சூரிய சந்திரனை வணங்கலாமா?

முகமது நபி, 'குரைஷி' என்ற பழங்குடி வம்சத்தைச் சேர்ந்தவர். குரைஷிகள் வழிபட்ட 'ஹுபால்' என்ற சந்திரக் கடவுள் 'அல்லாஹ்' என்று மாற்றப்பட்டது, எப்படி? பிறைச்சந்திரக் குறியீட்டுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் என்ன தொடர்பு? Quora 

முகமது நபி, 'குரைஷி' என்ற பழங்குடி வம்சத்தைச் சேர்ந்தவர்.

ஆம் முகமது நபி குறைஷி வம்சத்தை சார்ந்தவர். பழங்குடி என்பதை என்ன அர்த்தத்தில் இங்கே குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. குறைஷிகள் என்போர் ஏறக்குறைய பிராமின் போல அரேபிய சமூகத்தில் இருந்தவர்கள். அத்தனை ஏற்றத்தாழ்வையும் அதிலிருந்து வந்த முகமது நபி உடைத்து எறிந்தார்.

 குரைஷிகள் வழிபட்ட 'ஹுபால்' என்ற சந்திரக் கடவுள் 'அல்லாஹ்' என்று மாற்றப்பட்டது, எப்படி? 

முகமது நபிக்கே தெரியாத விஷயம் இது!

அரேபியர்கள் நீங்கள் குறிப்பிட்டது மட்டுமல்ல, சிலைகள் உட்பட பலவற்றை வாணங்கியவர்கள்.

ஹுபால் என்பது அல்லாஹ் என்று மாற்றப்பட்டதாக கூறுவது பச்சைப் பொய். அல்லாஹ் என்பது தெய்வம் என்கிற வார்த்தைக்கு இணையானது. அரபிக் பைபிள் அல்லது அரபிக் தோரா (யூதர்களின் புனித நூல் - பழைய ஏற்படு என்று பைபிளில் இடம் பெற்று இருக்கும் நூல்) இவற்றை எடுத்து பார்த்தாலும், தெய்வத்துக்கு அல்லாஹ் என்றுதான் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இயேசு பேசிய அராமிக் மொழியில் இறைவனை அல்லாஹ் என்றுதான் அழைத்தார் என்று பல கையெழுத்து பிரதி பைபிளின் மூலம் கண்டறியப்பட்ட செய்திகள் வெளிவந்தது.

அல்லாஹ் என்கிற பெயர் பல ஆயிரம் ஆண்டு காலமாக அரேபியாவில் புழக்கத்தில் உள்ள சொல்.

'வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். அப்படியாயின் 'எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்? - (திருக்குர்ஆன் 29:61)

'வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா' என்று நீர் கேட்பீராக! - (திருக்குர்ஆன் 10:31)

'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். 'சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக - (திருக்குர்ஆன் 23:84,85)

'ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?' எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா;?' என்று கேட்பீராக! - (திருக்குர்ஆன் 23:86,87)

'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)' என்று கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?' என்று கேட்பீராக! - (திருக்குர்ஆன் 23:88,89)

'வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை. - (திருக்குர்ஆன் 29:63)

'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள். - (திருக்குர்ஆன் 31:25)

'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!' என்று கேட்பீராக! 'அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறுவீராக! - (திருக்குர்ஆன்) 39:38

'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்' எனக் கூறுவார்கள். - (திருக்குர்ஆன் 43:9)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? - (திருக்குர்ஆன் 43:87)

மக்கத்துக் மக்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக! - (திருக்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். - (திருக்குர்ஆன் 39:3)

கிறிஸ்தவ யூத இஸ்லாமிய சமயத்தில் மட்டுமல்ல தமிழர் சமயத்திலும் இறைவனின் அப்பெயர் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?... (பரிபாடல் 60)

பொருள்: ...அல்லா அவுணர்க்கும் (அசுரர்க்கும்/ஜின்களுக்கும்) நீதான் முதலானவன். எனவே இவர் எதிரி இவர் நம்மவர் என்று உனது வழி முறையை அறிந்தவர் பிரித்து பார்ப்பாரோ? 

குறிப்பு: "அல்லா" என்பது பெயரில்லை, "அல்ல" என்பது "இல்லை" என்பதன் மாற்றுப் பிரயோகம் என்போர் இலக்கணம் அறியாதோர் என்றே கருதுகிறேன்.  ஏனென்றால் இது தெளிவாக ஒருவனைச் சுட்டி பேசும் வாசகம் என்பது வெளிப்படை. மேலும் "அல்லா" வேறு "அல்லாஹ்" வேறு என்று பிரித்து கூற விரும்பும் மக்களுக்கும் அது பிழையான வாதம் என்று பதிய விரும்புகிறேன். "ஹ" எழுத்தின் ஒளிப்பு முறை தமிழ் அல்ல. எனவே "அல்லாஹ்"வை சரியான தமிழ் இலக்கணப்படி கூறுவதாக இருந்தால் "அல்லா" என்றே கூற முடியும்.  

இது போன்ற வேறு பல செய்திகளை பேராசிரியர் மா.சோவிக்டரின் "தமிழர் சமயம் இசுலாம்"  நூலிலிருந்து பெறலாம்.

சூரிய சந்திர நட்சத்திரங்களை வணங்குவதை தடுப்பது இஸ்லாம் மட்டுமல்ல 

அதாவது, அவர்கள் பொய் தெய்வங்களையோ அல்லது சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற வான சேனைகளையோ தொழுதுகொள்வதை நீங்கள் கேள்விப்பட்டால், அவைகளெல்லாம் நான் உங்களுக்கு வழங்கிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான செயல்களாகும். - (உபாகமம் 17:3)

ஈரொளிய திங்களே யியங்கிநின்றது தப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிய படலமுங் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பத மேகநாத பாதமே. - (திருமந்திரம் 292)

பொருள்: மாதம் இருமுறை சந்திரன் ஒளியுடன் இயங்கி நின்றது அப்புறம். திங்களுக்கு ஒளி தரும் மூலமாக பேரொளி ஞாயிறு இருப்பதாய் எல்லோருக்கும் தெரியாது. அது போல அறிவு மயக்கம் எனும் இருளை (கார்) போக்கி ஒளி உண்டாகும் அத்தியாயத்தை (படலம்) கடந்த பிறகுஅந்த அறிவு மயக்கத்தை போக்கும் பேரொளியான வழியாகிய ஏக இறைவனின் பாதம் பணிவோம்.

குறிப்பு: ஏக இறைவனை பணிவதை இந்த பாடல் சொல்கிறது.

சந்திரன் ஒரு காலம் அளக்கும் கருவி


கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ நீச நிடமது தானே - [திருமந்திரம் 868]

அவனே பொழுது விடியச் செய்பவன்; அமைதிபெற அவனே இரவையும்; காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். - [திருக்குர்ஆன் 6:96]

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். அவைகளுக்கு பல நிலையங்களை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான். - [திருக்குர்ஆன் 10:5]

பின்பு கடவுள், “பகலையும் இரவையும் தனித்தனியாகப் பிரிப்பதற்கு வானத்தில் ஒளிச்சுடர்கள் தெரியட்டும். பருவ காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறித்துக் காட்டுகிற அடையாளங்களாக அவை இருக்கட்டும் - [பைபிள் - ஆதியாகமம் 1:4]

சந்திரன் ஆண்டுகளை வடிவமைக்கிறது. - [Rig Veda]

முடிவுரை 

சூரியனும் சந்திரனும் இறைவனால் படைக்கப் பட்டவைகள், அவைகள் ஒளிதரவும், நாட்களை அளக்கவும் பயன்படும் சாதனங்களே தவிர வணங்க தகுதி படைத்தவைகள் அல்ல.

5 கருத்துகள்:

  1. கீதை - 15.12 - எல்லாம் ஆனந்தமே

    यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।
    यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥१५- १२॥

    யதாதித்யகதம் தேஜோ ஜகத பாஸயதேகிலம் |
    யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம் || 15- 12||



    யதா = எது

    ஆதித்யகதம் = சூரியனில் இருந்து

    தேஜோ = ஒளிர்கிறதோ

    ஜகத் = உலகம் அனைத்தும்

    பாஸயதே = ஒளிரச் செய்கிறதோ

    அகிலம் = உலகம் அனைத்தையும்

    யத் = எது

    சந்த்ரமஸி = சந்திரனின் ஒளியில்

    யத் = எது

    ச = மேலும்

    அக்நௌ = அக்கினியில்

    தத் = அது

    தேஜோ = தேஜோ மயமாக

    வித்தி = அறிந்து கொள்

    மாம் அகம் = என்னுடையது என்று



    சூரியன், சந்திரன், அக்னி இந்த மூன்றில் உள்ள ஒளியும் என்னுடையது என்றே உணர்.

    எனவே அவைகளை வணங்கக்கூடாது

    https://bhagavatgita.blogspot.com/2016/05/1512.html

    பதிலளிநீக்கு
  2. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

    (அல்குர்ஆன்:41:37.)

    பதிலளிநீக்கு
  3. அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்’ என இறைவன் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    நூல் புகாரி 846

    பதிலளிநீக்கு
  4. குறிப்பு: இதில் முரண் படுவோர் அவுணர்க்கு முதல்வனாக வேறு யார் இருக்க முடியம்? என்றும், "அல்லா" என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதை விளக்கவும். "ஹ்" என்ற உச்சரிப்பு இல்லாததால் தமிழ் அல்லாவில் அது இடம்பெறவில்லை.

    பதிலளிநீக்கு
  5. குரைஷி என்பது அந்த பிரதேசத்தில் அந்த காலத்தில் அண்டை நாட்டு அரசர்களுடன் தொடர்பு கொள்ளும் அளவுக்கு மிக உயர்ந்த வம்சம் ஆகும்.
    அல்லாஹ் என்பது தனிப்பெயர் அல்ல, அது பொதுப்பெயர். தெய்வம் கடவுள் என்பதும் அல்லாஹ் என்பதும் ஒரே பொருளை குறிக்கும் இரு வேறு மொழி சொற்கள். மேலும் அல்லாஹ்வுக்கு இணையான சொல் இப்ராஹிம் காலத்தில் இருந்து வழக்கில் உள்ளது. இப்ராஹிம் பேசிய மொழி அராமிக் அதில் கடவுளுக்கு இணையான சொல் இலாஹ். தெய்வத்துக்கு அல்லா என்ற பெயர் தமிழிலும் உண்டு .

    https://qr.ae/p2Ikah

    பதிலளிநீக்கு