இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம் என்று..?

தமிழ் ஹிந்து வலையில் ஒரு கட்டுரையினை படிக்க நேர்ந்தது தலைப்பு : "இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலை - நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம்" என்று... கட்டுரையினை தொடந்து வாசிக்க ஆரம்பித்தேன், அதில் கருத்துககளை பதிவிடும் வசதி எனக்கு இருக்கவில்லை மேலும் அதில் பின்னூட்டம் அளித்து இருந்தவர்களில் எந்த ஒரு இஸ்லாமியாரின் பெயரும் இருக்கவில்லை எனவே பதில் அளித்தாலும் நீக்கிவிட வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி இங்கே எழுதுகிறேன்..

அவரது பதிவு ஜாகிர் நாயக் அவர்களின் ஒவ்வொரு கருத்திற்கும் எதிராக பதில் அளிக்கும் விதமாக இருந்தது..

இதுவே அவரது பதிவு : http://www.tamilhindu.net/ 

"
ஏமாற்று வேலை" என்ற வார்த்தை இருந்ததால் பதிவிடும் அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றியது..

எழுதியவரே குறிப்பிட்டு உள்ளார் இதனை உலகுக்கு ஆராய்ந்து சொன்னவர் ஒரு வாங்கள பிராமணர் என்று, குறைந்த பட்சம் அவர் வாங்கள பிராமணரின் "கல்கியா? முகம்மததுவா?" என்ற நூலை படித்த பிறகு பதிவு இட்டு இருந்தால், நேரடியாக இஸ்லாமியர்களை குற்றம் சொல்லும் முன், அவர் உண்மையை அறிய ஆவல் உள்ளவர் என ஏற்று கொள்ளலாம்.. ஆனால் அவரது பதில் அனைத்தும் ஜாகீர் அவர்களின் உரைக்கு மட்டுமே இருந்தது... இதிலிருந்து அவர் ஒரு விஷயத்தைன் உண்மை தன்மையை அறிய ஆவல் உள்ளவர் போல் தெரியவில்லை..

ஏனெனில் உரை நிகழ்த்துபவர் பல-100 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை அப்படியே மேடையில் பேசுவது என்பது இயலாத காரியம் எனவே ஒருசில அவசியமானவைகளை மட்டுமே மேடையில் பேசுவார்.. எனவே அவர் சொல்லும் மூல நூலை வாசிக்காமல் ஜாகீர் அவர்களின் உரைக்கு மட்டும் பதில் அளிப்பது என்பது, வீண் விவாதமாகவே முடியும் எந்த பயனும் இருக்காது.எனவே அந்த புத்தகத்தை படிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம், அதன் link-ஐ பின்னே இணைத்துள்ளேன், ஆங்கிலம் படிக்க தெரிந்தால் படிக்கட்டும்.

ஆம் அவர் ஒரு வங்காள பிராமணர் மேலும் அவர் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றவர் மேலும் அவர் மதங்களை ஒப்பு நோக்கி வேதங்களை ஆய்வு செய்யும் அறிஞர்... அவர் ஆராய்ந்து ஒப்பிட்டு உலகுக்கு சொல்லுகிறார் முகம்மது நபி அவர்கள்தான் கல்கி என்று, இதை எந்த இஸ்லாமிய அறிஞனும் கண்டுபிடித்து சொல்லவில்லை.... இதனை வெகுவான மக்களிடம் கொண்டு சேர்த்தது மட்டும்தான் ஜாகீர் நாயக் அவர்களின் வேலை.

பண்டிட் வேதிக் பிரகாஷ் உப்பாதேயா இதுதான் அவர் பெயர்.. அவர் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இங்கே கீழே..

English version :

1) http://www.scribd.com/doc/8620683/Kalki-Avtar-Book

2) http://www.scribd.com/doc/38885420/KALKI-AVTAR-in-English

Hindi version :

1) http://www.scribd.com/doc/46775221/Kalki-Avtar-Aur-Muhammad

Urdu version :

1) http://www.scribd.com/doc/17190132/Kalki-Avtar-Aor-Muhammad-S-URDU

Tamil version:

1) http://www.islamicbook.ws/tamil/tamil-35.pdf


  இந்த புத்தகம் வெளி வந்த ஆண்டு 1970-இல், உண்மையில் இதனை பிரபல படுத்தி இருக்க வேண்டியது இந்துக்கள்தான் ஏனென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு அவதாரம் ஏற்கனவே அவதரித்து அவரது போதனைகள் உலகில் பரவ ஆரம்பித்த நிலையில் அதனை ஏற்பதுதான் உங்களது வேதங்களை நீங்கள் முறையாக பின்பற்றுவதாக பொருள். இல்லயேல் பிழை உங்களிடமே.. வேதம் என்றால் என்ன? உபநிஷம் என்றால் என்ன? புராணம் என்றால் என்ன? என்று இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் பெரும்பாலான சகோதரர்களுக்கு தெரியவில்லை.. குரான் வசனம் தெரிந்த அளவுக்கு கூட அவர்களின் வேத வரிகள் அவர்களுக்கு தெரிவதில்லை.. பாவம் அது அவர்கள் குற்றமும் இல்லை.. 110 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் 1.3 சதவீதமே இருந்துகொண்டு 60-70% அரசு மற்றும் அரசியலில் உயர் பதவிகளில் இருந்து மறைமுகமாக இந்தியாவை ஆளும் வர்கத்தினர் செய்த தந்திரம், புத்தியாலும், கீழுள்ளவனை மூளைச்சலவை செய்து கத்தியை தூக்கவைத்து அதன் மூலமாகவும் பிரிவினைகளை தூண்டிவிடும் பாப்பனனின் கை பொம்மைகள் இவர்கள். வேதங்கள் கடவுளின் வார்த்தை அது அனைத்து மக்களுக்கும் பொதுவானது, ஆனால் நீ சூத்திரன், என்னையோ வேதத்தையோ தொட்டால் தீட்டு என்று கூறும் அவர்கள் இவர்களின் பார்வாயில் "சாமி". கொடுமை..

சரி அவரது வாதங்களையும் அவருக்கான பதிலயும் இங்கே எழுதுவோம்..

அவரது கேள்விகள்.

1) 
தமிழ் ஹிந்து :
விஷ்ணு என்றால் அல்லாஹ் என குரானில் எந்த வசனத்தில் இருக்கிறது?

பதில் : 
நீங்கள் கேட்பது, மில்க் என்றால் பால் என்று எந்த ஆங்கில இலக்கான நூலில் உள்ளது என்பது போல் உள்ளது?

விஷ்ணு என்ற வார்த்தைக்கு வேதங்கள் என்ன வரையறை வைத்து உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒன்றுக்கோ அல்லது ஒருவனுக்கோ பெயரிடும்பொழுது அதன் பண்புகளுக்கு ஏற்ப்பபெயர் இடுவது இயல்பு, மரபு.. எனவே விஷ்ணு மற்றும் அல்லாஹ் இரண்டின் வரையறைகளை நோக்குவதுதான் அறிவாளியின் செயல். விஷ்ணு என்பதற்கு வேதம் என்ன வரைவிலக்கணம் கொண்டுள்ளது என்பதை பாருங்கள், நீங்கள் கொண்ட இலக்கணதோடு அல்ல.. ஒப்பிட்டால் இரண்டிர்குமான வேற்றுமை பாலுக்கும் மில்க்-கிற்கும் என்ன வேற்றுமையோ அதுமட்டும்தான் அதாவது மொழிதான் வேற்றுமை, பொருள் அல்ல.

2)
ஜாகீர் நாய்க் :
கல்கி அவதாரத்தில் குறிப்பிட்டு இருப்பது போல் நபியின் பிறப்பிடம் நீரினாள் சூழப்பட்ட அரபு பிரதேசம்.

தமிழ் ஹிந்து :
கல்கி நீரினாள் சூழப்பட்ட பகுதியில்தான் பிறப்பார்.. சரி அரேபியா மட்டும்தான் நீரினாள் சூழப்பட்ட பகுதியா? ஏன் மற்ற இடங்களிலோ இந்தியாவிலோ இல்லயா?

பதில் :
கல்கி அவதாரம் எங்கு பிறக்கவேண்டும் என்ற அதிகாரம் யார் கையில் உள்ளது? இறைவனுடய நாட்டம் அதுவாக இருந்தால் அதை தடுக்க உங்களால் முடியுமா?

3)
ஜாகீர் நாய்க் :
கல்கி அவதாரத்தில் குறிப்பிட்டது போலவே முகமது அவர்களும் உயர் குலத்தில் பிறந்தார்..

தமிழ் ஹிந்து :
மதிப்பு மிகுந்த குலத்தில் பிறந்தவரெல்லாம் கல்கி ஆகிவிட முடியுமா?

பதில் :
முடியாது தான், ஆனால் இதேபோல குறிப்பிடப்பட்டுள்ள மற்ற முன்னறிவிப்புகளும் பொருந்தும் ஒருவர் கல்கி அவதாரமாக தானே இருக்க வேண்டும். இது ஒன்று மட்டுமே ஒற்றுமை என்றால் உங்கள் கேள்வி சரி ஆனால் மற்ற ஒற்றுமைகளை அறிய நீங்கள் படிக்க வேண்டியது பண்டிதர் வெடிக் பிரகாஷ் எழுதிய புத்தகத்தை அதுவும் முழுமயாக. ஜாகிர் நாயக்-இன் உரை ஒரு முன்னுரை மட்டுமே.

மேலும் அவர் கேட்கும் அடுத்தடுத்த குதிரை மற்றும் வாள் போன்ற கேள்விகளுக்கு பிரகாஷ் அவர்களின் புத்தகமே அவருக்கு பதில் கூறும்.

4)
ஜாகீர் நாய்க் :
கல்கி அவதாரம் வாள் ஏந்தி எதிரிகளுடன் சண்டை இடுவார் என்பது கல்கி புராணத்தில் சொல்லப்பட்ட தீர்க தரிசனம், மேலும் வாள் ஏந்தி சண்டையிடும் முறை வழக்கொழிந்து போய்விட்டது, எனவே அவர் ஏற்கனவே வந்து இருக்கவேண்டும், இனி வரப்போவது இல்லை.

தமிழ் ஹிந்து :
ஆகா என்ன கண்டுபிடிப்பு, பல காரணங்களுக்காக 3ம் உலகப்போர் வெகு விரைவில் ஏழபோகிறது எனவே அதன் காரணமாக பீரங்கி துப்பாக்கிகள் எல்லாம் அழிந்து போகும் பின்பு வில்லும் அம்பும்தான்

பதில் :
உங்களின் அதிசிறந்த கற்பனை திறன் நம்மை திகைக்க செய்கிறது ஹாலீவுட்ல் உங்களை போன்ற ஆட்களுக்கு வரவேற்ப்பு அதிகம்..

5)
தமிழ் ஹிந்து :
ஏன் முகலாயர்கள் இந்த உண்மையை வெளிகொண்டு வரவில்லை? அப்பொழுது இருந்த இஸ்லாமிய அறிங்கர்கள் ஏன் இதை செய்யவில்லை?

பதில் :
அருமயான கேள்வி.. கல்கி புராணம் சம்ஸ்கிருதத்தில் உள்ளது, எனவே அதனை ஆராய்ந்து சொல்லும் கடைமையும் பொறுப்பும் சமஸ்கிருத மொழியில் வேத புராணங்களை கொண்ட உங்களுக்குத்தான் உள்ளது.. இப்பொழுது நாங்கள் கேட்கிறோம் இதை கண்டு பிடித்து சொல்ல உங்களுக்கு 1200 வருசமா? சரி தாமதம்தான் செய்துவிட்டேர்கள் பரவாயில்லை, உங்கள் பண்டிதர் ஆராய்ந்து விளக்கியபிறகாவது ஒத்துக்கொண்டீர்களா? ஏறக்குறைய 30 வருசத்திற்கு மேல்தான் எங்கள் அறிவிற்க்கு வந்தது, இதனை உலகறிய செய்தால் இஸ்லாமியர்கள் ஏமாற்று வேலை செய்கிறோம் என்கிறீர்கள்..

6)
தமிழ் ஹிந்து :
முகம்மது நபி அவர்களை முன்பே சொன்ன ஹிந்து மதத்தை ஏன் பின்பற்ற கூடாது?

பதில் :
மிக மிக அருமயான கேள்வி.. அதற்கு முன் ஒரு சின்ன கேள்வி? நீங்கள் 4 வேதத்தில் எந்த வேதத்தை பின்பற்றுகின்றீர் அல்லது எந்த புராணத்தை பின்பற்றுகின்றீர், எதாவது ஒன்றை சொன்னால் மற்றவைகளை புறக்கணிக்கின்றீர் ஏனெனில் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துககளை கொண்டது .. நீங்களே உங்கள் மதத்தை புறக்கணிக்கும்போது நாம் ஏன் செய்யக்கூடாது.. அனைத்தயுமே பின்பற்றுகின்றேன் என்று சொல்வீர்கலான ரிக் வேதத்தில் அக்னி தான் பெரிய கடவுள் யாஜுர்-இல் ஈஷ்வரன் தான் பெரியகாடவுள், அடுத்த இரண்டில் விஷ்ணு தான் பெரிய கடவுள்.. இதில் எது உண்மை..? ஒவ்வொரு புரணமும் அந்தந்த கடவுளைதான் பெரிய கடவுள் என்கிறது.. ஐதாரேய உபநிஷத்தை எடுத்து படியுங்கள், அது படைப்பு பற்றி பேசுகிறது.. கடவுள் முதன் முதலில் பிரம்மனை படைத்தார் என்கிறது, யார் அந்த கடவுள்? பதில் எங்களிடம் உள்ளது.. அவன் ஒரே இறைவன், வணங்க தகுதி உடையவன்.. மற்ற அனைத்தும் படைக்க பட்டவைகள்.. ஆனால் பிரம்மனையே கடவுள் எங்குறீர்கள்.

யார் அசம்பூதியை (இயற்கை/படைக்க பட்டவைகள் ) வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்! - அதர்வவேதம் 40 : 09

அவனது வேத உபதேசங்கள் அதன் சாரத்தை விட்டு மக்களால் மருவும்போதும் மாறும்போதும் அவன் அடுத்த தவறுகள் திருத்தப்பட்ட வேதத்தை மக்களுக்கு ரிஷிகள் மூலம் அனுப்புகிறார்.
புதுமயான கருத்தாக இருக்கிறதா? ரிக் வேதம் 10 பகுதிகளை கொண்டது ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரிஷிகளால் பெரும் கால இடைவெளிகளில் எழுதப்பட்டது என்பது பதிவு செய்யப்பட்ட உண்மை. இதேதான் மற்ற அனைத்து வேதங்களுக்கும் பொருந்தும் . மேலே குறிக்கப்பட்ட இஸ்லாத்தின் கருத்து சரியென்றால் தான் இந்த உண்மை சாத்தியம்

முகம்மது நபி அவர்கள் ஒரு குரு/ஆசிரியர் என்று கல்கி புராணம் சொல்லுகிறது, என்றால் அவர் போதனைகளை பின்பற்றவா இல்லை நீர் சொல்லுவதாயா? அல்லது ஒன்றுக்கொன்று முரணான ஹிந்து மாத்தையா?

எந்த மதத்தையும் இழிவு படுத்த விரும்பவில்லை என்ற வார்த்தையை பயன் படுத்தியதற்கு நன்றி.. ஆனால் பொய்யான பரப்புரை மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துவத விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.. இது பொய் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்? வேத புராணங்களையும், குர்ஆன் ஹதீசையும் அதன் மூல மொழியில் படித்து இவைகளை பற்றிய தீர்காமான அறிவு கொணாடவரா நீங்கள்? இல்லை இந்திய மற்றும் இஸ்லாமிய மதங்களின் வரலாற்றை முழுவதும் அறிந்தவரா? நீங்கள் வலைத்தளங்களில் இது சம்பந்தமான பதிவுகளுக்கு பதில் விரைவில் அளிப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.. நல்லது, அதற்குமுன் இஸ்லாமை பற்றி தீர்காமாக படித்து கொள்ளுங்கள், ஏனென்றால் ஹிந்து மதத்தினரை போல் நாம் ஏன் எதற்காக இந்த மதத்தில் இருக்கிறோம் என்று உள்ளவர்கள் இங்கு குறைவு...

மேலும் வேறொரு பதிவில் முகம்மது அவர்களின் பெயர் பாவிஷ்ய புராணத்தில் குறிப்பிடப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் - http://www.tamilhindu.net/ 

முகம்மது அவர்களின் பெயர் பாவிஷ்ய புராணத்தில் குறிப்பிட பட்டு உள்ளது என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் ஒத்துக்கொண்டு உள்ளார், அவரை போன்ற ஹிந்து மத அறிஞர் சொல்லுவதை கேட்கவா? இல்லை நீர் சொல்லுவதை உண்மை என்று நம்பவா? https://www.youtube.com/ 

“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் இறைவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். - 3:64

மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண் மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர் களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர்தாம், அதற்கு முரண் பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன் 2 : 213)

உங்களுக்கு நான் உபதேசம் செய்ய நாடினாலும்! அல்லாஹ்! உங்களை வழிகெடுக்க நாடியிருந்தால் என் உபதேசம் உங்களுக்கு பலனளிக்காது! அல்லாஹ் பக்கமே! நீங்கள் மீட்டப்படுவீர்கள்! -ஹூது 11:34

அஸ்லலாமு அழைக்கும்.

குறிப்பு : தமிழ்ஹிந்து இணயததளம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துதுவாவை பரப்பும் ஒரு இணயதளம் என்பதை இந்த கட்டுரை எழுதிய சில மதங்களுக்கு பிறகே தெரிந்து கொண்டேன்.. இந்த இணயததாளத்தின் குறிப்பிடத்தக்க வேண்டிய சில செயல்பாடுகளாவது,

1) இஸ்லாமியர்களையும், அவர்களது வரலாறு, வேதம், மற்றும் கலாச்சாரத்தை கடுமையாக சாடிஇருக்கின்ற நிலையில், அவர்களுக்கு பதில் கூறும் வகையில் இஸ்லாமியர்கள் கருத்து எழுத அனுமதிக்க படுவதில்லை. ஒரு இஸ்லாமியாரின் பின்னோட்டத்தையும் காண முடியவில்லை. இவர்களின் சிந்தனை போக்கு இதன் மூலம் அறியப்படுகிறது.

2) ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துதுவா-க்களின் செயல்பாடுகளை வரலாறு அறியாதவர் நம்பிவிடும் அளவுக்கு ஞாயபடுத்தி எழுதப்பட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். & ஹிந்துதுவா என்பது என்ன? அதன் வரலாற்று பின்னணி என்ன? என்பதெல்லாம் நான் பேசிய எனது பெரும்பாலான நண்பர்களுக்குத் தெரியவில்லை, எனவே அவர்கள் யேமாறுவது சுலபமே..

3) குருஜி கோல்வால்கேர்-ஐ ஏகத்துக்கும் புகழ்கிறது, அவ்வளவு தகுதி உடையவர் என்றால் ஏன் தேர்தலின் பொழுது அவரது பெயரையோ கொள்காயையோ முன்னிறுத்தவில்லை?

4) அவர்களின் இணயத்தளத்தில் எழுதப்பட்டு இருக்கும் வாசகம் "தமிழரின் தாய்மதம் ஹிந்து மதம்"! தமிழ் தோன்றிய காலமே ஒரு குத்துமதிப்பகத்தான் கணிக்கப்பட்டு உள்ளது, ஆனால் சைவம் தமிழ்நாட்டில் வந்தது 1200 ஆண்டுகள் முன்புதான், சைவ வரலாறு சொல்லும் உண்மை இது, 1250 ஆண்டுகளுக்கு முந்தய சிவன் கோவில் ஒன்றை தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கும் எவராலும் காட்ட முடியாது. அப்படி இருக்க ஹிந்து எப்படி தமிழரின் தாய் மதமானது?

5) அனைத்து மதமும் சொல்லும் ஒரே கொள்கையை "படைத்தவனை மட்டும் வணங்குவது, அந்த இறைவன் மட்டுமே வணங்க தகுதி படைத்தவன்" அதில் திரிபு ஏற்படும் பொழுது மறுமலரிச்சியாய் வரும் போதனைகளை புதிய மதமாக பார்க்கும் கண்களில் தான் பழுது. என்மதம் பழமையானது அதுவே சிறந்தது என்று பெருமை அடிப்பது எனபது, இந்த வாள்தான் பரங்கியரின் தலயை கொய்த வாள் இதை வைத்தே நான் இன்று சீனர்களை யுத்தத்தில் வெல்லுவேன் என்பது போல் ஆகும்... வாளின் காரணம் யுத்தம், மதத்தின் காரணம் வாழ்க்கை நெறி, வாள் துருப்பிடிக்க, வேறுவரால் வேறொரு இடத்தில் அது மெருகேற்ற பட்டால் அது வேறு வாள் ஆகாது.. அதே போல் மதங்கள் மனிதனுக்கான போதனைகளுடன் ஒரே இறைவனிடமிருந்து வந்தது, அதை வேறொரு மொழி பேசுபவர் வேறொரு நாட்டிலிருந்து வருபவர் சீர்செய்தால் அது எப்படி வேறொரு மதமாகும்? துருப்பிடித்த வாளும் திரிந்துபோன மதமும் யாருக்கு என்ன பலன் தர முடியும்?

மேலும் ஆழமான ஆய்வுக்கு வாசிக்க வாய்மை 

5 கருத்துகள்:

  1. சக்ரவர்தினி சுந்தரி முகமட்12 ஜூலை, 2016 அன்று 12:34 AM

    எம்முடய கெள்விக்கு பதில் தாருங்கள், கல்கி அவதாரம் வால் ஏண்தி அவர் டண்டனை அலிக்கவே என்று புராணம் குருகிறது, ஆணல், நபி(ஸல்) பொதனை கொண்டுவண்து சேராபிட்டார்?
    நபி(ஸல்) பிறக்குபொதே தகபன் அற்றவர், ஆணல் கல்கிக்கு பெயர் சுட்டு விழவை நாதுபரே அவர் தகபன் விடுநு பக்த், அது மற்றும் அல்ல, நபிக்கு8 பவயதிஸ் அவர் அம்மவும் இரந்டித்தார், ஆணல் கல்கியின் குருகுள வழ்வுக்கு வனைக்கும், அவர் அவதாரம் மற்று பெரும் வரைக்கும் அவன்ரின் பெற்றொர் அவர்ருடனே இருப்பர் என்று புராணம் உரைக்கும்?
    சரி அது மற்றுமா, கல்கிக்கு ஓரு மணைவி, பெயர் கமல, ஆணல் நபிக்கு 13 மணைவியர்கள் உள்ளனரே?
    குரனை காபேன் என்உரைத்த கடவுளுக்கு, ஏன் மற்ற நூள்களை காக்க வளுஅற்று போணது?

    பதிலளிநீக்கு

  2. அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், வங்காள பிராமணருமான பண்டிட் வேத் பிரகாஷ், இந்துப் புராணங்களையும் வேதங்களையும் நன்கு ஆராய்ந்து இந்துக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி அவதாரம் வேறு யாருமல்ல, அது நபிகள் நாயகம் தான் என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.

    அதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இன்னும் எட்டு அறிஞர்களிடம் தம் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்து, அவர்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் அந்த நூலை அவர் வெளியிட்டுள்ளார்..

    அதனை ஆதாரமாக கொண்டுதான் இஸ்லாமியர்கள் செய்தியை வேயிடுகின்றோம்.. காரணம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் எதையும் பரப்ப எங்களுக்கு அனுமதி இல்லை.
    என்னில்
    "இறை நம்பிக்கையாளர்களே ! ஒரு(வன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை(ஏற்றுக் கொள்ளும் முன்னர்)த் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல் உண்மை) அறியாமல் ஒரு (குற்றமற்ற) சமூகத்துக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். பின்னர் (உண்மை வெளிவரும்போது) நீங்கள் செய்ததைக் குறித்து உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியவர்களாவீர்கள்" (49 : 6) என்று இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்.
    "தனக்குக் கிடைக்கும் செய்தியை ஆராயாமல் அப்படியே பரப்புவன் பொய்யன்" என நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

    நபி அவர்கள் பத்ர் என்னும் போரில் வால் ஏந்தி படைக்கு தலைமை ஏற்று வெற்றி கண்டவர் என்பது வரலாறு.. போதனையை மட்டும் கொண்டு வரவில்லை...

    நபி அவர்களுக்கு மொத்தம் 11 மனைவிகள், 13 அல்ல... ஒரு பெயர் மட்டும் குறிப்பிட்டு இருப்பதால் ஒரு மனைவி மட்டுமே இருப்பதாக பொருள் இல்லை அவ்வாறு வசனம் இருந்தால் ஆதாரம் காட்டுங்கள்..

    திருக்குர்ஆனுக்கு முன் இருந்த வேதங்களை காக்க வலு இல்லை என்பதால் விட வில்லை.. தேவை இல்லை என்பதால் முந்தய வேதங்களை காக்க வில்லை..

    ஏன் என்ற கேள்வி உங்களுக்கு தோணலாம்.. இது 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே நிலம் மற்றும் மக்கள் தான் அனால் அன்றைய சட்டங்களை இன்று பின்பற்றவோ பாது காகவோ அவசியம் இல்லை. ஏனென்றால் இன்றைய புதிப்பிக்கப்பட்ட சட்டதிட்டங்கள்-ஐ தான் நாம் பின்பற்ற வேண்டும்.. வேதம் என்பது இறைவனின் சட்டம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று..
    மேலும் விளக்கமாக சொல்லுவதென்றால்,

    யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
    அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
    यदा यदा हि धर्मस्य ग्लानिर्बवति भारत।
    अब्य्त्तानमधर्मस्य तदात्मानम् सृजाम्यहम्॥
    பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம்
    தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
    परित्राणाय सादूनाम् विनाशाय च दुश्कृताम् ।
    धर्मसम्सापणार्ताय सम्बवामि युगॅ युगॅ॥

    இதன் பொருள் இன்று உலக நிலைமையை கண்ணுறும் எவரும் உலக மக்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையில்லை, இருக்கும் வழிகாட்டிகளே போதும் என கூறிட முடியாது. வழிதவறிச் சென்று கொண்டிருக்கும் இந்த உலகை மனிதர்களால் மட்டும் வழிகாட்டிட முடியாது. மனித சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு ஆற்றல் நிச்சயமாகவே தேவை.

    அதாவது எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்போதெல்லாம் இறைவன் ஓர் ஆன்மாவை, அதாவது அவதாரத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த அவதாரம் யுகங்களுக்கிடையில் பூமியில் தோன்றி நல்லவர்களைப் பாதுகாத்து, கொடியவர்களை அழித்து புதிய தர்மம் ஒன்றை நிலைப்படுத்திடச் செய்கின்றது என்கிறது பகவத் கீதை.

    குறிப்பு : இறைவன் ஒரு ஆன்மாவை அல்லது அவதாரத்தையே வெளிப்படுத்துகிறார், அவரே வருவதாக இந்த வசனங்கள் சொல்லவில்லை. மேலும் புதிய தர்மம் ஒன்றை நிலைப்படுத்திடச் செய்கின்றது. இதன் மூலம் அறிவது ஒரு புது அவதாரம் வரும்பொழுது புதிய தர்மம் (மதம்) நிலைபெறும் எனவே பழையது அற்று போகிறது.. பழையதை பற்றி பிடித்து கொண்டு இருப்பவர்கள் தவறில் இருகிறார்கள்.

    மேலும் இத்தனை ஆதரத்திற்கு பிறகு ஒன்று மட்டும் பொருந்தவில்லை என்பதால் மற்ற அனைத்தையும் நம்புவதிற்கு இல்லை என்பது தவறு. மேலும் பழைய வேதங்கள் முழுமையாக பாதுகாக்க படவில்லை என்பது தாங்கள் அறிந்ததே..

    மேலும் தங்கள் வாசிப்பிற்கு....

    பதிலளிநீக்கு
  3. "ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத"
    சிஷ்ய சாகா ஸமன்விதம்.."
    (பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)
    இதன் பொருள்:
    "அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்)."

    அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், வங்காள பிராமணருமான பண்டிட் வேத் பிரகாஷ், இந்துப் புராணங்களையும் வேதங்களையும் நன்கு ஆராய்ந்து இந்துக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி அவதாரம் வேறு யாருமல்ல, அது நபிகள் நாயகம் தான் என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.

    அதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இன்னும் எட்டு அறிஞர்களிடம் தம் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்து, அவர்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் அந்த நூலை அவர் வெளியிட்டுள்ளார்.. அவருடைய ஆய்வு முடிவுகளின் சுருக்கமான விவரம் வருமாறு:

    உலக மக்கள் அனைவருக்கும் பகவானின் செய்தியைக் கொண்டு வருபவராக கல்கி இருப்பார் என்று வேதங்கள் கூறுகின்றன. இது நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்குத்தான் பொருந்துகிறது.
    இது அகிலத்தொருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமே தவிர (வேறு) இல்லை, உங்களிலிருந்து நேர்வழி நடக்க விரும்புவோருக்கு (நினைவூட்டும் நல்லுபதேசமாகும்.) - திருக்குர்ஆன் 81 :27-28.

    கல்கியின் தந்தை பெயர் விஷ்ணு பகத், தாயின் பெயர் சோமாநிப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் "விஷ்ணு" என்றால் இறைவன்(அல்லாஹ்), "சோமாநிப்" எனும் சொல்லுக்குப் பொருள் அமைதி - சமாதனம் என்பதாகும். "ஆமினா" என்பதற்கும் அதுதான் பொருள். அப்துல்லாஹ்வும் ஆமினாவும் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தந்தையும் தாயும்.

    கல்கி ஆலிவ் எண்ணையையும் பேரீச்சம் பழங்களையும் உணவாகக் கொள்வார் என்றும், "நம்பிக்கையாளர்" என்று மக்களால் போற்றப்படுவார் என்றும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணையையும் பேரீத்தம் பழங்களையும் உணவாக் கொண்ட நபிகள் நாயகம் அவர்களை "அல் அமீன்" (நம்பிக்கையாளர்) என்று மக்கள் போற்றினர்.

    மிகவும் உயர்ந்த குடும்பத்தில் - உயர்ந்த கோத்திரத்தில்தான் கல்கி பிறப்பார் என்று வேதம் கூறுகிறது. மக்காவில் மிக உயர்ந்த குடும்பமான குறைஷிக் குடும்பத்தில் - ஹாஷிம் கோத்திரத்தில்தான் நபிகளார் பிறந்தார்.

    குகையில் வைத்துதான் பகவானின் செய்திகள் தேவதூதன் மூலம் கல்கிக்கு கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது. "ஹிரா" குகையில் இருக்கும்பொதுதான் ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் இறைவனின் திருச்செய்திகள் அண்ணல் நபிகளாருக்கு அருளப்பட்டன.

    கல்கிக்கு அதி வேகமுள்ள ஒரு குதிரையை பகவான் அருளுவார் என்றும், அதன் மூலம் அவர் உலகத்தையும் ஏழு வானங்களையும் சுற்றி வருவார் என்றும் வேதத்தில் பதிவாகியுள்ளது. இது அண்ணலார் அவர்களின் விண் பயணத்தைதான் (மிஃராஜ்) குறிக்கிறது.

    பகவானின் அளவற்ற அருளும் துணையும் கல்கிக்கு கிடைக்கும் என்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதிலுமே இந்த தெய்வீகத்துணை கிடைத்துள்ளது.

    குதிரையேற்றத்திலும், அம்பு எய்வதிலும், வாள் போரிலும் கல்கி நிபுணராய் இருப்பார் என்ற அறிவிப்பு உள்ளது. முஹம்மது நபி இவை எல்லாவற்றிலும் சிறப்புற்று விளங்கினார்.

    ஆகவே 1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி அவதரித்து விட்டார். அவர் தாம் முஹம்மது நபி என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் பண்டிட் வேத் பிரகாஷ்.

    Ref : https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)
    http://www.islamkalvi.com/religions/kalki.htm
    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)
    https://prsamy.wordpress.com/2009/09/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5/


    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4 மே, 2022 அன்று 1:57 AM

    இந்து மத வேதங்களை பற்றி இதை எழுதி இருக்கின்ற ஒவ்வொரு உடைய கருத்துக்களும் இது இஸ்லாம் உள்ள ஆறுகள் கொடுத்து எழுதப்பட்டுள்ள வெளியீடாக நான் கருதுகிறேன் என்று நபிகள் நாயகம் வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அதில் நான் குர்ஆன் ஹதீஸ் தப்ஸீர் அனைத்துமே நான் படித்திருக்கிறேன் படித்துக்கொண்டு இருக்கிறேன் ஆகையால் இந்த கல்கி அவதாரத்தில் அவருக்கு ஒரே ஒரு மனைவி மட்டும் இருப்பார் முகமது நபி கோ தாலிகட்டிய மனைவிகள் 13 பேர் அதில் அவர் உயிருடன் இருக்கும் போது இரண்டு மனைவிகள் இறந்து விடுகிறார்கள் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அவர் மரணிக்கும் தருவாயில் அவருக்கு 9 மனைவிகள் இருக்கிறார்கள் இரண்டு மனைவிகள் அவர்கள் பெயரை உச்சரிக்காமல் தாலி கட்டியவுடன் அவள் உடம்பில் இருக்கின்ற துணிகளை அவருடன் குஷ்டரோகம் பிடித்து இருப்பதினால் அவளை அப்போதே விவாகரத்து செய்கிறார் மற்றொரு மனைவி முக்காடு இடவில்லை என்றால் இடவில்லை என்றால் அவள் ஒரு இஸ்லாமிய பெண்ணாக வாழாமல் எனக்கு அந்த புறமாக நான் வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவளை அந்தப்புரத்திற்கு அனுப்புகிறார் இரண்டு மனைவிகளையும் அங்கே இல்லை அதுமட்டுமல்ல போர்களில் கிடைக்கப்பெற்றுள்ள கைதிகள் பெண் கைதிகள் அவர்களை எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் உங்களை விவாகரத்து செய்துவிட்டு வேறு மனைவிகளை அவர் திருமணம் செய்து கொள்வார் குரான் அத்தியாயம் 66 வசனம் 5

    ஸஹீ அல் புகாரி2465

    குர்ஆன் 65 வசனம் 1 நபியே பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவை கடைப்பிடித்து கேப்ப விவாகரத்தை செய்யுங்கள்

    குரான் 33 வசனம் 50 நபியே உமது மனைவியரின் யாருக்கு அவர்களின் மணக்கொடை கொடுத்து விட்டு அவர்களை அல்லாஹ் உமக்கு போர் கைதிகளாக கொடுத்த அடிமைப் பெண்களை உமது தந்தையின் சகோதரிகள் தாயின் சகோதரிகளும் சகோதரனுடைய புதல்விகள் சகோதரிகள் உமது தாயின் சகோதரிகள் உடைய புதல்விகள் ஆகியோருடன் குஜராத் செய்பவரையும் உமக்கு மணமுடிக்க நாம் அனுமதி அளித்து உள்ளோம் நபிக்காக தன்னைத்தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணக்க விரும்பினாள் அனுமதித்து உள்ளோம் இந்த சட்டம் உமக்கு சங்கடம் ஏற்படாத இருப்பதற்காக நாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

    குரான் 33 வசனம் 51 நீர் விரும்பியவரை வைத்துக்கொள்ளலாம் அவரை ஒதுக்கி விடலாம் உன் மீது குற்றம் இல்லை குரான் 33 வசனம் 52 அடிமைப் பெண்களைத் தவிர வேறு பெண்களை இதற்குப் இதற்கு உடம்புக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்
    உங்கள் பாலியல் ஆசைகளை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை புகாரி 302

    தன்னுடைய மனைவியாகிய ஆயிஷாவை தன்னுடைய வளர்ப்பு மகனுக்கு முலைப்பால் கொடுக்கச் சொன்னார் முஸ்லிம் 14 53a

    வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்தார் குர்ஆன் 33 வசனம் 37

    இப்படி பலதரப்பட்ட மனிதனா வாழ்ந்து கொண்டிருந்த முகமதுநபி எங்கே ஒரே ஒரு மனைவியோடு வாழ்ந்து முடிந்த கல்கி அவதாரம் தன்னுடைய வசனம் இங்கே இதுதான் நாங்கள் சொல்கிறோம் முகமது நபிக்கும் கல்விக்கும் உள்ள வேறுபாடுகள் உண்மையான கல்கி முகமது நபி இல்லை சாகிர் நாயக் சொல்வது சுத்த பொய் கல்கி அவதாரம் வேற

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பதிவு இட்டுள்ள ஸஹீஹ் புகாரி : 2465. இல் நீங்கள் எழுதி உள்ள பொய்யான இட்டுக் கட்டிய சம்பவம் இல்லை.. உண்மையாக அந்த இலக்கத்தில் உள்ளதை கீழே பதிவு இடுகிறேன்...
      (பொய் செல்லும் போது பொருந்தும் படியாக சொல்லுங்கள்)


      அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
      'நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.
      ஸஹீஹ் புகாரி : 2465.

      நீக்கு