பாவம் என்றால் என்ன?

பாவம் என்றால் என்ன என்று அறிய முயலும் பொழுது அதனுடன் சேர்த்து பாவ புண்ணியங்களை வரையறுககும் உரிமை யாருக்கு உண்டு என்பதையும் அறிய வேண்டும். சரி பிழை-களை வரையறுப்பது யார்? என்பதை அறியாத பட்சத்தில் இன்று influencers என்ற பெயரில் எவர் எவரோ தனக்கு தோன்றியதை வாத திறமையின் மூலம் நியாய படுத்துவதை பார்க்கிறோம். மேலும் அவர்களின் வலையில் பெரும்பாலானோர் விழுவதையும் பார்க்கிறோம். இவ்வாறு தீய வழியில் செல்வதை தடுக்கும் வண்ணமாக நாமிந்த அடிப்படை அறிவை வளர்ப்பது மிக மிக அத்தியாவசியம்.

தமிழர் சமயம்  

வேதத்தை விட்ட அறமில்லை - திருமந்திரம்.

புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே. - திருமந்திரம் 1047 
  
கருத்து: புண்ணியம்‌, பாவம்‌ என்று இரண்டு உள்ளன. புண்ணியத்தின்‌ பயனாக நன்மையும்‌, பாவத்தின்‌ பலனாகத்‌ தீமை, துயரம்‌ ஆகியவையும்‌ வந்து சேர்கின்றன. இதை அறிந்து தெளிந்து, தெளிவு பெற்றவர்கள்‌ சிலரே. அவர்கள்‌ ஞானிகள்‌ எனப்படுவார்கள்‌. புண்ணியம்‌, பாவம்‌ எனும்‌ இவை இரண்டும்‌, ஜீவன்களைப்‌ பற்றிட வரும்‌ பயன்களை நன்றாக உணர்ந்து, அவற்றின்‌ ஆணி வேரையே அறுத்து, மனதைத்‌ தீய வழிகளில்‌ செல்லாதபடித்‌ தடுக்கும்‌ மன உறுதி பெற்றால்‌, பரம்பொருள்‌ இருக்குமிடம்‌ அறியலாம்‌. ஆராய்ந்து தெளிந்து கொள்ளுங்கள்‌!

விளக்கம்: புண்ணியம்‌, பாவம்‌ எனும்‌ இரண்டைச்‌ சொல்லி, அவற்றால்‌ விளையும்‌ விளைவுகளையும்‌ சொல்கிறது இப்பாடல்‌! புண்ணியத்தால்‌ நன்மையும்‌, பாவத்தால்‌ தீமையும்‌ விளையும்‌ என்னும்போது, பாவத்தை வெறுக்கலாம்‌, விலக்கலாம்‌. ஆனால்‌, நன்மை தரும்‌ புண்ணியத்தை ஏன்‌ விலக்க வேண்டும்‌ எனும்‌ சந்தேகம்‌ எழும்‌. இதற்கு முன்னோர்கள்‌ ஓர்‌ அற்புதமான உதாரணம்‌ சொல்வார்கள்‌. இரண்டு பறவைகள்‌. ஒன்று தங்கக்‌ கூண்டில்‌ அடைக்கப்பட்டிருக்கிறது. மற்றொன்று தகரக்‌ கூண்டில்‌ அடைபட்டிருக்கிறது. இந்த இரண்டில்‌ எது உயர்ந்தது என்றால்‌, இரண்டுமே அல்ல!

இஸ்லாம்  

பெருமானார் (ஸல்) அவர்களிடம் நன்மையைப்பற்றியும் தீமையைப்பற்றியும் வினவினேன். அதற்கவர்கள் “நல்லொழுக்கமே நன்மையெனப்படும். பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்செரிப்பதும், அதைப்பிறரிடம் வெளியிடும் போது நீ வெறுப்பதுமாகும்.” என விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸிற பின் ஸம்ஆன், நூல் முஸ்லிம்)

கிறிஸ்தவம்  

பாவம் செய்துகொண்டே இருக்கிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான். சட்டத்தை மீறுவதுதான் பாவம். (1 யோவான் 3:4)

சனாதன மதம்  

பாவம் என்பது தெய்வீக சட்டத்தை வேண்டுமென்றே மீறுவதாகும். உள்ளார்ந்த அல்லது "அசல்" பாவம் இல்லை. ஆன்மா என்றென்றும் இழக்கப்படும் மரண பாவமும் இல்லை. சாதனா, வழிபாடு மற்றும் துறவறம் மூலம் , பாவங்களை நிவர்த்தி செய்யலாம்.  (ஸ்லோகா 52)

நல்லறங்களாக நால்வேதங்கள் எதை எல்லாம் சொல்லுகிறதோ அதற்கு முரணாக நடப்பது தான் பாவம் ஆகும். மேலும் மனிதனின் உள்ளுணர்வும் பாவத்தை அறிந்தே வைத்து உள்ளது.

பாவம் செய்வதன் மூலம் தற்காலிகமாக சில இன்பங்கள் பெறலாம் ஆனால் அதே சமயத்தில் அதை செய்வதை மனம் முழுமையாக ஏற்காது.

பாவத்தை செய்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதம், தமிழர் சமயம் என எல்லா சமயங்களும் ஒரே குரலில் கூறுவது என்னவென்றால் அது இறைவனின் நெருக்கத்தை அகற்றும், நரகத்துக்கு கொண்டு செல்லும், துன்பத்துக்கு வழிவகுக்கும், இளிவடைய செய்யும்.

மாறாக சுயகட்டுப்பாட்டுடன் இருக்கும் ஒரு மனிதனுக்கு ஆன்மீக வாழ்வில் மட்டுமல்ல பௌதீக வாழ்விலும் பல நன்மைகள் உண்டு.

உதாரணமாக, மனதில் எழும் தற்காலிக இன்பங்களை கட்டுப்படுத்தும் ஒரு நபருக்கு அறிவுக்கூர்மை அதிகமாகிறதாக நவீன அறிவியல் கூறுகிறது.

இஸ்லாமிய உலகின் மிக முக்கிய அறிஞர் ஒருவரான இப்னு தைமியா, தனக்கு அறிவு குறைபாடு அல்லது நியபக மறதி ஏற்படும் சமயத்தில் உடனடியாக பாவமன்னிப்பு கேட்பதில் ஈடுபடுவார் என்பது வரலாறு.

12 கருத்துகள்:

  1. பாவம் செய்துகொண்டே இருக்கிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான். சட்டத்தை மீறுவதுதான் பாவம். (1 யோவான் 3:4)

    பதிலளிநீக்கு
  2. >நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை ("அல்பிர்ரு") மற்றும் தீமை ("அல்இஸ்மு") பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்மை என்பது நற்பண்பாகும். **பாவம் என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்**" என்று விடையளித்தார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 4992)

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால் உங்களுடைய சிறு பாவங்களுக்கு(அதனை)நாம் பரிகாரமாக்கி உங்களை (மன்னித்து மிக்க) கண்ணியத்தின் வாயிலிலும் புகுத்துவோம். (அல்குர்ஆன் 4:31)

    (அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவைகளையும் விட்டு விலகி இருப்பதுடன் தங்களுக்கு கோபமூட்டப்பட்ட சந்தர்பத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள் அல்குர்ஆன் 42:37)

    (நன்மை செய்யும்) அவர்கள் (அறியாமல் நேர்ந்துவிடும்) சிறு தவறுகளைத்தவிர ஏனைய பெரும்பாவங்களிலிருந்து விலகி இருப்பார்கள். நிச்சயமாக உமது இரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். (அல்குர்ஆன் 53:32)

    “ஐந்து நேரத் தொழுகைகளும். ஒவ்வொரு ஜும்ஆவும். ஒவ்வொரு ரமளானும். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடைப்பட்ட காலங்களில் செய்யக்கூடிய சிறுதவறுகளுக்கு பரிகாரமாகும். (ஆனால்)இடைப்பட்ட காலங்களில் பெரும்பாவங்களில் ஈடுபடாத வரை! என நபி (ஸல்) கூறினார்கள். ( ஆதாரம்: முஸ்லிம்.திர்மிதி. அஹ்மத்)

    ஒருமுறை நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தம் நல்லறத் தோழர்களிடம் “அழிவைத்த்தரும் ஏழு பாவங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு” எச்சரித்தார்கள்’அவை யாவை? என நபித்தோழர்கள் கேட்டபோது பின்வருமாறு விளக்கமளித்தார்கள் அண்ணலவர்கள்.

    1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்
    2. சூனியம் செய்தல்
    3. இறைவன் தடுத்த ஓர்உயிரை அநியாயமாக கொலை செய்தல்
    4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குவது
    5. வட்டிப்பொருளை உண்ணுதல்
    6. போரில் பறமுதகிட்டு ஓடுவது
    7. விசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.
    அறிவிப்பவர். அபூ ஹுரைரா (ரலி) நூல்கள் புகாரி. முஸ்லிம்.

    அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அவை ஏழிலிருந்து எழுபது வரை ஆகும் எனக்கூறுகிறார்கள். உண்மையில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவது சரிதான் என இமாம் தஹபீ (ரஹ்) அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

    https://hakkem.blogspot.com/2011/04/blog-post_123.html

    பதிலளிநீக்கு
  4. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை ஆய்வு செய்த இமாம் தஹபீ(ரஹ்) அவர்கள் குர்ஆன் சுன்னா ஒளியில் எழுபது பாவங்களைப் பின்வருமாறுதொகுத்து வழங்கியுள்ளனர்.

    “பெரும்பாவங்கள் எழுபது”

    1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்.
    2. சூனியம் செய்தல்.
    3. இறைவன் தடுத்த ஓர் உயிரை அநியாயமாக கொலை செய்தல்
    4. அநாதைகளின் சொத்துகளை விழுங்குதல்
    5. வட்டிப்பொருளை உண்ணுதல்
    6. போரில் புறமதுகிட்டு ஒடுதல்
    7. வசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்
    8. பெற்றோரைத் துன்புறுத்தல்
    9. பொய் சத்தியம் செய்தல்
    10.பொய்சாட்சிசொல்லுதல்
    11. சதிசெய்தல்
    12. அல்லாஹ்வின்மீதும்,அவனது ரஸூலின் மீதும் பொய்யுரைத்தல்
    13. ஆகாததை ஆகுமாக்குதல்
    14. காட்டிக்கொடுத்தல்
    15. மோசடி செய்தல்
    16. பொய்யுரைத்தல்
    17. கோள் சொல்லுதல்
    18. வாக்கு மாறுதல்
    19. அநீதம் செய்தல்
    20. முகஸ்துதி செய்தல்
    21. வழிப்பறி செய்தல்
    22. தொழுகையை விடுதல்.
    23. ஸகாத்தை மறுத்தல்
    24. நோன்பைவிடுதல்
    25. ஹஜ்ஜு செய்யாதிருத்தல்
    26. கற்ற கல்வியை மறைத்தல்
    27. விதியை பொய்யாக்குதல்
    29. திட்டுதல் (சபித்தல்)
    30. பிறரைத் துருவி ஆராய்தல்
    31. நன்மையை சொல்லிக்காட்டுதல்
    32. சோதிடனை உண்மைப்படுத்தல்
    33. அதிகாரிக்கு இலஞ்சம் வழங்குதல்
    34. தற்பெருமை
    35. தற்கொலை
    36 திருடுதல்
    37. மது அருந்துதல்
    38. சூதாட்டம்
    39. விபச்சாரம்
    40. ஆண் புணர்ச்சி
    41. தகாத உறவு
    42. அதிகாரத்தில் இருப்பவபவன் அநீதி செய்தல்
    43. நேர்மை தவறிய நீதிபதி.
    44. ஆண் பெண்ணாகவும்,பெண் ஆணாகவும் வேடமிடுதல்
    44. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
    45. கணவனுக்குத் துரோகம் செய்தல்
    46. உருவப்படம் வரைதல்
    47. ஒப்பாரி வைத்து அழுதல்
    48. கொடுமை செய்தல்
    49. வரம்பு மீறுதல்
    50. அண்டை வீட்டாரை நோவினை செய்தல்
    51. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்
    52. மதபோதகர்களை இம்சித்தல்
    53. கர்வம் கொள்ளுதல்
    56. ஆண்கள் பட்டாடையும் தங்கமும் அணிதல்
    57. அடிமை தப்பித்து ஓடுதல்
    58. அல்லாஹ்வுக்கன்றி அறுத்தல்
    59. அந்நியரை தந்தையாக ஏற்றல்
    60. மேலதிக தண்ணீரைத் தடுத்தல்
    61. அளவை நிறுவையில் மோசடிசெய்தல்
    62. நியாயமின்றி வாதம் புரிதலும் பிறரை மயக்கப் பேசுதலும்
    63. இறைச் சோதனைகளில் அவநம்பிக்கை கொள்ளல்
    64. நல்லடியார்களை துன்புறுத்தல்
    65. தனித்துத் தொழுதல்
    66. ஜும்ஆத் தொழுகையைத் தவறவிடல்
    67. மரண சாசனம் மூலம் அநீதமிழைத்தல்
    68. பிறரை வஞ்சித்தல்
    69. உளவு பார்த்தல்
    70. நபித் தோழர்களை தூற்றுதல்

    பதிலளிநீக்கு
  5. https://aswarphysics.weebly.com/uploads/4/6/2/1/46211853/antha_7_perum_paavangal.pdf

    பதிலளிநீக்கு
  6. அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

    «إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ»

    அல்லாஹ் உங்களுடைய உருவங்களை பார்ப்பதில்லை.

    (காரணம்,உருவத்தை படைத்தவன் அல்லாஹ். சிலரை கருப்பாக சிலரை சிவப்பாக ஒருவருடைய முகத்தை மிக அழகாக மற்றொருவரை அழகற்றவராக படைத்துள்ளான். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா உருவங்களை வைத்து அவன் நன்மைகளை அளப்பதில்லை.)

    அவன் உங்களுடைய செல்வங்களையும் பார்ப்பதில்லை.அல்லாஹ் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் மட்டும் தான் பார்க்கிறான்.

    அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564.

    பதிலளிநீக்கு
  7. மூன்றாம் தந்திரம் - 2. இயமம் பாடல் எண் : 1

    கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
    நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
    வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
    இல்லான் நியமத் திடையில்நின் றானே.

    பொழிப்புரை : கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

    http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10302

    பதிலளிநீக்கு
  8. ஞானக்குறள் 172.
    அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
    பிறந்துழல வேண்டா பெயர்ந்து.

    பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அறியும் அறிவாகிய பிரணவத்தை உணர்ந்தால், அதை விட்டு நீங்கிப் பிறப்பெடுத்து இன்னலுற வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  9. புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
    மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
    ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
    தீதொழிய நன்மை செயல் - நல்வழி

    விளக்கம:
    மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…

    https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  10. ஐந்து பெரிய பாவங்கள் https://sivanand.in/?p=6056

    பதிலளிநீக்கு
  11. 6:151. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

    பதிலளிநீக்கு
  12. நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் :

    الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ

    ஹலால் தெளிவானது, ஹராம் தெளிவானது.இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்துக்குரிய எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன.

    எந்த ஒரு முஸ்லிம் சந்தேகத்திற்குரிய காரியங்களை விட்டு விலகி கொள்கிறாரோ, அவர் தன் மார்க்கத்தை பாதுகாத்துக் கொண்டார், அவர் தன் கண்ணியத்தை ஈமானை பாதுகாத்துக் கொண்டார்.

    என்று கூறிய ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஹதீஸின் முடிவில் ஒரு அழகான விஷயத்தை சொல்கிறார்கள்.

    أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ

    இந்த உடம்பில் ஒரு சதை துண்டு இருக்கின்றது. இந்த சதை துண்டு சீராகி விட்டால் உடலெல்லாம் சீராகிவிடும்.இந்த சதை துண்டு பாழடைந்துவிட்டால் முழு உடலும் சீர் கெட்டு விடுகிறது.

    அறிந்துகொள்ளுங்கள்! அந்த சதை துண்டு தான் உள்ளமாக இருக்கின்றது.(1)

    அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 52

    பதிலளிநீக்கு