பெண்களின் ஒப்பனை

தமிழர் சமயம் 

கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம் (உலக நீதி 90)


கற்பொழுக்கத்துக்கு ஆகாத செயல்கள் 


தலைமகனில் தீர்ந்துஉறைதல் தான்பிறர்இல் சேர்தல்

நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் - கலன்அணிந்து

வேற்றுஊர்ப் புகுதல் விழாக்காண்டல் நோன்பிடுதல்

கோல்தொடியாள் கோள் அழியுமாறு. (பாடல் - 161)


விளக்கவுரை: கணவனிடமிருந்து பிரிந்து வாழ்தல், அடிக்கடி அயலார் வீடுகளுக்குப் போதல், நெறியில் நீங்கிய தீய மகளிருடன் சேர்ந்து பழகுதல், அணிகளை அணிந்து அயலூர்க்குத் தனியே செல்லுதல், தனியே சென்று திருவிழாவைக் காணுதல், கணவன் ஆணையின்றி விரதம் மேற்கொள்ளுதல் ஆகிய இவை பெண்ணின் கற்புக் கெடுதலுக்குரிய வழிகளாகும்.


கற்பற்ற மனைவியர் கணவர்க்கு இயமன் பாடல் - 162


அயல்ஊர் அவன்போக அம்மஞ்சள் ஆடிக்

கயல்ஏர்கண் ஆர எழுதிப் - புயல்ஐம்பால்

வண்டுஓச்சி நின்றுஉலாம் வாள்ஏர் தடங்கண்ணாள்

தண்டுஓச்சிப் பின்செல்லும் கூற்று.


விளக்கவுரை: கணவன் வேற்றூரை அடைந்த சமயம் பார்த்து, அழகுடைய மஞ்சளைப் பூசி நீராடி, கயல் மீனைப் போன்ற அழகுடைய கண்கள் எழில் பெற மையைத் தீட்டி, கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மலரில் உள்ள வண்டுகளை ஓட்டிக் கொண்டு, வெளியில் உலவும் ஒளியுடைய அழகிய பெரிய கண்களை உடையவள், தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு அவன் அறியாமல் செல்லும் இயமனாவாள்.


கிறிஸ்தவம் 

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது. முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது (1 பேதுரு 3:3)

யூதம் 

16 கர்த்தர்: “சீயோனில் உள்ள பெண்கள் பெருமிதம் கொண்டிருந்தனர். அவர்கள் காற்றில் தம் தலைகளைத் தூக்கிய வண்ணம் நடந்தனர். மற்றவர்களைவிடச் சிறந்தவர்களைப்போன்று நடித்தனர். அவர்கள் கண்ணடித்து, தம் கால் தண்டைகள் ஒலிக்க ஒய்யாரமாக நடந்து திரிந்தனர்” என்றார். 17 சீயோனிலுள்ள பெண்களின் உச்சந்தலையை என் ஆண்டவர் புண்ணாக்குவார். அவர்களின் முடிகளெல்லாம் உதிர்ந்து மொட்டையாகும்படிச் செய்வார். 18 அப்போது, பெருமைக்காரர்களிடம் உள்ள பொருட்களை கர்த்தர் எடுத்துக்கொள்வார். அழகான தண்டைகளையும், சுட்டிகளையும், சூரியனும், பிறையும் போன்ற சிந்தாக்குகளையும் எடுத்துக்கொள்வார். 19 ஆரங்களையும், அஸ்தகடகங்களையும் தலைமுக்காடுகளையும், 20 தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்த பரணிகளையும், 21 தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும், 22 விநோத ஆடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும், 23 கண்ணாடிகளையும், சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துப்போடுவார்.. (ஏசாயா 3:16-23)

இஸ்லாம் 

ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதி) 

தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். (நூல் : நஸாயீ) 

உங்களில் ஒருத்தி பள்ளிவாசலுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

1 கருத்து:

  1. 1 தீமோத்தேயு 2:9-10
    Tamil Bible: Easy-to-Read Version
    9 பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டுமென்று விரும்புகிறேன். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும். எளிமையாகவும், சரியான சிந்தனை உடையவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் நவநாகரீகமான தலையலங்காரமும், பொன், முத்து நகையலங்காரங்களும், விலையுயர்ந்த ஆடை அலங்காரங்களும் இல்லாமல் இருப்பார்களாக. 10 ஆனால், அவர்கள் அழகானவர்களாகத் தோன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். தேவனை வழிபடுகிற பெண்கள் அவ்விதத்திலேயே தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.

    https://www.biblegateway.com/passage/?search=1%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%202%3A9-10&version=ERV-TA

    பதிலளிநீக்கு