கடவுளின் அன்பு

கிறிஸ்தவம் & யூதம் 

 ஆனால், ஆண்டவரே, நீரோ இரக்கமும் கருணையும் உள்ள கடவுள், நீடிய கோபம், அன்பும் உண்மையும் நிறைந்த கடவுள். - சங்கீதம் 86:15

உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவரே உண்மையுள்ள கடவுள், தம்மை நேசித்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களில் ஆயிரம் தலைமுறைகளுக்கு அவருடைய அன்பு உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கிறார். -  உபாகமம் 7:9 

இஸ்லாம் 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் - குர்ஆன் 1:1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் தமக்கிடையே பரிவு காட்டுகின்றன. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பு, மறுமை நாளுக்கு உரியவையாகும். - ஸஹீஹ் முஸ்லிம் : 5313

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.) அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா,சொல்லுங்கள்?" என்றார்கள். நாங்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது" என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்" என்று சொன்னார்கள்.- ஸஹீஹ் முஸ்லிம் : 5315.  

தமிழர் சமயம் 


அன்பும் சிவமும்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே - (திருமந்திரம் 18. அன்புடைமை 270.)

பதவுரை: அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்: அன்பு வேறு சிவம் வேறு அல்ல.அப்படி வேறு படுத்தி பார்ப்பது அறிவீனர் செயல்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்: அன்பே சிவம் ஆவது எல்லோருக்கும் தெரியாது
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்: அப்படி அன்பே சிவம் ஆனதை அறிந்தவர்கள்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே: அன்பும் சிவமும் இரண்டற கலந்த நிலையை அடைவார்கள் 
 
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே - திருமந்திரம் 272

6 கருத்துகள்:

  1. சங்கீதம் 103:8 யெகோவா இரக்கமும் கரிசனையும்* உள்ளவர்.a
    அவர் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.

    சங்கீதம் 33:18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார். அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.

    நீதிமொழிகள் 8:17 என்னை நேசிப்பவர்களை நான் நேசிக்கிறேன், என்னைத் தேடுபவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  2. அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். [ஸூரதுல் மாஇதா 54]

    அல்லாஹ் கூறினான்:

    எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.» (ஆதாரம் ஹதீஸுல் குத்ஸி புகாரி).

    உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:

    என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.».(ஆதாரம் புகாரி)

    அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து நான் இந்த அடியானை விரும்புகிறேன் நீங்களும் அவனை விரும்புங்கள் என்று கூறுவான். ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவரை விரும்புவார்கள் பின்பு ஜிப்ரீல் அலை அவர்கள் வானத்தில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு அல்லாஹ் இந்த அடியானை விரும்புகிறான் நீங்களும் அவனை விரும்புங்கள் என்று கூறுவார். பின்னர் வானத்தில் உள்ள அனைவரும் அந்த அடியானை விரும்புவார்கள் பின்பு அவருக்கு பூமியிலும் விரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.».(ஆதாரம் முஸ்லிம்)

    {நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான்.}.[ஸூரது மர்யம் 96]

    https://www.with-allah.com/ta/1-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

    பதிலளிநீக்கு
  3. இந்த தோழர் கூறுகிறார், அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் நேசிக்கிறேன். அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் கூறுகிறார்கள். நீ யாரை நேசித்தாயோ அவரோடு மறுமையில் இருப்பாய் என்று அந்தத் தோழருக்கு சொன்னார்கள். அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6620

    அல்லாஹ் அப்படித்தான் சொல்கிறான்.உண்மையான மூமின்களை அல்லாஹ்வும் நேசிப்பான்;அவர்களும் நேசிப்பார்கள். அல்குர்ஆன் 5:54

    https://www.muftiomar.com/videodetails/595

    பதிலளிநீக்கு
  4. 1 ஜான் 4:8 ESV / 256 பயனுள்ள வாக்குகள்
    நேசிக்காத எவரும் கடவுளை அறிய மாட்டார்கள், ஏனென்றால் கடவுள் அன்பே.

    பதிலளிநீக்கு
  5. யாத்திராகமம் 34:6
    கர்த்தர் மோசேக்கு முன்னர் கடந்து சென்று, “யேகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக்கைக்குரியவர்.

    பதிலளிநீக்கு
  6. 22. மனத்தில் எழுகின்ற மாய நன்னாடன்
    நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
    எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
    பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே. 22

    இறைவன் யாருக்கு உதவுவான்! மாயையில் தோன்றிய உடம்புக்கு உரியவனாகியவனும் தியானப் பொருளாக மனத்தில் தோன்றுகின்றவனுமாகிய சிவன் - சீவர் நினைத்ததை அறிவான் என்ற போதும் சீவர் தாம் சிவனை நினையாதிருக்கின்றனர். கடவுளுக்கு என்னிடத்தில் கருணை இல்லை என்று சொல்லும் தன் கருணைக்கு இலக்காகாமல் தப்பி நிற்பவருக்கும் கருணை வழங்கி நிற்கின்றான் இறைவன்.

    https://www.chennailibrary.com/saiva/thirumanthiram.html

    பதிலளிநீக்கு