கேளுங்கள் தரப்படும்

கிறிஸ்தவம்  

ஆனால் உங்களில் எவருக்கேனும் ஞானம் வேண்டுமானால் நீங்கள் தேவனிடம்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். தேவன் தாராளமானவர். கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் கொடுப்பதில் அவர் மகிழ்வடைகிறார். ஆகையால் தேவன் உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார். (யாக்கோபு 1:5)

தேவனிடம் கேட்டுப்பெறுதல்

தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும். ஆம், ஒருவன் தொடர்ந்து கேட்டால், அவன் அதைப் பெறுவான். ஒருவன் தொடர்ந்து தேடினால், அவன் கண்டடைவான். ஒருவன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும். “உங்களில் யாருக்கேனும் மகன் உண்டா? உங்கள் மகன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை. அல்லது, உங்கள் மகன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை. நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ? - (மத்தேயு 7:7-11)

 இஸ்லாம் 

 அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை. (அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி.)

அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)

உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்த்த னைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்கு வதை விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர் களாய் நரகில்புகுவார்கள். (அல்குர்ஆன் 40:60)


தமிழர் சமயம் 


ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை;
ஈரம் உடையவர் காண்பார் இணைஅடி... (திருமந்திரம் 273)

பொருள்: யார் ஆர்வம் உடையவர்களோ அவர்கள் காண்பார்கள்; யார் அன்பு உடையவர்களோ அவர்கள் பெறுவார்கள்.

ஆர்வம் என்பது வெறும் விருப்பமல்ல, அது கடும் முயற்சியுடன் கூடிய அதீத வேட்கை
ஈரம் என்பது இயல்பாய் காணப்படும் அன்பு மட்டுமல்ல அல்ல, கடுமையாக துன்பம் தரும் ஒருவர் மீதும் இறக்கப் படுவதும் அன்பு காட்டுவதுமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக