குடும்ப உறவைச் சேர்ந்து நட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்ப உறவைச் சேர்ந்து நட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குடும்ப உறவைச் சேர்ந்து நட

தமிழர் சமயம் 


கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய. - (தொல்காப்பிய சூ. 154)

பொருள்: தன்னைக் கொண்டவனைப் பேணித்தொழுதெழுதல் முதலாகத் தன் உயிரினும் சிறந்தவனாகக் குறிக்கொண்டொழுகும் மனத்திண்மையும் நிறைந்தியலும் காதற் பண்பும் நன்றின் பாலுய்க்கும் அறிவானே ஒழுகுதலும், மென்மைத் தன்மையாற் பிறர் குறையினைப் பாராட்டாத பொறையுடைமையும் மறைபிறரறியாமை நெஞ்சினை நிறுக்கும் திறனும், இன்னலும் இடும்பையும் நோக்காமல் ஒல்லும் வகையான் விருந்தினரைப் போற்றியளித்தலும் தலைவற்கும் தனக்கும் கேளிராயினாரையும் உறவாயின ரையும், ஆட்சிக்கு அங்கமாயினாரையும் பேணிக்காத்தலும் அவை போல்வனவாகிய தெய்வத்தையும் தென்புலத்தாரையும் தலைவனொடு அமர்ந்து ஓம்புதலும் குலமரபான் வந்த காமக்கிழத்தியரை வெறாது அவரான் மதிக்கப்பெறுதலும் பாணர் முதலாய வாயில்கட்கு அருளுதலும் ஊடலும் ஊடல்உணர்தலும் ஆகிய சால்புகளமைந்த தலைவியின் மாட்சிமைகளை முன்னின்று தலைவன் முகனமர்ந்து செவிமடுக்கும் முறையமையான் கூறும் கூற்றுக்கள், மனையகத்துப் புக்கு உரையாடும் மரபுரிமையுடைய பாணன் பாடினி, முதலாய வாயில்கட்கு உரியவாகும்.

இஸ்லாம் 

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி))

அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான். - (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புகாரி)

கிறிஸ்தவம் 

ஆதாரம் : புகாரி, முஸ்லிம்"கடவுளை நேசிப்பதாகக் கூறிக்கொண்டு சகோதரனையோ சகோதரியையோ வெறுக்கிறவன் பொய்யன். ஏனென்றால், தான் கண்ட சகோதரனையும் சகோதரியையும் நேசிக்காதவன், தாங்கள் காணாத கடவுளை நேசிக்க முடியாது."  (யோவான் 4:20)

"கடவுளின் மக்கள் ஒற்றுமையாக வாழும்போது அது எவ்வளவு நல்லது மற்றும் இனிமையானது!" (சங்கீதம் 133:1)