கிறிஸ்தவம்
23,“எனவே, நீங்கள் தேவனுக்கு உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்பொழுது மற்றவர்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்தும்பொழுது, உங்கள் சகோதரன் உங்கள் மீது வருத்தத்துடன் இருப்பது உங்கள் நினைவிற்கு வந்தால், 24 உங்கள் காணிக்கையைப் பலிபீடத்திற்கு முன் வைத்துவிட்டு, சென்று அவனுடன் சமாதானமாகுங்கள். பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். - (மத்தேயு 5)
19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. (மத்தேயு 23:19)
இதில் இயேசு விலங்குகளை பலியிடும் வழிபாட்டு முறையானது மக்களிடம் நன்முறையில் நடந்து கொண்டால்தான் பிரயோஜனம் எனும் கருத்தில் கூறுகிறார்.
வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’ அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள். (மத்தேயு 12:7)
நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைப் பலியிடுவதை நான் விரும்பவில்லை. நான் மக்களிடம் கருணையை விரும்புகிறேன். நல்லவர்களை அழைக்க நான் வரவில்லை. பாவம் செய்தவர்களை அழைக்கவே நான் வந்தேன்” என்று கூறினார். (மத்தேயு 9:13)
விலங்குகளை பலியிடும் முறை ஏறக்குறைய கிறிஸ்தவத்தில் இல்லாமல் போனதற்கு இந்த இரண்டு வசனங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் அது நேரடியாக பலியிடுவதை தடுக்கவேண்டும் என்று கூறவில்லை. அதற்கான குறியீடும் அந்த வசனத்தில் உளள்து. மேலும் அவர் மோசஸின் சட்டத்தை முழுமைப்படுத்தவே வந்தார்.
அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜன பந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக் கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? - (1கொரிந்தியர் 10:20-22)
வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’ அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள். (மத்தேயு 12:7)
நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைப் பலியிடுவதை நான் விரும்பவில்லை. நான் மக்களிடம் கருணையை விரும்புகிறேன். நல்லவர்களை அழைக்க நான் வரவில்லை. பாவம் செய்தவர்களை அழைக்கவே நான் வந்தேன்” என்று கூறினார். (மத்தேயு 9:13)
விலங்குகளை பலியிடும் முறை ஏறக்குறைய கிறிஸ்தவத்தில் இல்லாமல் போனதற்கு இந்த இரண்டு வசனங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் அது நேரடியாக பலியிடுவதை தடுக்கவேண்டும் என்று கூறவில்லை. அதற்கான குறியீடும் அந்த வசனத்தில் உளள்து. மேலும் அவர் மோசஸின் சட்டத்தை முழுமைப்படுத்தவே வந்தார்.
அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜன பந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக் கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? - (1கொரிந்தியர் 10:20-22)
யூதம்
எனவே, பொன் அல்லது வெள்ளியால் எனக்கு இணையாக நீங்கள் விக்கிரகங்களை உண்டாக்க வேண்டாம். இந்த போலியான தெய்வங்களை நீங்கள் செய்யக்கூடாது. “எனக்கென்று விசேஷ பலிபீடம் செய்யுங்கள். அதைக் கட்டும்போது மண்ணைப் பயன்படுத்துங்கள். அதன்மேல், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் ஆடு மாடுகளை இதற்கென்று பயன்படுத்துங்கள். என்னை நினைவு கூரும்படியாக நான் சொல்கிற இடங்களிலெல்லாம் இதைச் செய்யுங்கள். அப்போது நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். (யாத்திராகமம் 20:23-24)
குறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்! - (உபாகமம் 17:1)
சரியானதும் நேர்மையானதுமான செயல்களைச் செய்யுங்கள். பலிகளை விட இத்தகையவற்றையே கர்த்தர் விரும்புகிறார். - (நீதிமொழிகள் 21:3)
இஸ்லாம்
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக!”. (அத்தியாயம் 108 ஸுரத்துல் கவ்ஸர் – 2வது வசனம்)
குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22 ஸுரத்துல் ஹஜ் 37)
தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார். (குர்ஆன் 2:67)
(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள். (குர்ஆன் 2:71)
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (திருக்குர் ஆன் 2:173)
ஏசாயா 1:11-15
பதிலளிநீக்கு“உங்கள் தியாகங்களின் திரள் எனக்கு என்ன? இறைவன் கூறுகின்றான் ; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், நன்கு மேய்ந்த மிருகங்களின் கொழுப்பையும் எனக்குப் போதுமானது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், ஆடுகளின் இரத்தத்தில் நான் மகிழ்ச்சியடைவதில்லை. “நீங்கள் என் முன் ஆஜராக வரும்போது, என் நீதிமன்றங்களை மிதிக்குமாறு உங்களிடம் கேட்டது யார்? இனி வீண் காணிக்கைகளைக் கொண்டு வர வேண்டாம்; தூபம் எனக்கு அருவருப்பானது. அமாவாசை மற்றும் ஓய்வுநாள் மற்றும் மாநாடுகளின் அழைப்பு - அக்கிரமத்தையும் புனிதமான கூட்டத்தையும் என்னால் தாங்க முடியாது. உங்கள் அமாவாசைகளையும், உங்களது நியமிக்கப்பட்ட விருந்துகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவை எனக்குச் சுமையாகிவிட்டன; நான் அவற்றைத் தாங்குவதில் சோர்வாக இருக்கிறேன். நீ உன் கைகளை விரிக்கும்போது, என் கண்களை உனக்கு மறைப்பேன்; நீங்கள் பல பிரார்த்தனைகள் செய்தாலும் நான் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் இரத்தத்தால் நிறைந்துள்ளன.
லேவியராகமம் 18:21
உங்கள் பிள்ளைகளில் யாரையும் மோலேக்கிற்குப் பலியிட வேண்டாம், அதனால் உங்கள் கடவுளின் பெயரைக் கெடுக்க வேண்டாம்: நான் கர்த்தர் .
https://www.openbible.info/topics/worship_of_false_gods
மாற்கு 12:28-34: தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை
பதிலளிநீக்குமிக முக்கியமான கட்டளை எது?
28 வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான்.
29 அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ [a] இது முதல் கட்டளை. 31 ‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’ [b] என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார்.
32 அதற்கு அந்த மனிதன், “போதகரே! இது ஒரு நல்ல பதில். நீங்கள் சரியான பதிலையே சொல்லி இருக்கிறீர்கள். கர்த்தர் ஒருவரே நம் தேவன். அவரைத் தவிர வேறு தேவன் இல்லை. 33 ஒருவன் தேவனைத் தன் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை” என்றான்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%2012%3A28-34%2CMark%2012%3A28-34%2C%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%2010%3A25-28%2CLuke%2010%3A25-28&version=ERV-TA;NIV
உபாகமம் 12:31
பதிலளிநீக்குஉங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அதைப்போன்று செய்துவிடாதீர்கள். அந்த விதத்தில் நமது தேவனை தொழுதுகொள்ள வேண்டாம். ஏனென்றால் கர்த்தர் அருவருக்கின்ற எல்லா தீய செயல்களையும், அவர்கள் செய்துள்ளார்கள். அவர்களது பிள்ளைகளைக்கூட அந்த பொய்த் தெய்வங்களுக்காக தீயிலிட்டு பலியிட்டனர்!
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2012%3A31&version=ERV-TA