காரணமின்றி மரங்களை வெட்டாதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரணமின்றி மரங்களை வெட்டாதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காரணமின்றி மரங்களை வெட்டாதே

தமிழர் சமயம்


பயனில் செயல்

பயம்இல் மரம்குறைத்த லோடுஅகழ்தல் என்ப
பயம்இல் பமாதம் எனல். - (அருங்கலச்செப்பு 93)

 பொருள்: காரணமிண்றி தாவரங்களை அழிப்பதும் , பூமியை அகழ்வதும் பயனற்ற ‘பிரமாதம்” எனப்படும். 
 

இஸ்லாம்


முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்களிடையே) எழுந்து நின்று, 'அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த போதே மக்காவைப் புனிதப்படுத்திவிட்டான். எனவே, அது அல்லாஹ் புனிதப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போரிடுதல் அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பிறகும் எவருக்கும் அது அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட (மக்கா வெற்றி கொள்ளப்படும் இத்தருணத்தில்) சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக்கூடாது. பிறர் தவறவிட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறவரும் எடுக்கக் கூடாது'' என்று கூறினார்கள். உடனே, அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் தேவைப்படுகிறதே'' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்துவிட்டுப் பிறகு, 'இத்கிரைத் தவிரத் தான் ஏனெனில், அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புஹாரி தமிழாக்கம் அத்தியாயம் 64/2 (நபிகளார் காலத்துப்) போர்கள் 4313)
 
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி :2320 அனஸ் இப்னு மாலிக் (ரலி))

"இறுதித் தீர்ப்பு நாள் வருகையில் கூட, ஒரு மரக்கன்றை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் விரைந்து அதனை மண்ணில் ஊன்றட்டும்" என்று இறைதூதர் (ஸல்) கூறினார்கள்.

இந்த நபிமொழியின் பொருள் குறித்து விளக்கம் தரும் அறிஞர் தாரிக் ரமழான் “இறுதி நாளில் கூட இறை நம்பிக்கை கொண்டவர் வாழ்க்கையையும் அதன் சுழற்சிகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வண்ணம் இயற்கையை மதித்து அதனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்கிறார்.

கிறிஸ்தவம் & யூதமதம் 


“நீ நெடுங்காலமாக ஒரு நகரத்தை முற்றுகையிட்டு, அதைக் கைப்பற்றுவதற்காக அதற்கு எதிராகப் போர் செய்து, அதன் மரங்களுக்கு எதிராக கோடாரியைக் காட்டி அழிக்கக் கூடாது. நீங்கள் அவற்றை உண்ணலாம், ஆனால் அவற்றை வெட்ட வேண்டாம். உன்னால் முற்றுகையிடப்பட வேண்டிய வயலில் உள்ள மரங்கள் மனிதர்களா? - (உபாகமம் 20:19)

பூமியில் உள்ள புல்லையோ, பசுமையான செடிகளையோ, மரங்களையோ சேதப்படுத்தக் கூடாது என்றும், ஆனால் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. - (வெளிப்படுத்துதல் 9:4

உங்களுக்குத் தெரிந்த மரங்கள் மட்டுமே உணவுக்கான மரங்கள் அல்ல, நீங்கள் அழித்து வெட்டலாம், உங்களுடன் போரிடும் நகரம் விழும் வரை முற்றுகைகளைக் கட்டலாம். -  (உபாகமம் 20:20)