 95)
பொருள்: ஆசையை வளர்த்துத் தவத்தை இழக்கச்செய்யும் நூல்களைப் படிப்பதும், கேட்பதும் ‘பாவச் சுருதி’ எனப்படும்.
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)உலகநூ லோதுவ தெல்லாங் - கலகலகூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்போஒந் துணையறிவா ரில் - (நாலடியார், பொருட்பால்,14. கல்வி 140)
(பொ-ள்.) அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவதெல்லாம் - அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல் களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது,
கலகல கூம் துணையல்லால் - கலகல என்று இரையும் அவ்வளவேயல்லால்,கொண்டு தடுமாற்றம்போம் துணை அறிவார் இல் - அவ் வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் இல்லை. (அறிவு நூல் உலக நூல் என இருவகை நூலை குறிப்பிடும் இப்பாடல் உலக தேவையை முன்னிறுத்தாத நூலை அறிவு நூல் என்கிறது, அது வேதத்தை குறிக்கிறது)
எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்பொய்ந்நூல் அவற்றின் பொருள்தெரிந்து--மெய்ந்நூல்அறநெறிச் சாரம் அறிந்தான்வீ டெய்தும்திறநெறிச் சாரந் தெளிந்து. (அறநெறிச்சாரம் பாடல் - 218)விளக்கவுரை பொய்ந்நூல் எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் அவற்றின் பொருள் தெரிந்து என்செய்யும்-பொய்ந்நூல் களாகிய மற்றை நூல்களைக் கற்றும் கேட்டும் அவற்றின்பொருளையறிதலால் யாது பயன்? மெய்ந்நூல் அறநெறிச்சாரம் அறிந்தான்-உண்மை நூலாகிய இவ் அறநெறிச்சாரத்தினைக் கற்றும் கேட்டும் அறிந்தவன், திறநெறிச்சாரம் தெளிந்து-உறுதி பயக்கு
பைபிளில் போலி தீர்க்கதரிசிகள் மற்றும் போலி தீர்க்க தரிசனங்களை பற்றி நூற்றுக்கணக்கில் சொல்லப்பட்டுள்ளது. அவைகளை பொய் தீர்க்கதரிசிகள் தலைப்பில் காணலாம். ஆனால் பொய் பைபிள் பற்றி குறிப்பிட்டு ஏதும் காணக் கிடைக்கவில்லை. பொய் தீர்க்க தரிசனத்தை பொய் நூலாக கருதலாம். வரலாற்றில் பதியப்பட்ட சில பொய் நூல்கள் இங்கே பட்டியலிடப் படுகிறது.
சாலமன் புத்தகங்களுக்கான முன்னுரையில் அவர் கூறுகிறார்: நல்லொழுக்கத்தின் மாதிரி புத்தகமும் சேர்க்கப்பட்டுள்ளது (παναρετος) சிராச்சின் இயேசுவின் மகன், மற்றும் சாலொமோனின் ஞானம் என்று பெயரிடப்பட்ட மற்றொரு பொய்யான படைப்பு (ψευδεπιγραφος). இவற்றில் முந்தையவை எபிரேயுவிலும் நான் கண்டேன், லத்தீன்களில் எக்லேசியாஸ்டிகஸ் என்று தலைப்பிடப்படவில்லை, ஆனால் உவமைகள், பிரசங்கிகள் மற்றும் பாடல்களின் பாடல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது புத்தகங்களின் எண்ணிக்கைக்கு சமமான மதிப்புடையது போல. சாலமன், ஆனால் பாடங்களின் வகையும் கூட. இரண்டாவது எபிரேயர்களிடையே இல்லை, அதன் பாணியே கிரேக்க சொற்பொழிவைத் தூண்டுகிறது. மேலும் இது ஃபிலோ யூதேயஸ் என்பவருடையது என்று பண்டைய எழுத்தாளர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை. எனவே, திருச்சபை ஜூடித், டோபியாஸ் மற்றும் மக்காபீஸ் புத்தகங்களையும் வாசிப்பது போல், ஆனால் அவற்றை நியமன வேதாகமங்களில் பெறவில்லை, எனவே மக்களை வலுப்படுத்துவதற்காக இந்த இரண்டு சுருள்களையும் ஒருவர் படிக்கலாம், (ஆனால்) திருச்சபை கோட்பாடுகளின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக அல்ல.
Aquarian Gospel of Jesus the Christ – 1908 ஆம் ஆண்டு அமெரிக்கப் போதகர் லெவி எச். டௌலிங் எழுதிய புத்தகம், ஆகாஷிக் பதிவுகளில் இருந்து உரையை படியெடுத்ததாகக் கூறியது, மாய அறிவின் ஒரு தொகுப்பாகும்.
ஜாஷரின் புத்தகம் - பைபிளில் பலமுறை குறிப்பிடப்பட்ட தொலைந்த புத்தகத்தின் பெயர், இது 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் குறைந்தது இரண்டு உயர்மட்ட போலிகளுக்கு உட்பட்டது.
ஜோசஃபஸின் நற்செய்தி – 1927 போலியானது யூத வரலாற்றாசிரியர் ஃபிளேவியஸ் ஜோசஃபஸுக்குக் காரணம், உண்மையில் இத்தாலிய எழுத்தாளர் லூய்கி மோக்கியாவால் அவரது நாவல் ஒன்றுக்கு விளம்பரம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
புனித நெருப்பு - ஒவ்வொரு ஆண்டும் ஜெருசலேமில் உள்ள புனித செபுல்கர் தேவாலயத்தில் பெரிய சனிக்கிழமையன்று ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களால் கூறப்படும் அதிசயம். 8 ஆம் நூற்றாண்டில் முதலில் குறிப்பிடப்பட்டது. பின்னர் மனிதனால் உருவாக்கப்பட்டதாகக் காட்டப்பட்டது.
லெட்டர் ஆஃப் பெனான் - 5 ஆம் நூற்றாண்டின் காப்டிக் பாப்பிரஸின் மொழிபெயர்ப்பில் ஒரு எகிப்திய மருத்துவர் இயேசுவையும் அப்போஸ்தலர்களையும் சந்தித்ததை விவரித்தார். 1910 இல் எர்ன்ஸ்ட் எட்லர் வான் டெர் பிளானிட்ஸால் உருவாக்கப்பட்டது.
லெட்டர் ஆஃப் லென்டுலஸ் - 15 ஆம் நூற்றாண்டில் புளோரன்ஸில் தோன்றிய ஆவணம் மற்றும் யூடியாவின் ஆளுநரான பப்லியஸ் லென்டுலஸ் எழுதிய கடிதம் என்று கூறப்படுகிறது, அதில் இயேசு கிறிஸ்துவின் உடல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சமகால கலையில் கிறிஸ்துவின் சித்தரிப்புகளை ஆவணம் பெரிதும் பாதித்தது.