நாத்திகம் பொதுவாக இரண்டு வகைப்படும்
- கடவுளின் இருப்பை ஏற்காமலும் மறுக்காமலும் இருத்தல்
- கடவுள் உண்டா இல்லையா என்று குழப்பமாக உள்ளது (Agnosticism)
- கடவுள் உண்டா இல்லையா என்ற கவலை இல்லை (Apatheist)
- கடவுளின் இருப்பை உறுதியாக மறுத்தல்
- இறைவனென்று எதுவுமில்லை (Atheism)
- அரசியல் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட தத்துவங்களை பின்பற்றுவது (Capitalism, Socialism, Communism, Liberalism, Populism, and Nationalism)
- அறிவியலையும் சமயத்தையும் இணக்கமாக புரிந்துகொள்ள முயலாமல் எதிரெதிராக சித்தரித்து அறிவியலை மட்டும் பின்பற்றுவது. (Scientism, Antheism)
நாத்திக சிந்தனை பல காரணங்களால் தோன்றுகிறது. அவைகளில் சில அடிப்படையான காரணங்களாவன,
- அறியாமை - கல்வி வாடையே இல்லாமல் இருப்பதும், உலக நூல்களை மட்டும் கற்பதும் மனிதனை அறியாமையில் விட்டு விடுகிறது.
- பொறாமை - தன்னை விட சகமனிதன் செழிப்புடன், வெற்றியுடன், புகழுடன், அறிவுடன் வாழ்வதை தாங்கமுடியாத நிலை பொறாமை ஆகும். நல்லவரோ கெட்டவரோ, அழகானவரோ அசிங்கமானவரோ, கருப்பரோ வெள்ளையரோ, தமிழரோ மற்ற மொழிக்காரரோ, சொந்தக்காரரோ அந்நியரோ, நமது மதத்தை சார்ந்தவரோ மற்ற மதத்தை சார்ந்தவரோ, நம்மினத்தவரோ மற்ற இனத்தவரோ, ஏழையோ பணக்காரரோ, எவராயினும் அவருக்கு கிடைத்த அருட்கொடைகளை கண்டு நாம் விரும்பாமல் பெருமூச்சு விடுவது பொறாமை ஆகும்.
- பெருமை - பணம், பதவி, அதிகாரம், புகழ், கல்வி, அறிவீனம் ஆகியவை மனிதனை பெருமையில் கொண்டு போய் சேர்க்கிறது.
- பொறுமையின்மை - இன்ப துன்பம் ஏற்படும் பொழுதும், சோதனைக்கு உட்படுத்தப்படும் பொழுதும் பொறுமையை இழக்கும் நிலைக்கு மனிதன் செல்கிறான்.
நாத்தீகம் பேசும் மனிதன் எக்காரணத்தை முன்வைத்தாலும் அக்கராணத்தை ஆராய்ந்தால் அதன் மூல காரணம் இவற்றில் ஒன்றாக தான் இருக்கும். இந்த பட்டியலில் உள்ள குணங்கள் எதுவும் கடந்து போகுமளவு சிறிய தவறல்ல.
சமயங்களை எளிதில் விமர்சிப்பது போல நாத்திகத்தை விமர்சிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு சமயத்தை விமர்சிக்க முயன்றால்
- அச்சமய மறைநூல்கள்,
- அச்சமய மக்களிடம் புழக்கத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள்,
- அவர்களிடம் புழக்கத்தில் உள்ள மூட பழக்கங்கள்,
- அவர்கள் வரலாற்றில் செய்த பிழை
போன்ற சமய அடிப்படை செய்திகளை கொண்டு அச்சமயத்தின் மீது விமர்சனம் செய்ய முடியும், அது மூடத்தனமான வாதமாக இருந்தாலும் சரியே. ஆனால், நாத்தீக சிந்தனையை நீங்கள் விமர்சிக்க எண்ணி நாத்திகர்கள் செய்த பிழையை முன் வைத்தால்,
- "அது தவறுதான் என்றும் அதிலிருந்து படிப்பினை பெற்று மனித சமுதாயம் மாற்றம் பெற்றுள்ளது" அல்லது
- "அது அந்த தனிமனிதனின் பிழை" அல்லது
- "அதில் என்ன பிழை"
என்று கூறி நாம் வைத்த அந்த வாதத்தை அவர் எளிதில் கடந்து சென்றுவிடுவார். ஏனென்றால் அறம் தொடர்பாக ஒட்டுமொத்த நாத்தீகர்களும் ஏற்கும் எந்தவித அடிப்படையும், மூலமும், வரைவிலக்கணமும் கிடையாது. இதே வாதம் ஒரு சமயம் சார்பாக சொல்லப்பட்டால் அது ஏற்கப்படுவதில்லை. மேலும் தனது நிலைப்பாட்டிற்கான காரணத்தையம் பெரும்பாலான நாத்திகர்கள் வெளிப்படுத்துவதில்லை. மேலும் அவர்களின் தத்துவத்துக்கு நிலையான அடிப்படை விதிகள் ஏதும் இல்லாததால் அவர்களின் நிலைப்பாடு பிழை என்று நாம் பெரும்பாலும் அவர்களுடன் வாதிட முடியாது.
ஆனால் அதிலும் சில நேர்மையாளர்கள் உள்ளனர். அவர்கள் சரியான விளக்கம் கிடைக்கப் பெற்றால், உண்மை என்று விளங்கச் செய்தால் அதை நேர்மையாக எதிர்கொள்வர். அவர்களுக்கு இந்நூலில் கடவுளின் இருப்பை அறிய பல செய்திகள் கோர்க்கப்பட்டுள்ளது.
நாத்திக மக்களின் இருப்பை பற்றி சமய நெறி நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டு இருந்தாலும், நவீன காலத்தில் கூறப்பட்ட சில அறிவியல் கோட்பாடுகள் இறைமறுப்பு கொள்கையில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது.
- டார்வினின் பரிணாமக் கோட்பாடு
- பெருவெடிப்பு கோட்பாடு
- இயங்கியல் பொருள்முதல்வாத கருத்தியல் - பொதுவுடைமை தத்துவம்
பரிணாம கொள்கை
டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை ஒருவர் ஏற்கும் பொழுது அது சமயங்கள் கூறும் படைப்பு தத்துவத்துக்கு எதிராக அவரை நகர்த்துகிறது. ஒருவர் ஒரே நேரத்தில் கடவுளையும் பரிணாமக் கோட்பாட்டையும் நம்பிக்கை கொள்ள முடியாது.
எளிமையாக சொல்வதென்றால், பொதுவாக பரிணாமம் என்பது, படிப்படியான முன்னேற்றம் அல்லது மாற்றத்தை குறிக்கும். உயிரியலில் பரிணாமம் என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் ஆகும். இதுவரை சமய நூல்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் மதங்கள் இதை சில இடங்களில் குறிப்பிடுகிறது.
இஸ்லாம்
"இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன."(குர்ஆன் 30:22)
கிறிஸ்தவம்
"அவர் ஒரு மனிதனிலிருந்து மனிதகுலத்தின் ஒவ்வொரு தேசத்தையும் பூமியின் முகமெங்கும் வாழச் செய்தார்." (அப்போஸ்தலர் 17:26)
தமிழர் சமயம்
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" (திருமந்திரம் 2104)
பொருள்: "ஒன்றே குலம்" என்பது மனிதர்கள் அனைவரும் ஒரே மனிதனிலிருந்து தழைத்தவர்கள் என்று பொருள் படுகிறது.
மனிதர்களின் தோற்றம் ஒரே மனிதனிடமிருந்து இருந்ததென்றும் அவரிடமிருந்து இத்தனை நிறங்களாக, இனங்களாக பரிணமித்தது என்று மேலும் சில வசனங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. ஆனால் இந்த இயற்கை இயல்பை சற்று நீட்டித்து, திரித்து ஒருசெல் உயிரிலிருந்துதான் அனைத்தும் பரிணமித்தது என்றும் குரங்குகளுக்கும் நமக்கும் ஒரே முன்னோர்கள் என்றும் பிழையான வாதத்தை ஏறக்குறைய உண்மை என்கிற அளவுக்கு நிலைநிறுத்தியதுதான் மோசடியின் உச்சம். பரிணாம வளர்ச்சிக் கொள்கை உண்மை அல்ல என்று பல்வேறு ஆய்வு அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும் அது இன்றளவும் புழக்கத்தில் இருப்பதன் காரணம் உலக மக்களை நாத்திகர்களாய் திருப்பும் உலகலாவிய சதி ஆகும்
இன்று பரிணாமக் கொள்கைக்கு எதிராக ஒருவர் பேசினால் அவர் அறிவியலுக்கு முரணாக பார்க்கப்படுவது எதார்த்தமாகிவிட்டது. எத்தனை எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் சமய நூல்களினால் நிகழ்ந்துள்ளது என்ற பட்டியலை நீங்கள் காண நேரிட்டால் ஆச்சரியமடைந்து போவீர்கள். வேதங்கள் முழுக்க முழுக்க அறிவியலை பேசவில்லை என்றாலும் சரியான அறிவியலை பேசாத வேதங்கள் இல்லையெனலாம். அறிவியல் பேசுவது வேதத்தின் நோக்கமல்ல, மனிதர்கள் அறியாத உண்மைகளை அவைகள் பேசுவதன் மூலம் அது யாரிடம் வந்தது என்று நிறுவ முயல்கிறது.
பெருவெடிப்பு கொள்கை
திடீரென்று ஒருநாள் மனிதன் உலகம் படைக்கப்பட்டதல்ல என்று பேசுவான் என்று அறிந்த இறைவன் தனது வேதங்களில் உலகம் படைக்கப்பட்ட முறையினை விவரித்து உள்ளான்.
தமிழர் சமயம் : பரிபாடல் உலகம் தோன்றிய விதத்தை பேசுகிறது
(பரிபாடல் அடிகள்: 1 முதல் 19 வரை)தொல் முறை இயற்கையின் மதிய………..…………………………………………… மரபிற்று ஆகபசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்படவிசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்கரு வளர் வானத்து இசையின் தோன்றி (5)உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும்செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடுதண் பெயல் தலைஇய ஊழியும்அவையிற்றுஉள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு (10)மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்மை இல் கமலமும் வெள்ளமும் நுதலியசெய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை (15)கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரியஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்குஊழி யாவரும் உணராஆழி முதல்வ நிற் பேணுதும் தொழுதும் (19)
பொருள் ஒன்றுமில்லாத இடத்தில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு -பரமாணு பேரொலியுடன் தோன்றியது. உருவம் அறிய இயலாத வளி முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி தோன்றியது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும் படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் பூமி குளிரும் படியாகத் தொடர்ந்து மழை பொழிந்து ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் சிறப்புடன் வெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் என்னும் உள்ளீடூ தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய பூமியில் ஊழிக்காலம் கடந்தது.
திருமந்திரம்
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே. (திருமந்திரம் 5)
பொருள்: நம் பெருமானிடம் இருந்து முதலில் வானம் தோன்றியது, வானத்தில் இருந்து காற்று தோன்றியது. காற்று வளர்த்தத் தீயில் இருந்து நீர் தோன்றியது. பிறகு கடினத்தன்மை கொண்ட நிலம் தோன்றியது. இந்தப் பிரபஞ்சம் என்னும் பூவில் உள்ள தேன் தான் படைப்புக்கள் அனைத்தும். அந்த அனைத்துப் படைப்புக்களும் ஐந்து பூதங்களால் ஆனவையே!
இஸ்லாம்
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (குர்ஆன் 41:11)
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (குர்ஆன் 21:30)
கிறிஸ்தவம்
ஆதியில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமி உருவமும் வெற்றிடமும் இல்லாமல் இருந்தது, ஆழத்தின் முகத்தில் இருள் இருந்தது. மேலும் தேவன் நீரின் மேல் இருந்தார். கடவுள், "ஒளி உண்டாகட்டும்" என்று கூறினார், அங்கே வெளிச்சம் ஏற்பட்டது. வெளிச்சம் நன்றாக இருப்பதைக் கடவுள் கண்டார். மேலும் கடவுள் ஒளியை இருளிலிருந்து பிரித்தார். கடவுள் ஒளிக்கு பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் வந்தது... (ஆதியாகமம் 1:1-5)
மேற்சொன்ன வசனங்களெல்லாம் பெருவெடிப்பு கொள்கையினை ஒத்ததாக அமைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இதில் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அறிவியலை மட்டும் நம்பும் மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஒரு ஆராய்ச்சியாளரால் நிறுவப்பட்ட பிறகு மக்கள் நம்பும் ஒரு கோட்பாட்டை சமய நம்பிக்கை கொண்ட மக்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக நம்பி வந்துள்ளனர்.
துவக்கத்தில் என்ன இருந்தது என்று சாத்திய கூறுகளை கொண்டு யூகித்து கூறும் ஒரு அறிவியலாளரை காட்டிலும் அப்பொழுது அதை நிகழ்த்தியவனின் கூற்றே நம்புவதற்கு தகுதியானது. ஏனென்றால் மனிதனின் ஆயுட்காலம் 60 - 100 வரை, இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன். இருவரின் அறிவின் அளவையும், ஆற்றலையும் ஒப்பு நோக்கினால் அவனது கருத்துதான் சிறந்ததாக சரியானதாக இருக்க முடியும்.
மேலும் அமீபாவிலிருந்து மனிதன் பரிணமித்த நிகழ்வை கண்ட சாட்சியோ, உலக பெருவெடிப்பின் மூலம் தோன்றிய நிகழ்வை கண்ட சாட்சியோஇருக்க முடியாது. இத்தனை கடின உழைப்பின் மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளை வெறுப்பதே இந்த மதவாதிகளின் இயல்பு என்று நாத்திகர்கள் இக்கருத்தை சுருக்கினால், ஒவ்வொரு நிலத்திலும், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு மொழியிலும் மறை நூல் வழங்கப்பட்டு அதில் இதுபோல மனிதன் முன்பு அறியாத அறிவியல் ஆதாரங்களை சான்றாக கொடுத்தும் இறைவன் இல்லை என்று மீண்டும் மீண்டும் பிதற்றிக்கொண்டு அறிவாளியாக தன்னை கருதும் அறிவிலிகளுக்கு இதுதான் இயல்பு என்று சுறுக்குவதில் என்ன பிழை இருக்க முடியும்.
Thesciencebehindit.org கூற்றுப்படி பெருவெடிப்புக் கோட்பாடு, பிரபஞ்சம் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கற்பனை செய்ய முடியாத வெப்பமான மற்றும் அடர்த்தியான புள்ளியிலிருந்து (அதாவது சிங்குலாரிட்டி-யிலிருந்து) உருவானது என்று கூறுகிறது. கற்பனை செய்ய முடியாத ஒன்றிலிருந்து அனைத்தும் படிப்பபடியாக தோன்றியது என்ற கூற்று கடவுள் கோட்பாட்டுக்கு எப்படி முரண்படமுடியும்?
கடவுளை கற்பனை செய்யமுடியுமா? முடியாது! என்றுதானே நான்மறைகளும் கூறுகிறது.
buffalo.edu கூற்றுப்படி பெருவெடிப்புக்கு முன் - பிரபஞ்சம் ஒரு வினாடியின் ஒரு பகுதியிலேயே குறைந்தது 80 மடங்கு அளவு இரட்டிப்பாகி, மூச்சடைக்கக்கூடிய அண்ட விரிவாக்கத்திற்கு உட்பட்டது. இந்த வேகமான விரிவாக்கம், வெற்று இடத்தையே ஊடுருவிய ஒரு மர்மமான ஆற்றல் வடிவத்தால் தூண்டப்பட்டு, பிரபஞ்சத்தை தனித்தனியாக்கியது மற்றும் குளிர்ச்சியாகக்கியது.
ஒரு மர்மமான ஆற்றல்?
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதன் பொருள் ஆற்றலுக்கு துவக்கமோ முடிவோ கிடையாது என்பதாகும். ஒன்றுமே இல்லாததிலிருந்து உலகமும் அதில் உள்ள ஆற்றலும் தோன்றியது என்று கூறும் முரண்பாடுள்ள பெருவெடிப்பு கொள்கையை ஏற்கும் நாம், எப்பொழுதும் இருக்கும் இறைவனிடமிருந்து உலகமும் அதிலுள்ள அழிவில்லா ஆற்றலும் வந்தது என்றால் நம்ப முடிவதில்லை. வேடிக்கை!
ஆற்றல் இறைவனிடம் இருந்து வந்தது என்பதால்தான், ஆற்றல் பெற இறைவணக்கம் அவசியம் என்கிறது அனைத்து மறைநூல்களும்
காலம் கூட பெருவெடிப்பு கொள்கையினால் உருவானதாக அறிவியல் கூறுகிறது, அதற்க்கு முன் காலம் இருந்ததாக அறிவியல் கூற வில்லை. எனவே உலகம் அழியும் பொழுது காலமும் அழியும் மேலும் அது முடிவில்லா வாழ்வின் தொடக்கமாக அமையும் என்கிறது சமயங்கள். இது காலம் தொடர்பாக அறிவியல் கொண்டிருக்கும் கருத்துக்கு எந்தவகையிலும் முரண்படவில்லை.
பொருள் முதலா? கருத்து முதலா?
மார்க்சியம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட தத்துவமாகும்.
"இயற்கைத் தோற்றங்கள் எப்போதும் இடையறாது இயங்கிக்கொண்டிருக்கும். அதன் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருகின்றன. மேலும் இயற்கையின் உள்ளே காணப்படும் முரண்பாடுகளின் வளர்ச்சி காரணமாகவும் நேர் எதிரான சக்திகள் மோதிக் கொண்டு இயங்குவதன் விளைவாகவும் இயற்கை வளர்ச்சி அடைகிறது என இயங்கியல் அணுகுமுறை கருதுகிறது. இந்த இயங்கியல் அணுகுமுறை Metaphysics எனப்படும் மாறாநிலைத் தத்துவத்திற்கு நேர் எதிர் தத்துவமாக வளர்ச்சி பெற்ற ஒன்றாகும்."
சமயங்கள் மாறாநிலைத் தத்துவத்தை போதிக்கிறது என்று பொதுவுடைமைவாதிகளால் நம்பப்படுகிறது. ஆனால் இந்த கருத்து எப்படி தோன்றியது என்று தெரியவில்லை. அநேகமாக மேலைநாடுகளில் இருந்து இந்த சொல்லாடல் தோன்றியதால் பைபிளில் அல்லது கிறிஸ்தவத்தில் முரண்பட்ட சிந்தனையாளர்களால் இது தோன்றி வளர்ச்சி பெற்று இருக்கும் என்று கருதுகிறேன்.
ஆனால் சமயங்கள் அதை போதித்தால், முதல்நூல் வழிநூல் கொள்கையே தேவையில்லை. முதல் நூலோடு நிறுத்தி இருக்கலாம், அதுவே உலகம் முடியும் வரை போதுமான அறமாக இருக்கும் என்று போதித்து இருக்கலாம். ஆனால் மாற்றம் நிகழும் அதுதான் இறைவன் படைத்த இயற்கையின் பண்பு என்பதை காட்டும் விதமாக, பைபிளில் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றிய தீர்க்கதரிசிகளால் 40க்கும் மேற்பட்ட நூல்களும், சமஸ்கிருத வேத நூல்களில் ஒன்றான ரிக் வேதம் வெவ்வேறு காலகட்டத்தில் 356 ஆசிரியர்கள் எழுதிய பாடல்களும், தமிழர் சமய நூல்களில் ஒன்றான புறநானூற்றில் 150 ஆசிரியர்கள் எழுதிய பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கால மாற்றங்களுக்கு ஏற்ப சட்டமும் திருத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 1800-களின் கடைசியில் எழுதப்பட்ட "யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை"-யில் கூறப்பட்ட இந்த மேற்சொன்ன கருத்து 1950-களில் ரஷ்யாவிலும் இன்று சீனாவிலும் தென்கொரியாவிலும் கண்முன் நடைபெறுவதை காணலாம். இந்த தத்துவம் பிழை என்பதற்கு வேறு ஆதாரம் தேவையா?
மார்க்சியமோ பேசுவது பொருளாதாரத்தையும் பொருட்களையும் பற்றி மட்டுமே. ஆனால் மனிதன் என்பவன், அல்லது வாழ்க்கை என்பது, அல்லது சமுதாயம் என்பது உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட வேண்டியது, மேலும் உணர்வுகளால்தான் அது கட்டமைக்கப்படமுடியும். உணர்வுதான் ஒரு சமுதாயத்தின் அல்லது தனி மனிதனின் உயிர் ஆகும். அது இல்லாததை உயிர்ப்பில்லா வாழ்கை அல்லது இயந்திர வாழ்கை என்கிறோம்.
அறிவியல் என்பது பொருட்களின் பண்புகள், அது உருவாகும் அல்லது அழியும் பண்புகளையும், மேலும் அதன் பரிமாணம் மற்றும் பரிணாமத்தை விளக்குகிறது. இவற்றை கொண்டு பொருட்களை கையாளும் அறிவை நம் பெறுகிறோம். ஆனால் ஆன்மிகம் என்பது அப்பொருள்கள் ஏன், எப்பொழுது, யாரால் வழங்கப்பட்டது என்பதையும் விளக்குகிறது. உதாரணமாக, ஒரு உணவு என்பது எதை சேர்த்து என்னென்ன பக்குவத்தில் எவ்வாறு செய்யப்படுகிறது என்று விளக்கும் முறையை அறிவியல் எனக்கொண்டால், அதை அந்த பக்குவத்தில் எதை, எப்படி, யார் செய்தார் என்று விளக்குவதை ஆன்மிகம் எனக்கொள்ளலாம். இரண்டும் ஒன்றை ஒன்று நிறுவும் கூறுகள். ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று இணக்கமாக பயணித்த, பயணித்து கொண்டு இருக்க வேண்டிய ஒற்றை வண்டியின் இரட்டை மாடுகள். அதை திட்டமிட்டு பிரித்ததுதான் நாத்திக சிந்தனையின் வளர்ச்சிக்கு காரணம். மேற்கத்திய கல்விமுறையின் கட்டமைப்பு, அமெரிக்க பல்கலைக்கழகங்களின் நிறுவனர்கள் போன்றவைகளின் பின்புலங்கள் ஆராயப்படும் பொழுது திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.
கடவுள், மறுமை போன்ற ஐம்புலன்களால் நேராடியாக தொட்டு உணரமுடியாத பல விடயங்களை Material-விதிகளை கொண்டே அணுகுவதால் இவைகளை நாத்தீகர்கள் எளிதாக நிராகரிக்கின்றனர். ஆனால் நாம் அணுகும் விடயத்தின் பண்பு மாறும் பொழுது அதற்கு ஏற்றாற்போல விதிகளும் அணுகும் முறையும் மாறும் எனபது அடிப்படை. இவ்வாறு புலன்களுக்கு எட்டாத விடயங்களை எந்த விதியின் அடிப்படையில் அணுகுவது என்பதும் இந்நூலில் ஆங்காங்கே விவரிக்கப் படுகிறது.
குரங்கிலிருந்து மனிதனாகிய பிறகு, காலவோட்டத்தில் மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழத் துவங்கிய பிறகு, இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாப்பு பெற இயற்கையை வணங்க துவங்கி, அதற்க்கு பிற்கலத்தில் முன்னோர்களை வணங்க துவங்கி, பின்பு மனிதனை நெறிப்படுத்த அனைத்தையும் மிஞ்சிய கடவுள் என்கிற சிந்தனை பிறந்தது என்றெல்லாம் மேலே குறிப்பிட்ட கோட்பாடுகளை நேரடியகவோ மறைமுகமாகவோ ஏற்பவர்களால் நம்பப்படுகிறது. ஆனால் அவற்றின் அடிப்படையே பிழை என்பதை நீங்கள் இதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.
"அறிவியலும் தொழில்நுட்பமும் இவ்வளவு முன்னேறிய பிறகும் சாமி, பேய், வேதம் என்று எப்படி உங்களால் நம்பவோ பேசவோ முடிகிறது, அதெல்லாம் வெறும் Superstitious" என்று கூறுவோர் உண்டு. தொழிற்கல்வியில் முன்னேற்றம் அடைந்ததால் மட்டுமே இக்கல்வி அற்றுப் போகும் என்று வாதிடுவது பொருத்தமற்றது. இரண்டுமே கல்வி ஆகும். எனவே இரண்டிலும் உள்ள சரி பிழையை பிரித்து அறிவது நம் கடமை ஆகிறது. மேலும் இரண்டையும் பரஸ்பரம் புறக்கணிப்பதும் பிழை அல்லது அதிதீவிர எல்லைகளை அடைவதும் பிழை. இரண்டிலும் நடுநிலையை கையாள்வது அவசியம். ஆனால் அந்த நடுநிலையினை நாம் வரையறுக்க முடியாது, அதை மறை நூல்களின் உதவியோடு தான் பெறவேண்டும்.
சமயங்களில் தெய்வத்தின் வழிகாட்டுதல்கள் இல்லாமல் மனிதர்களால் உட்புகுத்தப்பட்ட பிழையான தகவல்களையும், நடைமுறைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும் விமர்சிக்கும் மக்களிடமிருந்து நாத்திகம் உருவெடுக்கிறது. அறிவியலில் ஒரு தவறான கொள்கை சொல்லப் பட்டால் அதை பின்வரும் நாளில் அதற்கேற்ற முறையான அணுகுமுறையை கொண்டு பகுத்து அறிவது போல ஆன்மீகத்திலும் செய்யப்பட வேண்டும். அதற்கான வழிமுறையை அவரவர் மொழியில் உள்ள மறைநூல்கள் மூலமே பெறமுடியும் என்பதை அறிவது தான் கலவியின் முதல் படி ஆகும், அவ்வாறு அறிபவர்தான் பகுத்தறிவாளர் ஆவார். எனவே நாத்திகம் என்பது உலக மயக்கு ஆகும்.
திருமந்திரம் பாடல் எண் : 6 - மனித இன மூலம்
பதிலளிநீக்குபுவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே.
பாடல் எண் : 7
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=1020
’செஞ்ஞாயிற்றுச் செலவும்
பதிலளிநீக்குஅஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தோர்போல என்றும்
இனைத்து என்போரு முளரே (புறம் 30.1-7)
செஞ்ஞாயிற்றின் வீதியும் அஞ்ஞாயிற்றின் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்வட்டமும் காற்றியங்கும் திசையில் ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் ஆகிய இவற்றை அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையவென்று எடுத்துக்கூறும் கல்விடையோரும் இருந்தனர் என்ற அறிவியல் குறிப்பினை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.
‘’ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
பதிலளிநீக்குஇரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே’’
என்ற நூற்பாவால் (தொல்.., பொருள், மரபு, நூ.26-27 )
சூரியக்குடும்பத்தின் ஒரு கிரகத்திலிருந்து வந்தவர்கள் தான் மக்கள் என்ற வானியல் அறிஞர்களின் கருத்திற்கு ஏற்றவாறு சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியும் பின்வரும் பாடலில் கூறுகிறது.
பதிலளிநீக்கு‘’சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழு துணரும்
சான்ற கொள்கைச்சாயா யாக்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர்’’( மதுரை 477-481 )
பழங்காலத்தில் வாழ்ந்து வந்த சைனர் வானம் ஏறுதல், கடலில் நடத்தல் போன்ற அறிவியல் செயல்களைச் செய்வதில் திறம் பெற்றிருந்தனர் என்பதை குறுந்தொகை 130 –வது பாடல் விளக்குகிறது.
‘’நிலம் தொட்டுப் புகா அர்வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்’’ என்ற பாடலில் தோழி தலைவியிடம் உன் தலைவன் நிலத்தில் புக மாட்டார் வானத்தில் ஏறார் கடலின் மீது நடவார் கவலைப்படாதே என்ற தேற்றுவதாக அறிவியல் செய்தி வருகின்றது.
வான வெளிப் பயணம்
பதிலளிநீக்குவான வெளிப் பயணம் முன்னோர்கள் அறிந்திருந்த ஒன்றுதான் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் விமானிகளே இல்லாத விமானங்களை வானவெளியில் செலுத்தமுடியும் என்ற அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ளது இக்கருத்தினை
‘’ வலவன் ஏவா வானவூர்தி
எய்துப………….(புறம் பா 27)
என்ற பாடலில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். சிறந்த அரசர்கள் விண்ணில் பாகனால் செலுத்தப்படாத தானே இயங்குகின்ற திறன் வாய்ந்த வானவூர்தியில் சென்றனர்எ ன்ற குறிப்பின் வழி தமிழர்கள் விமான ஓட்டும் கலையில் வல்லவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.
கணிதவியல் சிந்தனைகள்
பதிலளிநீக்குவாழ்வியலோடு ஒட்டியதாகும் கணிதம். அதன் உதவியின்றி எதுவும் நடைபெறாது. இதை உணர்ந்தே
‘’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு ( குறள் 392)
என்று வள்ளுவரும் கூறினார். ஔவையும்
‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்
மைஇல் கமலமும் வெள்ளமும் (பரி 2.13-14) இப்பாடலில் எண் கணிதம் கூறப்பட்டுள்ளது.
கணக்கற்ற பல ஊழிகள் பல கோடி ஆண்டு காலத்தைக் குறிக்கின்றது. இதில் ஆம்பல் என்பது பழந்தமிழர் கணக்கிட்ட ஆயிரம் கோடி என்ற பேரியல் எண் வெள்ளம் என்பது கோடி கோடியைக் குறிக்கின்றது. கோடியை விடவும் பெரிய எண்களுக்கும் தமிழில் பெயர் இருப்பது தமிழரின் தனிச்சிறப்பை உணர்த்தும் குறிப்பாகும்.
மருத்துவச் சிந்தனைகள்
பதிலளிநீக்குநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நலமுடன் வாழ முடியும். நீர்வேட்கைத் தீர்க்கும் பொருட்டு அக்காலத்தில் மூவகை மருந்தாக நெல்லிமரம் பயன்பட்டது. நெடுந்தூரம் வந்த நீர்வேட்கை மிக்க புதியவர்கள் உயிரைப் போகாது தடுக்க நெல்லிக்காயை சுவைத்தனர். நீர்ச்சத்து நிறைந்த தாவரங்களுள் நெல்லிமரம் ஒன்றாகும்.
-கோட்கரம் நீந்தி
நெட்ஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்லுயிர் நிறுத்த சிவைக்காய் நெல்லி (புறம் 271 5-7)
இந்நெல்லிக்கனியை நீண்ட நாள் உயிர்வாழும் பொருட்டு ஒளவைக்கு அதியமான் வழங்கினான் (புறம் 97)
புவி வெப்பமடைதலும் பருவ மழை மாறுதலும்
பதிலளிநீக்குபுவி வெப்ப மாற்றத்தால் பாலை நிலம் பாதிக்கப்படுவதை பின்வருமாறு புறநானூறு பாடல் விளக்குகிறது.
கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதரப் பெறூதலின் பயங்கரந்து மாறி
விடிவாயப்பட்ட வியன்கண் மாநிலம் (அகம் 164.!-3)
என்ற பாடல் அடிகள் ஞாயிற்றின் கதிர்கள் ஈரத்தைக் கவர்ந்த்தையும் பசுமையற்ற நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதையும் இலைகள் வாடிப்போய் உதிர்ந்ததையும் விளக்குகிறது.
நீர்க்கடிகாரம்
பதிலளிநீக்குநல்ல காரியம் செய்வதற்கு முன் நேரத்தைப் பார்ப்பது உண்டு. சங்க காலத்தில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன் நேரத்தைப் பார்ப்பதற்காக நாளிகைக் கணக்கர்கள் கோவில்களிலுள்ள கிடாரமாகிய நீர்க்கடிகாரத்தைக் கண்டு அதிலுள்ள நீரின் அளவைக் கொண்டு நாளிகையைக் கணக்கிட்டுக் கூறினர் என்பதை
‘’எறிநீர் வையகம் வெலீஇய செல்போய் நின்
குறு நீர்க்கன்னல் இனைத்து என்று இசைப்ப’’- (முல்லைப்பாட்டு 57-58)
இதே கருத்தை மாங்குடி மருதநாரும் குறிப்பிடுகின்றார்.
நியூட்டனின் விதி
பதிலளிநீக்கு‘’வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்’’ (புறம் 152)
எய்த வில்லானது யானை , புலி, புள்ளிமான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளை வீழ்த்திய வில்லின் வேகம் குறைந்து ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தாக்கி விசை நிலைப் பெற்றதாகக் கூறுமிடத்து நீயூட்டனின் விதி உணர்த்தப்படுகிறது.
ஆற்றின் வழியாக மிதந்து செல்லும் தெப்பமானது நீரின் விசையை மட்டும் பெற்றுச் செல்கிறது. இந்தத் தெப்பத்தினை வேறு எந்த விசையும் தாக்குவதில்லை. அதைப்போல வாழ்க்கை ஒரேச் சீராகச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் கீழ்கண்ட புறப்பாடலும் நீயூட்டனின் இரண்டாவது விதிக்குப் பொருந்தியுள்ளது.
‘’பேர்யாற்று
நீர்வழிப்படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப்படுஉம் என்பதும் ‘’ (புறம் 192 .8-10)
விண்மீன்கள் பற்றிய அறிவு
பதிலளிநீக்குவிண்மீன்கள் பற்றி அக்கால மக்களுக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. வருணனைப் பாங்கில் விண்மீன்கள் தோன்றுதலை ‘’ வெள்ளி முளைத்தல் ‘’ என்றே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதை அறிகிறோம்.
‘’ வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய ‘’ (பொரு – 72)
கண்ணுக்கு அழகுபட விளங்குவதன் காரணமாக விண்மீன்கள் தோன்றுவதை பூத்தல் என்று குறிப்பதும் இலக்கிய வழக்காக உள்ளது.
‘’ மீன் பூத்தன்ன உருவ ‘’ ( புறம் 21;4)
‘’வான்மீன் பல பூப்ப’’ ( புறம் 129;7)
விண்மீன்கள் அன்றன்று புதிதாக முளைப்பனவல்ல கதிரவனால் மறைக்கப்பட்டே பகலில் தோன்றாதுள்ளன என்ற அறிவியல் உண்மை அக்காலத்து மக்களுக்கு விளங்காமல் இல்லை.
விண்மீன்கள் என்பனவும்; நிலவும் சூரியனும் போல வானில் சுடர் விட்டுப் பிரகாசிப்பனவே ஆயினும் விண்மீன்களின் பிரகாசம் வேறுபடுகிறது. விட்டு விட்டுப் பிரகாசிப்பன அவை. அதனை காற்றில் அலைந்து அலைந்து எரியும் தீப்பந்தங்களுக்கு இலக்கியங்கள் ஒப்பிட்டுள்ளது பொருத்தமானதாகும்.இது பற்றியே இலக்கியங்கள் விண்மீன்கள் ஒளிவிடுவதை- இமைத்தல் என்றும் குறிக்கின்றன. ‘’ வானமின்னின் வயின் வயின் இமைக்கும்’’ (குறு 150; 2)
மின்னலிலிருந்து வேறுபடுத்துவதை அதனை மீன் என்றனர். மீன் பூத்தன்ன தோன்றலர் ( திரு 169)
‘’சிறுமீன் புரையும் கற்பின் ‘’(பொரு 303)
‘’கைம்மீன் புகையிலும் ‘’(புற 117 ;1)
‘’வடமீன் புரையும் கற்பின் ‘’ (புற 122 ;8)
‘’மீன்றிகழ் விசும்பின் ‘’ (புற 25;1)
பழந்தமிழ் இலக்கியங்களில் மீன் என்பது வானத்து மீனையும் வையத்துக் கயங்களின் மீனையும் குறித்து வருகின்ற இருபொருள் காரணமாக அழகிய வருணனைகள் விளங்குகின்றன. மின்னுகின்ற காரணத்தால் மீன் என்று விண்மீன் குறிக்கப்பட்டதோடன்றி வெள்ளொளி அதன் ஒளி ஆதலின் ஒளிநிறத்தை வைத்து வெள்ளி என்றும் வழங்கப்பட்டது.
’’வெள்ளிஏர்தர ‘’(புறம் 398;1)
‘’வெள்ளி ஓடினும் ‘’ (புறம் 117;2)
‘’இலங்கு கதிர் வெள்ளி’’( புறம் 35;7)
வானத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் போன்ற கோள்களும் நட்சத்திரக் கூட்டங்களும் இவற்றுக்கெல்லாம் அப்பால் அழகிய மண்தளங்களும் உண்டு என்பது மாங்குடி மருதனாரின் அறிவியல் சிந்தனை
‘’ அங்கண்மால் விசும்பு புகையவளி போழ்ந்து (மதுரை 384)
பூமியிலிருந்து 200 மைல்களுக்கு மேலே காற்று மண்டலம் கிடையாது என்பதை புறப்பாடல் விளக்குகிறது ‘’வழியிடை வழங்கா வானஞ்சூடிய’’
சங்கப்புலவரின் பாடல்கலெல்லாம் அவர்களின் பட்டறிவே என்பதும் உள்ளதை உள்ளவாறே விளக்குவதும் அவர்களின் அறிவியல் சிந்தனையாகும். ஊர்வன. பறப்பன, நீர்வாழ்வன தாவர விலங்கு பற்றிய அறிவியல் சிந்தனைகளை உணர முடிகிறது.
உலகம் சுழல்கின்ற சுழற்சியை உலகம் தன் சுழற்சியினால் நல்ல இசையை உண்டாக்கும் தன்மை படைத்தது என்பதை ‘’மலையும் சோலையும் மாபுகழ் கானமும் தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப’’ என்கிறது மலைபடுகடாம் (170-171)
வானம் அளவிட முடியாததாகவும் காற்று நுழைந்து செல்லாத காற்றற்ற வெளியாகவும் விளங்குவதனை
‘’மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இரு சுடர்
கண்ணெனப் பெயரிய ‘’ என்ற புறப்பாடல் விளக்குகின்றது (365)
நெம்புகோல், தராசு பற்றிய அறிவை புறம் 131 ஆம் பாடல் விளக்குகிறது. ஆய் என்ற வள்ளலை முடமோசியார் வட திசையில் மேரு மலைக்கு சமமாக ஆய் வள்ளலின் பெருங்குடி தென் திசையில் விளங்குவதால் தான் உலகம் ஒரு பக்கம் சரிந்து நிற்கிறது என்பதனை தராசு கோலுடன் உவமையாக விளக்குகிறார்.
புறநானூறு
பதிலளிநீக்கு(1) கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் ஐம்பெரும் பூதங்களான (i) நிலனையும், (ii) வானையும், (iii) காற்றையும், (iv) நெருப்பையும், (v) நீரையும், உலகம் கொண்டுள்ளது என்று சங்ககாலப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் ஓர் அறிவியற் பாடலைப் பாடியுள்ளார்.
‘மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்…..’ (புறம். 2: 1-6)
இதில் மண் செறிந்த நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்த நீரும் உண்டாயின என்ற அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.
(2) சங்க காலப் புலவரான உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர் கீழ்க் காணும் புறநானூற்றுப் பாடலில் ‘செஞ்ஞாயிற்றின் வீதியும், அஞ்ஞாயிற்றின் இயக்கமும், இயக்கத்தால் சூழப்படும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானமும், என்றிவற்றைச் தாமே அவ்விடஞ் சென்று அளந்து அறிந்தவரைப் போல, அவை இப்படிப்பட்டவை என உரைக்கும் அறிவுடையோரும் உளர்’ என்று விண்ணியல் விஞ்ஞானம் விரிவாய்ப் பேசப்படும் இலக்கிய விந்தையைக் காண்கின்றோம்.
‘செஞ்ஞா யிற்றுச் செலவும்,
அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே….‘ – (புறம். 30: 1-7)
பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் – வானியல் நுட்பம் (ASTRONOMY)…
பதிலளிநீக்குபலரும் சொல்லத் தயங்கும் கேள்வி புலவர் எவ்வாறு இதை அறிந்தனர் என்ற கேள்வியோடு உள்ளே நுழைவோம்?
நட்சத்திரம் என்பது அப்போது விண்மீன் என அழைக்கப்பட்டது. அதாவது வானில் சுயமாக ஒளிவிடக்கூடிய நட்சத்திரத்தை நாண் மீன் என்றும். சூரியனிடமிருந்து ஒளிபெற்று ஒளிர்வன கோள்மீன்கள் என்றனர்.
சூரியனின் ஒளியைக்கொண்டு ஒளிர்வன திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பனவாகும். இராகு, கேது இராக் கோள்கள் அல்லது நிழற்கோள்கள் எனப்படும்.
மாக விசும்பின் வெண்டிங்கள் மூவைந்தாள் முறை முற்ற
– (புறநானூறு – 100)
எட்டாம் நாள் பிறை நிலவு எண்ணுட்டிங்கள்
– (புறநானூறு-118)
உவவுத்தலை வந்த டிபருநாள் அமையத்து
இருசுடர் தம்முன் நோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு
– (புறநானூறு-65)
அதாவது திங்களாகிய கோள்மீன், ஒவ்வொரு நாளும் நிற்கும் நிலையே அன்றைய நாண்மீன் ஆதிக்கம். அது ஞாயிற்றோடு சேர்வதும், பிரிந்து எதிர்ப்பக்கம் சேர்வதும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும்.
சந்திரன் வளரும்போது பதினைந்து நாட்கள் அடைவது போலவே தேய்கையிலும் பதினைந்து நாட்கள் அடைகிறது.
முழுமதி நாளில் சூரியனும் திங்களும் எதிரெதிராக நிற்கும். திங்கள் தோன்றும் போது கதிர் மறையும். அதாவது பூமியில் முழுநிலவு தோன்றும்.
அதிதிநாள் கழை யாவணமேரி புனர்தங் கரும்பிவை புனர்
பூசமாகும் என்பது பிங்கலந்தைச் சூத்திரமாகும்
– (புறநானூறு- 229)
விண்மீன்கள், கோள்களின் நிறம், வடிவம் பற்றித் சங்ககாலத் தமிழர்கள் நன்கு தெரிந்திருந்தனர். வெண்மை நிறமுடையதை வெள்ளியென்றும், செந்நிறமுடையதைச் செவ்வாய் என்றும் பெயர் வைத்து அழைத்துள்ளனர். அனுடத்தை முடப்பனை என்றும் புனர்பூசத்தைக் கயம்(குளம்) என்றும், கூடலூர்கிழார் குறித்துள்ளார்.
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல.
– (பட்டினபாலை-66,67)
சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் என்று இலக்கியத்தோடு விஞ்ஞானத்தையும் கூறியுள்ளார்.
இலங்கு கதிர்வெள்ளி தென்புலம் படரினும்.
– (புறநானூறு-35)
தென்திசை மருங்கில் வெள்ளியோடினும்.
– (புறநானூறு-117)
வெள்ளி தென்புலத்துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை.
– (புறநானூறு-388)
வெள்ளிக்கோள் அதாவது வெண்பொன் என்றும் இது தென்திசை சென்றால் தீய நிமித்தம் மழை பெய்யாது வற்கடம் உண்டாகும் என்று அக்கால வானியற் கணிப்பு கூறுகின்றது.
மழைக்கோளாகிய வெள்ளி, தென்திசை செல்லின் வான் பொய்க்கும் அதுபோலவே ஏரி, குளமீன், தாள்மீன் போன்றன தோன்றலும் புகைதலும் உலக வறுமைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளப்பட்டன. இது தென்திசை சென்றால் மழையில்லை என்றறிந்தது போல வடதிசை சென்றால் மழைவரும் என்றும் அறிந்திருந்தனர்.
எல்லாம் சரி ஆனால் இவர்கள் எப்படி இதெல்லாம் கணித்தார்கள் என்ற கேள்வி வருகிறது அல்லவா?
சித்தர்கள் விண்ணை ஆராய தன் சூட்சம தேகத்தையும், இரசமணியையும் மற்றும் ரசகுளிகையையும் பயன்படுத்தினர் என்பது நாம் அறிந்த ஒன்றே அவர்கள் பல கோள்களை இவ்வாறு கண்டனர்.
ஆனால் புலவர்கள் எப்படி கண்டிருப்பர் என்று கேட்டால் அவர்களுக்கு மூலிகை அறிவை கொண்டு இதை கண்டனர் என பதில் வருகிறது.
நந்தியாவட்டை பூவை ஒரு நாள் நீரில் ஊறவைத்து அந்த நீரை எடுத்து கண்களை நன்றாக கழுவி வில்வ இலையை அந்த நீரோடு சேர்த்து அரைத்து கண்கள் மேல் தடவி இரவு முழுவதும் குளிர விட்டு காலையில் எழுந்து கழுவி பின் கல்லில் வளரக்கூடிய கல்தாமரை என்ற செடியை கவனித்து அதன் மேல் உள்ளங்காலை வைத்து வானத்தை பார்க்க நட்சத்திரம் தெரியும்.
மேலும் இதோடு பொன்னாங்கண்ணி இலையை வாயில் இட்டு குதப்பி கடவாயில் வைத்து அந்தந்த கிரக ஓரையில் திசையறிந்து காண பொன் ஒளி வீசும் சூரியனும் நவகோள்களும் கண்ணுக்கு புலப்படும்.
இவ்வாறு தான் புலவர் பெருமக்கள் வானியலை கண்டனர் என சில மூலிகை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சிலர் இதில் சில மூலிகைகள் தேவையில்லை கல்தாமரை மட்டுமே போதும் என்கிறார்கள்.
ஆனால் இதன் உண்மை தன்மை பழந்தமிழர் அறிவர்.
மேலுள்ளவை அனைத்தும் தகவல் பகிர்வு இதன் உண்மை தன்மை ஆய்வு செய்து அறிய வேண்டியவை…
ரிக் வேதம் , டி.ஆர். ரால்ப் TH கிரிஃபித், [1896], sacred-texts.com இல்
பதிலளிநீக்குகீதம் CII. இந்திரன்.
The Sun and Moon in change alternate run their course, that we, O Indra, may behold and may have faith.
2சூரியனும் சந்திரனும் மாறி மாறி தங்கள் பாதையில் ஓடுகிறார்கள், ஓ இந்திரா, நாம் பார்த்து நம்பிக்கை கொள்வோம்.
https://www.sacred-texts.com/hin/rigveda/rv01102.htm
தொல்
பதிலளிநீக்குமுறை இயற்கையின் மதிய…
… … … … … … … … … … …மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
(பரிபாடல்
– பாடல் 2 )
‘திருமாலே..
பல ஊழிகளுக்கு முன்னால், ஒரு பண்டைக் காலத்தில், எல்லாம் அழிந்து போயின.
சூரியனும், சந்திரர்களும், எல்லா நட்சத்திரங்களும் மறைந்து போயின. இந்த உலகமும்,
பிரபஞ்சமும் பாழ்பட்டுப் போய், ஒன்றும் இல்லாமல் போயின. இப்படிப் பல ஊழிகள்
கடந்தன…’
கொசுறாக
இன்னொன்றையும் பார்த்து விடலாம். இதைப் பூஜைகள் தொடங்கும் முன் வரும் சங்கல்ப
மந்திரத்தில் எல்லோரும் கேட்டிருப்போம் – ‘மமோபார்த்த சமஸ்த..’
முப்பது
கல்பங்கள்; ஒவ்வவொரு கல்பத்திலும் பதினாலு மன்வந்தரங்கள், மன்வந்தரங்கள் ஒன்றுக்கு
எழுபத்தியோரு மகா யுகங்கள், ஒரு மகா யுகத்துக்கு, நாலு யுகங்கள்..
‘இப்போது
நடப்பது – இரண்டாவது கல்பம் – ஸ்வேத வராக கல்பம்; ஏழாவது மன்வந்தரம் – ‘வைவசுவத’
மன்வந்தரம்; கலியுகம்.’
சுழற்சிப்
பிரபஞ்சவியலின் (CCC) தேவை என்ன? ரோஜேர் பென்ரோசுக்கு, பெரு வெடிப்பின் ஆரம்ப
நிலையின் விளக்கத்தில் திருப்தி ஏற்படவில்லை. ‘அது, அப்படித்தான் இருந்தது.
வெடித்தது. அதற்கு முன்னால் என்ன என்று எல்லாம் கேட்கக் கூடாது. அதற்கு முன் காலமே
இல்லை’ என்ற முரட்டு வாதங்களில் சமாதானமடையாமல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
எளிய
முறையில் இதைப் புரிந்து கொள்ள முயன்றால், பிரபஞ்சம் ஒரு சுழற்சி என்கிறது இந்தக்
கோட்பாடு. இந்தப் பிரபஞ்சம் சுருங்கிக் கரந்து, ஆதி முட்டைக்குள் அடங்கி, எல்லா
சக்தியையும் தன்னுள் உண்டு, வெடித்துச் சிதறி – மீண்டும் முதலிருந்து.
கிட்டத்தட்ட,
இந்தப் பாசுரத்தில் சடகோபர் சொல்வது போல. சிவன், பிரம்மா, இந்திரன் முதல் எல்லா
தேவர்களையும், எல்லா உலகங்களையும், பஞ்ச பூதங்களையும், ஒரு பொருளையும் விடாது
எல்லாவற்றையும், தன்னுள்ளே வாங்கி, மறைத்து, ஆலிலை மேல் உறங்குகிறான் பெருமாள்.
நளிர்
மதி சடையனும் நான்முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்பட கரந்து ஓர் ஆலிலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே
(நம்மாழ்வார்)
இந்தக்
கோட்பாட்டை, ரோஜேர் 2010ல் முதலில் முன்மொழிந்தார். புறச் சான்றுகள் இல்லாததால்,
அறிவியலார் பலரும் இதைக் கழுவி ஊற்றினார்கள்.
சென்ற
வருடம் (2018), அவருக்கு இதை நிரூபிக்க ஒரு சான்று கிடைத்தது. ‘கடந்த பெரு
வெடிப்புக்கு முன் இருந்த பழைய பிரபஞ்சத்தின் தடங்களை கண்டுபிடித்து விட்டோம்
என்று நினைக்கிறோம்’ என்று ஒரு கட்டுரை எழுதினார்.
இதை
Microwave கதிர்களை வைத்து, Wilkinson Microwave Anisotropy Probe ( WMAP) என்னும்
ஒரு உத்தியில், பரிசோதனை செய்து, படம் வரைந்து, சமன்பாடுகளைச் சரி
செய்து….இதற்கு மேல் புரியும்படி, எளிய தமிழில் எழுத வேண்டுமானால், வாத்தியார்
சுஜாதாதான் வைகுண்டத்தில் இருந்து தொடர வேண்டும்.
இப்போது
அந்தப் பரிபாடல் பாடலை மீண்டும் முழுவதுமாகப், பார்த்து விடலாம்.
தொல்
முறை இயற்கையின் மதிய………..
……………………………………………………. மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
கேழல்
திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ நிற் பேணுதும், தொழுதும்,
கரு
வளர் – ஆதி முட்டை; இசையின் – சத்தத்துடன்; உரு அறிவாரா ஒன்று – முதல் துகள்கள் ;
ஊழ் ஊழ் – வாயுக்கள்; தண் பெயல் – குளிர்ந்த மழை; வெள்ளம் மூழ்கி ஆர் தருபு –
வெள்ளத்தில் மூழ்கி யுகங்கள் கரைந்து; மீண்டும் பீடு உயர்பு ஈண்டி – அவை மீண்டும்
பெருமையுடன் எழுந்தன; இரு நிலம் – பூமி; கேழல் திகழ் வரக் கோலம் – வராகம்; ஆழி
முதல்வன் – திருமால்.
(பரி
பாடல்)
எல்லாமும்
மறைந்து, பின் எல்லாமும் ஒரு ஆதி முட்டையாகி, அதில் இருந்து பெரு வெளி, நெருப்பு,
நீர், காற்று, அண்டங்கள் எல்லாம் தோன்றி, அவை நீரிலும், பனியிலும் மூழ்கி இருக்க,
வராக அவதாரம் எடுத்து, மீண்டும் அவை பீடுடன் விளங்கச் செய்தவன் திருமால் என்கிறது
இந்தப் பாடல்.
https://valamonline.in/2020/03/bigbang-and-paripaadal.html
இப் பாடலின் முதல் நான்கு அடிகளில் உலகத்தின்
பதிலளிநீக்குஒடுக்க முறை மிக அழகாகக் கூறப்படுகின்றது. இப் பகுதியில்
அழிந்துபோன சொற்றொடர் "ஞாயிறும் கெடுதலால் அழகிழந்து" என்னும்
பொருளுடையது என்பது பரிமேலழகர் உரையாலே உணரப்படும்.
தொல்முறை - தொன்றுதொட்டு நிகழும் முறைமை. உலகம்
ஒடுங்குங்கால் நிலம் நீரினுள் ஒடுங்க, நீர் தீயினுள் ஒடுங்க தீ காற்றினுள்
ஒடுங்க காற்று வானத்தில் ஒடுங்க, வானம் பிரகிருதியில் ஒடுங்க, இம்
முறையே ஊழிகள் பலவும் கழிய என்பார். 'விசும்பில் ஊழி ஊழ் ஊழ்
செல்ல' என்றார். ஊழ் - முறை.
உலகம் ஒடுங்குங்கால் திங்கள் மண்டிலமும் ஞாயிற்றுமண்டிலமும்
ஒளியிழந்து துகளாகி வானவெளியிலே சிதறிப்போக நிலமுதலிய
உலகங்கள் பின்னர்ச் சத்தி கெட்டு நொறுங்கித் துகள்பட்டொழியும் என
வரும் இக்கருத்து இக்காலத்துப் பூத நூலோரும்
ஏற்றுக்கொள்ளத்தக்கதாதல் உணர்க.
பசும் பொன்னுலகம் என்றது, துறக்கவுலகத்தினை.
https://www.tamilvu.org/slet/l1251/l1251pag.jsp?pgno=17
பாடல் எண் : 03
பதிலளிநீக்குமுன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.
இப்பாடலில் மூவரில் மூத்தவன் என்று கூறவில்லை, மூவருக்கும் மூத்தவன் என்கிறது. அவனுக்கு ஒப்பானவன் இல்லை என்பதன் மூலம்
கடவுள் என்பது நம்பிக்கையாக இருக்கும் போது, அதனை ஏன் அறிவியலுடன் முடிச்சி போடுகிறார்கள்?
பதிலளிநீக்குஉங்கள் தந்தை யார் என்று உங்கள் தாய் கூறும்பொழுது நம்பிக்கை கொண்டீர்கள் அல்லவா?
இந்த நம்பிக்கையை எப்படி புரிந்துகொண்டு உள்ளீர்கள்?
நம்பிக்கை என்றால் பொய் என்றோ, மூட நம்பிக்கை என்றோ, பொருளற்றது என்றோ கருதகூடாது. பிழை.
அறிவியல் என்பதும் நம்பிக்கைதான்.
அறிவியலாளர்கள் என்று நம்பப்படுபவர்கள்,
அறிஞர்கள் என்று நம்பப்படுபவர்கள் மத்தியில்,
சரியான அணுகுமுறை என்று நம்பப்படும் முறையில்,
நிரூபித்ததாக கூறும் சில கூற்றை
நீங்கள் நம்புவதுதான் அறிவியல் என்பது.
அறிவியலை என்னால் சரி காணமுடியும் என்று நீங்கள் கூறினால், நீங்கள் உங்கள் துறையில் உச்சத்தில் உள்ள அறிவாளியாக திகழ்ந்தால் வாய்ப்புண்டு. ஆனால் மற்ற துறைகளை பொறுத்தவரை நீங்கள் கொள்வது நம்பிக்கை. இப்பொழுது இதை பொய் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது உண்மை என்று எடுத்துக் கொள்வதா? உண்மை என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்! ஏன்? அந்த துறைகளில் உள்ள அறிவில் மூத்தவர்கள் அதை உண்மை என்று கூறு கின்றனர். நமக்கு அந்த துறையில் அறிவு இல்லை என்பதால், அதில் கற்று தெரிந்தவரை நம்புகிறோம். நம்பிக்கை! ஆனால் அதை நாம் நம்புவதற்கு காரணமும் அதை ஒரு அளவேனும் நாம் வாசித்ததே காரணம். சமயம், கடவுள் போன்ற துறைகளில் மட்டும் கற்று தெரிந்தவர்களை விட்டுவிட்டு அவர்களின் கூற்றுக்கு காத்து கொடுக்காமல் நாமே தீர்ப்பெழுதி விடுகிறோம்?
எனவே சமய நூல்கள் கூறும் "கடவுளை" வெறும் நம்பிக்கை என்று கூறி முடிப்பது முறையல்ல. அதற்கும் காது கொடுத்தால்தான் அதன் உண்மைநிலை விளங்கும். உலக விடயத்தில் எப்படி saubject matter expert-இடம் கற்க விரும்புகிறீர்களோ அவ்வாறே இந்த பாடத்திலும் உண்மையான அறிஞரை தேடி கண்டறிந்து கற்க வேண்டும்.
GOD IS NOT A JOKE OR AN UNWANTED SUBJECT! LEARN IT AND REALISE THE TRUTH.
https://ta.quora.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/answers/392842113
உங்கள் தந்தை யார் என்று உங்கள் தாய் கூறும்பொழுது நம்பிக்கை கொண்டீர்கள் அல்லவா?
பதிலளிநீக்குஇந்த நம்பிக்கையை எப்படி புரிந்துகொண்டு உள்ளீர்கள்?
நம்பிக்கை என்றால் பொய் என்றோ, மூட நம்பிக்கை என்றோ, பொருளற்றது என்றோ கருதகூடாது. பிழை.
அறிவியல் என்பதும் நம்பிக்கைதான்.
அறிவியலாளர்கள் என்று நம்பப்படுபவர்கள்,
அறிஞர்கள் என்று நம்பப்படுபவர்கள் மத்தியில்,
சரியான அணுகுமுறை என்று நம்பப்படும் முறையில்,
நிரூபித்ததாக கூறும் சில கூற்றை
நீங்கள் நம்புவதுதான் அறிவியல் என்பது.
அறிவியலை என்னால் சரி காணமுடியும் என்று நீங்கள் கூறினால், நீங்கள் உங்கள் துறையில் உச்சத்தில் உள்ள அறிவாளியாக திகழ்ந்தால் வாய்ப்புண்டு. ஆனால் மற்ற துறைகளை பொறுத்தவரை நீங்கள் கொள்வது நம்பிக்கை. இப்பொழுது இதை பொய் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது உண்மை என்று எடுத்துக் கொள்வதா? உண்மை என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்! ஏன்? அந்த துறைகளில் உள்ள அறிவில் மூத்தவர்கள் அதை உண்மை என்று கூறு கின்றனர். நமக்கு அந்த துறையில் அறிவு இல்லை என்பதால், அதில் கற்று தெரிந்தவரை நம்புகிறோம். நம்பிக்கை! ஆனால் அதை நாம் நம்புவதற்கு காரணமும் அதை ஒரு அளவேனும் நாம் வாசித்ததே காரணம். சமயம், கடவுள் போன்ற துறைகளில் மட்டும் கற்று தெரிந்தவர்களை விட்டுவிட்டு அவர்களின் கூற்றுக்கு காது கொடுக்காமல் நாமே தீர்ப்பெழுதி விடுகிறோம்?
எனவே சமய நூல்கள் கூறும் "கடவுளை" வெறும் நம்பிக்கை என்று கூறி முடிப்பது முறையல்ல. அதற்கும் காது கொடுத்தால்தான் அதன் உண்மைநிலை விளங்கும். உலக விடயத்தில் எப்படி saubject matter expert-இடம் கற்க விரும்புகிறீர்களோ அவ்வாறே இந்த பாடத்திலும் உண்மையான அறிஞரை தேடி கண்டறிந்து கற்க வேண்டும்.
GOD IS NOT A JOKE OR AN UNWANTED SUBJECT! LEARN IT AND REALISE THE TRUTH.
ஒரு மனிதனின் செயல்லில் உள்ள நமையையும் தீமையையும் அளவிட எந்த அளவைமுறையும் நாத்திகத்தில் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் அவரவர் எண்ணம் போன போக்கில். ஆத்தீகதில் உள்ள பிழையை குறிப்பிடும் நாத்தீகர்களுக்கு அவரகள் குறிப்பிட ஒரு மூலமும் ஆதீகர்களின் செயலை அளவிட ஒரு அளவை முறையும் உண்டு.
பதிலளிநீக்குhttps://youtu.be/KGLDNH8FCi8?si=j_v26IbEVEPoctia
பதிலளிநீக்குBg. 2.20
பதிலளிநீக்குந ஜாயதே ம்ரியதே வா கடசி-
ந்நாயம் ভூத்வா ভவிதா வா ந ভூயঃ ।
அஜோ நித்ய: ஷாஷ்வதோத்யம் புராணம்
ந ஹந்யதே ஹந்யமானே ஷரீரே ॥ 20 ॥
ந ஜாயதே ம்ரியதே வா கடசின்
நயம் பூத்வா பவிதா வா ந பூயঃ
அஜோ நித்யঃ ஶாஸ்வதோ யாம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே
Bg. 2.20
न जायते म्रियते वा कदाचि-
न्नायं भूत्वा भविता वा न भूयः ।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो
न हन्यते हन्यमाने शरीरे ॥ २० ॥
na jāyate mriyate vā kadācin
nāyaṁ bhūtvā bhavitā vā na bhūyaḥ
ajo nityaḥ śāśvato ’yaṁ purāṇo
na hanyate hanyamāne śarīre
“ஆன்மாவுக்கு எந்தக் காலத்திலும் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. அவர் உருவாகவில்லை, உருவாகவில்லை, உருவாகவும் மாட்டார். அவர் பிறக்காதவர், நித்தியமானவர், எப்போதும் இருப்பவர் மற்றும் பழமையானவர். உடல் கொல்லப்படும்போது அவர் கொல்லப்படுவதில்லை.
https://www-quora-com.translate.goog/Did-Krishna-really-mention-about-hell-and-heaven-and-that-they-are-separate-Why-does-the-Bhagavad-Gita-seem-a-little-different-from-the-Upanishads-or-is-it-because-of-the-book-version?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc
6:35. (நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
பதிலளிநீக்கு6:71. (நபியே!) நீர் கூறும்: “நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் “எங்கள் இடம் வந்து விடு” என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” இன்னும் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்.”
பதிலளிநீக்கு10:99. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
பதிலளிநீக்கு80:42. அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.
பதிலளிநீக்கு7:40. நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்.
பதிலளிநீக்கு2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
பதிலளிநீக்கு