பிராத்தனை

கிறிஸ்தவம் 


உங்களில் யாருக்காவது ஞானம் இல்லாதிருந்தால், குறை காணாமல் அனைவருக்கும் தாராளமாகக் கொடுக்கும் கடவுளிடம் கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் கேட்கும்போது, ​​நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டும், ஏனென்றால் சந்தேகப்படுகிறவர் காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட கடல் அலையைப் போன்றவர் - (யாக்கோபு 1:5-6)


தமிழர் சமயம் 


வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (குறள் 265)

 பொருள்: விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும். (௨௱௬௰௫)


தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.   (குறள் - 266) 

பொருள்: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.  

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று. - (நாலடியார் 001)

(பொருள்.) வான்இடு வில்லின்- வானில் உண்டாகின்ற வானவில்லின்,
வரவு அறியா வாய்மையால் - வருகையை எங்கிருந்து வருகிறது என அறிந்துகொள்ள முடியாதது என்ற உண்மையை போல்,
கால் நிலம் தோயாக் கடவுளை - திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத இறைவனை,
நிலம் சென்னி உற வணங்கி சேர்தும்- தரையில் எமது தலை பொருந்தும்படி வைத்து தொழுது,
சேர்தும் - இடைவிடாது உள்ளுவோம்
யாம் எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று - எமது மனத்தில் நினைத்தவை நிறைவேறுக என்று கருதி.

(கருத்து.) வானவில் எங்கிருந்து வருகிறது என்று நாம்அறிய முடியாது, பார்வைக்கு அது தொடங்கும் இடத்தை நோக்கி விரைந்தாலும் பயணம் நீளுமே தவிர அதன் வரவு எங்கிருந்து என்று அறியமுடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் இறைவன் என்பவனின் கால் இந்த பூவுலகில் படாது என்பதும் உண்மை அதாவது பூமியில் எங்கு தேடியும் காண முடியாத இறைவனை நாம் நிலத்தில் தலை பொருந்தும் படி வைத்து வணங்கி என்உள்ளத்தில் முற்படுவதை முடிக என்று வேண்டுறோம். 

இஸ்லாம் 


உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்த்த னைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்கு வதை விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர் களாய் நரகில்புகுவார்கள். (அல்குர்ஆன் 40:60)

 (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.(அல்குர்ஆன்-2:186)

 தனக்குத் தானே அநீதம் இழைத்துக் கொண்ட எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரு போதும் நிராசை ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான் என்று (நபியே) நீர் கூறுவீராக!. (அல்குர்ஆன் 39:53) 
 

பிராத்தனைகள் ஏன் பதிலளிக்கப் படுவதில்லை?


கிறிஸ்தவம் 

பாவிகளுக்கு தேவன் செவிக்கொடுப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம். பக்தியும் கீழ்ப்படிதலும் உள்ள ஒருவனுக்கு தேவன் செவிகொடுப்பார்.  (யோவான் 9:31)

இஸ்லாம் 

நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில்,இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (நூல்: முஸ்லிம்-1844 (1686))

7 கருத்துகள்:

  1. “வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவறுப்பானது” (நீதி. 29:9)

    பதிலளிநீக்கு

  2. கடவுளிடம் மட்டுமே நாம் ஜெபம் செய்ய வேண்டும். (யோவான் 14:6)

    பதிலளிநீக்கு

  3. ஜெபம் என்பது நம்முடைய வணக்கத்தின் ஒரு பாகம்; அந்த வணக்கம் யெகோவா தேவனுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். (வெளிப்படுத்துதல் 19:10)

    கடவுளிடம் மட்டுமே நாம் ஜெபம் செய்ய வேண்டும். (யோவான் 14:6)

    பதிலளிநீக்கு
  4. உங்கள் மத்தியில் சண்டைகளும் தகராறுகளும் வருவதற்குக் காரணம் என்ன? உங்கள் உடல் உறுப்புகளில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிற உடலின் ஆசைகள்தான், இல்லையா?+ 2 நீங்கள் ஆசைப்படுகிறீர்கள், ஆனாலும் உங்களுக்குக் கிடைப்பதில்லை. நீங்கள் கொலை செய்துகொண்டும் பேராசைப்பட்டுக்கொண்டும் அலைகிறீர்கள்; ஆனாலும், உங்களால் பெற முடிவதில்லை. விடாப்பிடியாகச் சண்டைகளிலும் தகராறுகளிலும் ஈடுபடுகிறீர்கள்.+ நீங்கள் வேண்டிக்கொள்ளாததால் உங்களுக்குக் கிடைப்பதில்லை. 3 நீங்கள் வேண்டிக்கொண்டாலும் கிடைப்பதில்லை; ஏனென்றால், தவறான நோக்கத்துக்காக, அதாவது உங்கள் உடலின் ஆசைகளைத் திருப்திப்படுத்துவதற்காக வேண்டிக்கொள்கிறீர்கள். - யாக்கோபு4:

    பதிலளிநீக்கு
  5. «அல்லாஹ் கூச்ச சுபாவம் உள்ளவன் ஒரு அடியான் அல்லாஹ்விடம் இரு கரமேந்தி வேண்டினால் அல்லாஹ் ஒன்றும் கொடுக்காமல் திருப்பி அனுப்ப வெக்கப்படுகின்றான்.».(ஆதாரம் திர்மதி)

    பதிலளிநீக்கு
  6. பிரார்த்தனை செய்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். 1 தெசலோனிக்கேயர் 5:17 (NLT)

    பதிலளிநீக்கு
  7. எனவே நீங்கள் அவர்களிடம் சொல்வது இங்கே; இங்கே நான் பார்க்க விரும்புவது: ஆண்களே, நீங்கள் எங்கிருந்தாலும் பிரார்த்தனை செய்யுங்கள் . உங்கள் பரிசுத்த கரங்களை சொர்க்கத்தை அடையுங்கள்—ஆத்திரம் அல்லது மோதல் இல்லாமல்—முற்றிலும் திறக்கவும். ( 1 தீமோத்தேயு 2:8 குரல்)
    https://www.prayerandpossibilities.com/prayer-position-sit-stand-kneel/

    பதிலளிநீக்கு