பொறாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொறாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பொறாமை

தமிழர் சமயம்


திருக்குறள் அறத்துப்பால். - இல்லறவியல். - அழுக்காறாமை.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. குறள் 161

மணக்குடவர் உரை: ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். குறள் 162

மணக்குடவர் உரை: விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை. இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். குறள் 163

மணக்குடவர் உரை: தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான். இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. குறள் 164

மணக்குடவர் உரை: அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது. குறள் 165

மணக்குடவர் உரை: அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். குறள் 166

மணக்குடவர் உரை: பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும். இது நல்குரவு தருமென்றது.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். குறள் 167

மணக்குடவர் உரை: அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். குறள் 168

மணக்குடவர் உரை: அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (குறள் 169)

மணக்குடவர் உரை: அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (குறள் 170)

மணக்குடவர் உரை: அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.
 
ஔவியம் என்றால் என்ன? ஔவியம் என்றால் அழுக்காறு , பொறாமை என்பது பொருள்.

ஔவியம் பேசேல் - (ஆத்திச்சூடி 12)

ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு - (கொன்றை வேந்தன் 12)

(பதவுரை) ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல்- (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்திற்கு, அழிவு - கேட்டைத் தருவதாகும்.

(பொழிப்புரை) ஒருவன் பொறாமை வார்த்தை பேசுவது அவன்செல்வத்திற்கு அழிவைத் தரும்.

இஸ்லாம்


அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் மீது ,அவர்கள் மக்களைப் பொறாமைப்படுகிரார்களா ? - (அல்குர் ஆன் 4:54)

பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ - (திருக்குர்ஆன் 113:5)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும். (அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) அபூதாவூத் 4257)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானின் உள்ளத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேர்ந்து இருக்க மாட்டாது. - (நூல்: இப்னு ஹிப்பான் 4606)

கிறிஸ்தவம் & யூதமதம் 

'பொறாமையோ எலும்புருக்கி’ - (நீதி 14 : 30) 

உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? - (நீதிமொழிகள் 27:4)

பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம் - (ரோமர் 13 : 13)

 


ஜியோன்களின் இரகசிய திட்டம்