தீர்க்கதரிசிகள் என்போர் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப் படுகிறார்கள். அவர்களை அடையாளம் காண அவர்களின் வரையறை என்ன என்று அறிவது அவசியம். தூதர்கள் என்ற வார்த்தை நமக்கு ஆபிரகாமிய மதங்களிலிருந்து பரிட்ச்சயமானது. எனவே அதற்கான வரையறையை தேடும் பணியை அங்கிருந்து துவங்குவோம்.
ஆப்ரகாமிய மதங்கள்
கிறிஸ்தவம் & யூத மதம்: Mesaya, Envoy, Christ, Prophet, Messenger
தேவதூதர்கள் தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தரின் வேதத்தை போதிப்பார்கள்
இது இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷம். விரைவில் நடைபெறப் போகிறவை எவையென்று தன் ஊழியர்களுக்குத் தெரிவிக்கும்பொருட்டு இயேசுவுக்கு தேவன் இதை வழங்கினார்...(வெளி 1:1) பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான். (வெளி 14:6) (இது இறுதி வேதம் குர்ஆனை குறிக்கிறது)
சகரியாவிடம் தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். (லூக்கா 1:19)
காபிரியேல், “இப்பொழுது, நான் தரிசனம் பற்றி விளக்குவேன். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்வேன். உனது தரிசனம் காலத்தின் முடிவைப்பற்றியது. (தானியேல் 8:19)
தீர்க்கதரிசிகள் கர்த்தரின் வேதத்தை மக்களுக்கு போதிக்கும் வேலைக்காரர்கள்
மேலும் அவர் கூறினார்: இப்போது என் வார்த்தைகளைக் கேளுங்கள்: உங்களில் ஒரு தீர்க்கதரிசி இருந்தால், கர்த்தராகிய நான் அவருக்கு ஒரு மாராவில் (தரிசனத்தில்) என்னை வெளிப்படுத்துவேன், மேலும் அவருடன் ஒரு சத்தத்தில் பேசுவேன். (எண்ணாகமம் 12:6)
தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்கள். நான் எனது வார்த்தைகளையும், சட்டங்களையும், போதனைகளையும் அவர்களைப் பயன்படுத்தி உன் முற்பிதாக்களுக்குச் சொன்னேன்... (சகரியா 1:6)
இயேசு கூறினார் "நான் உங்களுக்கு செய்கிற உபதேசம் எனக்குச் சொந்தமானவை அல்ல. அவை என்னை அனுப்பினவரிடமிருந்து எனக்கு வந்தவை. (யோவான் 7:16)
தீர்க்கதரிசிகள் பின்வருவனவற்றை முன்னறிவிப்பு செய்வர்
எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். - (ஆமோஸ் 3:7-8)
உங்களுக்கும் எனக்கும் முந்திய தீர்க்கதரிசிகள் பண்டைய காலங்களிலிருந்து பல நாடுகளுக்கும் பெரிய ராஜ்யங்களுக்கும் எதிராக போர், பஞ்சம் மற்றும் கொள்ளைநோய் போன்றவற்றை முன்னறிவித்தனர். சமாதானத்தை தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசியைப் பொறுத்தவரை, அந்த தீர்க்கதரிசியின் வார்த்தை நிறைவேறும்போது, கர்த்தர் உண்மையிலேயே தீர்க்கதரிசியை அனுப்பினார் என்பது தெரியவரும் (எரேமியா 28:8-9)
கர்த்தரின் அனுமதியோடு தீர்க்கதரிசிகள் அதிசயங்கள் செய்து காட்டுவர்
தீர்க்கதரிசிகள், “ஐயம்கொள்ளும் மக்களே, கவனியுங்கள். நீங்கள் வியப்புறக்கூடும், ஆனால் மரித்து அழிவீர்கள். ஏனெனில் உங்கள் காலத்தில் நீங்கள் நம்பாத சிலவற்றை நான் செய்வேன். சிலர் உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்" என்றனர். (அப்போஸ்தலர் 13:41)
தீர்க்கதரிசிகளின் மரபு
இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். (மத்தேயு 1:1)
மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். (மத்தேயு 5:17)
இஸ்லாம்: நபி, ரசூல், இறைதூதர், முத்திரை நபி,
ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். (குர்ஆன் 7:35)
"ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம், ஏக இறைவனாகிய) அல்லாஹ்வையே வணங்குங்கள், (படைத்து பாதுகாத்து உணவளிக்கும்ஏக இறைவனை தவிர மற்ற வாங்கப் படும்) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்." (குர்ஆன் 16:36)
அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) (நூல் : அஹ்மத், தப்ரானி)
முதல் நபி யார்? ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் நபியும் ஆவார்கள்.
முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
- ஆதம் (அலை)
- இத்ரீஸ் (அலை)
- நூஹ் (அலை)
- ஹுது (அலை)
- சாலீஹ் (அலை)
- இப்ராகிம் (அலை)
- இஸ்மாயீல் (அலை)
- இஸ்ஹாக் (அலை)
- லூத் (அலை)
- யாகூபு (அலை)
- யூசுப் (அலை)
- சுஹைபு (அலை)
- அய்யூப் (அலை)
- மூசா (அலை)
- ஹாரூன் (அலை)
- துல்கிப்ல் (அலை)
- தாவூது (அலை)
- சுலைமான் (அலை)
- இலியாஸ் (அலை)
- யஹ்யா (அலை)
- யூனுஸ் (அலை)
- ஜக்கரியா (அலை)
- அல் யசஉ (அலை)
- ஈசா (அலை)
- முஹம்மத் (ஸல்)
இதில், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்பபட்ட முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் ஆவார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
மறுமையில் மக்கள் நூஹ் (அலை) அவர்கள் வந்து உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்கள்தான் முதலாமவர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர) (நூல் : புகாரீ 3340)
இறுதித்தூதர் யார் ? அதற்குரிய ஆதாரம் என்ன?
இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். நபித்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது.
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். (குர்ஆன் 33:40)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர் (ர) (நூல்:புகாரி 438)
தேவதூதர்களின் தலைவர் ஜிபிரியேல் முகமது நபிக்கு அல்லாஹ்வின் வேதத்தை போதித்தார்
(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக. (16:102)
மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார். (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) தெளிவான அரபி மொழியில். நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது. (26:192-96)
(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள். (2:285)
(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள். (6:130)
(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? (12:109)
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். (அல்குர்ஆன் 16:43)
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக). (16:43)
”அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மை களை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 7:188)
எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது (அல்குர்ஆன் 13:38)
”அவனது தூதர்களில் எவருக்கிடை யேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்; ( என முஃமின்கள் கூறுவார்கள்.) (குர்ஆன் 2:285)
“(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தைத்தான் நாம் உமக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை” (அல்குர்ஆன்: 40:78)
யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம். (7:6)
முகமது நபி எந்த பாரம்பரியத்தை சார்ந்தவர்?
வாத்திலா இப்னு அல்-அஸ்கா அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேள்விப்பட்டேன், "நிச்சயமாக, அல்லாஹ் இஸ்மாயீலின் மகன்களிடமிருந்து கினானாவைத் தேர்ந்தெடுத்தான், மேலும் அவர் கினானாவிலிருந்து குரைஷிகளைத் தேர்ந்தெடுத்தார், அவர் தேர்ந்தெடுத்தார். குரைஷிகளில் இருந்து ஹாஷிம் கோத்திரம், அவர் ஹாஷிம் கோத்திரத்திலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார்." (முஸ்லிம் 2276)
தமிழர் சமயம்: சித்தர், குரு, ஆசிரியர், நாதன், முனைவன், முனிவன், தலைவன்
ஆபிரகாமிய மதங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இறைவன் மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசிகளிடம் தேவர்களை தூதர்களாகவும் ஆசிரியர்களாகவும் அனுப்புகிறான். தூதர்கள் என்ற பதத்தை தமிழ் வேதங்கள் பயன்படுத்தியது குறைவே. ஆனால் தூதர்கள் என்று ஆபிரகாமிய மதங்கள் யாரை குறிப்பிட்டதோ, தூதர்கள் என்பவர்களுக்கு ஆபிரகாமிய மதங்கள் என்ன வரையறையை தருகிறதோ அந்த அமைப்பில் உள்ளதா என்று ஆய்வு செய்வோம்
நந்தி தேவர் மூலம் சிவனின் வேதம் நாதர்களுக்கு வழங்கப் பட்டது.
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்என்றிவர் என்னோ டெண்மரு மாமே. (திருமந்திரம் பாயிரம் பாடல் 6)
பதவுரை: நாதர் - ஆசிரியர்;
பொழிப்புரை: நந்தியின் உதவி பெற்ற ஆசிரியர் யார் என்று அறிய விரும்பினால், நந்திகள் நான்கு பேர் : 1) சிவயோக மாமுனி, 2) பதஞ்சலி, 3) வியாக்கிரமர்என்றும் என்னொடுகூட இருப்பவர் 4) எண்மர் என்பவர்களாம். (இதில் சிவயோக மாமுனி என்பவர் ஜிப்ரயிலாக இருக்கலாம்)
குறிப்புரை: நந்தியின் உதவி பெற்ற ஆசியரைத்தான் நாம் தேடவேண்டும், நந்தியின் உதவி இல்லாமல் ஒருவர் ஓர் வேதத்தையோ, சமயத்தையோ கொண்டுவந்தால் அது இறைவனிடம் வந்ததல்ல என்று குறிப்புணர்த்துவதோடு, அந்த நதிகள் யார் என்ற என்ற விளக்கத்தையும் இந்த பாடல்கள் தருகிறது.
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்நந்தி அருளாலே மூலனை நாடினேன்நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே. (பாடல் எண் : 7)
பதவுரை: என் - எட்டு;
பொழிப்புரை: நந்தியால் அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர் பெற்றேன். நந்தியின் உதவியால் மூலோனாகிய சிவபெருமானை நாடினேன். எட்டு சமயங்கள் செய்யும் நாட்டினில் நந்தி காட்டும் வழியில் நான் இருந்தேன்.
நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகெனநால்வரும் தேவராய் நாதரா னார்களே. (பாடல் 9)
பதவுரை: நானா - பலவகைப்பட்ட;
பொழிப்புரை: நான்கு நந்திகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கும் (நான்கு மரபுகளுக்கு) ஒரு ஆசிரியராக உள்ளனர். நந்திகள் எனப்பட்ட நால்வரும் பலவகை பொருள்களை (Subject) கைக்கொண்டு எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுக என்று நான்கு நந்தி தேவர்களும் ஆசிரியர்கள் ஆனார்கள்.
நந்திகள் நால்வருக்கும் வேதத்தை மொழிந்தவன் சிவன் ஆவான்
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்கழிந்த பெருமையைக் காட்டகி லானே. (பாடல் 10)
பொழிப்புரை : மூன்று படைப்புகளாகிய தேவர், அசுரர், இயக்கருக்கும், நான்கு நந்திகளுக்கும் மொழிந்தவன் ஈசன் ஆவான்.
நந்தி இணையடி நான் தலை மேற்கொண்டுபுத்தியினுள்ளே புகப் பெய்து போற்றி செய்நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே. (பாடல் எண் : 12)
பொழிப்புரை: ஆசிரியராகிய நந்தி தேவதூதருக்கு அடிபணிந்து இணைந்து என் தலையில் ஏற்றி, சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்தவற்றால், நந்தியினால் சிவாகமம் போதிக்கப்பட்டேன்.
தூதர்களின் மரபு
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,உரை படு நூல் தாம் இரு வகை இயலமுதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
பொருள்: மரபு நிலை திரிதல் என்றால், உரைக்கும் ஆசிரியர் அவர் மரபில் உரைக்கப்பட்ட நூலில் முன் அறிவிக்கப்பட்டவராகவும், அவர் உரைக்கும் நூலில் தனது மரபை கூறக்கூடியவராகவும் இருப்பர். அவ்வாறு உரைக்கும் நூலில் அவருக்கு முந்தியது முதல் நூல் என்றும், அவரு கூறுவது வழிநூல் என்றும் ஆகும்.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - (குறள் 681)
பதவுரை: அன்புடைமை - பிறர் மீது அன்பு கொள்ளுதல்; ஆன்றகுடி - மாட்சிமை, மேன்மை, உயர்வு, மகிமை பெற்ற குடியில் ; பிறத்தல்-பிறத்தல்; வேந்த - இறைவனால்; அவாம் - விரும்பப்படும்; பண்புடைமை - குணம் உடைமை; தூது - தூது; உரைப்பான் - சொல்லுபவன்; பண்பு - இலக்கணம்.
பொருளுரை: பிறர்மீது அன்புடையவனாக இருத்தல், மேன்மை பொருந்திய குடியில் பிறத்தல், இறைவனால் விரும்பப்படும் குணம் உடைமை தூது சொல்லுபவன் இலக்கணம் ஆகும்.
குறிப்புரை: இது அரசனிடமிருந்து இன்னொரு அரசனுக்கு செல்லும் தூதனைக் குறிக்காது. ஏனென்றால் முதலில், எல்லா அரசனும் ஆன்ற குடியில் பிறப்பதில்லை, ஆட்சி பொறுப்பில் இல்லாத இனமே இல்லை எனலாம். ஆட்சி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இனத்திடமும் மாறி மாறி வரும். ஆனால் தூதர்கள் உயர் குளத்திலும், பாரம்பரியம் / மரபு உள்ள குலத்திலும் பிறப்பர். இரண்டாவது, அரசனே தூதுவனாக செல்வதில்லை. மூன்றாவது, தூதனுக்கு பண்பு இருக்க வேண்டும் எனலாம், அன்பு இருக்க வேண்டிய அவசியம் என்ன? எனவே இது அரசனின் தூதுவனைக் குறிக்கவில்லை, மாறாக இறைதூதனை குறிக்கிறது. நான்காவது, இது இறை தூதுவை குறிப்பிடவில்லை என்றால்,
குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி எளிய பத்து 8:4)
எனும் முதுமொழி காஞ்சியின் வாக்கு மறைநூல்களை புரிய குறள் உதவும் என்கிறது. மறைநூல்கள் தூதர்களின் மூலமாக வருகிறது என்று தொல்காப்பிய முதல்நூல் சூத்திரம் கூறுகிறது.
திருமூலரின் மரபு தொடர்ச்சி
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடிந்த எழுவரும் என்வழி யாமே. - (திருமந்திரம், 04 குருபாரம்பரியம், பாடல் 2)
பொழிப்புரை : இத்திருமந்திரத்தைப் என்னிடமிருந்து பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர் 1) மாலாங்கன், 2) இந்திரன், 3) சோமன், 4) பிரமன், 5) உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் 6) காலாக்கினி, 7) கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.
"நந்தி மாதிரி குறுக்க வர" என்று திட்டுவது பெரும் பாவம் என்று இதன் மூலம் புலப்படுகிறது.
இந்து மதம்: ரிஷி, குரு, ஆச்சாரியார்
ஆபிரகாமிய மதங்கள் (யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்) கடவுளின் தூதர்களால் தோன்றியவை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இந்து மதத்தில் "கடவுளின் தூதர்" என்று எதுவும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். பதிலாக, கடவுள் மனிதனாக உலகில் அவதரிக்கிறார் என்று கருதுகிறோம். கடவுள் பிறப்பும் இறப்பும் அற்றவன் என்பதற்கான பல சான்றுகள் சனாதன தர்ம வேதங்களில் பல உள்ளன. அவதரிப்பவர்கள் தூதர்கள் அன்றி கடவுள் அல்ல. இந்த கட்டுரையில் அவ்வாறு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளை பற்றி உலக வேதங்கள் என்ன சொல்கிறது? விரும்புகிறவர் களெல்லாம் தனது முயற்சியால் அவ்வாறு ஆகிவிட முடியுமா? என்று பார்ப்போம்.
அக்னி - கடவுளின் தூதர்
1) தெய்வீகப் பூசாரியும் என்னுடைய தூதருமான அக்னியை மகிமைப்படுத்துங்கள் செழிப்பை அருளும் கடவுளுக்கு காணிக்கைகள். - (RIG 1.1.1 மந்திரம் 1:1)2) ஆணைப்படி பிறந்த அக்னி வைஸ்வாணர், பூமியின் தூதர், சொர்க்கத்தின் தலைவர், முனிவர், சோவ்ரன், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற எங்கள் பாத்திரத்தை கடவுள் உருவாக்கினார். - (SAMA 3.2.4.2.3 கந்தா (பிரிவு) 3:1)
3) அக்னி பூமி மற்றும் வானத்தின் தூதரானார் - (RIG 1.1.59 மந்திரம் 59:2)4)அக்னி கடவுளின் தூதராக இருந்தார்.. ..அக்னியை தூதராக நாம் தேர்வு செய்கிறோம், தன்னை வளப்படுத்துகிறான், அவனது எதிரி தோற்கடிக்கப்படுகிறான்... - (யஜூர் 2.2.5.8 மந்திரம் 8:5)
5) அக்னி கடவுளின் தூதுவர் - (யஜூர் 2.2.5.12 மந்திரம் 12:8)6) இந்த என்னுடைய மரியாதையுடன், வலிமையின் மகனே, உனக்காக நான் அக்னியை அழைக்கிறேன். அன்பே, புத்திசாலித்தனமான தூதுவர், உன்னத தியாகத்தில் கைதேர்ந்தவர், அனைவருக்கும் அழியாத தூதர். - (சாமா 3.1.1.1.5 தசதி (தசாப்தம்) 5:1)7) அக்னி வைஸ்வாணரா, ஆணைப்படி பிறந்தவர், பூமியின் தூதர், வானத்தின் தலைவர், முனிவர், சோவரன், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற எங்கள் பாத்திரத்தை, தேவர்கள் உருவாக்கியுள்ளனர். - (சாமா 3.1.1.2.2 தசதி (தசாப்தம்) 2:4)
மேலும், RIG VEDA1.1.12 மந்திரம் 12:8, 1.1.36 மந்திரம் 36:3,4 & 5, 1.1.44 மந்திரம் 44:2,3,9 &11, 1.2.2 மந்திரம் 2:2, 1.2.4 மந்திரம் ஆகியவற்றைச் சரிபார்க்கவும். 4:2, 1.3.11 மந்திரம் 11:2, 1.3.17 மந்திரம் 17:4, 1.4.1 மந்திரம் 1:1, 1.4.9 மந்திரம் மற்றும் பல வசனங்கள் அக்னியின் தூதுத்துவம் பற்றி பேசுகிறது.
ரிக் பண்டைய தூதுவர்களைப் பற்றியும் பேசுகிறது
1) கடவுள் தன் பண்டைய தூதுவர்கள் - வருணன், மித்ரா, ஆரியமன் ஆகியோரை.. (RIG 1.1.36 மந்திரம் 36:4)
வைச்வாணர் - யஜுர் வேதத்தில் கடவுளின் தூதர்
1) வானத்தின் தலைவன், பூமியின் தூதர், வைச்சுவாணர், புனித ஆணைக்காகப் பிறந்தவர், அக்னி, முனிவர், அரசர், மனிதர்களின் விருந்தினர், தேவர்கள் தங்கள் வாய்க்குக் கோப்பையாகத் தயாரித்துள்ளனர். - (யஜூர் 2.1.4.13 மந்திரம் 13)
2) "..பூமியின் தூதர்'... ..'வைச்சனாரா, புனித ஆணைக்குப் பிறந்தவர்'..." - (2.6.5.2 V 2:1)கடவுளின் தூதர் என்ற கருத்து இந்து மதத்தில் உள்ளது, RIG இன் குறிப்புடன், இந்து மதத்தின் தோற்றம் கடவுளின் தூதரிடம் இருந்து வந்தது என்பதை நிறுவுகிறது.ஆனால் அவர்கள் தானாக உருவாக முடியாது. அவர்கள் HOLY ORDER-ல் தான் வருவார்கள். ஒரு தூதரை பற்றிய முன்னறிவிப்புகள் முந்தய வேதங்களில் கொடுக்கப் பட்டு இருக்கும்.
ஆபிரகாமிய மதத்தின் தீர்க்கதரிசிகள்/கடவுளின் தூதர்கள் புனித வரிசையில் பிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அதன் வரிசை இங்கே ஒரு படமாக கொடுக்கப்பட்டுள்ளது.
தூதர்களின் புனித மரபு
இந்து மதத்தில் தூதுவர்கள் இருப்பதைப் பார்த்தோம், ஆனால் இந்து மதத்தில் விரும்பியவர்கள் எல்லாம் அலல்து கடுமையாக தவம் புரிவோர் எல்லாம் தூதர்களாக மாற முடியுமாஅல்லது புனித ஒழுங்கில் (Holy Order) பிறந்தவர்களுக்கு தான் வாய்ப்பு உண்டா?, வேதம் அதைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்?
1) ஹோலியார்டரின் அனைத்து வழிகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர், அவர் முழு அறிவுடன், இந்த செயல்களை வழிபாட்டின் மூலம் பகிர்ந்து கொண்டார். - (ரிக் 1.3.31 மந்திரம் 31)
2) அக்னி தன்னைப் புகழ்பவர்களின் கீர்த்தனைகளால் போற்றப்படுவதற்காக, புகழ்ச்சிகளால் வலிமைமிக்கவராக வளர்த்தார். விடியலின் முதல் ஃப்ளஷில் ஹோலி ஆர்டரின் பல்வேறு நிகழ்ச்சிகளை விரும்பி அவர் தூதுவராக ஜொலிக்கிறார்.- (ரிக் 1.3.5 மந்திரம் 5"2)
3) அவர், பூமியின் தூதுவரும், சொர்க்கத்தின் தலைவருமான, அக்னி வைஸ்வாணரா, புனித ஒழுங்கில் பிறந்தவர், முனிவர், அரசர், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற பாத்திரம், கடவுள் உருவாக்கியிருக்கிறார் - (ரிக் 1.6.7 மந்திரம் 7: 1)
4) வருணன் மற்றும் மித்ராவின் அந்த வலிமைமிக்க கண், தவறாத மற்றும் அன்பே, மேல்நோக்கி நகர்கிறது. புனித ஒழுங்கின் தூய்மையான மற்றும் அழகான முகம் அதன் எழுச்சியில் சொர்க்கத்தின் தங்கம் போல் பிரகாசித்தது. - (1.6.51 மந்திரம் 51:1)
5) ஓ மித்ரா மற்றும் வருணா, யார் புனித ஒழுங்கை செழிக்கச் செய்கிறார்கள்; - (2.1.4.5 மந்திரம் 5:a)
6) வானத்தின் தலைவர், பூமியின் தூதர், வைச்வாணரா, ஹோலியார்டரில் பிறந்தவர், அக்னி - (2.1.4.13 மந்திரம் 13:a)
முடிவுரை
தீர்க்கதரிசிகள் என்று இக்கட்டுரை குறிப்பிடும் பதவி பல்வேறு பண்பாடுகளில் பல்வேறு பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் அவைகளின் வரையறையை எடுத்து பார்த்தால் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பதை உணரலாம்.
தமிழ்: முனைவன், முனிவர், சித்தர், நாதர், குரு, ஆசிரியன்
இந்து: ரிஷி, குரு, ஆச்சாரி
கிறிஸ்தவம்: Mesaya, Envoy, Christ, Prophet, Messenger
இஸ்லாம்: இறைதூதர், ரசூல், நபி
இதைவிட வேறு பெயர்களும் இருக்க வாய்ப்பு உண்டு. இதில் பொய் குருக்களும் உண்டு, அவர்களை கண்டறிவதற்கான வழிகாட்டுகளையும் மறைநூல்கள் வழங்கி உள்ளன.
நாதன், பெயர்ச்சொல்.
பதிலளிநீக்குதலைவன்
அரசன்
கணவன்
ஆசிரியன்
முனிவன்
கடவுள்
இறைவன் சிவன்
அருகன்
தமையன்
Natha is a Sanskrit term that can be translated to mean "lord," "master" or "protector." It is most often used to refer to the nine naths (saints/gurus) of the Nath tradition
பதிலளிநீக்குWhat is the meaning of Natha?
பதிலளிநீக்குThe Sanskrit word nātha नाथ literally means "lord, protector, master". The related Sanskrit term Adi Natha means first or original Lord, and is a synonym for Shiva, the founder of the Nāthas.
இருவருக்கிடையே கருத்துப் பரிமாற்றத்திற்குத் துணையாவார்
பதிலளிநீக்குவாயில் (148 ), தூதுவர் ( 19 ) என அழைக்கப்பட்டனர் . வாயில்
அகத்தூதிற்கு மட்டும் செல்ல , தூதுவர் ( தூது ) அகம் ( 117 ), புறம்
( 28 ) இரண்டிலும் இடம்பெறுகின்றனர்
https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0006417/TVA_BOK_0006417_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt
முனைவர் யார்?
பதிலளிநீக்கு(தொல்காப்பியர் கூறும் முனைவர்) -- தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்துநான்
முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்புகல் மனம்செவி
இன்னதென் றறியேனே
மணிவாசகப்பெருமான்-எட்டாம் திருமுறை
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூலாகும்
(தொல்.பொருள்,மரபு 95)
இதன் விளக்கம்:
இருள்சேர்ந்த நல்வினை தீவினை எனும் இன்ப துன்பங்களை உண்டாக்கும் இருவகை வினையும் சேராது நீங்கி உள்ள, தூய அறிவினை உடையவன்; அறிவு விளக்கம் பெற்றவன் முனைவன் ஆவான். அவன் ஆள்வினை ஊழ்வினை , சூழ்வினை எனப்பட்ட வினைகளில் சூழ்வினை இல்லாதவன். இப்படிப்பட்ட முனைவன் தன் அறிவுக் கண்ணால் கண்ட உண்மைகளை வெளிப்படுத்தும் நூல் முதல்நூலாகும்.
தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு வகையாகப் பார்த்தனர். நூலாசிரியர் தாமே ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கூறும் நூல் முதல்நூல்.
முதல்நூலைப் பின்பற்றித் தன் கருத்துகளையும் இணைத்து எழுதப்படும் நூல் வழிநூல்.
தொல்காப்பியம் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி அதுதான் தமிழின் முதல்நூல் என்று கருதிவிடுதல் கூடாது. முதல்நூல் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்தை நன்னூல் வழிமொழிகிறது.
இதில் முனைவன்‘ என்ற சொல்லுக்கு உடல் உயிரைத்தவிர அனைத்தையும் துறத்தல், ஐம்புலன் அடக்கம், உடல்மனத் தூய்மை நாட்டுநலனை உறுதியோடு தியானித்து அதை அடைதல், கொலை முதலான அறத்திற்கு ஒவ்வாத செயலைச் செய்யாதிருத்தல், போர் முதலிய வன்னையைச் செயற்படுத்தாது இருத்தல் இதைக்கடைப்பிடிப்பவனே முனைவன் என்று சான்றோர் பொருள் உரைத்துள்ளனர் முனைவர் என்ற சொல்லில் ஆண்பெண் என்ற பகுப்பு இல்லை
பேராசிரியர், க.நெடுஞ்செழியன் "ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்" என்னும் ‘டாக்டர்’(DOCTORATE) எனபதற்கு தமிழில் பண்டாரகர் என்ற சொல் உண்டு என்றார். பண்டாரகர் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் தேவநேயப் பாவாணர் ஆவார். இந்தச் சொல் தொன்மை தொல்காப்பிய வரிகளில் உள்ள பொருளைப் பற்றிப் பிறந்த சொல்லே முனைவர். இந்த முனைவர் என்ற தமிழ் சொற்களுக்குச் சொந்தக்காரர் திரு இறையரசன் என்ற ஆசான்.
இது கருப்பொருள் ஒன்றில் தோய்ந்து, அதன் வழியில் சென்று, அதனை நிலை நிறுத்தும் பொருட்டு, அதன் நுண்மை கண்டறிந்து சொல்வது. அக்கருத்து பிறரால் முன்னரே சொல்லப்படாதிருத்தல் வேண்டும். ஆய்வை முனைந்து செய்து அரிய கருத்தைச் சொல்வதால் முனைவர் என்றனர். அவ்வாறு செய்வோர் எத்துறையினராயினும் அவர்களுக்கு ‘Ph.D’ என்ற பட்டம் கொடுக்கப்படும். ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் தந்து பெறும் பட்டம் முனைவர் பட்டம்.
அதாவது Doctor of philosophy என்பதன் சுருக்கம். Doctorate எனவும் சொல்லப்படுகிறது. Ph.D, Doctorate என்பதெல்லாம் ஆங்கிலத்தின் தாக்கம். அப்பட்டம் பெற்றோர் தன் பெயருக்கு முன்னொட்டாக Dr. என குறிப்பிட்டுக் கொள்வர்.
மதிப்புறு முனைவர் பட்டம் அல்லது கௌரவ டாக்டர் பட்டம் (Honorary degree), தொழில் துறை, சமூக முன்னேற்றம், அரசியல், கலை, இலக்கியம், சமுதாயப் பணி போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்களித்த வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டும் முகமாகப் பல்கலைக்கழகங்கள் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன.
இது போன்ற மதிப்புறு பட்டங்களைப் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன் இணைத்துக் கொள்வதில்லை என்பது மரபு.
https://groups.google.com/g/minTamil/c/SIsf95BZ5Vg
இந்த கருத்து முற்றிலுமாக பிழை. முனைவர் தனது நூலை ஆய்ந்து எழுதுவான் என்கிற கருத்தை இன்முதல் நூலுக்கான விளக்கம் இல்லை, மேலும் வழிநூலுக்கான விளக்கமும் இதுவல்ல.
நன்னூல் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட நூலாக இருந்தால் அது வழி நூலல்ல - நூல்களில் நாட்களை அறிவதில் சிரமம் உள்ளதால் முந்தையதா இல்லையா என்பதில் எனக்கு சிரமம் உள்ளது.
முனைவர் என்ற சொல்லும் இவர் எழுதும் வரையறை யார் வரையறுத்தது?
சொல் "முனைவ" காணப்படும் பாடல் சில அடிகளுடன்.
பதிலளிநீக்குநூல்: பரி பாடல்
1 திருமால்
பாடல் அடி எண்: 33
பொருவேம் என்றவர் மதம் தப கடந்து
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்
இருவர் தாதை இலங்கு பூண் மாஅல்
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே
அன்ன மரபின் அனையோய் நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின் வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
http://sangacholai.in/8.5.html
அருகனைப் பாடி அனைவரும் உய்வோம்
பதிலளிநீக்குஅறநெறிச்சாரம் பாடல் - 218
முனைப்பாடி யானைச்சூர் முக்குடைச் செல்வன்
தனைப்பாடி வந்தேற்குத் தந்த பரிசில்
வினைப்பாடு கட்டழித்து வீட்டின்பம் நல்கி
நினைப்பாடி வந்தோர்க்கு நீம்ஈக என்றான் நிறை விளக்குப் போல் இருந்து.
விளக்கவுரை திருமுனைப்பாடியில் எழுந்தருளியிருப்பவனும் தெய்வத் தன்மையுடைய மூன்று குடைகளையுடையவனுமான அருகனைப் பாடி வந்த எனக்கு அளித்த பரிசாவது, மிக்க வினைத் தொடர்பை அறுத்து முத்தி இன்பத்தைக் கொடுத்ததன்றி, நந்தா விளக்கைப் போல் விளங்கி, உன்னைப் பாடி வந்தோர்க்கு அறிவை நல்குவையாக என்று கூறி அருளியதும் ஆகும்
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே, வன்கண்மை,
பதிலளிநீக்குஆண்டு அமைந்த கல்வியே, சொல் ஆற்றல், பூண்டு அமைந்த
காலம் அறிதல், கருதுங்கால், - தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ். ஏலாதி 26
மாட்சிமைப் பட்டமைந்தாராய்ந்த மதியுடைமையும், தோற்றப் பொலிவுண்டாதலும், தறுகண்மையும், தன்னா லாளப்பட்டமைந்த கல்வியுடைமையும், சொல் வன்மையும், பொருந்தியமைந்த காலமறிதலுமென விவை யாராயுங்கால் தூதுவர்க் குலகறிந்த புகழாவது.
கருத்து: அறிவு அழகு முதலியன தூதுவர்க்கு இயல்பாவனவாம்.
பதிலளிநீக்குMAR
23
ஏலாதி 66 Elati 66
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின், - மை தீர் சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று; இடர் இன்று; இனி துயிலும் இன்று. 66
பொய்தீர் புலவர் பொருள்புரிந்து ஆராய்ந்த
மைதீர் உயர்கதியின் மாண்புரைப்பின் - மைதீர்
சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்று
இடரின் றினிதுயிலும் இன்று. 66
பொய் தீர் புலவர் இயற்றிய நூலின் பொருள் புரிந்து ஆராய்ந்த, குற்றமற்று உயர்ந்த நற்கதியின் மாண்பைப் பற்றிச் சொல்லப்போனால்,
இருள் நீங்கிய சுடராகச் சுடர்கிறது.
இருள் நீங்கிய சொல்லாகச் சொல்கிறது.
மாறுபாடு இல்லை.
சோர்வு இல்லை.
துன்பம் இல்லை.
அதனால் தூக்கமும் இல்லை; எப்போதும் விழிப்புணர்வே.
https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_7.html
அறம் கூறுபவனின் இயல்பு
பதிலளிநீக்குஅறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலன்கள் மாட்டும்
இறங்காது இருசார் பொருளும் - துறந்துஅடங்கி
மன்உயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்குப் பாற்பட் டவன் பாடல் - 4
விளக்கவுரை: அறநூல்கள் பலவற்றையும், கற்றறிந்தவனாயும் கருணை உடையவனாயும், மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளால் அனுபவிக்கப்படும், இன்பம் துய்க்கப் புகாதவனாயும் அகப்பற்று - புறப்பற்று ஆகிய இரண்டையும் விட்டவனாயும் அடக்கம் கொண்டவனாயும் உலகில் நிலை பெற்ற உயிர்களுக்கு வீடு பேற்றுக்குரிய வழியினை, உரைப்பவன் ஒருவன் இருப்பானாயின் அத்தகையவன் அறம் உரைக்க தகுதியானவன்.
முனி இயல்பு
பதிலளிநீக்குஇந்தியத்தை வென்றான் தொடர்ப்பாட்டோடு ஆரம்பம்
முந்து துறந்தான் முனி. - அருங்கலச்செப்பு 11
முனி மாண்பு
தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும்
உய்த்தல் இருடிகள் மாண்பு. - அருங்கலச்செப்பு 12
https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html
உரைப்பவரும் கேட்பவரும்
பதிலளிநீக்குஅற்றறிந்த காரணத்தை ஆராய்ந்து அறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே - மற்றதனை
மாட்சி புரிந்த மதியுடை யாளரே
கேட்பர் கெழுமி இருந்து. பாடல் - 49
விளக்கவுரை உண்மைப் பொருளைக் கற்றுணர்ந்த மக்கள் பற்றைவிட்டு அறிய வேண்டிய மெய்ந்நூல்களை அறியும் காரணத்தையும் அறநூல் பொருளையும் ஆராய்ந்து கூறுகூர்; அவ்வுரையை நற்குணம் மிக்க அறிவுடையவர்களே உள்ளம் இசைந்திருந்து உரிமையோடு கேட்பார்கள்.
முனி
பதிலளிநீக்கு11. இந்திரியத்தை வென்றான் தொடர்பட்டோ(டு) அரம்பம்
முந்து துரந்தான் முனி.
* ஐம்புலன்களின் ஆற்றலை அடக்கி, அகப்புறப் பற்றுகளை நீக்கி,தொழில் அனைத்தும் முற்றுமாக துறந்தவர் முனிவர் ஆவர்
12. தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும்
உய்த்தல் இருடிகள் மாண்பு.
* எழுவகைத் தத்துவங்களை அறிந்து, தள்ளத்தக்கன தள்ளி, கொள்ளத்தக்கன கொண்டு, தியானங்களில் பொருந்தல் முனிகளது பெருமையாம்.
ஏலாதி 75 Elati 75
பதிலளிநீக்குஅறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி, மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின் மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே ஆசாரியனது அமைவு. 75
அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறாய நீக்கி - மறுவரவின்
மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியன தமைவு. 75
ஆறு வகையான சமயத்தவர் நூல்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
அவற்றின் உணர்வுகளைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
அவற்றில் வரும் குற்றங்களை நீக்க வேண்டும்.
தம் உணர்வுக்கு மாறாக விளங்கும் கருத்துகளையும் நீக்க வேண்டும்.
குற்றங்களை நீக்கும்போது ஒழுக்க நெறியில் மேம்பட்ட பெரியவனாக விளங்க வேண்டும்.
தம் கருத்துக்கு மறுதலைச் சொல் இருக்குமானால் மாற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
இது ஆசாரியன் நடந்துகொள்ள வேண்டிய அமைதி இலக்கணம் ஆகும்.
அறு சமயம் : - உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பட்டாசாரியம்.
மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது
பதிலளிநீக்குதிருக்குர்ஆன் 17:94
இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?என்று கேட்கின்றனர்.
திருக்குர்ஆன் 25 : 7
வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்? உங்கள் பாவங்களை மன்னிக்கவும், குறிப்பிட்ட காலக்கெடு வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவுமே உங்களை அவன் அழைக்கிறான் என்று அவர்களின் தூதர்கள் கூறினர். நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!என்று அவர்கள் கேட்டனர்.
திருக்குர்ஆன் 14:10
இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 23:33
இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?என்றனர்.
திருக்குர்ஆன் 23:47
நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்என்று (அவ்வூரார்) கூறினர்
திருக்குர்ஆன் 36:15
நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!(என்றும் கூறினர்)
திருக்குர்ஆன் 26:154
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.
திருக்குர்ஆன் 26:186
நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழி கேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்.
திருக்குர்ஆன் 54:24
அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
திருக்குர்ஆன் 64:6
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!
பதிலளிநீக்குதிருக்குர்ஆன் 3 : 32
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 3 : 132
இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 4 : 13
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
திருக்குர்ஆன் 4 : 69
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.
திருக்குர்ஆன் 4 : 80
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 5 : 92
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!
திருக்குர்ஆன் 8 : 1
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
திருக்குர்ஆன் 8 : 20
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 8:46
பதிலளிநீக்குநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 9 : 71
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 24 : 52
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
திருக்குர்ஆன் 24 : 54
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 24 : 56
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
திருக்குர்ஆன் 33 : 33
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?எனக் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 33 : 66
அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
திருக்குர்ஆன் 33 : 71
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!
திருக்குர்ஆன் 47 : 33
(போருக்குச் செல்லாமல் இருப்பது) குருடர் மீது குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.
திருக்குர்ஆன் 48 : 17
நம்பிக்கை கொண்டோம் என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள்என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 49:14
உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாத போது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தும் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 58 : 13
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வது தான் நமது தூதர் மீது உள்ளது.
திருக்குர்ஆன் 64 : 12
எரேமியா 28:8-9
பதிலளிநீக்குஉங்களுக்கும் எனக்கும் முந்திய தீர்க்கதரிசிகள் பண்டைய காலங்களிலிருந்து பல நாடுகளுக்கும் பெரிய ராஜ்யங்களுக்கும் எதிராக போர், பஞ்சம் மற்றும் கொள்ளைநோய் போன்றவற்றை முன்னறிவித்தனர். சமாதானத்தை தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசியைப் பொறுத்தவரை, அந்த தீர்க்கதரிசியின் வார்த்தை நிறைவேறும்போது, கர்த்தர் உண்மையிலேயே தீர்க்கதரிசியை அனுப்பினார் என்பது தெரியவரும்
4:80. எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை
பதிலளிநீக்குநாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள் - 5:70.
(இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது. - 6:8
யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். - 4:152.
நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். - 4:150.
“எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும். [அல்குர்ஆன் 2:4]
பதிலளிநீக்குஎனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர். [அல்குர்ஆன் 3:184]
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. [அல்குர்ஆன் 6:10.]
(நினைவு கூருங்கள்:) நபிமார் (கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான். 3 வசனம் 81
(நினைவு கூருங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.
(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? - (குர்ஆன்12:109)
(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஸுபுரையும், ஒளி வீசும் கிதாபையும் கொண்டு வந்தனர். திருக்குர்ஆன் 3 : 184
அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஸுபுரையும், ஒளிவீசும் கிதாபையும் கொண்டு வந்தனர். திருக்குர்ஆன் 35 : 25
வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம். திருக்குர்ஆன் 6 : 9
பதிலளிநீக்குபூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம் என்பதைக் கூறுவீராக! திருக்குர்ஆன் 17:95
உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் வழங்கிய பின் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நிச்சயமாக நம்புவீர்களா? நிச்சயமாக அவருக்கு உதவுவீர்களா? என்று அல்லாஹ் நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்ததை நினைவு கூர்வீராக!
திருக்குர்ஆன் 3 : 81
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 29:48
நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர்.
திருக்குர்ஆன் 3:164
அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழி கேட்டில் இருந்தனர்.
திருக்குர்ஆன் : 62:2
உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக அறிவிக்கப்படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை.
திருக்குர்ஆன் 53 : 2, 3, 4
வானவர்களிலும், மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.
திருக்குர்ஆன் : 22:75
என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்! என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான்.
திருக்குர்ஆன் : 16:2
(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.
திருக்குர்ஆன் : 4:164
தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 46:9
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.
திருக்குர்ஆன் 14:4
2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.
மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவனுக்குக் கடுமையான வேதனை உண்டு. (அந்த மூவரில் ஒருவன்) அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 2358
தலைவர் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்தாலும் கட்டுப்பட வேண்டும் என இந்த ஹதீஸ் தெரிவிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நியமித்த ஒரு தலைவர் அவர்களின் தொண்டர்களை, கோபத்தில் நெருப்பில் குதிக்க வேண்டும் என்று கட்டளையிட்ட போது இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீங்கள் நெருப்பில் குதித்திருந்தால் மறுமை நாள் வரையிலும் அதிலேயே இருப்பீர்கள் என்று கூறி விட்டு பாவமான விஷயத்தில் கட்டுப்படுதல் இல்லை என்றும் கூறினார்கள். (புகாரீ 7257)
தாங்கள் தவறிழைக்கும் போது அல்லது நேர்வழியை விட்டும் அகழும் போது நேர்வழியை காண்பிக்க இறைத் தூதர்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வில்லை என்று மறுமையில் மக்கள் வாதாடாமல் இருப்பதற்காகவே இறைத்தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்
பதிலளிநீக்கு165
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஒரு வழிகாட்டி உண்டு.(13:7
எந்தவொரு சமுதாயத்திலும் அதில் எச்சரிக்கை செய்பவர் வராமல் இருந்ததில்லை (35:24)
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் (4:136)
அல்லாஹ்வை வணங்குங்கள், மேலும் அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் தாகூத்தை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். (16:36)
அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களி லிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன். பார்ப்ப வன்.(22:75)
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம், அவர்களுக்கும் மனைவி யரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம். (13:38)
முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் வந்து சென்று விட்டனர். (3:144)
யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம். (அல்குர்ஆன் 7:6)
"நம் வேதவசனங்களை ஓதி உணர்த்துபவரும், உங்க(ள் வாழ்க்கை நடைமுறைக)ளைத் தூய்மைப்படுத்துபவரும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிப்பவரும், நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுக்கொடுப்பவருமான ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களிடம் அனுப்பிவைத்த போது நீங்கள் பெற்ற அருட்கொடையைப் போன்றதாகும் இந்தக் கொடை".(2:151)
ஜின் இனத்லிருந்து வந்த நபிமார்கள்
பதிலளிநீக்குஉலகிற்கு வருகை தந்த நபிமார்கள் யாவரும் மனிதர்களே என்று 12:109,16:43,21:7 ஆகிய வாசகங்கள் அறிவிக்கின்றன. மேலும் ஜின்களிலிருந்தும் மனிதர்களிருந்தும் நபிமார்கள் வந்ததாக 6:130 வாசகம் அறிவிக்கிறது. எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று இதிலிருந்து தெளிவாகிறது.
https://www.quranthelivurai.com/topic-18.html
6:130. (மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
http://www.tamililquran.com/qurandisp.php?start=6
அவர்களின் பேராசையால் இந்த பொய்யான ஆசிரியர்கள் உங்களுக்குக் கதை சொல்லி லாபம் சம்பாதிப்பார்கள்..." (2 பேதுரு 2:3)
பதிலளிநீக்கு(Genesis 5:3-5) 3 Adam lived for 130 years and then became father to a son in his likeness, in his image, and he named him Seth. 4 After becoming father to Seth, Adam lived for 800 years. And he became father to sons and daughters. 5 So all the days of Adam’s life amounted to 930 years, and then he died.
பதிலளிநீக்குஇப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு அறிவிப்பை இப்னு சஹது, இப்னு அஸ்கர் ஆகிய இரு அறிஞர்கள் அறிவித்த அறிவிப்பின் கருத்தாவது நபி ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை(ஸ்ரீலங்கா)யில் இறக்கிவைக்கப்பட்டதாகவும், ஹவ்வா(அலை) ஜித்தாவில் இறக்க வைக்கப்பட்டதாகவும் வந்துள்ளது. பின்னர் நபி ஆதம்(அலை) அவர்கள் ஹவ்வா(அலை) அவர்களை தேடிச் சென்று மக்கா அருகிலுள்ள முஜ்தலீபா (Muzdalifah) என்ற இடத்தில் ஹவ்வா(அலை) அவர்களை சந்தித்தார்கள். முஜ்தலீபா என்பது ஹஜ்ஜிக்கு செல்லக் கூடியவர்கள் ஒன்று சேர வேண்டிய இடங்களில் ஒரு இடமாகும். முஜ்தலீபா என்ற சொல் இஜ்தலபா(Izdalafah) என்ற அரபி வார்த்தையில் இருந்து வந்தது, இதன் அர்த்தம் அணுகுதல் என பொருட்படும். அதாவது அந்த இடத்தில் நபி ஆதம் (அலை) அவர்கள் அணுகியதால் (சந்தித்ததால்) முஜ்தலீபா(Muzdalifah) என பெயர் வந்து இருக்கலாம்.
பதிலளிநீக்குஅல்-தப்ரானீயில் அபு நுஹைம் மற்றும் இப்னு அஸ்கர் ஆகியோர், அபு ஹுரைறா(ரழி) அவர்களும் அறிவிக்கின்ற ஹதீஸில் நபி ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் ஒரு பகுதி (ஸ்ரீலங்கா)யில் இறக்கப்பட்டதாக வந்துள்ளது. தப்ரானீயின் மற்றோரு அறிவிப்பில் அப்துல்லா இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறிய ஹதீஸில், நபி ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப்பட்டதாகவும், பின்னர் மக்கா சென்ற தாகவும், அதன் பின்னர் ஷாம் (சிரியா மற்றும் அதன் சுற்று) பகுதியில் வாழ்ந்து அப்பகுதியில் மரணமடைந்தாகவும் என வந்துள்ளது.
மேற்கூறப்பட்ட பல அறிவிப்புகளில் இருந்து பார்க்கும் சமயம் ஆதம் (அலை) அவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா பிரதேசத்தில் இறக்கப்பட்டதாக பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது. இப்னு பத்துட்டா (Ibn Batuttah) என்ற மொரோக்கோ நாட்டைச் சார்ந்த வரலாறு ஆய்வாளர் இவ்விஷயத்திற்காகவே இலங்கை சென்று இவ்விஷயங்களை ஆய்வு செய்தார்கள்.[3]
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D)
மேலும் அவர்கள் அல்லாஹுவிடம் மன்றாடியதால் அவரின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு குழந்தை செல்வங்களை வழங்கினால் எவ்வாறு வழங்கினான் என்றால் ஒரு ஆன் பெண் போன்றே வழங்கி இருக்கிறான்
பதிலளிநீக்குமேலும் அல்லாஹ் நமது தந்தைக்கு அல்லாஹ் ஜிப்ரகில் அலைஹி வசல்லம் அவர்களின் மூலம் எவ்வாறு விவசாயம் செய்வது எவ்வாறு இப்பூமியில் வாழ்வது போற்றவற்றை கற்றுகுடுததாக மார்க்க அறிஞர்கள் குறிபிடுகிறார்கள்
அவர்களில் மூத்தவர் காபில்(qabil) மற்றும் ஹாபில் (habil) இவர்களது இருவரின் சகோதரிகளும் மாறி மாறி திருமணம் செய்ய அல்லாஹ் உத்தரவு வழங்கினான் மேலும் அதனை அவர் தந்தை அவர்கள்தாம் பிள்ளைகளிடம் கூறிய பொழுது அவர்களுக்குள் தர்க்கம் ஏற்பட்டது எனது சகோதரியை திருமணம் செய்துகொள்கிறேன் என்று காபில் கூரினார் அதற்கு அவர் தந்தை உங்களின் வேண்டுகோளை உங்களை படைத்த ராப்பிடமே கேளுங்கள் ஆதலால் அவர்கள் காபில் என்பவன் விவசாயம் செய்துகொண்டிருந்தான் ஆதலால் அவர் நெல் கதிரை மலை மேல் வைத்தான் ஹாபில் என்பவர் இடையன் ஆடுமேய்க்கும் வேலை பார்த்துகொ
ண்டிருந்தார் ஆதலால் ஒரு ஆடை மலைமேல் வைத்தார்கள் யாருடைய கூற்றை அல்லாஹ் அங்கிகரிக்கபோகிறான் என்று அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இளையவனார ஹாபில் அவர்களது கூற்றையே அங்கீகரித்தான் அதாவது தந்தை கூறியபடி சஹோதரிகளை மாற்றி திருமணம் செய்ய அல்லாஹ் ஒப்புகொண்டான் ஆதலால் காபில் நீ எதோ சதி செய்துவிட்டாய் என்று நான் உன்னை கொலை செய்ய போகிறேன் இந்த சம்பவத்தை அல்லாஹ் எவ்வாறு விவரிக்கிறான் என்பதை காண்போம்
https://www.facebook.com/2131838973579153/posts/2774674862628891/
The Bible tells us the name of three sons Cain, Abel, and Seth. How many more children they had is not recorded. we are told that after Seth was born that “. . .And he became father to sons and daughters. . .” (Genesis 5:4)
பதிலளிநீக்குபாடல் எண் : 6
புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே.
பொழிப்புரை :உலகத்தைப் படைப்பவர் ஒருவனும், (சிவனும்) ஒருத்தியும் (சத்தியும்). அவர்கட்குப் புதல்வர் ஐவர். (சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன். எனவே, அவரைக்கொண்டு, அருளல் முதலியவற்றைச் செய்விப்பவன் என்றதாம்) ஐவருள் படைப்புத் தொழிலுக்குத்தான் செய்த புண்ணியத்தால் உரிமை பெற்றவன் தாமரை மலரில் என்றும் இருந்து அத்தொழிலைச் செய்வான்.
பாடல் எண் : 7
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.
பொழிப்புரை : புண்ணியனாகிய சிவபெருமான் உலகெங்கும் நிறைந்து, எளிய உயிர்களை வளர்ப்பான். அவ்வாறே சத்தியும் சிவனது சங்கற்பரூபமாய் அவனோடு பூவில் மணம் போலப் பொருந்தி எங்கும் நின்று, அவன் கருதும் செயல்களை யெல்லாம் செய்வாள்.
வெளி 14
பதிலளிநீக்குTamil Bible: Easy-to-Read Version
மீட்கப்பட்டவர்களின் பாடல்
14 பிறகு நான் பார்த்தபோது என் முன்னால் ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன். அவர் சீயோன் மலைமீது நின்றுகொண்டிருந்தார். அவரோடு ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் இருந்தனர். அவர்களது நெற்றியில் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் அவரது பிதாவின் பெயரும் எழுதப்பட்டு இருந்தது.
2 பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியின் பெரு முழக்கத்தைப்போலவும் ஒரு சத்தம் பரலோகத்தில் ஏற்பட்டதைக் கேட்டேன். அச்சத்தம் சுரமண்டலக்காரர்களால் தம் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. 3 மக்கள் ஒரு புதிய பாடலைச் சிம்மாசனத்துக்கு முன்பாகவும் நான்கு உயிருள்ள ஜீவன்களின் முன்பாகவும் மூப்பர்களின் முன்பாகவும் பாடினர். அப்புதிய பாடலை ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களே பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். வேறு எவராலும் அப்பாடலைக் கற்றுக்கொள்ளமுடிய வில்லை.
4 அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களால் தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டியானவருக்கும் தேவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மனிதர்கள். 5 இவர்கள் பொய் சொல்லும் குற்றத்துக்கு ஆளாகாதவர்கள். இவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%2014&version=ERV-TA
குறள் 687
பதிலளிநீக்குகடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை
[பொருட்பால், அமைச்சியல், தூது]
ஒரு தூதுவனின் பொறுப்புகள் என்ன?
1. தான் ஆற்றவேண்டிய கடமைகளை / முறைமைகளை நன்கு ஆராய்ந்து அறிந்துக்கொள்ள வேண்டும். தான் தூதுக்கு செல்லுகிற நாட்டை பற்றியும் அந்நாட்டின் முறைகளை பற்றியும் அறிந்துக்கொள்ள வேண்டும். அந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு தன்னை பொருத்திக்கொள்ள வேண்டும். தான் தூதாக கூறுகின்ற செய்தியை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு வரக்கூடிய எதிர்வினைகளையும் கேள்விகளையும் ஆராய்ந்து அதற்கு தன்னை ஆயுதப்படுத்துக்கொள்ள வேண்டும்.
2. தூது செய்தியை சொல்ல வேண்டிய தக்க காலம் / பொழுதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்
3. தூது செய்தியை சொல்ல வேண்டிய தக்க இடத்தையும் ஆராயவேண்டும். சில செய்திகள் நேரடியாக தனியே கூறவேண்டிய ராஜாங்க ரகசிய செய்திகள். ஆதலால் செய்திக்கும் நாட்டிற்கும் அவசரத்திற்கும் முக்கியத்துவத்திற்கும் ஏற்ப இடங்கள் மாறும்.
இவ்வாறு தூதை மேற்கொண்டு செய்பவனே சிறந்த தூதனாக விலங்குவான்.
https://dailyprojectthirukkural.blogspot.com/search?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ் (ஏலாதி 26)
செல்லுங்கால் தேயத் தியல்தெரிந்து சென்றக்கால்
புல்லிய சுற்றம் புணர்வறிந்து - புல்லார்
மனத்தால் பிரித்து வலியால் உதவும்
இனத்தால் தெரிவது தூது (பாரத வெண்பா)
5:19. வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
பதிலளிநீக்குசிவசித்தர்
பதிலளிநீக்குபாடல் எண் : 12
வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.
பொழிப்புரை :
குருவருள் பெற்ற பின்னர் உயிரினது வியாபகம் சிவனது வியாபகத்துள் அடங்கி நிற்கும் முறைமையையும், உயிர் அவனிடத்துச் செய்யும் அன்பாகிய நெகிழ்ச்சி அவனது பேரருளாகிய நெகிழ்ச்சியினுள் அடங்கிநிற்கும் முறைமையையும், உயிரினது அறி வாகிய சிற்றொளி, சிவனது அறிவாகிய பேரொளியில் அடங்கி நிற்கும் முறைமையையும் அநுபவமாக உணர்கின்றவரே சிவனைப் பெற்றவராவர்.
பாடல் எண் : 13
சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.
பொழிப்புரை :
சிவனைப் பெற்றவர் எனப்படுவோர், சிவ லோகத்தை இவ்வுலகிலே கண்டவரும், வாக்குகளையும், அவற் றிற்கு முதலாகிய குடிலையையும் தம்முள் அடங்கக் கண்டு நீங்கின வர்களும், அழிவில்லாதவர்களும், மலமாசு அகன்றவரும், மனக் கவலை மாற்றினவரும், எல்லையில் இன்பத்தில் நிற்பவரும் ஆகியவரே. அவர்கள் விடுதலை எய்தியது கருவிகள் முப்பத் தாறினின்றுமாம்.
பாடல் எண் : 14
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.
பொழிப்புரை :
சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச் சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10104
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
பதிலளிநீக்குஉள்ள பொருள் உடல் ஆவி உடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி அறியச் சிவபதம் தானே !
(பாடல் : 1693).
பொருள் : உபதேசம் பெறவும், வாழ்வியல் நெறிமுறைக்கு பயிற்சி பெறவும் ஒரு குருவை, ஆசிரியரைக் கொள்ள விரும்பினால், நல்ல குருவை, ஆசிரியரைத் தேடி குருவாகக் கொள்ளுங்கள். அப்படித் தேடி அடைந்த நல்ல குருவிற்கு, உடல், பொருள், ஆவி அனைத்தையும் காணிக்கையாகத் தருக. எள்ளளவும் இடைவிடாமல், அவர் காட்டிய வழியிலே நின்றால், தானே தெளிந்து அறிந்து, சிவ பேறு அடையலாம்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே -(பாடல்: 139)
குருநாதரின் திருஉருவைக் கண்டு வணங்குவது, குருவின் திருப்பெயரை தியானிப்பது, குருவின் வார்த்தைகளைக் கேட்டு நடப்பது, குருவின் திருவுருவை நெஞ்சில் நிறுத்தி, அவரையே சிந்திப்பது இவையே சீடனுக்குரிய கடமைகள். அவை ஞானத்தை விசாலமடையச் செய்பவை.
ஒளி தரும் குரு
பதிலளிநீக்குவழிகாட்டுவதற்காக நாம் தேர்வு செய்துகொண்டவரும் நம்மைப் போலவே பார்வையற்றவராக, வழி தெரியாதவராக இருந்தார் என்றால், நாம் போக வேண்டிய புதிய இடத்துக்குப் போய்ச்சேர முடியுமா? போகிற வழியில் ஏதேனும் ஒரு குழியில் தடுமாறித் தலைகுப்புற உருள வேண்டியதுதான். எனவே, சரியான வழிகாட்டியைத் தேர்வு செய்வதென்பது மிகவும் இன்றியமையாதது—உலகியல் பாதையில் வழிகாட்டுவதற்கு மட்டுமன்று, உயிரியல் பாதையில் வழிகாட்டுவதற்கும். திருமூலர் சொல்கிறார்:
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;
குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவீழு மாறே
(திருமந்.1680)
குரு என்பது தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்துவரும் நற்றமிழ்ச் சொல். குரு என்றால் ஒளி; செம்மை; முளைப்பு. வெள்ளை வெளேரென்ற நிறமுடைய பறவையாகிய நாரையைக் ‘குருகு’ என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மையை வைத்துத்தான். இரத்தத்தைக் ‘குருதி’ என்று சொல்வது அதன் செம்மையை வைத்துத்தான். வாழையின் அடியில் கிளைத்துவரும் இளங்கன்றைக் ‘குருத்து’ என்று சொல்வது அதன் முளைப்பை வைத்துத்தான். எது ஒளியுடையதோ எது செம்மையுடையதோ எது முளைத்துப் பெருகக்கூடியதோ அது குரு. அந்த அடிப்படையில் ஒளியையும் செம்மையையும் முளைப்பையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தன்னிலிருந்து பிறருக்குக் கடத்துகிற ஆசிரியர் ‘குரு’ ஆகிறார்.
குருஎன் பவனே வேதஆகமம் கூறும்
பதிலளிநீக்குபரஇன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை இன்றி உயர்பாசம் நீக்கி
வரும்நல் குரவன்பால் வைக்கலும் ஆமே. (திருமந்திரம் 2057)
குரு என்பவன், பற்றுதலை அறுத்தவன்; சிவயோகத்தைத் தன் வழிமுறையாகக் கொண்டவன்; எண்ணுவதற்கும் அடைவதற்கும் ஏதுமில்லாத நிலையில் எண்ணங்களே இல்லாமல் இருப்பவன்; சமய நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் பேரின்பத்தில் திளைத்து வாழ்பவன்; அவனிடம் நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்.
இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
பதிலளிநீக்குபாடல் எண் : 4
சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.
பொழிப்புரை :
ஞான நெறியை உணர்த்துகின்ற ஞானகுருவின் திருமுன்பில், `பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்` என்னும் தீய சொற்கள் எவர் வாய்வழியாக நிகழினும் உலகில் நன்னெறி அழிந்து, மெய்யுணர்வும் இல்லாதொழியும். தொன்றுதொட்டு வரும் உலகியல் துறைகளும், மெய்ந்நெறித் துறைகளும் மக்களால் மறக்கப்பட்டுப் பல சமயங்களும் கெட, நாட்டில் பஞ்சமும் உண்டாகும்.
http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10222
16:63. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம் - ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் - ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் - இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
பதிலளிநீக்கு29:18. இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.”
பதிலளிநீக்கு43:6. அன்றியும், முன்னிருந்தோர்களிடமும் நாம் எத்தனையோ தூதர்களை அனுப்பியிருக்கிறோம்.
பதிலளிநீக்கு51:52. இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
பதிலளிநீக்குயார் சித்தர்கள்
பதிலளிநீக்கு168. வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.
(ப. இ.) திருவருள்வெளி சிவபெருமான்வெளியின்கண் சென்று ஒடுங்கிய முறைமையும், சிற்றுயிர்கள்மாட்டு வைக்கும் பேரன்பாகிய உயிரளி சிவபெருமான் பெரும்பேரின்ப அளியில் அடங்கியவாறும், திருவடியுணர்வு கைவந்த அருளொளி உயிர் சிவஒளியில் உள்ளொடுங்கியவாறும் திருவருளால் சிவஞானத்தால் தெளியுமவர்களே சிவ சித்தராவர். சிவசித்தர் : செம்பொருட்டுணிவினர். வெளி, மனவெளி எனலும் ஒன்று.
https://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=169&book_id=118&head_id=67&sub_id=2384
169. சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர
முத்தர் தம் முத்தி முதல் முப்பத்து ஆறே.
(ப. இ.) மேலோதிய சிவசித்தர் சிவவுலகினை இம்மையிலே இருக்குமிடத்தே கண்டு வழிபட்ட மாண்பினர். ஓசையும் அவ்வோசை ஒடுங்கும் தூமாயையும் திருவருளால் தம்முள் கண்ட தனித் தவத்தவராவர். அவர்கள் சிவத்துடன் கூடினமையால் பிறப்பு இறப்பு அற்றுச் சிறப்புற்று என்றும் ஒன்றுபோலிருப்பவர். மலமற்றவர். மலச்சார்பானிகழும் இருவினை மாசற்றவர். என்றும் அழியா விழுப்பேற்றினர். அவர் எய்தும் விழுப்பேறு ஏணிப்படிபோல் அமைந்த அருஞ்சைவர் தத்துவம் முப்பத்தாறினையும் கடந்த மாற்ற மனங்கழிய நின்ற தோற்றருநிலை.
https://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=170&book_id=118&head_id=67&sub_id=2384
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;
பதிலளிநீக்குகுருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;
குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவீழு மாறே
(திருமந்.1680)
குரு என்பது தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்துவரும் நற்றமிழ்ச் சொல். குரு என்றால் ஒளி; செம்மை; முளைப்பு. வெள்ளை வெளேரென்ற நிறமுடைய பறவையாகிய நாரையைக் ‘குருகு’ என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மையை வைத்துத்தான். இரத்தத்தைக் ‘குருதி’ என்று சொல்வது அதன் செம்மையை வைத்துத்தான். வாழையின் அடியில் கிளைத்துவரும் இளங்கன்றைக் ‘குருத்து’ என்று சொல்வது அதன் முளைப்பை வைத்துத்தான். எது ஒளியுடையதோ எது செம்மையுடையதோ எது முளைத்துப் பெருகக்கூடியதோ அது குரு. அந்த அடிப்படையில் ஒளியையும் செம்மையையும் முளைப்பையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தன்னிலிருந்து பிறருக்குக் கடத்துகிற ஆசிரியர் ‘குரு’ ஆகிறார்.
https://www.hindutamil.in/news/spirituals/108607-07-3.html
மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
பதிலளிநீக்குடாயுஞ்சிவ மூர்த்தி யைந்து. 6 ஞானகுறள்
- மாயன், பிரமன், உருத்திரன், மகேசன், சிவன் என்பன ஐந்து மூர்த்திகள்.
மூர்த்திகள் என்பது தூதர்களை குறிக்கிறது, விளக்கவுரை ஆய்வு வெண்டும்
https://tamilan.forumta.net/t213p50-topic மெய்க்குரு
பதிலளிநீக்குமுகமது நபி இறுதி தூதர் எனவே அவருக்கு பின் வந்த எந்த ஆன்மீக மறை நூல்களும், அறநெறி நூல்களும் இறைவனிடத்தில் இருந்து வந்ததல்ல..
பதிலளிநீக்குஆபரஹாமிய மாதங்களில் கிறிஸ்துவுக்கும் இறுதி தூதரான நபிகளாருக்கும் இடைப்பட்ட எந்த வேதமும் வரவில்லை.. எனவே இதுதான் மற்ற மூன்று திசைகளின் நிலையாக இருக்கும். எனவே பைபிள் காலகட்டத்துக்கு பிறகு வேறு எந்த மொழியிலும் வேதம் இருக்க வாய்ப்பில்லை.
திருமந்திரம் 6 Tirumanthiram 1703
பதிலளிநீக்கு14.
பக்குவன்
1690
தொழுதறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறியாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே. 1
சுருதி வேதத்தைக் கண்ணாகக் கொண்டு இறைவனைத் தொழும் குருவை அறிபவரே வாழும் வழியை அறிந்தவர்
1691
பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி
யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. 2
பரமா! உன்னை நாடினேன். இனி யாரொடும் கூடேன். ஆண்டருள்க.
1692
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே. 3
அ
1693
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே. 4
நல்ல குருவினைக் கொள்க
1694
சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே. 5
நீதி நேர்மைகளை நினைத்த குருவை தேடிக் கொள்
1695
தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே. 6
இறைவன் திருவடி கண்டு அருள் பெறுக
1696
சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே. 7
அறநெறி சாத்த வல்ல குருவுக்குச் சீடன் ஆகுக
1697
சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்
சித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே. 8
ஞானம் பெறப் பணிந்து ஆனந்த சத்தியில் இச்சை கொள்பவன் சற்சீடன்
1698
அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே. 9
சத்தி அருளைப் பெறவேண்டும்
1699
சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன்
ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே. 10
குருபரன் பால் சென்றவன் ஞானத்தன்
1700
உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே. 11
நாவுடையாளை உணர்த்துபவர் பக்குவர்
1701
இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே. 12
சிவத்தோடு அறிவு புகட்டுபவன் சன்மார்க்கி
1702
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே. 13
வேட்கை விடுதல் வேதாந்த நெறி
1703
சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே. 14
சற்குணம்
வாய்மை
தயா
விவேகம்
ஆகியவற்றோடு சிற்பர ஞானம் தெளிவோர் சற்சீடர்
https://vaiyan.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%201703
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
பதிலளிநீக்குகுருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே". (திருமந்திரம் - 1581)
ஞானக்குறள் 21. குருவழி
பதிலளிநீக்குதன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன். 201
தன்னைத்தான் அறியும்படியான அகத்தவத்தைச் செய்யும் ஞானிகளின் சிந்தையில் சிவம் நிலைத்து நிற்கும்.
யோகம் செய்பவர்கள் யோகிகள். ஞானம் அடைந்தவர்கள் ஞானிகள். சிந்தை தெளிந்தவர்கள் சித்தர்கள். புத்தி தெளிந்தவர்கள் புத்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அனைவரும் ஒத்த கருத்துள்ளவர்களே.
சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம். 202
எந்தநேரமும் சிவத்தையே சிந்தித்திருக்கும் தவஞானிகளின் சிந்தையில் சிவன் நிலையாக வீற்றிருப்பான்.
குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம். 203
குருவைப் பணிந்து தொழுது பணிவிடை செய்யாதவர்களது சிந்தையில் சிவன் தோன்றமாட்டான். குருவுக்கு பணிவிடை செய்து அவர் வழிகாட்டலின்படி இறைவனைத் தேடு சிவனைக் காண்பாய்.
தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம். 204
ஒரு குருவின் வழிகாட்டுதல் மூலமாகவே உன்னால் ஞானத்தை அடையமுடியும். இல்லையேல் வலையில்ச் சிக்கிய மானைப் போல உலக சிற்றின்பங்களில் மயங்கித் திரிவாய்.
நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற் றிருக்குஞ் சிவம். 205
ஞானமடைந்த ஒரு குருவின் வழிகாட்டலில் சிவனைத் தேடினால் ஞானம் கிடைக்கும்.
நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம். 206
ஞான வழிகாட்டும் நூல்களைக் கற்பதால் மட்டும் ஞானம் கைகூடாது. அதாவது ஒரு குருவின் வழிகாட்டுதலுடனேயே சிவனைத் தேடவேண்டும்.
நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப்பிரி யாது சிவம். 207
நினைப்பு, மறப்பற்ற நெஞ்சத்தில் அதாவது தனை மறந்தார் நெஞ்சத்தில் சிவம் வாழும்.
ஒன்றிலொன் றில்லாத மனமுடை யாருடல்
என்றுமொன் றாது சிவம். 208
உடலும் உள்ளமும் ஒருமித்து செயற்படாதவர் சிந்தையில் சிவன் தோன்ற மாட்டான்.
நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம். 209
எல்லோருக்கும் யோகத்தில் நாட்டம் ஏற்படாது. அப்படி யோகத்தில் நாட்டம் ஏற்பட்டவர்களது சிந்தையில் சிவன் நாடி வருவான்.
பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம். 210
ஐம்புலன்களின் ஈர்ப்பினால் உண்டாகும் பஞ்சமா பாதகச் செயலில் இருந்து விடுபடாதவர்களது சிந்தையில் சிவன் தோன்ற மாட்டான். அதாவது ஐம்புலன்களை அடக்கி மனதை உள்ளே செலுத்தித் தியானித்தால் மட்டுமே சிவனை அறிய முடியும்.
21. குருவழி
பதிலளிநீக்கு201.தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன்.
தன்னைத்தான் அறியும்படியான அகத்தவத்தைச் செய்யும் தவசிகளின் நினைவில் அரனாகிய சிவம் நிலைத்து நிற்கும்.
202.சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம்.
சிவத்தையே சிந்தித்திருக்கும் தவஞானிகளின் சிந்தனையானது சிவம் செய்யும் சிந்தனையாக மாறிவிடும்.
203.குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்.
ஞானாசிரியனால் திருவடி ஞானம் பெறாதோருக்கு சிவம் உருவற்று நிற்கும். அப்படியெனில், திருவடி ஞானம் பெற்று, முக்கலையொன்றித்து ஞானவினை செய்யும் தவசிகளுக்குத் தன் சிந்தையிலேயே உணர்வாய் நிற்குஞ் சிவம் என்பதாம்.
204.தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்.
ஞானவினையின் மருமங்களையறிந்த ஞானாசிரியனின் (சந்=ஞானஒளி; நிதி= புதைந்துள்ள மெய்ப்பொருள்; ஒளிமிகு பொருள்) சந்நிதி இல்லையெனில், வலையாகிய உலக மாயைகளில் அகப்பட்டு மானாகிய சீவன் அலைக்கழிக்கப்படும்.
205.நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற் றிருக்குஞ் சிவம்.
ஐயந்திரிபறக் கற்று அதன் வழி நிற்கும் ஞானாசிரியன் முறைப்படி சுட்டிவிளக்க, அதைச் சலனமில்லாது ஆற்றுபவனுக்குச் சிவம் பிரிவற்றிருக்கும்.
206.நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம்.
நல்லவற்றைக் கூறும் பல ஞான நூல்களைப் படிப்பதால் மட்டும் எல்லையில்லா சிவத்தையுணர்தல் அரிது.
207.நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப்பிரி யாது சிவம்.
நினைப்பு, மறப்பற்ற நெஞ்சத்தில் சிவம் வாழும்.
208.ஒன்றிலொன் றில்லாத மனமுடை யாருடல்
என்றுமொன் றாது சிவம்.
முக்கலை யொன்றித்தலாகிய ஞானவினை செய்யாதவரிடம் எப்போதும் சிவம் சேராது.
209.நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம்.
பார்வையை செலுத்தவியலா இடத்தில் பார்வையாகிய நோக்கை சலனமின்றி நிலைநிறுத்த சிவம் நீங்காது(ஞானாசிரியன் தேவை).
210.பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்.
ஐந்து இந்திரியங்கள் சேரும்போது உண்டாகும் பெருமை பொருந்திய (ஆக்ஞா சக்கரத்திலிருந்து) நாதசக்தியை எழுப்பி அதனோடு ஒன்றிய மனுவைச் சிவமழைத்து அஞ்சாதே என்று சொல்லும்.
https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_4.html
பதிலளிநீக்குஉவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். குறள்:394
விளக்கம்: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
கல்வி கரையில கற்பவர் நாள்சில;
பதிலளிநீக்குமெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. 135
விளக்கம்: கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்றுப் பொறுமையாக நினைத்துப் பார்த்தால் அந்தச் சில வாழ்நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார், நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.
பாடல் 539: இரண்டாம் தந்திரம் பொறையுடைமை (பொறுமை)
பதிலளிநீக்குபற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையுந்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.
விளக்கம்: உண்மை வழியைப் பற்றி அதிலிருந்து விலகாமல் நிற்கும் யோகியர்களின் நெஞ்சில் இறைவனோடு இரண்டறக் கலக்கவேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கின்றது. பல்லி எப்படி தான் பற்றியதை விடாதோ அதுபோல எண்ணமும் தான் எண்ணியதை விடாது. இந்திரியங்களை (மூக்கின் வழியாக பிராணாயாமமும், நாக்கின் வழியாக மந்திரமும்) அடக்கி சிந்தனையை பல எண்ணங்களில் வீணாக சிதறவிடாமல் பொறுமையாக இருப்பவர்களுக்கு வற்றாத அமுதம் சுரக்கும்.
https://kvnthirumoolar.com/song-539/
10.0.05. திருமூலர் வரலாறு
பதிலளிநீக்குநந்தி திருவடி யான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. 1
செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே. 2
இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. 3
சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந் தோமால். 4
மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. 5
நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே. 6
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. 7
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. 8
பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. 9
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. 10
செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே. 11
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. 12
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. 13
பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. 14
அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்
தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. 15
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே. 16
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத முமளித் தானெங்கள் நந்தியே. 17
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே. 18
விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே. 19
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந் தேனே. 20
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. 21
பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே. 22
Read more at: https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandirum-payiram-thirumoolar-varalaaru/#gsc.tab=0
10.0.06. அவையடக்கம்
பதிலளிநீக்குஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே. 1
பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே. 2
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே. 3
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால் இப் பயனறி யாரே. 4
Read more at: https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandiram-payiram-avaiyatakkam/#gsc.tab=0
10.0.07. திருமந்திரத் தொகைச் சிறப்பு
பதிலளிநீக்குமூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1
வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே. 2
Read more at: https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandiram-payiram-thirumanthirath-thogai-sirappu/#gsc.tab=0
10.0.08. குரு மட வரலாறு
பதிலளிநீக்குவந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. 1
கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே. 2
Read more at: https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandiram-payiram-guru-mata-varalaru/#gsc.tab=0
தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
பதிலளிநீக்கு1 தீமோத்தேயு 2:5
ஆனால் அல்லாஹ், வணக்க வழிபாடு செய்வதற்காக மஸ்ஜிதை எழுப்ப சொன்னான்.
பதிலளிநீக்குஅல்லாஹ் கூறுகிறான் :
لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ
ஆகவே, (நபியே!) நீர் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழ(வும் தொழவைக்கவும்) மிகத் தகுதியுடையது. (அல்குர்ஆன் 9 : 108)
https://www.muftiomar.com/videodetails/621
3:179. (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
பதிலளிநீக்குலூக்கா 4::24
பதிலளிநீக்குமேலும் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு தீர்க்கதரிசியை அவனது சொந்த நகரத்தார் ஏற்றுக்கொள்வதில்லை.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%204%3A16-30&version=ERV-TA
தூது
பதிலளிநீக்கு681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
682
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று.
683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
684
அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க தறிவதாந் தூது.
687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை.
688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
689
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.
690
இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாம் தூது.
https://thirukkuralvilakkam.blogspot.com/2013/05/thoodhu.html
2:285. (நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார்: (அவ்வாறே) நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர் (மலக்கு)களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்; "அவனது தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை காண்பிக்கமாட்டோம்" (என்றும்); "இன்னும், நாங்கள் செவிமடுத்தோம்; நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.
பதிலளிநீக்கு