மிக நல்ல கேள்வி.. இவ்வாறு கேட்டவுடன் மாற்றுமத அன்பர்களுக்கு பிழையான கண்ணோட்டம் உண்டாக வாய்ப்பு உண்டு.
காரணம், இறைவன் ஒரு தேவதூதர் வாயிலாக ஒரு மனிதரை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக மக்களுக்கு வேதத்தை உபதேசம் செய்யும் முறை சைவ சமண வைணவ சமயங்களில் இருப்பதாக யாரும் கற்பனை கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.
ஏனென்றால். ஆன்மீக சிந்தனை கொண்ட எம் மக்கள் தனது மொழியில் இறைவன் வேதம் வழங்கி உள்ளதாக கூட அவர்கள் நம்புவதில்லை.
சரி அது இருக்கட்டும், இந்து மதம் என்ன சொல்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் தமிழர் சமயமான சைவ சமயத்தின் வேதமான திருமந்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்..!
முதலில் திருமந்திரம் வேதமா? ஆம், திருமூலரின் வாக்கு இந்த பாடல்களில் அவ்வாறுதான் கூறுகிறது.
நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - (திருமந்திரம் 135.)
மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - (திருமந்திரம் 138.)
ஆப்ரஹாமிய மதங்களைப் போல வேதம் வழங்கப்படும் வழிமுறை உண்டா? திருமந்திர பாடல்கள் இவ்வாறு கூறுகிறது..
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.
சொற்பொருள்:
நந்தி: தேவர் இனத்தில் மனிதர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் செய்தி பரிமாறும் செயலை செய்பவர்கள்.
நாதன்: ஆசிரியன், குரு
குறிப்பு: நந்தி தேவர்கள் நால்வர், ஒவ்வொரு திசைக்கு ஒருவர் பொறுப்பு, நந்தி தேவர் மூலமாக இறைவனை நாடலாம், நந்தி தேவர் திருமூலர் போன்ற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாதராக வழிகாட்டியாக இருக்கிறார். திருமூலர் போன்றவர்கள் மக்களுக்கு நாதனாக வழிகாட்டியாக மக்களுக்கு ஆக்கப் படுகிறார்கள்.
எனவே ஆப்ரஹாமிய சமயங்களைப் போலவே தமிழர் சமயங்களும் புனித செய்திகள் கீழ்கண்ட முறையில்தான் வேத உபதேசம் நடைபெற்றது.
கடவுள் >> நந்தி >> முனைவன் >> சீடர்கள் > > மக்கள்
அதாவது அனைத்தையும் படைத்த இறைவன் ஆசிரியராக இருந்து தேவர்களின் தலைவரான சிவயோக மாமுனியிடம் கூறிய வேதத்தை, மற்ற மூன்று தேவர்களுக்கு (நந்திகளுக்கு) உபதேசித்து, இவர்கள் நால்வரும் அவரவருக்கு உரிய முனைவருக்கு ஆசிரியராக இருந்து வேதத்தை உபதேசிக்கின்றனர். இப்பொழுது வேதம் உபதேசிக்கப்பட்ட முனைவர் ஆசிரியராக இருந்து மக்களுக்கு அந்த வேதத்தை உபதேசிக்கிறார். அவரிடம் வேதத்தை கற்ற சீடர்கள் அதை மக்கள் பலருக்கும் ஆசிரியராக இருந்து உபதேசிப்பதன் மூலம் வேதம் மக்களிடம் பரவுகிறது. இந்த முனைவர்கள் காலத்துக்கு காலம் வேறுபடுகின்றனர், அவர்கள் முன்னே உள்ள வேதத்தில் தீர்க்க தரிசனம் கூறப்பட்டு தான் வருவார்.
மேலும் இவ்வாறுதான் உலக சமயங்களில் செய்தி பரிமாற்றம் நடைபெறுவதாக திருமந்திரம் கூறுகிறது.
எனவே தமிழில் வேதம் கூறிய அனைவரும் நபிமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் வேதம் என்றால் என்ன, அதை எப்படி கண்டறிவது என்ற பதில் நீண்ட ஆய்வு பயணத்துக்கு பிறகுதான் கிடைக்கும்.
அந்த வகையில் கீழ்கண்டவர்கள் தமிழுக்கு வந்த நபிமார்களாக இருக்கலாம்.
- அகத்தியர்
- தொல்காப்பியர்
- திருவள்ளுவர்
- அவ்வையார் (இவர் பெண் என்பது கற்பனை)
- புறநானூறு எழுதிய 150 ஆசிரியர்கள்
- அகநானூறு எழுதியவர்கள்
- முனைப்பாடியார்
- அருஞ்செக்கலப்பு எழுதியவர்
- காயத்தூர் பெய்வாயின் முள்ளியார்
- கபில தேவர்
- பூதஞ் சேந்தனார்
- நாதகுத்தனார்
- காரியாசான்
- கணி மேதாவியார்
- நல்லாதனார்
- அப்பர்
- சுந்தரர்
- ஞானசம்பந்தர்
- திருமூலர்
- மாணிக்கவாசகர்
- சிவவாக்கியர்
போன்றவர்கள் சிலராக இருக்கலாம்.