பொய் தெய்வங்கள் எவைகள்?

கிறிஸ்தவம் 


“அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள், ‘ந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை. அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’” என்று கர்த்தர் சொல்லுகிறார். - (எரேமியா 10:11)

ஜனங்கள் மூடர்களாக இருக்கிறார்கள்! உலோகச் சிற்பிகள் தாங்கள் செய்த விக்கிரகங்களைக் கொண்டு அவமானத்துக்குள்ளாகின்றனர். அந்தச் சிலைகள் வெறும் பொய் என்று அவர்கள் அறிவார்கள். அந்த விக்கிரகங்களுக்கு உயிர் இல்லை. அந்த விக்கிரகங்கள் பயனற்றவை. அவை பொய்யானவை. வஞ்சிக்கும்படியாக செய்யப்பட்டவை. நியாயத்தீர்ப்புக் காலத்தில், அவ்விக்கிரகங்கள் அழிக்கப்படும். - (எரேமியா 10:14-15)

 நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன். நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன். - (மீகா 5:14)

இஸ்லாம் 


பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும். (குர்ஆன் 55:26-27)

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! - (திருக்குர்ஆன் 28:88)

தமிழர் சமயம் 


அச்சமே ஆசை உலகிதம் அன்புஉடைமை
மிக்கபா சண்டமே தீத்தெய்வம் - மெச்சி
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களில் குன்றா தவர். - (அறநெறிச்சாரம் அவ்விநயம் ஆறு பாடல் -60)

விளக்கவுரை மாட்சிமைப்பட்ட குணங்களில் குறையாத சான்றோர்கள் அச்சமும் ஆசையும் லெளகிகமும் அன்புடைமையும் இழிவு மிகுந்த புறச் சமயமும், கொடிய தெய்வத்தைப் பாராட்டி வணங்குவதும் விநயம் அல்லாதது என்று கூறுவர்.

43 கருத்துகள்:

  1. 16 பொய் தெய்வங்களை வணங்கி அவருடைய எரிச்சலைக் கிளப்பினாய்.g
    அருவருப்பான காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாய்.h
    17 கடவுளுக்குப் பலி செலுத்தாமல், பேய்களுக்குப் பலி செலுத்தினாய்.i
    முன்பின் தெரியாத தெய்வங்களுக்கு,
    நேற்று முளைத்த தெய்வங்களுக்கு,
    உன் முன்னோர்களுக்குத் தெரியாத தெய்வங்களுக்குப் பலி செலுத்தினாய். jw.org/ta/லைப்ரரி/பைபிள்/ஆராய்ச்சி-பைபிள்/புத்தகங்கள்/உபாகமம்/32/#v5032004

    பதிலளிநீக்கு
  2. 21 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை* கும்பிட்டு என் கோபத்தைக் கிளறினார்கள்.p
    வீணான சிலைகளை வணங்கி என்னை நோகடித்தார்கள்.q
    அதனால், ஒன்றுக்கும் உதவாத ஜனத்தைக்கொண்டு நானும் அவர்களுடைய கோபத்தைக் கிளறுவேன்.r
    முட்டாள்தனமான தேசத்தைக்கொண்டு நானும் அவர்களை நோகடிப்பேன். https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/32/#v5032004

    பதிலளிநீக்கு
  3. 37 அப்போது அவர், ‘அவர்களுடைய தெய்வங்கள் எங்கே?t
    அவர்கள் அடைக்கலம் தேடிய கற்பாறை எங்கே?
    38 அவர்களுடைய பலிகளின் கொழுப்பைத் தின்ற தெய்வங்கள் எங்கே?
    அவர்கள் செலுத்திய திராட்சமதுவைக் குடித்த தெய்வங்கள் எங்கே?u
    அவை வந்து அவர்களுக்கு* உதவி செய்யட்டும்.
    அவை அவர்களுக்குப் பாதுகாப்பு தரட்டும்.
    39 நான் மட்டும்தான் கடவுள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.v
    என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.w
    உயிர் கொடுக்கிறவரும் உயிர் எடுக்கிறவரும் நானே.x
    காயப்படுத்துகிறவரும்y குணப்படுத்துகிறவரும் நானே.z
    என் கையிலிருந்து யாரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.a
    40 என் கையை உயர்த்தி,*
    “என்றென்றும் வாழ்கிற என்மேல்” ஆணையாகச் சொல்கிறேன்,*b
    41 என்னுடைய பளபளப்பான வாளைத் தீட்டுவேன்.
    தீர்ப்பு கொடுப்பதற்குத் தயாராவேன்.c
    என் எதிரிகளைப் பழிவாங்குவேன்.d
    என்னை வெறுக்கிறவர்களைப் பழிதீர்ப்பேன்.

    jw.org/ta/லைப்ரரி/பைபிள்/ஆராய்ச்சி-பைபிள்/புத்தகங்கள்/உபாகமம்/32/#v5032004

    பதிலளிநீக்கு
  4. 10:106. உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.

    பதிலளிநீக்கு
  5. 20:89. அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?

    பதிலளிநீக்கு
  6. 25:55. இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்; நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
  7. சங்கச் செய்யுள்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் அணங்கு என்னும் சொல் வழிபாட்டிற்குரியதாக இடம்பெற்றுள்ளது. பேயின் வழிபாடு பற்றி பின்வரும் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளமை வழிபாட்டினை பண்டைய தமிழகம் கொண்டிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

    கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
    வென்றி யல்லது வினையுடம் படினு
    மொன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக்
    கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக
    மள்ளர் மள்ள மறவர் மறவ
    செல்வர் செல்வ செருமேம் படுந
    வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர்க் கொன்ற
    பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
    துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்குத்
    தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி . . . .460

    பதிலளிநீக்கு
  8. கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவரான கபிலர் அவர்களால் யாக்கப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலில் முதலாவதாக கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு முக்கண்ணர் பற்றிய குறிப்பும் அவரை வணங்குவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளமை இ;றைவழிபாட்டினை எடுத்துக்காட்டுகின்றது.

    முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா
    பொற்பனை வெள்ளையை@ யுள்ளா தொழுகின்னா
    சக்கரத் தானை மறப்பின்னாமூ வாங்கின்னா
    சத்தியான் றாடொழா தார்க்கு.

    பதிலளிநீக்கு
  9. மீகா 5:14
    நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன். நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன்.

    பதிலளிநீக்கு
  10. அச்சமே ஆசை உலகிதம் அன்புஉடைமை
    மிக்கபா சண்டமே தீத்தெய்வம் - மெச்சி
    வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
    குணங்களில் குன்றா தவர். - அறநெறிச்சாரம் அவ்விநயம் ஆறு பாடல் -60

    விளக்கவுரை மாட்சிமைப்பட்ட குணங்களில் குறையாத சான்றோர்கள் அச்சமும் ஆசையும் லெளகிகமும் அன்புடைமையும் இழிவு மிகுந்த புறச் சமயமும், கொடிய தெய்வத்தைப் பாராட்டி வணங்குவதும் விநயம் அல்லாதது என்று கூறுவர்.

    பதிலளிநீக்கு
  11. எண்ணாகமம் 25:5
    எனவே மோசே இஸ்ரவேலின் நீதிபதிகளிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கோத்திரங்களில், பாகால் பேயோர் போன்ற போலியான தெய்வங்களை வணங்க அழைத்துப் போனவர்களை கண்டு பிடித்து, அவர்களைக் கொல்லவேண்டும்” என்றார்.

    பதிலளிநீக்கு
  12. உபாகமம் 11:16
    உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. சினனைச் சிந்திக்கப் பாவம் இல்லை
    அறநெறிச்சாரம் பாடல் - 217

    அவன்கொல் இவன்கொல்என்று ஐயப் படாதே
    சினன்கண்ணே செய்ம்மின்கள் சிந்தை - சினன்தானும்
    நின்றுகால் சீக்கும் நிழல்திகழும் பிண்டிக்கீழ்
    வென்றிச்சீர் முக்குடையான் வேந்து.

    விளக்கவுரை இறைவன் அவனோ இவனோ என்று நினைத்து ஐயம் கொள்ளாமல் அருகப் பெருமானிடமே உள்ளத்தை நிறுத்துங்கள். அந்த அருகப் பெருமான் எப்போதும் அடைந்தவரின் துன்பத்தைப் போக்குவார். அருள்மிக்க அசோக மரத்தின் கீழ் வீற்றிருக்கும் வெற்றியை உடைய சிறந்த மூன்று குடைகளையுடையவரான அருகப் பெருமானே முழு முதற் கடவுள் ஆவார்.

    பதிலளிநீக்கு
  14. உபாகமம் 11:28
    ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதையும், பின்பற்றுவதையும் மறுத்தால் சாபத்தைப் பெறுவீர்கள். ஆகவே, நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டபடி வாழ்வதை நிறுத்திவிடாதீர்கள். அதுமட்டுமின்றி அந்நிய பொய்த் தெய்வங்ளைப் பின்பற்றாதிருங்கள். கர்த்தரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது.

    பதிலளிநீக்கு
  15. 29 ஆனால் அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெய்வங்களை உருவாக்கினார்கள். அவற்றை அவர்கள் குடியேறிய நகரங்களில் சமாரியர் உருவாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தனர். 30 பாபிலோனிய ஜனங்கள் சுக்கோத் பெனோத் என்னும் பொய்த் தெய்வத்தையும், கூத்தின் ஜனங்கள் நேர்கால் என்னும் பொய்த் தெய்வத்தையும், ஆமாத்தின் ஜனங்கள் அசிமா என்னும் பொய்த் தெய்வத்தையும், 31 ஆவியர்கள் நிபேகாஸ், தர்தாக் என்னும் பொய்த் தெய்வங்களையும் உண்டாக்கினார்கள். செப்பர்வியர் செப்பர்வாயிமின் தெய்வங்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை நெருப்பில் தகன பலி கொடுத்துவந்தனர்.

    32 அவர்கள் கர்த்தருக்கும் ஆராதனைச் செய்தார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு அவர்களுக்குள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த ஆசாரியர்கள் ஜனங்களுக்காக அவ்வாலயங்களில் பலிகொடுத்து வந்தனர். 33 அவர்கள் கர்த்தரை மதித்தார்கள். அதே சமயத்தில தமக்குச் சொந்தமான பொய்த் தெய்வங்களையும் சேவித்தார்கள். தம் சொந்த நாடுகளில் வழிபட்டு வந்த விதத்திலே தம் சொந்தத் தெய்வங்களை அங்கும் சேவித்து வந்தனர்.

    https://www.biblegateway.com/passage/?search=2%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2017&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  16. சங்கீதம் 97:7
    ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள். அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள். ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள். அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
    In Context | Full Chapter

    பதிலளிநீக்கு
  17. .ஏசாயா 2 8 உங்கள் தேசம் ஜனங்கள் தொழுதுகொள்ளும் சிலைகளாலும் நிறைந்துள்ளது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர். ஜனங்கள் அவற்றைத் தொழுதுகொண்டனர். 9 ஜனங்கள் மேலும் மேலும் மோசமானர்கள். ஜனங்கள் மிகவும் கீழானவர்கள். தேவன், அவர்களை நிச்சயமாக மன்னியாமல் இருப்பார்

    பதிலளிநீக்கு
  18. ஏசாயா 2:17
    அப்போது, ஜனங்கள் பெருமை அடைவதை நிறுத்துவார்கள். இப்போது பெருமிதம் கொள்பவர்கள் தரைமட்டும் பணிவார்கள். அப்போது கர்த்தர் மட்டுமே உயரமாக நிற்பார். 18 அனைத்து (பொய்த் தெய்வங்கள்) சிலைகளும் அழிந்துபோகும். 19 ஜனங்கள் பாறைகளுக்குப் பின்னும் நிலப்பிளவுகளிலும் ஒளிந்துகொள்வார்கள். ஜனங்கள் கர்த்தருக்கும் அவரது பெரும் வல்லமைக்கும் பயப்படுவார்கள். பூமி நடுங்கும்படி கர்த்தர் எழுந்து நிற்கும்போது இது நடைபெறும்.

    பதிலளிநீக்கு
  19. ஏசாயா 65:11
    “ஆனால் நீங்கள் கர்த்தரைவிட்டு விலகினீர்கள். எனவே, நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் எனது பரிசுத்தமான மலையை மறந்துவிட்டீர்கள். நீங்கள் அதிர்ஷ்டத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தீர்கள். நீங்கள் விதி என்னும் பொய்த் தெய்வத்தின் முன்பு உணவு மற்றும் பான பலிகளை படைத்து, அதைச் சார்ந்து இருக்கிறீர்கள.

    பதிலளிநீக்கு
  20. தானியேல் 11:37
    “அந்த வடபகுதி அரசன் தனது பிதாக்கள் தொழுத தெய்வங்களைப்பற்றி கவலைப்படமாட்டான். அவன் பெண்களால் தொழுகை செய்யப்படும் விக்கிரகங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டான். அவன் எந்த தேவனைப்பற்றியும் கவலைப்படமாட்டான். அதற்குப் பதில் அவன் தன்னைத் தானே புகழுவான். அவன் மற்ற தெய்வங்களைவிடத் தன்னையே முக்கியமானவனாக ஆக்கிக்கொள்வான்.

    பதிலளிநீக்கு
  21. தானியேல் 11:38
    வடபகுதி அரசன் எந்தத் தேவனையும் தொழுதுகொள்ளமாட்டான். ஆனால் அவன் அதிகாரத்தைத் தொழுதுகொள்வான். அதிகாரமும் வல்லமையுமே அவனது தெய்வங்கள். அவன் பிதாக்கள் தன்னைப் போல் வல்லமையை நேசிக்கவில்லை. அவன் அதிகாரமாகிய தேவனை பொன்னாலும், வெள்ளியாலும் விலைமதிப்புள்ள நகைகளாலும், அன்பளிப்புகளாலும், பெருமைப்படுத்துவான்.

    பதிலளிநீக்கு
  22. ஓசியா 10:1
    இஸ்ரவேலின் செல்வமே, விக்கிரகத் தொழுகைக்கு வழி நடத்தியது
    இஸ்ரவேல் ஏராளமாகக் கனிகளைக் கொடுக்கிற திராட்சைக்கொடியைப் போன்றவன். ஆனால் இஸ்ரவேல் மேலும் மேலும் மிகுதியாகப் பொருட்களைப் பெற்றதும் அந்நிய தெய்வங்களைக் கௌரவிக்க மென்மேலும் பலிபீடங்களைக் கட்டினான். அவனுடைய நாடு மேலும் மேலும் வளம் பெற்றது. ஆகவே அவன் மேலும் மேலும் அந்நிய தெய்வத்தை கௌரவிக்கக் கற்களை அமைத்தான்.

    பதிலளிநீக்கு
  23. யோனா 2:8
    “சிலர் பயனற்ற விக்கிரகங்களை தொழுகின்றார்கள். ஆனால், அந்தச் சிலைகள் அவர்களுக்கு உதவுவதில்லை.

    பதிலளிநீக்கு
  24. ஆபகூக் 1:11
    பிறகு அவர்கள் காற்றைப் போன்று விரைந்துசென்று, மற்ற இடங்களில் போரிடச் செல்வார்கள். பாபிலோனியர்கள் தம் சொந்த பலத்தையே தொழுதுகொள்வார்கள்” என்று பதில் சொன்னார்.

    பதிலளிநீக்கு
  25. ஆபகூக் 1:16
    அவனது வலை அவன் செல்வந்தனாக வாழ்ந்து நல்ல உணவை உண்டு மகிழ உதவுகிறது. எனவே பகைவன் தனது வலைகளை தொழுதுகொள்கிறான், அவன் தனது வலையைக் கௌரவப்படுத்த பலிகளை செலுத்தி நறுமணப் பொருட்களையும் எரிக்கிறான்.

    பதிலளிநீக்கு
  26. தொல்காப்பியம் 1009.

    படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி
    புடை கெடப் போகிய செலவே புடை கெட
    ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்
    முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய
    ஊர் கொலை ஆ கோள் பூசல் மாற்றே
    நோய் இன்று உய்த்தல் நுவல்வழித் தோற்றம்
    தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என
    வந்த ஈர் ஏழ் வகையிற்று ஆகும்.

    பதிலளிநீக்கு
  27. பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
    பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுதோ
    ஆதிபூசை கொள்ளுமோ வனாதி பூசை கொள்ளுதோ
    காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. 252

    பேய்கள், பிசாசுகள் என்று பொய்களைப் பிதற்றி அவைகளுக்குப் பூசைகள் போடும் பேயர்களே! பேய்களும் பிடாரிகளும் பூசையை ஏற்றுக்கொள்கின்றவா? ஆதிசக்தி பூசையை ஏற்றுக்கொள்ளுமோ? அநாதியான ஈசன் பூசையை ஏற்றுக்கொள்கின்றானா? உடலெடுத்து வாழும் பேராசைப் பேய்களான மனிதனே பூசை செய்து அதனால் மற்றவர்களை ஏமாற்றிப் பொன்னும் பொருளும் பறித்து வாழ்கின்றனர். உலகோரே! இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  28. அருங்கலச்செப்பு

    நற்காட்சியர் தன்மை

    மூவகை மூடமும் எட்டு மயங்களும்
    தோவகையில் காட்சியார்க்கு இல். 29

    உலக மூடம்

    வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறாடல் இன்ன
    உரைப்பின் உலக மயக்கு. 30

    தேவ மூடம்

    வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
    பாழ்பட்ட தெய்வ மயக்கு. 31

    இதுவும் அது

    மயக்கார்வம் செற்ற முடையாரை ஏத்தல்
    துயக்குடைத் தெய்வ மயக்கு. 32

    பாசண்டி மூடம்

    மாசுண்ட மார்க்கத்து நின்றாரைப் பூசித்தல்
    பாசண்டி மூடம் எனல். 33

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு

  29. அருங்கலச்செப்பு

    ** அவிநயம்

    39. அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி
    செவ்விதின் காப்பார் இடை.

    * நற்காட்சியை நன்கு போற்றுபவரிடம் அவ்விநயம் ஆறும் அகன்று விடும்.

    _________________________________


    40. நல்லறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்
    சொல்வர் அவிநயம் என்று.

    * இறைவன் ஆகமம், எவரை வணங்குதல் கூடாது என ஒதுக்கியதோ அவரை வணங்குதல் அவிநயம் என்பர் நல்லோர்.

    _________________________________

    ** வணங்கத் தகாதார்

    41. மிச்சை இலிங்கியர்நூல், தெய்வம், அவாவினோடு
    அச்சம், உலகத்தோடு ஆறு

    * பொய்க்காட்சியுடைய தவத்தர், நூல், தெய்வங்களை வணங்குதலும், அவாவினாலும், அச்சத்தாலும், உலக வழக்காலும் வணங்குதலும் ஆறு அவிநயம் ஆகும்.

    _________________________________

    ** அவிநய நீக்கம்

    42. இவ்வாறும் நீக்கி வணங்கார்; அவிநயம்
    எவ்வாறும் நீங்கல் அரிது.

    * இவ்வாறு குற்றம்பட்ட வணக்கத்தை மனத்தால் களைந்து நீக்காதாரிடம் அவிநயம் வேறு எவ்வாற்றானும் நீங்குதல் அருமையாகும்.

    பதிலளிநீக்கு
  30. அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்

    பிறவிப் பிணியைப் போக்க வல்லார் பாடல் - 59

    அவ்விநயம் ஆறும் மும்மூடம் எண்மயமும்
    செவ்விதின் நீக்கிச் சினம்கடிந்து - கவ்விய
    எட்டுஉறுப்பின் ஆய இயல்பின்நற் காட்சியார்
    சுட்டுஅறுப்பர் நாற்கதியின் துன்பு.

    விளக்கவுரை அச்சத்தினால் வணங்குதல் முதலிய ஆறு அவ்வி நயங்களும், உலக மயக்கம் முதலான மூன்று மயக்கங்களும், அறிவினால் வரும் எட்டுவகைச் செருக்குகளுமானவற்றை நன்கு முற்றிலும் அகற்றி சினத்தை விலக்கி மேற்கொள்வதற்குரிய ஐயம் இல்லாமை முதலான எட்டு உறுப்புகளுடன் கூடிய சிறந்த நற்காட்சியர் ஆகிய அறிவினர் நான்கு வகையான பிறவியால் வரும் பிணியை எரித்து அழிக்கும்.

    அவ்விநயம் ஆறு பாடல் -60

    அச்சமே ஆசை உலகிதம் அன்புஉடைமை
    மிக்கபா சண்டமே தீத்தெய்வம் - மெச்சி
    வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
    குணங்களில் குன்றா தவர்.

    விளக்கவுரை மாட்சிமைப்பட்ட குணங்களில் குறையாத சான்றோர்கள் அச்சமும் ஆசையும் லெளகிகமும் அன்புடைமையும் இழிவு மிகுந்த புறச் சமயமும், கொடிய தெய்வத்தைப் பாராட்டி வணங்குவதும் விநயம் அல்லாதது என்று கூறுவர்.

    https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  31. விநயம்
    vinayam n. vi-naya. 1. Obeisance; reverence; வணக்கம். 2. Good breeding,propriety of conduct, decorum; மரியாதை. (யாழ்.அக.). 3. Pleasant speech; நயமொழி. விநயம்புகன்ற . . . வஞ்சகன் (ஞானா.). 4. Humility,modesty; பணிவு. 5. Conventional expressionof humility, by way of preface in a literary workor in addressing an assembly; அவையடக்கம்.அவையடக்க மென்னும் விநயமும் (பி. வி. 50). 6.A kind of song. See தேவபாணி. (சிலப். 8, 25-26, உரை.) 7. Order, command; கட்டளை. (யாழ்.அக.). 8. Means; உபாயம். விநயம் வேறிலான்(கந்தபு. குமாரபுரி. 36). 9. Good conduct; நன்னடை. (யாழ். அக.). 10. Charity; தருமம். (யாழ்.அக.)

    https://agarathi.com/word/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  32. 6 “யாராவது ஒருவன், அது உங்கள் உடன் பிறந்த சகோதரன், உங்கள் மகன், உங்கள் மகள், நீங்கள் நேசிக்கின்ற உங்கள் மனைவி அல்லது உங்கள் உயிர் நண்பன், இவர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுள் ஒருவர் உங்களிடம் வந்து, ‘நாம் போய் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யலாம்’ என்று அந்நிய தெய்வங்களை நீங்கள் வழிபட இரகசியமாக கூறலாம். (இந்தத் தெய்வங்கள் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் தெரியவே தெரியாது. 7 அந்தத் தெய்வங்கள் உங்களைச் சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கின்ற ஜனங்களின் தெய்வங்களாகும். அவைகள் உங்கள் சமீபத்திலும் தூரத்திலும் உள்ளன.) 8 நீங்கள் உங்களைத் திசைத்திருப்பக் கூறியவனின் பேச்சை ஒத்துக்கொள்ளாதீர்கள். அவன் பேச்சைக் கேட்காதீர்கள். அவனுக்கு இரக்கம் காட்டாதீர்கள். அவனை ஒளித்து வைக்காதீர்கள். அவன் தப்பும்படி விட்டுவிடக் கூடாது. 9-10 அதற்குப் பதில் அவனை நீங்கள் கொன்றுவிட வேண்டும்! கற்களால் அவனை அடித்துக் கொல்லுங்கள், அவ்வாறு செய்வதில் நீங்கள் முதன்மையாக இருங்கள். பின் அவன் மரிக்கும்வரை மற்ற எல்லா ஜனங்களும் அவன்மீது கற்களை எறிய வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை விலக்கி இழுக்க முயன்றான். https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+13&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  33. அவிநயம்

    39. அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி
    செவ்விதின் காப்பார் இடை.

    * நற்காட்சியை நன்கு போற்றுபவரிடம் அவ்விநயம் ஆறும் அகன்று விடும்.

    _________________________________


    40. நல்லறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்
    சொல்வர் அவிநயம் என்று.

    * இறைவன் ஆகமம், எவரை வணங்குதல் கூடாது என ஒதுக்கியதோ அவரை வணங்குதல் அவிநயம் என்பர் நல்லோர்.

    _________________________________

    ** வணங்கத் தகாதார்

    41. மிச்சை இலிங்கியர்நூல், தெய்வம், அவாவினோடு
    அச்சம், உலகத்தோடு ஆறு

    * பொய்க்காட்சியுடைய தவத்தர், நூல், தெய்வங்களை வணங்குதலும், அவாவினாலும், அச்சத்தாலும், உலக வழக்காலும் வணங்குதலும் ஆறு அவிநயம் ஆகும்.

    _________________________________

    ** அவிநய நீக்கம்

    42. இவ்வாறும் நீக்கி வணங்கார்; அவிநயம்
    எவ்வாறும் நீங்கல் அரிது.

    * இவ்வாறு குற்றம்பட்ட வணக்கத்தை மனத்தால் களைந்து நீக்காதாரிடம் அவிநயம் வேறு எவ்வாற்றானும் நீங்குதல் அருமையாகும்.


    https://marainoolkal.blogspot.com/2022/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  34. தவறான கோட்பாட்டிற்கு எச்சரிக்கையாக இருங்கள்

    தவறான கோட்பாடுகளில் சில மேரியை வழிபடுகின்றன; இயேசு கிறிஸ்து கடவுள் அல்ல; கிறிஸ்துவின் இரத்தம் பரிகாரம் செய்யாது; மூழ்குவதைத் தவிர வேறு எந்த வகையிலும் ஞானஸ்நானம்; தெரியாத மொழிகளில் பேசுதல்; ஆவி ஞானஸ்நானம் , முதலியன.

    https://www.themountainmail.com/community/church/article_0f3f6bac-f386-11e1-aa9f-0019bb30f31a.html

    பதிலளிநீக்கு
  35. {அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.}[ஸூரதுல் பகாரா 165]

    பதிலளிநீக்கு
  36. சங்க இலக்கியத்தில் சக்தி வழிபாடு

    1. கொல்லிப்பாவை வழிபாடு:
    ‘செவ்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லித்
    தெய்வம் காக்கும் தீது நிர் நெடுங்கோட்டு
    அவ்வெள் அருவிக் குடவரை அகத்துக்
    கால்பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
    உரும் உடன்று எரியினும் ஊறுபல தோன்றினும்
    பெருநிலம் கிளரினும் திருநல உருவின்
    மாயா இயற்கைப் பாவையின்….’4
    எனப் பரணர் கூறியதால் தெரிந்து கொள்ளலாம்.

    4. இயக்கி வழிபாடு:
    இயற்கையின் எல்லாச் சக்திகளையும் இயக்குபவள் எனும் கருத்தில் ‘இயக்கி’ எனும் சக்தியை பண்டைத் தமிழர் வழிபட்டனர். இயக்கிக்குப் பாற்சோறு படைத்தாள் ‘மாதரி’ என்ற செய்தியை
    “அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
    புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
    பால்மடை கொடுத்துப் பண்பின் வெயர்வோள்
    ஆயர் முதுமகள் மாதரி என்போள்”9
    எனச் சிலப்பதிகாரம் சொல்கிறது. அவ்வழிபாடு இன்றும் இசக்கி வழிபாடாய்த் தொடர்கிறது.

    1. அணங்கு வழிபாடு:
    அணங்கு என்னும் சொல்லிற்கு வருத்துதல் என்ற கருத்தை கலித்தொகை தருகிறது. அதனால் இயற்கையாகத் தமக்குத் துன்பத்தைக் கொடுத்தனவற்றை ‘அணங்கு’ எனும் அடைமொழி சேர்த்து சங்கத்தமிழர் அழைத்ததைக் காணமுடிகிறது. உலாவித் திரிந்து வருத்தம் செய்யும் மழைமேகம் அமைந்த மலைத்தொடர் என்பதை “ஆடு மழை அணங்கு சால் அடுக்கம்”11 என்றும் வருத்துகின்ற மலை என்பதை “அணங்குடை நெடுங்கோடு”12 எனவும் புறநானூறு சொல்கிறது. அணங்கு இடி இடித்து மின்னல் மின்னி மழையாக, எரிமலையாக, புகையாக, அனற் குழம்பாக வெடித்துச் சிதறி பல உருவம் எடுத்து வரும் என்பதை
    “சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து
    தாம் வேண்டுவ உருவில் அணங்குமார் வருமே”13
    என்கின்றது அகநானூறு. இன்றும் தீ மிதிப்பதை பூ மிதித்தல் என்றே சொல்கிறோம். எனவே அன்றைய சுடர்ப்பூ என்பதே இன்றைய நெருப்பூ ஆனது.

    2. செல்வி வழிபாடு:
    சங்க இலக்கியம் பேசும் செல்வி வழிபாட்டை கன்னித் தெய்வவழிபாடு என்றும் கூறலாம். முல்லை நிலக் காட்டில் இருந்த கன்னித் தெய்வம்
    “ஓங்கு புகழ் கானமர் செல்வி”17 ஆனாள். காடமர் செல்விக்கு கோட்டம்[கோயில்] இருந்ததை மணிமேகலை செப்புகிறது.18

    நெய்தல் நிலத்து கடற்கரைக் கன்னித் தெய்வத்தை
    “கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு”19 என அகநானூறு சுட்டுகிறது. அந்தச் செல்வியே குமரியாய், கன்னியாய், கன்னியாகுமரிக் கடற்கரையில் இன்றும் மோனத் தவம் செய்கிறாள் போலும்! செல்வி வழிபாடே நாட்டுப்புறங்களில் செல்லியம்மன் வழிபாடு என்ற பெயரில் இப்போதும் நடைபெறுகிறது.

    இ. தாய்த்தெய்வ வழிபாடு
    செல்வியாய் நின்றவள் மெல்லத் தாயாய் உருவெடுக்கிறாள். அதனை
    “வெண்டிரைப் பரப்பின் கடுஞ்சூர் கொன்ற
    பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
    துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு”20
    எனக் கூறும் பெரும்பாணாற்றுபடை முருகனின் தாயாக ‘துணங்கையஞ் செல்வியைக்’ காட்டுகிறது. இதற்கு விளக்கம் தந்த நச்சினார்க்கினியார் மோடு என்பதற்கு எல்லோரையும் பெற்ற வயிறு என்கிறார்.

    “போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்”21

    எனத் தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனாரும் மோடியை சிவனின் சக்தியாகப் பாடியிருக்கிறார்

    பதிலளிநீக்கு
  37. சங்க இலக்கியத்தில் சக்தி வழிபாடு

    1. தவ்வை வழிபாடு:
    சங்க இலக்கியங்கள் காட்டும் தாய்த்தெய்வங்களிலே குழந்தைகளை ஈன்றெடுத்த பெருவயிறும் பரந்த சரிந்த கொங்கைகளுடன் இன்றைய சிற்பங்களில் காட்சிதருபவள் தவ்வையே. சங்கத்தமிழரின் நனிசிறந்த நாகரீகத்தை உலகிற்குப் பறை சாற்றிக் கொண்டிருப்பது திருக்குறள். அத்திருக்குறளே தவ்வை என்னும் சக்தி வழிபாட்டை எமக்கு எடுத்துச் சொல்கிறது. திருக்குறளுக்கு உரையெழுதியோர் திருமகளின் தமக்கையாகத் தவ்வையைக் கூறுகின்றனர்.
    ‘அழுக்காறாமை’ என்னும் அதிகாரத்தில்
    “அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்”22
    எனத் ‘தவ்வை’ எனக்கூறும் திருக்குறள் அச்சக்தியை ‘ஆள்வினை உடைமை’ என்ற அதிகாரத்தில் ‘மாமுகடி’23 என்ற பெயரால் அழைக்கிறது.

    2. கொற்றவை வழிபாடு:
    சிலப்பதிகாரம்
    ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
    நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்
    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’29
    என்கிறது. எனவே சங்ககாலத்தில் குறிஞ்சி, முல்லை, பாலை ஆகிய மூன்று நிலத்திலும் வாழ்ந்த மக்கள் கொற்றவையை வழிபட்டனர் என்பது தெளிவாகிறது.

    கொற்றவையை வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகக் கருதி வழிபட்டனர் என்பதை
    “வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை” எனச் சிலப்பதிகாரமும்
    “வெற்றிவேல் போர்க் கொற்றவை” என்று திருமுருகாற்றுப்படையும் உறுதி செய்கின்றன.32

    3. துர்க்கை வழிபாடு:
    எருமைத் தலையும் மனித உடலுமான இருவேறு உருவில் திரண்ட தோள்களுடைய மகிடாசுரனைக் கொன்று அவனின் தலைமேல் நின்றவள் கொற்றவை என்பதை
    “இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
    தலைமிசை நின்ற தையல்”33
    எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. எனவே கொற்றவையை மகிடாசுரனின் கதையோடு இணைத்து துர்க்கையாகவும் வழிபட்டதைக் காணமுடிகிறது.

    4: காளி வழிபாடு:
    சிலப்பதிகாரத்தில் கண்ணகி வரவுபற்றி மன்னனுக்கு
    “அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை
    ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக்
    கானகம் உகந்த காளி”34
    எனச் சொல்லும் வாயிற்காப்போன் வாயிலாகவே காளி முதன் முதல் அறிமுகம் ஆகிறாள் எனலாம். அன்னையர் எழுவர் வழிபாட்டில் காளி ஏழாவது தெய்வமாக இருந்ததை ‘அறுவர்க்கு இளைய நங்கை’ எனச் சொல்வதால் உணரலாம்

    5. உமை[மலைமகள்] வழிபாடு:

    “இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
    உமை அமர்ந்து உயர்மலை இருந்தானாக……”35
    என இராவணன் கைலை மலையை அசைக்கும் காட்சியோடு உமையம்மையை எமக்குக் கலித்தொகை காட்டுகிறது. முருகனை ‘மலைமகள் மகனே!’ என்றும் ‘கொற்றவை சிறுவ! எனவும் திருமுருகாற்றுப்படை கூறுவதால் கொற்றவையையே மலைமகளாயும் வழிபட்டனர்.36

    6. சிவசக்தி வழிபாடு:
    உலகை இயக்கும் மாபெரும் சக்தியை தாம் வாழ்ந்த காலத்தோடு பலபடி நிலைகளில் காட்டும் சங்க இலக்கியங்கள் அவற்றை சக்திவழிபாடாக இயம்புகின்றன. அவை சிவனுடன் சக்தியை இணைத்த போதும் சக்தியின் ஆற்றலைப் போற்றின. அதனை
    “நீலமேனி வாலிழை பாகத்து
    ஒருவன் இருதாள் நிழற்கீழ்
    மூவகை உலகும் முகிழ்ந்தன முறையே”37
    ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து மிக உறுதியாகச் சொல்கிறது.
    https://inithal.blogspot.com/2017/07/blog-post.html

    பதிலளிநீக்கு
  38. கால் நடைகளைக் கடவுளாக்கக் கூடாது - 2:51, 2:54, 2:92, 7:148, 7:152

    வானவர்களை வணங்கக் கூடாது - 3:80, 4:172, 13:13, 16:49, 21:26, 34:40, 43:19, 41:38, 66:6,

    சிலைகளை வணங்கக் கூடாது - 6:74, 7:71, 7:138, 7:195, 12:40, 14:35, 21:52, 21:57, 21:58, 22:73, 26:71,72, 37:95, 43:18, 53:19,20, 53:23, 71:23

    மகான்களை வணங்கக் கூடாது - 3:79, 4:172, 5:17, 5:72, 5:116, 7:194, 9:30, 18:102, 19:93, 21:26, 43:19, 43:59

    மத குருமார்களை வணங்கக் கூடாது - 9:31

    நபிமார்களை வணங்கக் கூடாது - 3:79, 3:80, 4:171, 4:172, 5:72, 5:73, 5:116, 5:117, 9:31, 18:110,

    மனிதனை மனிதன் வணங்கக் கூடாது - 3:64

    சூரியன் சந்திரனை வணங்கக் கூடாது - 41:37

    பதிலளிநீக்கு
  39. 22:13. நன்மை ஏற்படுவதைவிட தீங்கு ஏற்படுவது எவர்களால் அதிகம் சாத்தியமாக இருக்கிறதோ அவர்களைத்தான் இவர்கள் (தங்கள் பாதுகாவலர்கள் என) அழைக்கின்றனர். (இவர்களுடைய) அந்த பாதுகாவலர்களும் கெட்டார்கள்; அவர்களை அண்டி நிற்கும் இவர்களும் கெட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  40. அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

    திருக்குர்ஆன் 10:18

    பதிலளிநீக்கு
  41. நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதையாவது அவை படைத்துள்ளனவா அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் : 46:4)

    மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈடைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (திருக்குர்ஆன் 22:73)

    தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (இணைவைப்பாளர்கள் ) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள் 'இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை' என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; 'வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்' என்று கூறும். (குர்ஆன் 10:18)

    பதிலளிநீக்கு
  42. சட்டங்கள் 17:23
    உங்கள் வழிபாட்டுப் பொருட்களை நான் கடந்து சென்று பார்த்தபோது, ​​'தெரியாத கடவுளுக்கு' என்று எழுதப்பட்ட பலிபீடத்தையும் கண்டேன். நீங்கள் அறியாதவையாக எதை வணங்குகிறீர்கள், இதை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்

    பதிலளிநீக்கு