சான்று 1தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது. - (குறள் 1:7)உரை: தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.எந்த உருவமும், படமும், எதனுடனும் ஒப்பேடுசெய்வதும் செய்ய கூடாது. வேத நூலை தீவிர எந்த வர்ணனையும் இறைவனுக்கு பொருந்தாது. ஏனென்றால் இறைவனை கண்டவர்கள் எவரும் இலர் மேலும் இணையாக ஏதும் இல்லை.
தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியேஎன்னைமேல் ஏற்றிய இனியநற் றானே - (திருவருட்பா 1100)உரை : தனக்கு ஒப்பாவார் இல்லாத தலைவனாகிய சிவபெருமானைக் காட்டி என்னை மேனிலையில் உயர்த்தியது இன்பமே நல்கும் சிவம்.
இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். - (ஏசாயா 40:25)
நபியே சொல்லுங்கள்! அந்த அல்லாஹ் ஒருவன். احد ஒருவன். அந்த இறைவன், அந்த ஒப்பற்றவன், அந்த பேரரசன் احد ஒருவன் தான். - (குர்ஆன் 112)
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு (படைப்புகளின் தன்மைகளைக் கொண்ட) உவமானம் கூற வேண்டாம், நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன், ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 16:74)
இணையற்ற, இணையில்லாத , ஈடு இணையற்ற, ஈடு இல்லாத, ஒப்பற்ற, ஒப்பில்லாத, சமமில்லாத, ஒப்பீடற்ற , நிகரற்ற, தன்னிகரற்ற,உவமையில்லாத போன்ற வார்த்தைகளின் உண்மை பொருளை மக்கள் அறிந்ததாகவும் அல்லது சரியான இடங்களில் பயன்பத்துவதாகவும் கருத முடியவில்லை.
இந்த வார்த்தைகளை பொதுவாக பயன்படுத்தும் பொழுது, எந்த ஒன்றிலும் இணையில்லாத என்று பொருள் படும். ஏதேனும் ஒரு பண்போடு சேர்த்து பயன் படுத்தப்படும் பொழுது அந்த பண்பில் மட்டும் ஒப்பில்லாதவன் என்று பொருள்.
எ.கா1: கிரிக்கெட்டில் டோனி தன்னிகரற்ற தலைவன்
டோனி என்ற சொல்லுக்கு ஒரு இலக்கணம் உண்டு, அவன் அடிப்படையின் இந்திய நாட்டை சார்ந்தவன், மனிதன் மற்றும் ஆண் பாலினத்தை சேர்ந்தவன்.
எனவே மேற்சொன்ன வாக்கியத்தில் உள்ள மறைமுக தகவல்கள் என்ன வென்றால்
- டோனி ஒரு இந்தியன், மனிதன் & ஆண்
- டோனி ஒரு கிரிக்கெட் வீரன்
- டோனி ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைவன்
எனவே இந்த மூன்று மறைமுக தகவல்களோடு அவரது தன்னிகரற்ற தன்மை ஒப்பிடப் படுகிறது. டோனி கிரிக்கெட் விளையாட்டில் மட்டும், இந்தியாவில் அந்த பதவியை வகுத்த மற்ற தலைவர்களை விட, உலகின் இருந்த மற்றும் இருக்கும் மற்ற கிரிக்கெட் தலைவர்களை விட டோனி சிறந்தவர் என்று பொருள்.எ.கா2: டோனி தன்னிகரற்ற தலைவன்
இந்த வாக்கியம் கூறும் மறைமுகசெய்திகள் என்ன வென்றால்
- டோனி ஒரு இந்தியன் & மனிதன், ஆண்
- டோனி ஒரு தலைவன்
டோனி இந்தியாவில், உலகில் இருந்த மற்றும் இருக்கும் எந்த தலைவனும் டோனிக்கு இணை அல்ல என்று பொருள்.
எ.கா3: டோனி தன்னிகரற்றவன்
இந்த வாக்கியம் கூறும் மறைமுக தகவல்களாவன
- டோனி ஒரு இந்தியன், மனிதன், ஆண்
உலகில் இருந்த மற்றும் இருக்கும் எந்த மனிதனும் டோனிக்கு இணை அல்ல என்று பொருள். டோனி என்பவர் ஒரு மனிதர், ஒரு ஆண். எனவே மனிதனிடத்தில், ஆணிடத்தில் இயல்பாக நிறைந்து இருக்கும் பண்புகளைவிட, குணங்களைவிட, திறமையைவிட மாற்றாக அல்லது அதிகமாக டோனியிடம் இருக்கும் பொழுது இந்த வார்த்தைகள் பயன்படுத்த படலாம்.
எ.கா4: இறைவன் தன்னிகரற்றவன்
இறைவன் என்ற சொல்லுக்கு ஒரு இலக்கணம் உள்ளது. இறைவன் ஆதியும் அந்தமும் அற்றவன், பிறப்பும் அற்றவன், அவனது உருவை கண்ட மனிதனோ, தேவரோ அல்லது அசுரரோ இல்லை. அவன் ஒருவனே படைத்து, காத்து அழிப்பவன்.
- எனவே உருவ அமைப்பில், பண்பில், ஆற்றல் அளவில் இறைவனுக்கு நிகராக, ஒப்பாக, உவமையாக, எடுத்துக்காட்டாக, இணையாக வேறெந்த ஒன்றையும் நாம் கருதக்கூடாது.
முடிவுரை
இறைவன் தன்னை பற்றி தானே சொன்ன வர்ணனைகளை கொண்டுதான் நாம் அவனை அறிந்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனோடோ, குரங்குகளோடோ, யானையோடோ, சூரியனோடோ, பசுவுடனோ, பாம்புடனோ அல்லது நாம் அறியும், காணும் எந்த படைப்புகளோடும் ஒப்பு நோக்க முடியாது, ஒப்பு நோக்க கூடாது.