தூதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தூதர்கள் ஆண்களே

தூதர்கள் என்பவர்கள், முந்தய வேதங்களில் முன்னறிவிக்கப் பட்டவர்களாகவும், பின்வரும் வேதங்களில் உறுதி செய்யப்பட்டவர்களாகவும், மக்களுக்கு இறைவனிடமிருந்து வரும் கட்டளைகளை போதிப்பவர்களாகவும்,  ஒரு தனி வேதமோ அழல்தி ஏற்கனவே உள்ள வேதத்தில் ஒரு பகுதியாகவோ அந்த போதனைகள் இருக்கும். வேதம் பற்றிய விளக்கம் புனித நூல்கள் தலைப்பில் விரிவாக எழுதப்பட்டுளள்து. 

அவ்வாறு அனுப்பப் படும் தூதர்கள் ஆண்கள் மட்டுமே என்று சில மதங்களும், சில சமயங்கள் பெண்களும் அதில் உள்ளனர் என்றும் வாதிடுகின்றனர். பெண்களில் தூதர்கள் இல்லை என்ற உண்மையை கூறினால் ஆணாதிக்க சிந்தனையாளனை நோக்குவது போல நோக்குவது இயல்பாகிவிட்டது. அது ஒவ்வொரு ஆணின் உடல் வலிமையுடன் இன்னபிற இயல்புகளை பொறுத்து வழங்கப் பட்ட பொறுப்பு அவ்வளவுதான். இப்பொழுது உண்மையை ஆதாரங்களுடன் நோக்குவோம். 

தமிழர் சமயம் 


ஆண், ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்த
மாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன்
கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான்
நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். (சிறுபஞ்சமூலம் 27)

இயைந்த - பின்தொடர் 
கடிந்தான் - ஒழித்தவன்

பொருள்: ஆசான் என்பவன் விளக்கம் பெற வினை ஆற்றும் தேவை அற்ற ஆண்மகன் ஆவான், அவனை பின் தொடர்பவன் மாணாக்கன் ஆவான். மாணாக்கன் ஆசானை அன்பு செய்வான், கட்டுப்படுவான். மாணவர்கள் காமம், வெகுளி, மயக்கங்கள் ஆகிய மூன்றையும் விட்டுவிடுவான். இல்லையெனில் அவர்கள் ஆசிரியருக்கு நோயாவார்கள்.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)

குறிப்பு: வேத நூலுக்குஇலக்கணம் வகுத்து தரும் இப்பாடல், வேதம் முனைவனுக்கு அதாவது ஆணுக்கு தான் வழங்கப்படுமே தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று கூறவில்லை. எனவே சித்தர்கள்/ரிஷிகள்/நபிகள்/தூதர்கள் ஆண்களே. 

அவ்வையார் சில முக்கிய நூல்களை எழுதிய பெண் ஆசிரியர் என்றும், அவர் இவ்வாறு முனைவி-யாக இருக்க வாய்ப்பு உண்டு என்று சிலர் கூறுவார்.  
 
முதலில், பாடல் பாடுவோரெல்லாம் முனைவரல்ல, தொல்காப்பியம் மரபியல் பாடல் 60-இல் சொன்னபடி நூலை எழுதினால் மட்டுமே முனைவர்.  
 
இரண்டாவது, வரலாற்றில் அவ்வையார் ஒருவரல்ல, இருவர் என்றும், மூவர் என்றும், நால்வர் என்றும், ஆறு பேர் என்றும், எட்டு பேர் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அவ்வையார் பெண் அல்ல என்று கூறுவோரும் உண்டு. மொத்தத்தில் அவ்வை பற்றிய நேரடியான உறுதிபட கூறும் செய்திகள் ஏதுமில்லை. எனவே இவரை விதிவிலக்காக குறிப்பிட முடியாது.
 

இஸ்லாம்  

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (திருக்குர்ஆன் 16:43)

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! (திருக்குர்ஆன் 21:07)

உமக்கு முன் (பல்வேறு ஊர்களுக்கு அந்தந்த) ஊர்களைச் சேர்ந்த ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். (குர்ஆன் 12:109)

யூத கிறிஸ்தவ மதங்கள் 

கிறிஸ்தவத்திலும் யூதமதத்த்திலும் சில பெண் தூதர்கள் இருந்தததாக வாதிடுவார்கள். அவர்கள் தூதர்கள் என்ற வார்த்தையின் பொருள் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடமிருந்து வரும் தூத்துச் செய்தியை மக்களுக்கு எடுத்து கூறுபவர்களாகவும், அந்த போதனைகள் ஒரு தனி வேதமாகவோ அல்லது ஏற்கனவே உள்ள வேதத்தின் ஒரு பகுதியாகவோ அமைந்து இருக்கும். 

யூத கிறிஸ்தவ மதத்தில்கீழே குறிப்பிடப் படுவோர்கள் பெண் தீர்க்கதரிசிகனாக அறியப்படுகிறார்கள்.

1. சாரா
2. மிரியம்
3. டெவோரா
4. ஹன்னா (ஷ்முவேலின் தாய்)
5. அவிகாயில் (அவர் தாவீது மன்னரின் மனைவியானார் )
6. ஹல்தா ( எரேமியாவின் காலத்திலிருந்து )
7. எஸ்தர்
8. மர்யம் - இயேசுவின் தாய்

ஆனால் இவர்கள் எழுதிய அல்லது இவர்கள் மூலம் வழங்கப்பட்ட உபதேசங்கள் அடங்கிய நூல்கள் ஏதும் உண்டா? "இல்லை" என்பதே பதில். இவர்கள் மதிப்பிற்க்குரிய பெண்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும் இவர்கள் தூதர்கள் அல்ல என்பதே நிதர்சனம். மேலும் மோசே செய்த மற்றும் இயேசு தீர்க்கதரிசிகள் பற்றிய முன்னறிவிப்புகள் அனைத்தும் ஆண்களைப் பற்றியே. 

கீழுள்ள கருத்து ஏற்புடையது அல்ல என்றாலும் யூத கிறிஸ்தவர்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது. 

“ஒரு பெண் கற்பிக்கவோ அல்லது ஆண் மீது அதிகாரம் செலுத்தவோ நான் அனுமதிக்கவில்லை; மாறாக, அவள் அமைதியாக இருக்க வேண்டும்” (1 கொரி. 14:33-35)

ஒரு பெண் தீர்க்கதரிசியாக அனுப்பப்படுவதில்லை என்பது உண்மை என்ற போதிலும் அவர் தான் கற்றதை மக்களுக்கு கற்பிக்க கூடாது என்கிற கருத்தில் யாருக்கும் உடன்பாடு இருக்க முடியாது. இஸ்லாத்தில் அன்னை ஆயிஷா நபிமொழிகளை மக்களுக்கு அறிவிப்பவராகவும், படையை வழி நடத்துபவராகவும் இருந்துள்ளார்.

தூதர்கள் முற்றும் உணர்ந்தவர்களா? அவர்கள் விரும்பியதையெல்லாம் சொல்லவோ செய்யவோ முடியுமா?

தமிழர் மதம்


நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே - (திருமந்திரம் 7)

கிறிஸ்தவம் 


"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். (யோவான் 12:49)

என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். (மத்தேயு 20 : 23)

30 “நான் உங்களோடு அதிகம் பேசமாட்டேன். இந்த உலகத்தை ஆளுகிறவன் (சாத்தான்) வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மீது அதிகாரமில்லை. 31 ஆனால் நான் என் பிதாவை நேசிக்கிறேன் என்று உலகத்துக்குத் தெரியவேண்டும். ஆகையால் என் பிதா எனக்குச் சொன்னவற்றை மட்டும் நான் செய்கிறேன். இப்பொழுது வாருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம்” என்றார்.  (யோவான் 14:30&31

இஸ்லாம் 


நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 21:45)

எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை, ஒவ்வொரு தவணைக் கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது. (குர்ஆன் 13:38)