தமிழர் சமயம்
யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
பொருள்: "இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்."
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்கனைகழல் ஈசனைக் காண அரிதாம்கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திரு - 7ஆம் தந்திரம் - 1795)
பொருள்: சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, சிவனைக் குறித்துப் பிறருக்கு எடுத்துக் கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது.
அறம் விளக்கல்
அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்அறத்தை விளக்குதல் நற்கு. - (அருங்கலச்செப்பு, 24)
பொருள்: அனைவருக்கும் அறத்தின் பெருமை மிக்கச் சிற்ப்பினை நன்கு விளங்க வைத்தல் அறத்தை விளக்கல் உறுப்பாம்.
யூதம்
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று அக்காலத்தில் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார். என்று மோசே கூறினார் - (உபாகமம் 4:14)
கர்த்தரை துதித்து அவருடைய நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்” (சங்கீதம் 105:1)
கிறிஸ்தவம்
அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்” (மத்தேயு 15:24)
ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் (மத்தேயு 24: 14)
இஸ்லாம்
வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)
(நபியே!) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ அதைக் கொண்டு அவர்களிடம் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன் அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன், இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன். (அல்குர்ஆன் 16:125)ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! - (அல்குர்ஆன் 103:3)
(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி நன்கறிவான் - (அல்குர்ஆன்16:125)
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராகவும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 3:110)(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - (அல்குர்ஆன் 2:256)
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? (திருக்குர்ஆன் 10:99)
முடிவுரை
வேதத்தை ஓதினால் மட்டும் போதாது அதை பொருள் உணர்ந்து அது கூறும் நெறிகளை பின்பற்றி பிறருக்கும் எடுத்து கூறவேண்டும் என்பது அனைத்து நெறிகளும் இடும் கட்டளை ஆகும். ஆனால் மற்றவரை கட்டாய படுத்துவதை அவைகள் விரும்பவில்லை.
எல்லோரும் அவரவர் சமயத்தை போதிக்க வேண்டும் என்றால் மாதங்களுக்கு இடையே சண்டை வராமல் இருக்குமா என்று சிந்தித்தால், நான்மறை என்றால் என்ன? கல்வி என்றால் என்ன? என்று அறிந்தால் இப்படி பட்ட குழப்பங்கள் தோன்றாது. இறைவன் ஒருவனே, அனைத்து வேதங்களும் அவனிடம் இருந்தே வந்தது, அனைத்து சமயங்களும் அவன் உருவாக்கியது. அதை கற்காமல் பிழையாக புரிந்துகொண்டு அவன் கூறும் அறத்தில் நில்லாமல் போன மக்களால் ஏற்படும் குழப்பங்கள் இவைகளெல்லாம்.