மனஇச்சையை பின்பற்றுவோன் அழிவான்

தமிழர் சமயம் 


கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்று
பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும்
, முட்டு இன்றி
அல்லவை செய்யும் அலவலையும், - இம் மூவர்
நல் உலகம் சேராதவர். (திரிகடுகம் 99)

பொருள்: கற்றவன் கைவிட்டு வாழ்தலும், விரும்பியவற்றைச் செய்யும் அறிவில்லாதவனும், தீங்கு செய்து அவற்றைப் பேசுதலும் கொண்டவர்கள், நல் உலகம் சேர மாட்டார்கள். 

இஸ்லாம்

எவர் வரம்பு மீறி இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத் துக் கொண்டாரோ, நிச்சயமாக அவர் ஒதுங்குமிடம் நரகமாகும். மேலும், எவர் தன் இறைவனின் சந்நிதியைப் பயந்து, மனோ இச்சையிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண்டாரோ, நிச்சயமாக அவர் ஒதுங்குமிடம் சொர்க்கமாகும். - (குர்ஆன் 80: 37-41)

எவன் தன்னுடைய இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ அவனை நீர் பார்த்தீரா? மேலும் அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு, இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்து விட்டான். எனவே அல்லாஹ்வுக்குப் பிறகு அவ ருக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (அல்குர்ஆன் : 45:23)

 ”வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன் தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! - (அல்குர்ஆன் : 5:77)

எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர். (அல்குர்ஆன் : 30:29)

இன்னும் அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும் எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து”அவர் சற்று முன் என்ன கூறினார்?” என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர் இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள் தங்கள் மன இச்சைகளையே பின்பற்றுகின்றனர்(குர்ஆன் 47:16)

கிறிஸ்தவம் 

சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். நான் செல்வம் உடையவன். உயர் குடியில் பிறந்தவன். மற்றவர்களை காட்டிலும் உயர்ந்தவன். நான் யாகம் செய்கிறேன். தானம் செய்கிறேன். நான் இன்பங்களை அனுபவிக்க பிறந்தவன் என்று அறிவீனத்தில் கிடந்து அழுந்துகிறார்கள். - (யாக்கோபு 1:13-15)

இந்துமதம் 

ஆசா பாசங்களில் பல நூறு வழிகளில் கட்டுண்டு; அவைகளை அனுபவிப்பதற்காக தவறான வழிகளில் செல்வத்தை சேர்ப்பார்கள்.  இவற்றை எல்லாம்  அடைந்து விட்டேன். இன்னும் பலவற்றை அடைய எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவற்றையும் அடைவேன். என் எதிரிகளை வெல்லுவேன். நானே ஈஸ்வரன். நானே பலவான். நான் சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவன். நான் சித்தன் என்று அவர்கள் சொல்கிறார்கள். இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர். அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்  (கீதை - 16.12-19


சியோனிஸத்தின் அழிவு திட்டம்




10 கருத்துகள்:

  1. நீதிமொழிகள் 5:23
    அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான்.

    பதிலளிநீக்கு
  2. மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் (உலகநீதி 17)

    பதிலளிநீக்கு
  3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.

    அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-6487

    பதிலளிநீக்கு
  4. 5:70. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்

    பதிலளிநீக்கு
  5. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்பது அறிவு
    (அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:422)

    பொழிப்பு (மு வரதராசன்): மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

    மணக்குடவர் உரை: உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது.
    இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.

    பரிமேலழகர் உரை: சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு.
    (வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.)

    இரா சாரங்கபாணி உரை: மனத்தைப் போனவழியிற் போகவிடாமல் தடுத்துத் தீமையின் நீக்கி நன்மையிடத்துச் செலுத்துவது அறிவு.


    பொருள்கோள் வரிஅமைப்பு:
    சென்ற இடத்தால் செலவிடாது, தீது ஒரீஇ, நன்றின்பால் உய்ப்பது அறிவு.

    பதவுரை: சென்ற-(உள்ளம்) போன; இடத்தால்-இடத்தில்; செலவிடா-போக விடாமல்; தீது-தீமை; ஒரீஇ- நீக்கி; நன்றின்பால்-நல்லதன் கண், நல்ல வழியில்; உய்ப்பது-செலுத்துவது; அறிவு-அறிவு.

    http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0422.aspx

    பதிலளிநீக்கு
  6. "வாசியு மூசியும் பேசி வகையினால்

    பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை

    ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்

    ஈசன் இருந்த இடம் எளிதாமே." (திருமந்திரம் - 2613)

    பதிலளிநீக்கு
  7. உள்ளத்தை அடக்கி ஆளல் பாடல் - 139

    பரிந்துஎனக்குஓர் நன்மை பயப்பாய்போல் நெஞ்சே!
    அரிந்துஎன்னை ஆற்றவும் தின்னல் - புரிந்துநீ
    வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
    பூண்டேன் பொறியிலி போ.

    விளக்கவுரை உள்ளமே! எனக்கு ஒரு நன்மையைச் செய்வதைப் போன்று காட்டி, என்னை மிகவும் அரிந்து தின்னாதே! நீ விரும்பி அடைய நினைப்பவற்றை நான் விரும்பிச் செய்வேன் அல்லேன். பற்று விடுதலை நான் மேற்கொண்டேன்; பேதையே, அப்பாற்போ!

    மனம் அடங்கினால் பல நன்மை உண்டாகும் பாடல் - 140

    தன்னைத்தன் நெஞ்சம் கா¢யாகத் தான்அடங்கின்
    பின்னைத்தான் எய்தா நலன்இல்லை - தன்னைக்
    குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல்
    பிடிபடுக்கப் பட்ட களிறு.

    விளக்கவுரை ஒருவன் தன் செயல்களுக்குத் தனது மனத்தையே சான்றாக வைத்துத் தான் அடங்கப் பெற்றான் என்றால், பின்பு, அவன் அடைய முடியாத இன்பம் ஒன்றும் இல்லை தன்னைப் பிறந்த குடியுடன் கெடுக்கின்ற தீய மனத்தினுக்குத் தொண்டு செய்து நடத்தல், பார்வை விலங்காக நிறுத்தப்பட்ட பெண் யானையை விரும்பிக் குழியிடத்து அகப்பட்ட ஆண் யானையைப் போல், எப்போதும் வருந்துதற்குக் குறியதாகும்.

    உள்ளத்தே உயர்வே உயர்வு பாடல் - 141

    உள்ளூர் இருந்தும்தம் உள்ளம்அறப் பெற்றாரேல்
    கள்அவிழ் சோலையாம் காட்டுஉளர் காட்டுள்ளும்
    உள்ளம் அறப்பெறு கல்லாரேல் நாட்டுள்ளும்
    நண்ணி நடுவூர் உளார்.

    விளக்கவுரை இல்வாழ்வை மேற்கொண்டு ஊரினுள் வாழ்ந்தாலும் தம் மனம் அடங்கப் பெறுவாரானால் அவர், தேன் சொரியும் மலர்கள் நிறைந்த சோலையையுடைய காட்டில் வாழும் துறவியே ஆவார். துறவற வாழ்வை மேற்கொண்டு, காட்டில் வாழ்கின்றவராயினும் மனம் அடங்கப் பெறார் என்றால், அவர், நாட்டில் உள்ள மனை வாழ்க்கையை அடைந்து தீய செயலைப் பொருந்தி வாழ்கின்ற கயவர் ஆவார்.

    மனத்தை அடக்குவார் அடையும் பெரும் பயன் பாடல் - 142

    நின்னை அறப்பெறு கிற்கிலேன் நல்நெஞ்சே!
    பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் - நின்னை
    அறப்பெறு கிற்பனேல் பெற்றேன்மற்று ஈண்டே
    துறக்கம் திறப்பதுஓர் தாழ்.

    விளக்கவுரை என் நல்ல நெஞ்சமே! உன்னை என் வயமாக்கிக்கொள்ள இயலாதவனாய் உள்ளேன்; இனி யான், யாரை என் வயமாக்கிக் கொள்வேன்? உன்னை என் வயமாக்கிக் கொள்வேன் ஆயின், சொர்க்க உலகினைத் திறப்பதான நிகரற்ற திறவு கோலை, நான் இப்பிறவியிலேயே பெற்றவன் ஆவேன். https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  8. நீதிமொழிகள் 3:5 கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. 6 நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். 7 உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. 8 நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%203&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  9. நீதிமொழிகள் 11

    6 நன்மை உத்தமனைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீயவர்களோ தாம் விரும்புகிற கெட்ட செயல்களால் சிக்கிக்கொள்கின்றனர்.

    7 தீயவன் மரித்துப்போன பிறகு அவனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவன் நம்பியவை எல்லாம் போகும்; ஒன்றுமில்லாமல் பயனற்றுப்போகும்.

    பதிலளிநீக்கு
  10. நீதிமொழிகள் 1131 பூமியில் நல்லவர்கள் தமக்குரிய வெகுமதியைப் பெறும்போது, தீயவர்களும் தங்களுக்குப் பொருத்தமானதைப் பெறுவார்கள்.

    பதிலளிநீக்கு