மலக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேவர்களின் எண்ணிக்கை

தமிழர் சமயம்  

ஏத்தினர் எண்ணிலி தேவரெம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று
ஆர்த்தனர் அண்டங் கடந்தப் புறநின்று
காத்தனன் என்னுங் கருத்தறி யாரே. (திருமந்திரம் 1686. )

(ப. இ.) எம்மை ஆளும் பெருமானாகிய அழிவில் செல்வனை முப்பத்து முக்கோடி என வரையறுக்கப்பெறும் அளவிலாத தேவர்கள் மணம் கமழ்கின்ற இளம்தென்றலாகக் கருதப்படும் காற்றும் ஏனைப் பூத நான்கும் ஐந்து திருவுருவில் வைத்து வழிடுகின்றனர். அதற்கு மேலுள்ள அருவுருவத் திருமேனியையேனும், அருவத் திருமேனியையேனும். அத்தேவர்கள் அறியார். சிவன் இம் முத்திற்த் திருமேனிக்கும் அண்டங்களுக்கும் அப்பால் விளங்கும் இயற்கை உண்மை உணர்வுத் திருமேனியை அத்தேவர் எங்ஙனம் உணருவர்?

(அ. சி.) வாசப் பசுந்தென்றல் வள்ளல் என்று - பஞ்சபூதங்களையே தன்னுருவாக்கொண்ட சகுண பரசிவத்தை. வாழ்த்தினர் - தேவர் பூசித்தனர். அண்டங்.....யாரே - நிர்க்குண சிவத்தைத் தேவர்கள் அறியார். 
 
 
கிறிஸ்தவம் 

11 அதன் பின்பு, சிம்மாசனத்தையும் நான்கு ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றி கோடிக்கணக்கிலும்* லட்சக்கணக்கிலும் தேவதூதர்கள் இருப்பதைப் பார்த்தேன்,sவெளிப்படுத்துதல் 5:11
 

இஸ்லாம் 

அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்: “அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் : 74:31
 
(ஏழாம் வானத்தில் வைத்து) எனக்கு பைதுல் மஃமூர் எனும் இறை இல்லம் எடுத்துக் காட்டப்பட்டது. அதைப் பற்றி ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் கேட்டேன். இதுதான் பைதுல் மஃமூராகும். ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் இங்கே நுழைந்து தொழுகிறார்கள். அதிலிருந்து வெளியேறியவர்கள் மறுபடியும் அதனுள் நுழைவதில்லை என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 3207. ஸஹீஹ் முஸ்லிம் 259, 264.