மன்னிக்கும் மனப்பான்மை தான் சிறந்த செயல்முறை அதுவே சிறந்த சிந்தனை..!
தமிழர் சமயம்
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ். (திருக்குறள்:156)
பொழிப்புரை : [தமக்குத் துன்பம் இழைத்தவரைப் பொறுமை அற்றுத்] தண்டிப்போர்க்கு ஒரு நாளை இன்பம்; [மன்னித்துப்] பொறுத்தோருக்கு மரணத்திற்கு பிறகும் துணை நிற்கும் புகழ் [கிட்டும்].
பொருள்: ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.
பொன்றும் - பொன்று - அழிதல்; இறத்தல்; தவறுதல்
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனின்று நன்று (அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0152)
பொருள் வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் மன்னிக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.
இப்பாடலில் உள்ள பொறுத்தல் என்பதற்கு மன்னித்தல் என்று சிலரும் மறத்தல் என்றதற்கு வெகுளாமை என்று மற்றும் சிலரும் பொருள் கூறினர்
இஸ்லாம்
…அவர்களை மன்னித்து விடவும், பொருட்படுத்தாது விட்டுவிடவும், அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். - (திருக்குர்ஆன் 24:22)
கிறிஸ்தவம்
பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். - (பைபிள் :சீராக் 28:1&2)
உமக்கு எதிராக பாவம் செய்தவர்களை மன்னித்தீர்களானால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களை மன்னிப்பார். நீங்கள் மற்றவர்களை மன்னிக்க மறுத்தால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டார். (மத்தேயு 6: 14-15)
முடிவுரை:
உலகில் நிகழும் அனைத்து மத இன பூசல்கள் மன்னிப்பின் வெகுமதியை அறியாததாலே நடக்கிறது. விட்டுக்கொடுப்பவர் ஒருநாளும் கெட்டுப் போவதில்லை.
மன்னிப்பு எந்த அளவு சாத்தியம்? சில நிகழ்கால உதாரணங்கள்:
தந்தை தனது மகனின் கொலையில் தொடர்புடைய மனிதனை மன்னித்து அணைத்துக்கொள்கிறார்
இந்த அம்மா தனது மகனைக் கொன்ற வாலிபரை நேருக்கு நேர் சந்தித்தார். நீதிமன்ற அறை வீரர்கள் அவளைப் போன்ற பதிலைப் பார்த்ததில்லை
அசிம் கமிசாவின் மகன் தாரிக், 1995 இல் 20 வயதில் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர் டோனி ஹிக்ஸ், 14 வயது சிறுவன், பழைய கும்பல் உறுப்பினரால் தூண்டுதலுக்கு ஆளானான். ஆரம்ப அதிர்ச்சி தணிந்த பிறகு, துப்பாக்கியின் இருபுறமும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதை அசிம் உணர்ந்தார். டோனியின் தாத்தா பிளெஸ் பெலிக்ஸ் உடன் இணைந்து, இளைஞர்களின் துப்பாக்கி வன்முறையைத் தடுக்கும் நோக்கத்துடன் தாரிக் கமிசா அறக்கட்டளையை அசிம் நிறுவினார்
வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும். - யாத்திராகமம் 21:23-25
பதிலளிநீக்குகண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். - மத்தேயு 5:38-48
3:134. அவர்கள் எத்தகையோரென்றால், செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள், கோபத்தையும் அடக்கிக்கொள்ளக் கூடியவர்கள், மனிதர்(களின் குற்றங்)களையும் மன்னித்து விடக்கூடியவர்கள், அல்லாஹ்வோ (இத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.
பதிலளிநீக்கு42:40. தீமைக்குக் கூலி (யாக) அதைப் போன்ற தீமையேயாகும், ஆனால் எவரேனும் (பிறரின் அக்கிரமத்தை) மன்னித்து (அவருடன்) சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கின்றது, நிச்சயமாக, அவன் (இதற்கு மாறாக) அநியாயம் செய்வோர்களை நேசிக்கமாட்டான்.
பதிலளிநீக்கு42:43. மேலும், எவரொருவர் (பிறரால் பாதிக்கப்பட்ட பின்) பொறுத்துக் கொண்டு, மன்னித்தும்விட்டால், நிச்சயமாக காரியங்களில் மிக்க உறுதியானதாகும்.
பதிலளிநீக்கு45:14. (நபியே!) விசுவாசங்கொண்டோருக்கு நீர் கூறுவீராக: அல்லாஹ்வுடைய (தண்டனைகளின்) நாட்களை நம்பாதவர்களை, அவர்கள் மன்னித்துவிடட்டும், ஏனென்றால், அவர்கள் சம்பாதித்துக் கொண்டவற்றிற்குப் பிரதியாக கூட்டத்தினருக்கு அவன் கூலி கொடுப்பதற்காக.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு"ஒருவருக்கொருவர் பொறுத்துக் கொண்டு, ஒருவரையொருவர் மன்னியுங்கள். உங்களில் யாருக்காவது ஒருவருக்கு எதிராகக் குறை இருந்தால், கர்த்தர் உங்களை மன்னித்தது போல் மன்னியுங்கள்." கொலோசெயர் 3:13
மத்தேயு 7
பதிலளிநீக்குTamil Bible: Easy-to-Read Version
நியாயம் தீர்ப்பதைப்பற்றி போதனை
7 ,“மற்றவர்களை நீங்கள் நியாயம் தீர்க்காதீர்கள். அப்பொழுது தேவன் உங்களை நியாயம் தீர்க்கமாட்டார். 2 நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.
3 ,“உங்கள் கண்ணில் இருக்கும் மரத்துண்டினைக் கவனிக்காது, உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியைக் காண்கிறீர்கள். அது ஏன்? 4 ‘உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’, என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது. 5 மாயக்காரரான நீங்கள் முதலில் உங்கள் கண்ணிலிருந்து அம்மரத்துண்டை அகற்றுங்கள். பின்னரே, உங்கள் சகோதரனின் கண்ணிலிருந்து தூசியை அகற்ற முன் வாருங்கள்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%207&version=ERV-TA
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
பதிலளிநீக்குஇகழ்வார்ப் பொறுத்தல் தலை
(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:151)
பொழிப்பு (மு வரதராசன்): தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பதிலளிநீக்குபொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து
(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0155)
பொழிப்பு: (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
பதிலளிநீக்குஅறன்அல்ல செய்யாமை நன்று
(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:157)
பொழிப்பு (மு வரதராசன்): தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
பதிலளிநீக்குமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:158)
பொழிப்பு: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.
துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
பதிலளிநீக்குஇன்னாச்சொல் நோக்கிற் பவர்
(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0159)
பொழிப்பு: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
பதிலளிநீக்குஇன்னாச்சொல் நோற்பாரின் பின்
(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0160)
பொழிப்பு: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பதிலளிநீக்குபொறுத்தாற்றும் பண்பே தலை
(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:579)
மணக்குடவர் உரை: தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும் கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்.
மூதுரை பாடல் 30 :
பதிலளிநீக்குசாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்–மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
பொருள்:
தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும்
மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு
செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.
லேவியராகமம் 19:17 “உன் மனதில் உன் சகோதரனை நீ வெறுக்கக் கூடாது. உனது அயலான் உனக்குக் கெடுதல் செய்தால் அதைப்பற்றி அவனிடம் பேசு, பின் அவனை மன்னித்துவிடு. 18 உனக்கு ஜனங்கள் செய்த தீமைகளை மறந்துவிடு. பழிவாங்க முயற்சி செய்யாதே. உனது அயலானையும் உன்னைப்போல நேசி. நானே கர்த்தர்!
பதிலளிநீக்குhttps://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2019&version=ERV-TA
மாற்கு 25 நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, ஏதாவது ஒன்றைக்குறித்து நீங்கள் யாரிடமாவது கோபம் கொண்டிருப்பது நினைவில் வந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவும் உங்களது தவறுகளை மன்னித்துவிடுவார்” என்றார்.
பதிலளிநீக்குநீதிமொழிகள் 19:11
பதிலளிநீக்குஒருவன் அறிவுள்ளவனாக இருந்தால், அந்த அறிவு அவனுக்குப் பொறுமையைத் தரும். அவனுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2019&version=ERV-TA
மன்னிப்பைப்பற்றிய உவமை
பதிலளிநீக்கு21 அப்பொழுது, பேதுரு இயேசுவிடம் வந்து,, “ஆண்டவரே, என் சகோதரன் எனக்குத் தொடர்ந்து தீமை செய்தால் நான் அவனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மன்னித்தால் போதுமா?” என்று கேட்டான்.
22 அதற்கு இயேசு அவனுக்கு,, “நீ அவனை ஏழு முறைக்கும் அதிகமாக மன்னிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவன் எழுபத்தேழு முறை [b] தீமை செய்தாலும் நீ தொடர்ந்து மன்னிக்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%2018&version=ERV-TA
மத்தேயு 18:22
பதிலளிநீக்குஅதற்கு இயேசு அவனுக்கு,, “நீ அவனை ஏழு முறைக்கும் அதிகமாக மன்னிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவன் எழுபத்தேழு முறை தீமை செய்தாலும் நீ தொடர்ந்து மன்னிக்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.
மாற்கு 1125 நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, ஏதாவது ஒன்றைக்குறித்து நீங்கள் யாரிடமாவது கோபம் கொண்டிருப்பது நினைவில் வந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவும் உங்களது தவறுகளை மன்னித்துவிடுவார்” என்றார்.
பதிலளிநீக்கு