உலகம் எத்தனை நாளில் படைக்கப் பட்டது?

தமிழர் சமயம்

ஆறு விரிந்தனன் 
எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம், கடவுள் வாழ்த்து
 
பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து ஏழாவது வானம் சென்றான். 

உம்பர்: வானம்  

இஸ்லாம் 

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் (ஏழு வனத்திற்கு மேலுள்ள) அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - (திருக்குர்ஆன் 7:54)

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை (ஏழாவது வானத்தில் உள்ள) அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (குர்ஆன் 10:3)

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிகளிடத்தில் உங்களை உங்கள் குடும்பத்தினர் நபியவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள், என்னை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருந்து நபியவர்களுக்கு திருமணம் செய்து வைத்தான் என்று ஆனந்தத்துடன் கூறக்கூடியவராக இருந்தார்கள் என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்: புஹாரி 7420).

கிறிஸ்தவம் 

(ஆறுநாட்களில்) பூமியும் வானமும் அவற்றிலுள்ள யாவும் படைக்கப்பட்டு முடிந்தது. தேவன் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். ஆகையால் ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்தார். - (ஆதியாகமம் 2:1-2
யூதம் 

 தேவன் தாம் உண்டாக்கியதையெல்லாம் பார்த்தார், இதோ, அது மிகவும் நன்றாக இருந்தது, மாலையும் விடியும் ஆனது, ஆறாம் நாள். இப்போது வானமும் பூமியும் முழுமையடைந்தன; தேவன் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் செய்து முடித்தார்; கடவுள் ஏழாம் நாளை ஆசீர்வதித்தார், அவர் அதை பரிசுத்தப்படுத்தினார், ஏனென்றால் அவர் கடவுள் உருவாக்கிய அனைத்து வேலைகளிலிருந்தும் விலகிவிட்டார். (ஆதியாகமம் 1:31 & 2:1-2)


8 கருத்துகள்:

  1. நாசாதிய சூக்தம் ( இன்சிபிட் நாசத்திற்குப் பிறகு அல்லது "இல்லாதது") படைப்பின் பாடல் என்றும் அழைக்கப்படுகிறது , இது ரிக்வேதத்தின் 10வது மண்டலத்தின் 129வது பாடலாகும் (10:129). இது அண்டவியல் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியது .

    1. அப்போது இல்லாதது கூட இல்லை, இருப்பு இல்லை,
    அப்போது காற்று இல்லை, அதைத் தாண்டிய வெளியும் இல்லை.
    அதை மறைத்தது எது? அது எங்கிருந்தது? யாருடைய பராமரிப்பில்?
    அப்போது அண்ட திரவம் இருந்ததா, ஆழம் அறிய முடியாததா?

    2. அப்பொழுது மரணமோ அழியாமையோ
    இல்லை, இரவும் பகலும் என்ற ஜோதி அப்போது இல்லை.
    ஒருவர் காற்றின்றி சுவாசித்தார்.
    அப்போது அந்த ஒருவர் இருந்தார், மற்றவர் இல்லை.

    3. முதலில் இருளில் போர்த்திய இருள் மட்டுமே இருந்தது.
    இவை அனைத்தும் ஒளியில்லாத அண்ட நீர் மட்டுமே.
    எதுவுமில்லாமல் இருந்த அந்த ஒன்று
    , கடைசியில் ஞான சக்தியால் பிறந்தது.

    4. ஆரம்பத்தில் ஆசை அதன் மீது இறங்கியது -
    அதுவே மனதில் இருந்து பிறந்த முதன்மையான விதை.
    ஞானத்தால் தங்கள் இதயங்களைத் தேடிய முனிவர்கள், உள்ளதை,
    இல்லாதவற்றுக்கு உறவினர் என்பதை அறிவார்கள்.

    5. அவர்கள் தங்கள் கயிற்றை வெற்றிடத்தின் குறுக்கே நீட்டி,
    மேலே என்ன, கீழே என்ன என்பதை அறிவார்கள்.
    செமினல் சக்திகள் வளமான வலிமைமிக்க சக்திகளை உருவாக்கியது.
    கீழே வலிமை இருந்தது, அதற்கு மேல் உந்துதல் இருந்தது. 6. ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, யாருக்குத் தெரியும், அது எங்கிருந்து வந்தது, படைப்பு எப்படி நடந்தது

    என்று யாரால் சொல்ல முடியும் ? கடவுள்கள் படைப்பை விட பிற்பட்டவர்கள், அது எங்கிருந்து தோன்றியது என்று யாருக்குத் தெரியும்? 7. எல்லா படைப்புகளும் எங்கிருந்து தோற்றம் பெற்றன, படைப்பாளி, அதை வடிவமைத்தாலும் அல்லது செய்யாவிட்டாலும், படைப்பாளி, உயர்ந்த சொர்க்கத்திலிருந்து அனைத்தையும் ஆய்வு செய்பவர்,

    அவருக்குத் தெரியும் - அல்லது அவருக்குத் தெரியாது.

    https://en.wikipedia.org/wiki/Nasadiya_Sukta

    பதிலளிநீக்கு
  2. ஆதியாகமம் 1
    Tamil Bible: Easy-to-Read Version
    உலகத்தின் தொடக்கம்
    1 துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். 2 பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

    முதல் நாள்-வெளிச்சம்
    3 அப்பொழுது தேவன், “வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. 4 தேவன் வெளிச்சத்தைப் பார்த்தார். அது நல்லதென்று அறிந்துகொண்டார். பிறகு தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். 5 தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார்.

    மாலையும் காலையும் ஏற்பட்டது. இதுவே முதல் நாளாயிற்று.

    இரண்டாம் நாள்-வானம்
    6 பிறகு தேவன், “இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது!” என்றார். 7 தேவன் காற்றின் விரிவை உருவாக்கி, தண்ணீரைத் தனியாகப் பிரித்தார். தண்ணீரில் ஒரு பகுதி காற்றிற்கு மேலேயும், மறுபகுதி காற்றிற்குக் கீழேயும் ஆனது. 8 தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது இரண்டாம் நாள் ஆகும்.

    மூன்றாம் நாள்-வறண்ட நிலமும் செடிகொடிகளும்
    9 பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று. 10 தேவன் அந்த காய்ந்த நிலத்துக்கு “பூமி” என்று பெயரிட்டார். ஒன்று சேர்ந்த தண்ணீருக்கு தேவன் “கடல்” என்று பெயரிட்டார். தேவன் இது நல்லது என்று கண்டார்.

    11 பிறகு தேவன், “பூமியில் புல்லும் விதைகளைத் தரும் செடிகளும் கனிதருகிற மரங்களும் உருவாகட்டும். கனிமரங்கள் விதைகளை உடைய கனிகளை உருவாக்கட்டும். ஒவ்வொரு செடிகொடிகளும் தங்கள் இனத்தை உண்டாக்கக்கடவது. இவை பூமியிலே வளரட்டும்” என்று சொன்னார். அவ்வாறே ஆயிற்று. 12 பூமி புல்லையும் தானியங்களைக் கொடுக்கும் செடிகளையும் முளைப்பித்தது. பூமி விதைகளைக்கொண்ட பழங்களைக் கொடுக்கும் மரங்களை முளைப்பித்தது. ஒவ்வொரு செடியும் தனக்கேயுரிய இனத்தை உருவாக்கியது. தேவன் இது நல்லதென்று கண்டார்.

    13 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது மூன்றாம் நாளாயிற்று.

    நான்காவது நாள்-சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்
    14 பிறகு தேவன், “வானத்தில் வெளிச்சம் உண்டாகட்டும், இந்த வெளிச்சமானது பகலையும் இரவையும் பிரிக்கட்டும். இந்த வெளிச்சங்கள் காலங்களையும் நாட்களையும் ஆண்டுகளையும் குறிப்பதாக இருக்கட்டும். 15 இந்த வெளிச்சங்கள் வானத்திலிருந்து பூமிக்கு ஒளி தரட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

    16 தேவன் இரண்டு மகத்தான ஒளிச்சுடர்களை உண்டுபண்ணினார். தேவன் பெரிய ஒளிச்சுடரைப் பகலை ஆண்டுகொள்ளவும், சிறிய ஒளிச்சுடரை இரவை ஆண்டுகொள்ளவும் செய்தார். நட்சத்திரங்களையும் தேவன் உருவாக்கினார். 17 தேவன் இந்த ஒளிச்சுடர்களைப் பூமிக்கு வெளிச்சம் தரும்படி வானத்தில் வைத்தார். 18 இரவையும் பகலையும் ஆள்வதற்கு இந்த ஒளிச்சுடர்களைத் தேவன் வானத்தில் ஏற்படுத்தினார். இவை வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வேறுபாட்டை உண்டாக்கிற்று. இது நல்லது என்று தேவன் கண்டுகொண்டார்.

    பதிலளிநீக்கு

  3. 19 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது நான்காம் நாள்.

    ஐந்தாம் நாள்-மீன்களும் பறவைகளும்
    20 பிறகு தேவன், “தண்ணீரானது திரளான உயிரினங்களை தோற்றுவிப்பதாக, பூமியிலும் வானத்திலும் பறப்பதற்காக பறவைகள் உருவாகட்டும்” என்றார். 21 பிறகு தேவன் கடலில் வாழும் பெரிய உயிரினங்களை உருவாக்கினார். கடலுக்குள் அலைந்து திரிகிற ஏராளமான உயிரினங்களைப் படைத்தார். பல்வேறு வகையான கடல் வாழ் உயிர்களையும் படைத்தார். வானத்தில் பறந்து திரிகிறதற்கு பல்வேறுவகைப் பறவைகளையும் படைத்தார். தேவன் இது நல்லது என்று கண்டார்.

    22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, இனப் பெருக்கம் செய்து, எண்ணிக்கையில் விருத்தியடைந்து கடல் தண்ணீரை நிரப்புங்கள், மேலும் பறவைகள் பூமியில் பெருகட்டும் என்று சொன்னார்.

    23 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஐந்தாம் நாள் ஆயிற்று.

    ஆறாவது நாள்-மிருகங்களும் மனிதர்களும்
    24 பிறகு தேவன், “பூமியானது, கால் நடைகள், ஊர்வன, காட்டு மிருகங்கள் முதலியனவற்றை அதனதன் இனத்திற்கு ஏற்ப தோற்றுவிப்பதாக” என்றார். அவை அப்படியே உண்டானது.

    25 இவ்வாறு, தேவன் எல்லாவகையான மிருகங்களையும் படைத்தார். அவர் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும், பூமியில் ஊர்ந்து செல்லும் விதவிதமான உயிரினங்களையும் படைத்தார். இவை நல்லதென்று தேவன் கண்டுகொண்டார்.

    26 அதன் பிறகு தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னார்.

    27 எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனுகுலத்தைப் படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். 28 தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களிடம், “பிள்ளைகளைப் பெற்று விருத்தியடையுங்கள், பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளுங்கள். கடலில் உள்ள மீன்களையும் வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளுங்கள். பூமியில் அலைந்து திரிகின்ற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்றார்.

    29 மேலும் தேவன், “நான் உங்களுக்குத் தானியங்களைத் தரும் அனைத்து வகைப் பயிரினங்களையும், எல்லாவகையான பழ மரங்களையும் தருகிறேன். அந்த மரங்கள் விதைகளோடு கூடிய கனிகளைத் தரும். அந்த விதைகளும் கனிகளும் உங்களுக்கு உணவாகும். 30 நான் புல் பூண்டுகளையெல்லாம் மிருகங்களுக்காகக் கொடுத்துள்ளேன். புல் பூண்டுகள் அவற்றுக்கு உணவாக இருக்கும். பூமியில் உள்ள அனைத்து மிருகங்களும் வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தரையில் ஊர்கின்ற அனைத்து சிறு உயிரினங்களும் அவற்றை உணவாகக்கொள்ளும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

    31 தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார்.

    மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று.

    ஆதியாகமம் 2
    Tamil Bible: Easy-to-Read Version
    ஏழாவது நாள்-ஓய்வு
    2 பூமியும் வானமும் அவற்றிலுள்ள யாவும் படைக்கப்பட்டு முடிந்தது. 2 தேவன் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். ஆகையால் ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்தார். 3 தேவன் ஏழாவது நாளை ஆசீர்வதித்து அதனைப் பரிசுத்தமாக்கினார். அவர் அன்றைக்குத் தமது படைப்பு வேலைகளையெல்லாம் நிறைவு செய்துவிட்டு ஓய்வெடுத்ததால் அந்த நாள் சிறப்புக்குரியதாயிற்று.

    மனித குலத்தின் தொடக்கம்
    4 இதுதான் பூமி மற்றும் வானம் தோன்றின வரலாறாகும். இதுதான் தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, நடந்தவற்றைப்பற்றிக் கூறும் விபரங்களாகும். 5 பூமியில் எந்தத் தாவரமும் இல்லாமல் இருந்தது. வயலிலும் அதுவரை எதுவும் வளரவில்லை. எந்தப் பகுதியிலும் எந்தச் செடிகொடிகளும் இல்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் இன்னும் மண்ணில் மழை பெய்யச் செய்யவில்லை. பூமியில் விவசாயம் செய்ய மனுக்குலம் எதுவும் இல்லை.

    6 பூமியிலிருந்து தண்ணீர் [a] எழும்பி நிலத்தை நனைத்தது. 7 பிறகு தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான். 8 பிறகு தேவனாகிய கர்த்தர் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டத்தை அமைத்து அதற்கு ஏதேன் என்று பெயரிட்டார். தேவனாகிய கர்த்தர் தாம் உருவாக்கிய மனிதனை அத்தோட்டத்தில் வைத்தார். 9 தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக் கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்டத்தில் வளரும்படிச் செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+1&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  4. குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)
    உலக படைப்பு

    ஆறு நாட்களில் படைக்கப்பட்ட உலகம்: குர்-ஆன் 7:54, 10:3, 11:7, 25:59, 32:4
    பாபிலோன் உருவாக்கப்படுதல் பற்றிய புராணக்கதை: 21:30
    உலக அமைப்பு: 13:3-4, 15:19, 16:14-16, 27:60, 55:10-12, 71:19-20, 77:27, 78:6-8, 79:30-33
    வானம் படைக்கப்படுதல்: 2:29, 23:17, 23:86, 41:11-12, 65:12
    வானத்தில் உள்ள ஒளிச்சுடர்களும் அவைகளின் பயன்பாடுகளும்: 6:96-97, 10:5, 71:16
    பகலும் இரவும்: 6:96, 17:12, 25:47, 28:73
    மாதங்கள்: 9:36
    பூமியை மனிதனுக்கு கட்டுப்படவைத்த அல்லாஹ்: 22:65, 31:20, 45:12
    முடிவடைந்த படைப்பு: 11:7, 50:15,38, 46:33
    தெய்வீக சிம்மாசனம்: 10:3, 13:2, 20:5-6, 32:4-5, 70:3-4

    https://www.answering-islam.org/tamil/quran/biblical_stories/creation.html

    குர்ஆனில் மறுபதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிடுவதன் மூலம், உலகம் எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என்று நாங்க சொல்றதேயே நீங்க ஏன் சொல்லறீங்கள்.. புதுசா ஏதாவது சொல்லுங்க என்று சொல்கிறார்களோ என்னவோ..?

    நெருப்பு சுடும்னு நாங்க சொல்றதேயே நீங்க ஏன் சொல்கிறீர்கள்? வீர வேற புதுசா, இன்ட்ரெஸ்டிங்கா சொல்லுங்க.. காப்பி அடிக்காதீங்க ப்ரோ ன்னு சொல்லுவாங்க போல. இரென்றுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.

    ஒருவரின் கருத்திலிருந்து மாறுபட்டால் தவறென்று சொல்லலாம். ஒண்ணா இருந்தாலும் இப்படி சொன்னால் என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களை பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசி படைப்பாக ஆதமைப் படைத்தான்.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

    நூல்: முஸ்லிம் (4997)

    உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.

    திருக்குர்ஆன் 7:54

    உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.

    திருக்குர்ஆன் 10:3

    “உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.

    திருக்குர்ஆன் 11:7

    அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.

    திருக்குர்ஆன் 25:59

    வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான்.

    திருக்குர்ஆன் 32:4

    வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

    திருக்குர்ஆன் 50:38

    வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

    திருக்குர்ஆன் 57:4

    படைப்பின் துவக்கம் சனிக்கிழமையாகவும் படைப்பின் முடிவு வெள்ளிக்கிழமையாகவும் இருந்தால் ஏழு நாட்களிலும் படைத்தல் நிகழ்ந்துள்ளது என்று ஆகிறது. இது குர்ஆன் கூறுவதற்கு முரணாக அமைந்துள்ளது. இது அல்லாத நுணுக்கமான குறைபாடும் இதில் உள்ளதாக ஹதீஸ் கலை மேதைகள் கூறியுள்ளனர்

    ஆதாரம்: இப்னு தைமியா அவர்களின் பதாவா எனும் நூல்.

    பதிலளிநீக்கு
  6. HYMN CXC. Creation.
    1. FROM Fervour kindled to its height Eternal Law and Truth were born:
    Thence was the Night produced, and thence the billowy flood of sea arose.
    2 From that same billowy flood of sea the Year was afterwards produced,
    Ordainer of the days nights, Lord over all who close the eye.
    3 Dhātar, the great Creator, then formed in due order Sun and Moon.
    He formed in order Heaven and Earth, the regions of the air, and light.

    https://www.sacred-texts.com/hin/rigveda/rv10190.htm

    பதிலளிநீக்கு
  7. 13:3. மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  8. >**ஏழாவது நாள்**
    >2 **பூமியும் வானமும் அவற்றிலுள்ள யாவும் படைக்கப்பட்டு (ஆறுநாட்களில்) முடிந்தது.** 2 தேவன் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். 3 தேவன் ஏழாவது நாளை ஆசீர்வதித்து அதனைப் பரிசுத்தமாக்கினார். ஏனென்றால் அவர் கடவுள் உருவாக்கிய அனைத்து வேலைகளிலிருந்தும் விலகி சென்றார். (ஆதியாகமம் 2:2–3 (https://www.chabad.org/library/bible_cdo/aid/8166/jewish/Chapter-2.htm))
    >**குறிப்பு: **ஏழாவது நாளில் உலக படைப்பு முடிந்ததாக தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஏனென்றால் முதல் ஆறு நாட்களும் என்னென்ன செய்தார் என்று குறிப்பிடும் வகையில் ஏழாவது நாளில் இறைவன் என்ன படைத்தார் என்பது விவரிக்கப் படவில்லை. எனவே இதன் காரணமாகவும் , நான்மறைகளோடு பொருத்தி பார்க்கும் பொழுதும் கர்த்தர் 6 நாட்களில் உலகை படைத்து ஏழாவது நாளில் தனது இடத்தில் அமர்ந்தார் என்பதுதானே சரி . 7வைத்து நாள் ஓய்வெடுத்தகார் என்று கிறிஸ்தவ பதிப்புகளிலும், வலைகளாய் முடித்ததுஅதிலிருந்து விலகினார் என்று யூத பதிப்பிலும் உள்ளது. ஓய்வு என்பது புதியதாக சேர்க்கபப்ட்டுளள்து என்பது இதன் மூலம் உறுதியாகிறது .

    https://qr.ae/p2Ikns

    பதிலளிநீக்கு