வழிபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழிபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாத்தானை வழிபடலாமா?

கடவுளை வழிபட்டால் கூட ஒன்றும் விளங்கவில்லை. நான் சாத்தானை வழிபடலாமா? - Quora 

உங்களுக்கு ஒரு சின்ன உதாரணம்! உங்களுக்கு கடுமையாக பசிக்கிறது, ஆனால் நீங்களே சமைத்து உண்ணும் நிலை. எனவே மற்றவர்கள் சமைப்பதை பார்த்து நீங்களும் சமைகின்றீர்கள். ஆனால் உங்களுடைய உணவில் ருசியும் பக்குவமும் இல்லை. இப்பொழுது என்ன நினைப்பீர்கள்? சாப்பாடே வேண்டாம் என்று கருதுவீர்களா? சாப்பாட்டுக்கு பதிலாக வேறொன்றை தேர்வு செய்வீர்களா? அல்லது முறையாக சமைக்க கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களா?

சமையல் முதல் வேலை வாய்ப்பு வரை அனைத்துக்கும் அதற்கு ஏற்ற அளவு முறையாக கற்க வேண்டி உள்ளது என்கிற அடிப்படை அறிவுடைய நமக்கு கடவுளை வணங்கி வழிபட தேவையான கல்வியை கற்கவேண்டும் என்ற அடிப்படை தெரிவதில்லை.

இப்போ நீங்க கேட்ட கேள்வியில் உங்களுக்கு தெளிவு உண்டா என்று பார்ப்போமா?

வழிபடுதல் என்றால் கோவிலுக்கு சென்று வணங்குவதை நீங்க குறிப்பிடுவதாக நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் உண்மையில் கடவுளை வழிபடுதல் என்றால் என்ன?

வழிபடுதல் என்றால் கட்டுப்படுதல் (அ) பின்பற்றுதல் என்று பொருள்! கடவுளுக்கு வழிப்பட உங்களுக்கு கடவுளின் அறிவுரைகள் என்னென்ன, நீங்கள் செய்யும் தினசரி விடயங்களில் சரி பிழைகளை கடவுள் எவ்வாறு வரையறுத்து உள்ளார், என்று நீங்கள் கற்று அறிந்து உள்ளீர்களா? கடவுள் நிமிடம் பேசும் முறை மறைநூல்கள் ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்காக உங்கள் வாழ்நாளில் எத்தனை நிமிடம் இதுவரை செலவு செய்து உள்ளீர்கள்?

கடவுள் கூறியுள்ள விதத்தில் நாம் கடவுளை வணங்கினால், நாம் கடவுளுக்கு வழிப்படுவதாக பொருள். ஆனால் இது கடவுளுக்கு வழிப்படுதலில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. ஆனால் விழிப்பது முதல் உறங்குவது வரை, பிறப்பு முதல் இறப்பு வரை, ஒவ்வொரு கால சூழ்நிலைக்கும் கடவுள் சில விதிகளையும் அறங்களையும் வகுத்து தந்துள்ளார். அதை கற்பதுதான் கல்வி ஆகும். எனவே நீங்கள் கடவுளை எப்படி வழிப்பவேண்டும் என்று விளங்காமல் வழிப்பட்டு உள்ளதால், உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று கருதுகிறேன்.

சாத்தானை வழிபடலாமா? என்று கேட்டால், மேற்சொன்ன விடயங்களில் கல்வி இல்லாததால் நீங்கள் ஏற்கனவே நேரடியாக அல்லது மறைமுகமாக சாத்தானை பின்பற்றி கொண்டுதான் இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் இறைவனை வழிப்படும் பொழுது மன அமைதியும், சாத்தானை பின்பற்றும் பொழுது குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் இருப்பதுதான் இயல்பு.

சுருக்கமாக உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதென்றால் இறைவனை அறிந்து அவனது மறைநூல்களை கற்று அதைக்கொண்டு அவனுக்கு வழிப்பட்டால் உங்களுக்கு மனத் தெளிவும் நிமமதியும் கிடைக்கும்.

மேலும் அறிய வாசிக்க வாய்மை.

வழிபடுவோருக்கு ஞானம் கிடைக்கும்

இறைவனுக்கு கட்டுப்படுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும்

தமிழர் சமயம்

வாய்ந்தறிந்‌ துள்ளே வழிபாடு செய்தவர்‌

காய்ந்தறி வாகக்‌ கருணை பொழிந்திடும்‌

பாய்ந்தறிந்‌ துள்ளே படிக்கத வொன்றிட்டுக்‌

கூய்ந்தறிந்‌ துள்ளுறை கோயிலு மாமே - (திருமந்திரம் 810)


விளக்கம்‌: இவனருள்‌ வாய்ந்து, சிவனின் அருமறை கூறும் அறங்களை வழிபடுபவர்களுக்கு, அவன்‌ கருணை பொழிவான்‌, அறிவு மினுங்கப்‌ பெறும்‌. வான்கங்கை பாயப்‌ பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில்‌ மனம்‌ ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால்‌, நம்முள்ளே சிவன்‌ கோயில்‌ கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்‌.

காய்ந்த அறிவு - மினுங்கும்‌ அறிவு, படிக்கத வொன்றிட்டு - படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி - கூர்ந்து அறி 

இஸ்லாம் 

“ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (அவனது கட்டளைகளை பின்பற்றி) நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்”. (குர்ஆன் 8:29

யூதம் / கிறித்தவம் 

இதோ, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, நீங்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசிக்கிற தேசத்திலே அவைகளைச் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்குக் கட்டளைகளையும் விதிகளையும் கற்பித்தேன். அவற்றைக் காத்து, அவைகளைச் செய், அதுவே உன் ஞானமும் ஜனங்களின் பார்வைக்கு உன் புத்தியுமாய் இருக்கும். ( உபாகமம் 4:5–6 )

கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்! இதுவே ஞானத்தின் ஆரம்பம். புரிந்து கொள்ள, நீங்கள் பரிசுத்த கடவுளை அறிந்திருக்க வேண்டும். (நீதிமொழிகள் 9:10)

வழிபாடு

வழிபாடு - வழிபடுதல் - வழிப்படுதல் - கட்டுப்படுத்தல்

வழிபாடு எனும் சொல் இறைவணக்கம் எனும் பொருளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வழிபடுதல் என்றால் கட்டுப்படுதல் என்று பொருள். இறைவனுக்கு கட்டுப்படும் பொழுது அவனை வணங்குவது ஒரு பகுதி, ஆனால் இறைவணக்கம் மட்டுமே வழிபாடு ஆகாது.  வழிபடுதல் எனது இறைவன் நான்மறைகளில் கொடுக்கப்பட்ட அறத்தை தொடர்ந்து பின்பற்றி பாவத்தை விடுவதன் மூலம் தூய உள்ளத்தை அடைவதுதான் வழிபாடு ஆகும். 

தமிழர் சமயம்

தாம் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கிநின்றார் அவர்
தாம் அறிவார் சிவதத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்கும் தம் பரனாகுமே. (திருமந்திரம்-251)


கருத்து: தன்னை அறிவோர், சிவபெருமானை வாங்குவார், சிவபெருமான் வழங்கிய திருமந்திரம் எனும் வேதத்தில் கூறிய அறங்களுக்கு கட்டுப்படுவார், அவர்தான் சிவ தத்துவத்தை ஏற்று நடப்போர்கள் ஆவர். தன்னை அறிவோர்க்கும் சிவபெருமான் உற்ற துணையாவார்.

கிறித்தவம்

ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள். (நீதிமொழிகள் 1:7)

இஸ்லாம்

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (குர்ஆன் 24:52)

“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், இறைத்தூதருக்கும் உங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்." (அல்குர்ஆன் 4:59)

முடிவுரை

இறைவனை வணங்குவது மட்டும் இறைவனின் எதிர்பார்ப்பல்ல. அவன் வேதத்தில் வழங்கிய அறத்துக்கும், நீதிக்கும், கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பதுதான் இறைவணக்கத்தை பூர்த்தி செய்யும். அல்லாதவருக்கு அவன் துணை நிற்க மாட்டான், வெற்றியை அளிக்க மாட்டான், சொர்கத்தை வழங்கமாட்டான் என்பதே இறைவனின் வாக்குறுதியாக உள்ளது. 

கடவுளுக்கு வழிபடாதோர்

வழிப்படுதல் என்றால் என்ன?


தமிழில் வணக்கவழிபாடு என்பது இரு சொற்கள் இணைந்த ஒருசொல்.

வணக்கம் - வணங்குதல், தொழுதல் 
வழிபாடு - வழிபடுதல், உபதேசத்தை பின்பற்றுதல் 

இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு சொல்லாக அடையாள படுத்துவதற்கு ஓர் நோக்கமுண்டு. கடவுளை வணங்குவது மட்டுமல்லால் அவன் மறை நூல்கள் சொல்லும் நெறிகளை பின்பற்றுபவதன் மூலம் அவனுக்கு வழிப்பட வேண்டும். நெறிநூல்களை பின்பற்றுகிறீர்கள் ஆனால் கடவுளை வணங்கவில்லை என்றால் அதற்கும் மதிப்பில்லை. இரண்டும் ஒரு சேர இருந்தால் தான் அவன் உண்மையிலேயே ஆன்மீகவாதி ஆவான். 
 

தமிழர் சமயம் 


தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே -(திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

இஸ்லாம் 

 “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:32) 

எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ அத்தகைய அழகிய செயல் புரிவோரின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை. (அல்குர்ஆன் 18:30)

'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (அல்குர்ஆன் 29:2,3)

கிறிஸ்தவம் 


அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும், அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன். - (சங்கீதம் 89:30)

தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான். அவன் வஞ்சகன், பொய்யன். தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும். அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும். - (சங்கீதம் 43:1)