காலம்

இஸ்லாம் 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான் ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான் அவன் காலத்தை ஏசுகிறான் நானே காலம் (படைத்தவன்) என் கையிலேயே அதிகாரம் உள்ளது நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் - (நூல் ஸஹீஹ் புகாரி 4826)

இந்துமதம் 

கால: கலயதாமஹம் | = இயங்குபவற்றில் நான் காலமாக இருக்கிறேன் - (கீதை - 10.30)

கிறிஸ்தவம்

நானே அல்பாவும் ஒமேகாவும், முதலும் கடைசியும், ஆரம்பமும் முடிவும் (வெளிப்படுத்துதல் 22:13).


5 கருத்துகள்:

  1. நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். அவனே கர்ப்பங்களில் (கரு) தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனும் தெரிந்தவனும் ஆவான். (அல்குர்ஆன் 31 : 34)

    பதிலளிநீக்கு
  2. வெளி 18 கர்த்தர் கூறுகிறார்: “நான் அல்பாவும் ஒமேகாவுமாய் [b] இருக்கிறேன். நான் இருக்கிறவராகவும், இருந்தவராகவும், இனி வருகிறவருமாய் இருக்கிற சர்வவல்லமை உள்ளவராயிருக்கிறேன்.”

    பதிலளிநீக்கு
  3. பிரசங்கி 3:1-15

    1 இந்த உலகில் நடக்கும் அனைத்தும் கடவுள் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் நடக்கும்.
    2 பிறக்கும் நேரத்தையும் இறக்கும் நேரத்தையும், நடவுக்கான நேரத்தையும், மேலே இழுக்கும் நேரத்தையும் அவர் நிர்ணயிக்கிறார்.
    3 கொல்லும் நேரமும் குணமடையும் நேரமும், இடிக்கும் நேரமும், கட்டுவதற்கான நேரமும்.
    4 அவர் துக்கத்திற்கான நேரத்தையும் மகிழ்ச்சிக்கான நேரத்தையும், துக்கத்திற்கான நேரத்தையும், நடனத்திற்கான நேரத்தையும் அமைக்கிறார்.
    5 காதல் செய்யும் நேரம் மற்றும் காதலிக்காத நேரம், முத்தமிடும் நேரம் மற்றும் முத்தமிடாத நேரம்.
    6 கண்டுபிடிப்பதற்கான நேரத்தையும், இழப்பதற்கான நேரத்தையும், சேமிப்பதற்கான நேரத்தையும், தூக்கி எறியும் நேரத்தையும் அவர் அமைக்கிறார்.
    7 கிழிக்கும் நேரமும் சரிப்படுத்தும் நேரமும், மௌனத்திற்கான நேரமும், பேசுவதற்கான நேரமும்.
    8 அவர் அன்பிற்கான நேரத்தையும் வெறுப்புக்கான நேரத்தையும், போருக்கான நேரத்தையும், சமாதானத்திற்கான நேரத்தையும் அமைக்கிறார்.
    9 நம்முடைய எல்லா வேலைகளிலிருந்தும் நமக்கு என்ன லாபம்?
    10 கடவுள் நம்மீது சுமத்திய பாரமான சுமைகளை நான் அறிவேன்.
    11 எல்லாவற்றுக்கும் சரியான நேரத்தை அவர் அமைத்திருக்கிறார். எதிர்காலத்தை அறிந்துகொள்ளும் ஆசையை அவர் நமக்கு அளித்திருக்கிறார், ஆனால் அவர் செய்வதை முழுமையாகப் புரிந்துகொள்வதில் திருப்தியைத் தருவதில்லை.
    12 அதனால் நாம் செய்யக்கூடியது மகிழ்ச்சியாக இருப்பதும், உயிரோடு இருக்கும்போதே நம்மால் முடிந்ததைச் செய்வதும் மட்டுமே என்பதை உணர்ந்தேன்.
    13 நாம் உழைத்ததை நாம் அனைவரும் உண்டு குடித்து மகிழ வேண்டும். அது கடவுளின் பரிசு.
    14 கடவுள் செய்யும் அனைத்தும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். நீங்கள் அதில் எதையும் சேர்க்கவோ அல்லது அதிலிருந்து எதையும் எடுக்கவோ முடியாது. மேலும் கடவுள் செய்யும் ஒரு காரியம், நம்மை அவருக்குப் பயந்து நிற்க வைப்பதாகும்.
    15 எது நடக்கிறதோ அல்லது நடக்கக்கூடியதோ அது ஏற்கனவே நடந்திருக்கிறது. கடவுள் அதையே மீண்டும் மீண்டும் நடக்கச் செய்கிறார்.

    https://www.biblestudytools.com/gnt/ecclesiastes/passage/?q=ecclesiastes+3:1-15#:~:text=1%20Everything%20that%20happens%20in,and%20the%20time%20for%20building.

    பதிலளிநீக்கு
  4. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) - அல் அஸ்ரு-காலம்

    பதிலளிநீக்கு
  5. காலத்தை அறியுங்கள்
    54 பின்பு இயேசு மக்களை நோக்கி, “மேற்கில் மேகங்கள் பெருகுகையில் நீங்கள் ‘மழைக்குரிய புயல் வந்து கொண்டிருக்கிறது’ என்று உடனே சொல்கிறீர்கள். உடனே மழை பொழிய ஆரம்பிக்கிறது. 55 தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே. 56 வேஷதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின் மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்றார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%2012&version=ERV-TA

    பதிலளிநீக்கு