பலதார மணம்

பலதாரமணம் என்பது மிக மிக தவறாக பார்க்கப்படும் வழக்கமும் கேளிக்கைக்கு உள்ளாகும் தலைப்பாகவும் உள்ள நிலையில் உலக சமயங்கள் அதற்க்கான வரையறைகளாக எதைக் கொண்டுள்ளது என்று காணலாம்.

தமிழர் சமயம் 


"ஒருவனுக்கு ஒருத்தி" என்பதுதான் தமிழர்கள் பின்பற்றி வந்த இல்லற கொள்கையாக நம்பப் படுகிறது. அதன் உண்மை நிலையை ஆய்வு செய்வோம் வாருங்கள். 
 
தமிழர் அறநூல்கள் உறவாடும் பெண்களை பொது மகளிர், பரத்தையர், வரைவின் மகளிர், கணிகையர், இலக்கிழத்தி, காமக்கிழத்தி போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றது. 
 
காமக்கிழத்தியர் என்பவர் சங்க காலச் சமூகத்தில் தலைவன், காதலால் தலைவியைத் திருமணம் செய்து கொண்ட பின்பும் காமம் காரணமாக உரிமை கொடுத்து அடுத்து மணந்து கொள்ளப்பட்ட பெண்கள் ஆவர் . "கிழமை" என்பது உரிமை என்ற பொருள்படும்.

எனவே பலதாரமணம் தமிழ் சமூகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் தொல்காப்பியம், அகநானூறு, குறள் உட்பட பல நூல்களில் மிக அதிகமாகவே காணப்படுகிறது. 

யூத, கிறிஸ்தவ மதங்களில் பலதார மணம்


பைபிள் பலதார மணத்தைத் தடைசெய்யவில்லை. அதற்கு மாறாக, பழைய ஏற்பாடும் அறிஞர்களின் எழுத்துக்களும் பலதார மணத்தை அங்கீகரிப்பதையே நாம் காண்கிறோம்:

1. மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாகச் சொல்லப்படுகிறது. (இராஜாக்கள் 11:3).

2. மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. (சாமுவேல் 5:13).

3. பல்வேறு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களுக்கிடையே சொத்துக்களை எவ்வாறு வினியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7).

4. மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்கு மட்டுமே தடையுள்ளது. (லேவியராகமம் 18:8).

5. அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என 'தல்முதிக் (Talmudic) பரிந்துரைக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ரேலுக்கு வந்துக் குடியேறும் வரை, தொடர்ந்து பலதார மணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ரேலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே பிற்பாடு அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதார மணத்திற்கு அனுமதி நடைமுறையில் இருக்கவே செய்கிறது.


புதிய ஏற்பாடு இதுபற்றி என்ன கூறுகிறது?


பாதர் ஊஜீன் ஹில்மேன் என்பவரின் 'பலதார மணம் பற்றி மறுஆய்வு' என்ற ஆழ்ந்த ஆராய்ச்சி புத்தகத்தில் கூறுவதாவது: 'ஒருவர் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமென்ற வெளிப்படையான கட்டளையோ அல்லது பலதார மணம் செய்யக்கூடாது என்ற தடையோ புதிய ஏற்பாட்டில் எங்குமே இல்லை. <Eugee oillman> Polygamy Reconsidered: African Plural Marriage and the Christian Churches <New York : Ornis Nooks> 1975- p.140). 
 
மேலும், யூத சமூகத்தில் பலதார மணம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தபோதிலும் இயேசுகிறிஸ்து அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. (ஒரே ஒரு சட்டபூர்வ மனைவியை மாத்திரம் மணக்க வேண்டுமென்ற, ஆனால் வைப்பாட்டிகளையும் விபச்சாரத்தையும் அனுமதித்த) கிரேக்க-ரோம கலாச்சாரத்தை அனுசரித்தே பலதார மணத்தை சர்ச் தடை செய்தது என்ற உண்மையை பாதல் ஊஜீன் ஹில்மேன் நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். நம்முடைய இக்காலத்தில், மற்றொரு திருமணம் செய்வது தடை செய்யப்படுவதற்கு ரோம பழக்கவழக்கமே முன்னுதாரணம் எனலாம்.

'பலதார மணம் கிறிஸ்துவத்திற்கு எதிரானது என்ற நம்பிக்கை இனிமேலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்ற கருத்தையும் சர்ச் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என கென்யாவிலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சைச் சேர்ந்த ஒரு பிஷப் கூறினார். <The Weekly Review> Aug. 1> 1987. 
 
ஆப்பிரிக்காவின் பலதார மணத்தை பற்றிக் கவனமாக ஆராய்ந்த ஆங்கிலிக்க சர்ச்சை சேர்ந்த புனித டேவிட் கிட்டாரி அவர்கள் 'முதல் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு வேறொரு திருமணம் செய்து கொள்ளும் முறையில், ஆதரவற்றுத் துன்பத்துக்குள்ளாகும் மனைவி, மக்களைக் கருத்தில் கொள்ளும் போது, பலதார மணமென்பது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு மிகவும் உகந்தது' எனத் தீர்மானித்துள்ளார்.

பைபிள் சில நேரங்களில் நிர்பந்த பலதார மணத்திற்கு அனுமதிக்கிறது.


'குழந்தையற்ற விதவை, மரணித்த கணவனின் சகோதரனை - அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட - அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மணக்க வேண்டுமெனக் கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10) (விதவையின் துன்பநிலைகள் என்ற பகுதி காண்க).

பைபிளில் 'ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்ற தடை இல்லாத காரணத்தால் ஆரம்ப காலங்களில் - கிறிஸ்துவ ஆண்கள் அவர்கள் விரும்பியபடி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் கிறிஸ்துவ ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிறிஸ்துவ தேவாலயங்கள் தடை விதித்தன.

யூத மதத்தில் ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது.


ஆப்ரஹாமிற்கு மூன்று மனைவிகள் இருந்ததாகவும் சாலமனுக்கு நூற்றுக் கணக்கான மனைவிகள் இருந்ததாகவும் யூத மதத்தின் சட்ட நூலான 'தல்முதிக்' (Talmudic) குறிப்பிடுகின்றது. கி.பி. 960 ஆம் ஆண்டில் தோன்றி 1030 ல் மரணித்த ரப்பி கெர்ஸான் பென் யகூதா (RABBI GERSHON BEN YEHUDAH) என்ற பெயருடைய யூதர், பலதார திருமணத்திற்கு எதிராக ஒரு சட்டம் இடும்வரை யூத ஆண்கள் மத்தியில் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேலில் உள்ள யூதத் தலைமையகம் ஆண்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்து சட்டம் இடும் வரை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத ஆண்களிடமும் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் நிலை தொடர்ந்தது.

இந்து மதம்


பலதார மணத்தைப் பற்றி இந்து வேதங்கள் 


ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் (விஷ்ணுஸ்மிருதி 24:1) 
 

பலதார மணத்தைப் பற்றி இந்து புராணங்கள்  


கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது. 
 
அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரௌபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது.

ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட (கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார். 
 
முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.

நடைமுறையில் இந்து சமூகத்தில் பலதார மணம்  

இந்து சமூகத்தில் சிலரின் கருத்துப்படி வர்ணாசிரம அடிப்படையில் பலதாரமணம் புரிந்து கொள்ளலாம். பிராமணர்கள் நான்கு மனைவிகள் வரையிலும், ஷத்திரியர்கள் மூன்று மனைவிகள் வரையிலும், வைசியர்கள் இரண்டு மனைவியர் வரையும், சூத்திரர்கள் ஒரு மனைவியும் திருமணம் செய்யலாம். 

டாக்டர்.லிபான் இதனை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்."இந்து மதத்தில் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டிருந்தது.அத்தகைய வழக்கம் மேல்வர்க்க மக்களிடையே அதிகமாக இருந்தது.ஆனால் அடிமட்ட நிலையில் இருந்தவர்களிடையே பொதுவாகவே ஒரு மனைவியுடன் நிறுத்திக்கொள்ளும் வழக்கமே இருந்தது. 

1981ல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவியரைத் திருமணம் செய்யும் வழக்கம் முஸ்லிம்களுக்கு மத்தியில் 4.3%விழுக்காடு இருக்கின்றது. ஆனால், அதேசமயம் இந்துக்களிடையே 5.6% என்ற வீதத்திலும், புத்த மதத்தினரிடையே  8% விழுக்காடும், பழங்குடி மக்களிடையே அதிகமாக 15% விழுக்காடும் இருக்கிறது. 

இஸ்லாம் 

‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (குர்ஆன் 4:3)

இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு மனைவியருடன் வாழ்க்கை நடாத்தலாம் என அங்கீகரிக்கின்றது. இதன் மூலம் நான்குக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒருவர் சமகாலத்தில் கணவராக இருக்க முடியாது என்ற சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது.

மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:129) 

அடுத்து பலதார மணம் புரிவோர் மனைவியரை சமத்துவமாக நடத்த வேண்டும். சமத்துவமாக நடத்த முடியாதவர்கள் ஒரு தாரத்துடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அதன் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.

8 கருத்துகள்:

  1. இளம்பூரணர் காமக்கிழத்தியர், பரத்தையர் ஆகிய இருவேறுபட்ட தன்மையை உடையவரென விளக்குகின்றார். “காமக் கிழத்தியர் பின்முறை ஆக்கிய கிழத்தியர். அவர் மூவகைப்படுவர்: ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப்பட்டாரும் என. ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொருளாகப் பின்னும் தன் குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல். இழிந்தவராவர்-அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிக குலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாராகும். அரசர்க்கு ஏனையிரண்டு குலத்திற் கொடுக்கப்பட்டாரும், வரையப்பட்டார் – செல்வராயினார் கணிகைக் குலத்தினுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்து கோடல். அவர் கன்னியில் ‘வரையப்பட்டாரும் அதன் பின்பு வரையப்பட்டாரும் என இருவகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக்கிழத்தியர்பாற் பட்டனர். பரத்தையராவார், யாரெனின் அவர் ஆடலும் பாடலும் வல்லராகி அழகு மிளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார். இவருள்ளும் ஒருவரைப் பற்றி மறுதலைப் பெண்டிரைச் சார்த்தி கூறுவனவும் காமக்கிழத்தியர் கூற்றின் பாற்படும்” (பக். 115, தொல். இளம் உரை)

    இதன் வழியாக காமக்கிழத்தியர் மூவகையாக இருந்துள்ளனர்.

    ஒத்த கிழத்தியர் – என்பவர் மூத்த மனைவியின்றி காம தேவையின் காரணமாக மனைவியின் அனுமதியோடு திருமணம் செய்து கொள்வான்.

    இழிந்த கிழத்தியர் – மூத்த மனைவியின் அனுமதியின்றி தேடிக்கொண்ட மனைவி (வருணாசிரம கொள்கை தொல்காப்பியத்துக்கு முரண் ஆதலால் தொல்காப்பியத்துக்கு வருணாசிரம அடிப்படையில் விளக்கம் தருவது பிழை, எனவே இதுதான் முறையான விளக்கமாக இருக்க முடியும்.)

    வரையப்பட்டார் – என்போர் செல்வர்கள் கணிகக் குலத்தினுள் உள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து திருமணம் செய்து கொள்வோர் ஆவர் என்பர். அவர்கள் இருவகையை உடையவர்கள், ஒருவர் கன்னியில் வரையப்பட்டாரும், அதன் பின்பு வரையப்பட்டாரும் என இருவகையர் என்றுரைக்கின்றனர். அவ்விருவரும் உரிமை உடையவராதலால் ‘காமக் கிழத்தியர்’ என அழைக்கப்பட்டனர் என்பர்.

    இதனடிப்படையில் காமக் கிழத்தியர் என்பவர் பரத்தையர் அல்ல என்பதும், அவர்கள் திருமணம் செய்து கொண்ட ஆணின் வேறு இல்ல கிழத்தியாகவும், வெவ்வேறு குலத்திலுள்ளோரே ‘வைப்பாட்டி’ என்ற நிலையில் இருந்தோரும் ஆவர் எனக் கருத இடமுண்டு.

    https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/33733-2017-08-28-04-25-49

    பதிலளிநீக்கு
  2. யாத்திராகமம் 2110 “எஜமான் மற்றொரு பெண்ணை மணந்தால் முதல் மனைவிக்குக் குறைவான ஆடையோ, உணவோ கொடுக்கக்கூடாது. அவன் அவளோடு தூங்குவதை நிறுத்தக் கூடாது. விவாகத்தில் அவளுக்கு உரிமையான எல்லாப் பொருட்களையும் அவன் கொடுத்து வர வேண்டும். 11 அவன் அவளுக்கு இந்த மூன்று காரியங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால், அப்பெண் விடுவிக்கப்படுவாள். அவள் செலுத்தவேண்டிய கடன் எதுவுமிராது.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+21+&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  3. அகத்தியர் மணக்கோலம் https://drive.google.com/file/d/1MWkvM2rQ1uZfEbO5bibI7y-CaP7_W4nD/view

    பதிலளிநீக்கு
  4. முஸ்லிம் கணவர் ஒருவரின் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவர் இன்னொரு பெண்ணை மணமுடிப்பதற்கு அக்கணவருடைய மனைவியின் அனுமதி கட்டாயம் இல்லை!

    https://satyamargam.com/islam/qa/for-muslims/is-first-wife-s-approval-mandatory/

    பதிலளிநீக்கு
  5. “…அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக் கடவன் என்றார் (இயேசு)” (மத்தேயு 19:6).

    பதிலளிநீக்கு
  6. ஆதியாகமம் 2:24 (என்ஐவி) - "அதனால்தான் ஒரு மனிதன் தன் தந்தையையும் தாயையும் விட்டுவிட்டு, தன் மனைவியுடன் இணைந்திருக்கிறான், அவர்கள் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்."

    எபேசியர் 5:22-33 (என்ஐவி) - “மனைவிகளே, நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோல உங்கள் சொந்தக் கணவர்களுக்கும் உங்களைக் கீழ்ப்படுத்துங்கள். ஏனெனில், கிறிஸ்து திருச்சபையின் தலையாயிருப்பது போல, கணவன் மனைவிக்குத் தலையாயிருக்கிறான், அவனுடைய சரீரம், அவன் இரட்சகராக இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
  7. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு (குறள்: 974)

    (ஒருமை = ஒருவனையே கணவனாக நினைக்கும்,
    கொண்டு = காத்துக் கொண்டு)

    ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும். (௯௱௭௰௪)
    — மு. வரதராசன்

    பதிலளிநீக்கு