அரக்கர்களும் அசுரர்களும் - இறைவனின் மூன்று படைப்புகள்

தமிழர் சமயம்

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேதொல்காப்பியம் 573 என தொல்காப்பியத்துக்கு விளக்க உரை எழுதிய இளம்பூசனர் கூறுவார் "பிறவாவது தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர்"

அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை - (திருமந்திரம் 5)

பொருள்: சிவனன்றி அவனால் படைக்கப்பட்ட மூவர்களாகிய தேவர்கள், மனிதர்கள், அசுரர்களால் செய்ய முடிந்தது ஏதும் இல்ல.

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?... - (பரிபாடல் 60)

 கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி - (காலிததகை 1:3)

 மாயம் செய் அவுணரை - (கலித்தொகை 2:3)

சொற்ப்பொருள்: அவுணர் - அசுரர், கூளிபேய், சாத்தான், அரக்கன்  


உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் - (அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:850)

பொழிப்பு: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
 
சொற்ப்பொருள்: அலகை - பேய் (evil sprit)

இஸ்லாம்

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)

மேலும் சூரத்துல் ஜின் என்கிற அத்தியாயம் குர்ஆனில் இறக்கி அருளப்பட்டுள்ளது. அதில் அவர்களது உணவு, உறைவிடம் உட்பட  ஆற்றல், செயல்கள் மற்றும் பண்புகள் என பலவும் விரிவாக கொடுக்கப் பட்டுள்ளது.

கிறிஸ்தவம்

எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனிதனை படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். - (ஆதியாகமம் 1:27)

ஒருநாள், தேவதூதர்கள் யெகோவாவின் முன்னால் வந்து நின்றார்கள் சாத்தானும் அவர்களோடு வந்து நின்றான். - (யோபு 1:6)

சாத்தான் என்பவன் fallen Angel என்ற கருத்து கிறிஸ்த்தவர்களிடம் நிலவுகிறது அது பிழை என்பதற்கு ஆதாரம்  இந்த வசனம். தேவர்களுடன் சாத்தான் வந்து நின்றான் என்கிற வசனம் சாத்தான் தேவர் இனத்தை சார்ந்தவன் அல்ல என்று கூறுகிறது. ஆனால் சாத்தான் என்கிற பெயர் அவனது (அரக்க) செயலால் அவனுக்கு  வழங்கப் பேட்ட பெயர். எனவே மனிதனும் அல்லாமல், தேவரும் அல்லாமல், பேராற்றல் (அசுர பலம்) வழங்கப்பட்ட இனத்தை சார்ந்தவன் சாத்தான் என்று விளங்க முடிகிறது. 

சாத்தான் என்பவன் நிஜமான ஒருவன் என்பதாகவே பைபிள் சொல்கிறது; அவனுடைய பொல்லாத, மூர்க்கமான குணங்களைப் பற்றியும் அவனுடைய கெட்ட செயல்களைப் பற்றியும் அது நமக்குச் சொல்கிறது. (யோபு 1:13-19; 2:7, 8; 2 தீமோத்தேயு 2:26) அதுமட்டுமல்ல, கடவுளுடனும் இயேசுவுடனும் அவன் பேசிய விஷயங்களையும் அது பதிவு செய்து வைத்திருக்கிறது.​—யோபு 1:7-12; மத்தேயு 4:1-11.

எசேக்கியேல் 28- 14:18 (அசுரர் பற்றி) 
 
14 நீ தேர்ந்தெடுக்கப்பட்ட கேரூப்களில் ஒருவன் உனது சிறகுகள் என் சிங்காசனத்தின் மேல் விரிந்தன. நான் உன்னை தேவனுடைய பரிசுத்த மலையில் வைத்தேன். நீ அந்த இடத்திற்குப் பொறுப்பாளியாயிருந்தாய். நீ நெருப்பைப்போன்று ஒளிவீசும் நகைகளின் மத்தியில் நடந்தாய். 
 
15 நான் உன்னைப் படைக்கும்போது நீ நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தாய். ஆனால் பிறகு கெட்டவனானாய். 
 
16 உனது வியாபாரம் உனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தது. ஆனால் அவை உனக்குள் கொடூரத்தை வைத்தன. நீ பாவம் செய்தாய் எனவே நான் உன்னைச் சுத்தமற்ற ஒன்றாக நடத்தினேன். நான் உன்னைத் தேவனுடைய மலையில் இருந்து அப்பால் எறிந்தேன்.
நீ சிறப்புக்குரிய கேருபீன்களில் ஒருவன். உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன. ஆனால் நான் உன்னை நெருப்பைபோன்று ஒளிவீசும் நகைகளைவிட்டு விலகச் செய்தேன். 
 
17 உனது அழகு உன்னைப் பெருமைகொள்ளச் செய்தது. உனது மகிமை உன் ஞானத்தை அழித்தது. எனவே உன்னைத் தரையில் எறிவேன். இப்பொழுது மற்ற அரசர்கள் உன்னை முறைத்துப் பார்க்கின்றனர். 
 
18 நீ பல பாவங்களைச் செய்தாய் நீ அநீதியான வியாபாரியாக இருந்தாய். இவ்வாறு நீ பரிசுத்தமான இடங்களை அசுத்தமாக்கினாய். எனவே உனக்குள்ளிருந்து நெருப்பை நான் கொண்டுவந்தேன். இது உன்னை எரித்தது! நீ தரையில் எரிந்து சாம்பலானாய். இப்பொழுது ஒவ்வொருவரும் உன் அவமானத்தைப் பார்க்கமுடியும்.

சாத்தான்; இதன் அர்த்தம் “எதிர்ப்பவன்.”— (யோபு 1:6)

பாம்பு; “ஏமாற்றுக்காரன்” என்ற அர்த்தத்தைத் தருவதற்காக பைபிள் சில சமயம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.— (2 கொரிந்தியர் 11:3)
 
சாத்தான்; சோதனைக்காரன்.— (மத்தேயு 4:3)
 
பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான். (யோவான் 44)

உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 12:9)

முடிவுரை

இறைவனால் படைக்கப்பட்ட மூன்று இனங்கள்

  1. தேவர்கள் (அ) தேவ தூதர்கள் (அ) வானவர்கள் (அ) மலக்குகள் (அ) Angel - இறைவனுக்கு பணிவிடை செய்பவர்கள் - with no free will
  2. அசுரர்கள் (அ) ஜின்கள் (அ) பூதம் (அ) அவுணர் (அ) கேரூப்கள் - பல்வேறு பிரமாண்ட "அசுர பலம்" கொடுக்கப்பட்டவர்கள் - with free will
  3. மனிதர்கள் (அ) இயக்கர்கள்  - இது நாம் with free will 
இமூவரும் வெவேறு பரிமானங்களில் (Dimensions) வாழுகிறார்கள். அறிவியல் பதினோரு பரிமாணங்கள் இருப்பதாக கூறுகிறது.

அரக்கர்கள் - "அரக்க குணம்" என்பார்களே அவர்கள் தன் இனத்தில் சக நபருக்கு இடையில் இரக்கம் காட்டாதவர்கள். இறைவன் வகுத்த அறங்களை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாதவர்கள், பின்பற்றாதவர்கள்.

அலகை (அ) கூளி (அ) அரக்கன் (அ) சாத்தான் (அ) சைத்தான் என்று இவர்கள் அழைக்கப் படுகிறார்கள். இந்த பண்பு முதலில் அசுரர் குலத்தில் தோன்றியதால் அரக்கர்கள் அசுர குலத்தை சார்ந்தவர்களாக கருதபடுகிறார்கள் ஆனால் மனிதர்களிலும் அசுரர்களிலும் அரக்கர்கள் உள்ளார்கள். 

35 கருத்துகள்:

  1. https://vedathiyanam.blogspot.com/2016/12/blog-post_47.html?m=1

    பதிலளிநீக்கு
  2. பாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு,*+ அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை,*+ 20 சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு,*+ பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, 21 மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி,+ குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும்.+ இதுபோன்ற காரியங்களைச் செய்து வருகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள்+ என்று உங்களை ஏற்கெனவே எச்சரித்தது போல இப்போதும் எச்சரிக்கிறேன். https://wol.jw.org/ta/wol/b/r122/lp-tl/nwtsty/48/5#study=discover

    பதிலளிநீக்கு
  3. ஆவியுலகத் தொடர்பு
    உயிரோடு இருக்கிறவர்களிடம் செத்தவர்களின் ஆவியால் பேச முடியும் என்ற நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட பழக்கம். ஒருவர் சாகும்போது, உடல் அழிந்தாலும் அவருடைய ஆவி அழிவதில்லை என்றும், அது தன் பிடியில் சிக்கிய ஆட்களைப் பயன்படுத்தி மற்ற மனிதர்களோடு பேசுகிறது என்றும் நம்பப்படுகிறது. “ஆவியுலகத் தொடர்புகொள்வது” என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஃபார்மக்கியா. “போதைப்பொருளைப் பயன்படுத்துவது” என்பது இதன் நேரடி அர்த்தம். பழங்காலத்தில், பில்லிசூனியம் செய்வதற்காகப் பேய்களிடம் சக்தியைக் கேட்கும்போது போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால், இந்த வார்த்தை, காலப்போக்கில் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டது.—கலா 5:20; வெளி 21:8.

    பதிலளிநீக்கு
  4. உபாகமம் 18:10-13 இப்படிச் சொல்கிறது: “உங்களில் யாருமே . . . குறிசொல்லவோ, மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ, சூனியம் வைக்கவோ, வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம் அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ, இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது.” ஏனென்றால், “இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். . . . உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  5. சில பேய்கள் மக்களுக்கு நல்லது செய்வதுபோல் தோன்றலாம். (2 கொரிந்தியர் 11:14) ஆனால், உண்மை என்னவென்றால், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ளாதபடி மக்களின் கண்களை அவை குருடாக்குகின்றன.—2 கொரிந்தியர் 4:4. https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-2-2017-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/

    பதிலளிநீக்கு
  6. ஜனங்களை ஏமாற்றுவதற்காக, பேய்கள் ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்துகின்றன. ஆவியுலகத் தொடர்பு என்பது பேய்களோடு நேரடியாக அல்லது ஒரு மத்தியஸ்தர் மூலமாகத் தொடர்பு கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. அத்தகைய ஆவியுலகத் தொடர்பை பைபிள் கண்டனம் செய்கிறது, அதனுடன் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களிலிருந்தும் விலகியிருக்கும்படி நம்மை எச்சரிக்கிறது. (கலாத்தியர் 5:19-21) https://tamilnews.cc/news/enews/96380

    பதிலளிநீக்கு
  7. குறள் 850:
    உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.


    மு.வரதராசன் விளக்கம்:
    உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.


    சாலமன் பாப்பையா விளக்கம்:
    இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.


    சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
    உயர்ந்தோர் உண்டு என்பதை இல்லை என்பான் இம் மாநிலத்தில் பேயாக ஒதுக்கப்படுவான். https://www.ytamizh.com/thirukural/kural-850/

    பதிலளிநீக்கு
  8. சாத்தான்; இதன் அர்த்தம் “எதிர்ப்பவன்.”—யோபு 1:6.

    பாம்பு; “ஏமாற்றுக்காரன்” என்ற அர்த்தத்தைத் தருவதற்காக பைபிள் சில சமயம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.—2 கொரிந்தியர் 11:3.

    சோதனைக்காரன்.—மத்தேயு 4:3.

    பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான். யோவான 44
    உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். வெளிப்படுத்துதல் 12:9

    பதிலளிநீக்கு

  9. பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய்
    விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியா
    மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும்
    துக்கப் பிறப்பாய்விடும். திரிகடுகம் 60


    பேயினது பிறப்புடையவர்களின் பெரும் பசியும், பாயும் விலங்கினது அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மக்களின் வறுமையும் மிக்க துன்பத்தை தரக்கூடியதாகும். http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_12.html

    பதிலளிநீக்கு
  10. ஷைத்தானின் சூழ்ச்சிகள்
    https://www.bayanapp.indiabeeps.com/10-%E0%AE%B7%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  11. ஆடுகின்ற வண்டர்கூடு மப்புற மதிப்புறம்
    தேடுநாலு வேதமுந் தேவரான மூவரும்
    நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
    ஆடுவாழி னொழியலா தனைத்துமில்லை யில்லையே. 279

    உடலினுள்ளே ஆடும் அருட்சோதியாக உள்ளது கண்கள். அக்கண்கள் சேருமிடம் அறிவு உள்ள இடம். நான்கு வேதங்களும் மும்மூர்த்திகளும் தேடுவது அதையே. ஐம்பூதங்களும், அவைகள் நின்ற நிலைகளும் ஆடவல்லானின் திருவடிகளே. இதையொழிய அனைத்தும் மெய் இல்லை.

    பதிலளிநீக்கு
  12. அக்கர மனாதியோ வாத்துமா வனாதியோ
    *புக்கிருந்த பூதமும்* புலன்களு மனாதியோ
    தக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ
    மிக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே. சிவவாக்கியம் 210

    உடல் அனாதியா? உயிரான ஆன்மா அனாதியா? பிராய்மரத்தில் இருந்த பூதமும் , ஐம்புலன்களும் அனாதியா? ஆராய்ந்தறிந்து விளக்கத்தக்க நூல்கள் அனாதியா? சதாசிவம் அனாதியா? யோக ஞானம் மிகுந்து மேற்கூறியவற்றை விளக்கவல்ல யோகிகளே! விரைந்து விளக்கம் தாருங்கள்.

    புக்கு-https://agarathi.com/word/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

    பதிலளிநீக்கு
  13. எபிரேயர் 1:7
    தேவன் தேவதூதர்களைப் பற்றிக் கூறும்போது, “தேவன் தன் தேவதூதர்களைக் காற்றைப் போன்றும் தன் ஊழியர்களை நெருப்பு ஜூவாலைகளைப் போன்றும் செய்கிறார்” எனக் குறிப்பிடுகிறார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%201%3A6%2D8&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  14. சீவர் -உயிருள்ளவர் - மனிதர்

    படைத்து உடையான் பல சீவரை முன்னே
    படைத்து உடையான் பரமாகி நின்றானே. - திருமந்திரம் 6

    கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர்
    எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே. - 91. திருஆரூர் - திருஇருக்குக்குறள் 990.

    பதிலளிநீக்கு
  15. வெண்பா : 23
    வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
    பாதாள மூலி படருமே – மூதேவி
    சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
    மன்றோரம் சொன்னார் மனை

    விளக்கம்:
    வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.

    பதிலளிநீக்கு
  16. பிசாசானவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை” (யோவான் 8:44)

    பதிலளிநீக்கு
  17. 6.ஜின் இனத்லிருந்து வந்த நபிமார்கள்

    உலகிற்கு வருகை தந்த நபிமார்கள் யாவரும் மனிதர்களே என்று 12:109,16:43,21:7 ஆகிய வாசகங்கள் அறிவிக்கின்றன. மேலும் ஜின்களிலிருந்தும் மனிதர்களிருந்தும் நபிமார்கள் வந்ததாக 6:130 வாசகம் அறிவிக்கிறது. எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று இதிலிருந்து தெளிவாகிறது.

    12.தவ்ராத்தை பின்பற்றி வந்த ஜின்கள்

    திருக்குர்ஆனுக்கு முன்பாக இறக்கி அருளப்பட்ட தவ்ராத்தை ஜின்கள் பின்பற்றி வந்ததாக 46:30 வாசகம் அறிவிக்கின்றது. மேலும் அவர்கள், திருக்குர்ஆன் தவ்ராத்தை உண்மைப் படுத்துவதாகவும் தம் சமூகத்தாரிடம் அறிவிக்கிறார்கள். இன்றைக்கும் திருக்குர்ஆனின் உண்மைகளை அவர்களுக்கும் எடுத்துரைத்து உலகை சிறப்பிக்கச் செய்யலாம்.

    13.திருக்குர்ஆனை கேட்க வந்த ஜின்கள்

    திருக்குர்ஆன் இறக்கி அருளப்படும் காலக் கட்டத்தில் ஜின்கள் மறைந்திருந்து திருக்குர்ஆனை கேட்க வந்ததாகவும், அவர்கள் தம்மோடு வந்த தோழர்களை நோக்கி மவுனமாக இருந்து அங்கு சொல்லப்படும் திருக்குர்ஆனின் வழிகாட்டுதலை கேட்கும்படி அறிவுருத்தியதாகவும் 46:29 மற்றும் 72:1 ஆகிய வாசகங்கள் அறிவிக்கின்றன. மேலும் ஜின்கள் தம் சமூகத்தாரிடம் சென்று, அவர்கள் கேட்ட திருக்குர்ஆனின் உண்மைகளை எடுத்துரைத்ததாகவும் 72:2-19 வாசகங்கள் அறிவிக்கின்றன. கூட்டுமுறை வாழ்க்கையைத் தான் “சமுதாயம்” என்று சொல்வோம். எனவே அவர்களும் மனித இனத்தைப் போன்றவர்களே என்பது உறுதியாகிறது.

    https://www.quranthelivurai.com/topic-18.html

    பதிலளிநீக்கு
  18. ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்!

    ஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும் யாரின் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள் ஆனால் நாம் அவர்களின் கண்களுக்கு தெரிவோம்!

    நம்முடைய கண்களுக்கு ஜின்கள் ஒரு போதும் தெரியாது ஆனால் விலங்குகள் கண்களுக்கு தெரியும்!

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன! (நூல் : அபூதாவுத் : 4439)

    https://www.facebook.com/photo/?fbid=583885889642746&set=a.107220557309284

    பதிலளிநீக்கு
  19. திருமந்திரம் - தந்திரம் 1 - பாடல் எண் : 02

    அவனை ஒழிய அமரரும் இல்லை
    அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
    அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
    அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.

    பொழிப்புரை : சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி அவனது மூன்று படைப்பான தேவர், அசுரர், மனிதர் ஆகியவரால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.

    குறிப்பு: மூவர் என்பதை மும்மூர்த்தி என்பர் அது பிழை, ஏனென்றால் மும்மூர்த்தி என்கிற கற்பனை பாத்திரத்தில் சிவனும் ஒருவர். சிவனன்றி சிவனால் செய்வது ஏதுமில்லை என்பதை எப்படி விளங்குவது?

    https://marainoolkal.blogspot.com/

    பதிலளிநீக்கு
  20. பாடல் எண் : 10

    மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
    ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
    செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
    கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

    பொழிப்புரை : பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய முக்கட் கடவுள் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அதனை அவன் ஆசான் மூர்த்தி வாயிலாகக் காட்டியது மேற்குறித்த நால்வரோடு, சிவயோக மாமுனி முதலிய மூவர்க்குமேயாம்.

    மூவர்க்கும் - தேவர், அசுரர், இயக்கர்

    நால்வருக்கும் - சிவயோக மாமுனி,
    பதஞ்சலி, வியாக்கிரமர், எண்மர்

    பதிலளிநீக்கு
  21. யூதா 6
    Tamil Bible: Easy-to-Read Version
    6 தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  22. பாடல் எண் : 27
    மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
    விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
    பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
    கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

    மண்ணகத்தான் - மனிதன்
    வானகத்தான் - அசுரர், ஜின்
    விண்ணகத்தான் - தேவர்
    வேதகத்தான் - சிவன், இறைவன்

    பதிலளிநீக்கு
  23. பாடல் எண் : 1
    தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
    வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
    முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
    சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே
    .



    இப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க

    மூடுக | திறக்க
    பொழிப்புரை:
    தக்கனது வேள்விக் குண்டத்தில் தீ நன்கு வளர்க்கப் பட்டபொழுது அங்குக் கூடியிருந்த தேவர், யாவர்க்கும் தந்தையும், தலைவனுமாகிய சிவபிரானை இகழ்ந்த அத்தக்கனுக்கு, முதல் ஆகுதியைச் சிவபெருமானுக்குச் செய்யுமாறு அறிவு புகட்டி அவ்வாறு செய்வித்து அவ்வேள்வியை முடிக்க மாட்டாதவராய், அவனுக்கு அஞ்சி முறை திறம்பித் திருமாலுக்கு முதல் ஆகுதியைச் செய்ய இசைந்திருந்தமையால், பின் அப்பெருமான் சினந்து வீரபத்திரரை விடுத்தபொழுது அவரால் அனைவரும் அழிந்தனர்.

    http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10204&padhi=+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

    பதிலளிநீக்கு
  24. பாடல் எண் : 8
    நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
    பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
    வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
    பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
    பொழிப்புரை :
    நல்லோர்கள், நவகண்டமாகிய ஒன்பது கூறுபட்ட இடங்களிலும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ்தற் பொருட்டுத் தேவர் பலரும், `எமக்கு விரைந்து அருள்செய்க` என வேண்ட, மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானே, தீய அசுரர்கள் அழியும்படி ஒளிவிடுகின்ற நெருப்பாகிய அம்பைத் தொடுத்தான்.

    http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10204

    பதிலளிநீக்கு
  25. 30 மோசேயின் அருகே இருந்த ஜனங்களைக் காலேப் அமைதிப்படுத்தி, “நாம் போய் அந்நாட்டை நமக்குரியதாக எடுத்துக்கொள்வோம். நாம் எளிதில் இவர்களை வென்றுவிடலாம்” என்றான்.

    31 ஆனால் அவனோடு சென்று வந்த மற்றவர்களோ, “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்கள்” என்றனர். 32 மேலும் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் தம்மால் அந்நாட்டில் உள்ளவர்களை வெல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தனர். அவர்கள், “நாங்கள் பார்வையிட்ட அந்நாட்டில் பலமுள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே அங்கே செல்லும் எவரையும் அவர்கள் எளிதாக வென்று விடுவார்கள். 33 அங்கே நாங்கள் இராட்சதர்களையும் பார்த்தோம்! (ஏனாக்கின் சந்ததியிலுள்ள சிலர் இராட்சதப் பிறவிகளாயிருந்தனர்.) எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன் நாங்கள் சிறிய வெட்டுக்கிளிகளைப் போன்று இருந்தோம். அவர்களது பார்வையில் நாங்களும் அப்படியே தோன்றினோம்!” என்றார்கள்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2013&version=ERV-TA

    எண்ணாகமம் 14

    ஜனங்கள் மீண்டும் முறையிடுதல்
    14 அன்று இரவு, முகாம்களில் உள்ள அனைவரும் கூக்கூரலிட்டுப் புலம்பினார்கள். 2 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டனர். அவர்கள் அனைவரும் கூடி மோசேயிடமும், ஆரோனிடமும், “நாம் எகிப்து நாட்டிலோ பலைவனங்களிலோ மரித்துப்போயிருக்கலாம், இவ்வாறு புதிய நாட்டில் கொல்லப்படுவதைவிட அது மேலானது. 3 நாம் இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு, நமது மனைவியரையும், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது” என்றனர்.

    4 பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2014&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  26. எது பேய்?
    பேய்மை என்பது இயல்பை மீறியது. இயல்புக்குப் பகையாய் இருப்பதெல்லாம் பேய். பேய்ச் சுரைக்காய், பேய் முருங்கை, பேய்ப் புடலை, பேய்ச் சுண்டை, பேய்க் கரும்பு என்று இவை எல்லாம் இயல்பு மீறியவை; இயல்பான சுவை கூட்டாமல் கசப்புச் சுவை கூட்டுபவை.
    குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்துஎன்ன?
    குட்டநோய் கொண்டும் என்ன?...
    உணவுஅற்ற பேய்ச்சுரை
    படர்ந்துஎன்ன படராது
    உலர்ந்துதான் போகில் என்ன?...
    - அறப்பளீசுர சதகம்:22
    மனித உணவுக்குப் பயன்படாத பேய் முருங்கையும் பேய்ச் சுரையும் தழைத்தால் என்ன? வெம்பிச் செத்தால்தான் என்ன? என்று வம்பு பேசுகிறது அறப்பளீசுர சதகம். "உலகம் பிறந்தது எனக்காக! எனக்குப் பயன்படாத உலகம் எதற்காக?" என்ற தன்-மையப் பார்வை அதற்கு. போகட்டும். "ஏழு மணிக்கு மேலே இன்பலட்சுமிகளாக" இருக்கவென்று கற்பிதம் செய்யப்பட்ட பெண்கள், விடுதலை விரும்பிகளாகி, சிற்றின்ப உலகுக்கு அப்பாலே சென்றுவிட்டார்கள் என்றால், அவர்கள் இயல்பு மீறியவர்கள்தாமே? பேய்ப்பெண்கள்தாமே?

    https://www.facebook.com/SitharkalinKuralShivaShangar/posts/3111695392380025/?locale=zh_CN&paipv=0&eav=AfZ8JGzeyBSZKGF1ZwnF0z5QAFrGibn1lBtqmaeeXy2ZhByQS_T1BsCzaUIWOqSx16Q&_rdr

    பதிலளிநீக்கு
  27. பேய்கள் நிஜமானவையா?
    பைபிள் தரும் பதில்
    ஆம், நிஜமானவை. கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்த, ‘பாவம் செய்த தேவதூதர்கள்’தான் பேய்கள். (2 பேதுரு 2:4) தன்னையே ஒரு பேயாக ஆக்கிக்கொண்ட முதல் தேவதூதன் பிசாசாகிய சாத்தான்; பைபிள் அவனை “பேய்களுடைய தலைவன்’ என்று அழைக்கிறது.—மத்தேயு 12:24, 26.

    நோவாவின் நாட்களில் கலகம்
    நோவாவின் நாட்களில் வந்த பெருவெள்ளத்திற்கு முன்பு தேவதூதர்கள் செய்த ஒரு கலகத்தைப் பற்றி பைபிள் இப்படிப் பதிவு செய்திருக்கிறது: “பூமியிலிருந்த பெண்கள் அழகாக இருப்பதைத் தேவதூதர்கள் கவனித்தார்கள். அதனால், தங்களுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் தங்களுடைய மனைவிகளாக ஆக்கிக்கொண்டார்கள்.” (ஆதியாகமம் 6:2) அந்தப் பொல்லாத தேவதூதர்கள் பரலோகத்தில் ‘தாங்கள் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு,’ பூமியிலிருந்த பெண்களோடு உறவுகொள்வதற்காக மனித உடலை எடுத்துக்கொண்டார்கள்.—யூதா 6.

    பெருவெள்ளம் வந்தபோது, அந்தக் கலகக்கார தேவதூதர்கள் தங்களுடைய மனித உடலை விட்டுவிட்டு, பரலோகத்துக்குத் திரும்பிப் போனார்கள். ஆனால், கடவுள் அவர்களைத் தன் குடும்பத்தைவிட்டு ஒதுக்கித்தள்ளினார். அவர்களால் இனி ஒருபோதும் மனித உடலை எடுக்க முடியாதபடி செய்து அவர்களைத் தண்டித்தார்.—எபேசியர் 6:11, 12.

    https://www.jw.org/ta/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/

    பதிலளிநீக்கு
  28. 44 போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
    போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
    போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
    போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே.

    10 செல்கின்ற ஆறு அறி சிவ முனி சித்தசன்
    வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய்ப்
    பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
    ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே.

    8 நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
    பல்லார் அமரர் பரிந்து அருள் செய்க என
    வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன்
    பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

    5 இந்துவும் பானுவும் இலங்கும் தலத்து இடை
    வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரி ஆம்
    இந்துவும் பானுவும் இலங்காத் தலத்து இடை
    வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே.

    3 நின்றான் நிலம் முழுது அண்டமும் மேல் உற
    வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
    பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி
    தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே.

    பதிலளிநீக்கு
  29. பாடல் எண் : 18
    மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர்
    அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர்
    மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின்
    அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.
    பொழிப்புரை :
    `மும்மலம்` என்றும், ஐம்மலம்` என்றும் சொல்லப் படுகின்ற அனைத்து மலங்களையும் உடையவர்களாய், `தமக்குமேல் ஒரு முதற் பொருள் உண்டு` என அறியாது மயங்குகின்றவர்களே உண்மையான சகலாவத்தையை அடைபவர்கள். தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடி முடி தேடிய காலத்தில் `முடியைக் கண்டேன்` எனப் பொய் கூறிய பிரமன், வியாபகன்` என்னும் கருத்தால், `விட்டுணு` என்று அழைக்கப்படுகின்ற மாயோன் இவர்கள் யாவரும் தமக்குக் கீழ் புழுவரையில் உள்ள அனைத்து யோனிகளிலும் புகுந்து ஆரவாரிக்கின்ற சகல வருக்கத்தினரே.
    குறிப்புரை :
    `ஆகவே, இவர்கள் அனைவரும் மூன்றவத்தை -களையும் அடைவர்` என்பது குறிப்பெச்சம். மேல், விஞ்ஞான கலர் பிரளயாகலர்கட்கும் சிலவகையான சகலாவத்தைகள் உள என்பதுபோலக் கூறியமையால், `மும்மலத்தவரே உண்மையில் சகலாவத்தையை அடைவர்` என்றற்கு, `அம்மெய்ச்சகலத்தர்` என்றார். ஆர்த்தல் - ஆரவாரித்தல். இஃது உலக மயக்கத்தில் மயங்கிச் செருக்குதல். மேல், ``சகல அவத்தையில் சார்ந்தோர்`` - என்னும் மந்திரத்திலும் (2198) இம்மந்திரப் பொருள் கூறப்பட்டதாயினும் அங்கு, `சகல வருக்கத்தினராவார் இவர், என்பதை உணர்த்துதலும், இங்கு, `உண்மைச் சகலாவத்தையை எய்துபவர்கள் இவர்` என்பதை உணர்த்துதலும் ஆகக்கருத்துக்கள் வேறுவேறு என்க. பின்னர்க் குறிக்கப்பட்ட கருத்தே இம்மந்திரத்தாற் கொள்ளப்பட்டது.

    பாடல் எண் : 3
    நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
    வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
    பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
    தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.
    பொழிப்புரை :
    `அடி தலை அறியும் திறம்` என்பது, `இறைவனது அடி தலைகளை அறிதல்` எனவும் பொருள் தரும். அம்முறையில் பார்க்கும்பொழுது, `அவனது அடி தலைகள் உயிர்களால் அறிய இயலாதவை` என்று அறிதலே மெய்யறிவாகும் அந்த உண்மையை அறிவிக்கவே அவன் மாலும், அயனும் போர் செய்தபொழுது அப்போரினால் மிக்க வலிமையையுடைய அசுரரும் - தேவருங்கூட அழியாது வாழ்தற்பொருட்டுத் தனது திருவடிகள் நிலம் முழுதும் கடந்து கீழாகவும், முடி அண்டங்களை யெல்லாம் கடந்து அவற்றிற்கு மேலாகவும் இருக்கும்படி நெடியதோர் உருவத்தோடு அவர்கட்கு இடையே தோன்றி நின்றான். (அவர்கள் அவனது அடியையும், முடியையும் தேடிக் காணாது இளைத்தனர். அங்ஙனமாகவே) உலகம் முழுவதையும் படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் முதல்வன் அவனே ஆகின்றான். அவன் `நந்தி` என்பதைத் தனது பெயராக உடையவன். அவனது திருவடியிணை தான் தலைமேல் உள்ளது.
    குறிப்புரை :
    `அஃது அவனே இரங்கி வந்து எனக்கு அருளியது` என்பது குறிப்பு. இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `நின்றான்` என்பதை முதலடியின் இறுதியில் வைத்து உரைக்க. `முழுதும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``அண்டமும்`` என்பதன்பின் எஞ்சி நின்ற `கீழ்` என்பதை வருவித்து நிரல்நிறையாக்குக. `பின்` என்பது தெளிவுப் பொருட்கண் வந்தது, `நீயிர் பொய் கூறியபின், மெய் கூறுவார் யாவர்` என்பதிற் போல. ``தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரம் விரித்து, `உலகம் படைத்தவன் தானே` என்க. ``படைத்தவன்`` என்றது உபலக்கணம்.
    இதனால், `அடிதலை அறிதலை இறைவனிடம் வைத்து நோக்குங்கால் - அவை நம்மால் அறிய இயலாதன - என அறிதல் வேண்டும்` என்பதும், `அறிந்து அவனது அடியை அடைய முயல வேண்டும்` என்பதும் கூறப்பட்டன.
    ``நிலமுதற்கீழ் அண்டம்உற நின்றிலனேல் இருவரும்தம்
    சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ``3
    என்றதும், `அவன் அவ்வாறு நின்றிராவிடில் உலகம் அழிந்திருக்கும்` என்பதையே குறித்தது.
    ``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்;
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே`` 8
    ``கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
    பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் ;
    சோதி மணிமுடிசொல்லில், சொல்லிறந்து நின்ற தொன்மை``*

    பதிலளிநீக்கு
  30. பாடல் எண் : 4
    பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்
    இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்
    கணம்பதி னெட்டும் கழலடி காண
    வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே.
    பொழிப்புரை :
    பெரிய நிலவுலகத்தவர் யாவரும், வானுலகத்துப் பதினெண் கணங்களும், எங்கள் இறைவனாகிய சிவனையே `பரம் பொருள்` என உடன்பட்டு மனத்தால் நினைத்தும் பின்னர் அவன் திரு வடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். அதனை நன்கு சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்தலே தக்கது. அதை விடுத்து பிற சமயிகளது சொற்களைக் கேட்டு மாறுபடாதீர்கள்.
    குறிப்புரை :
    ``தட்டை யிடுக்கித் தலையைப் பறித்துச்
    சமணே நின்றுண்ணும்
    பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா;
    பேணித் தொழுமின்கள்``9
    என்றாற் போல ஞானம்பந்தரும் அருளிச் செய்வார். ``நிலம்`` என்றும் ``கணம்`` என்றும் கூறினமையால், ``எழும்`` என்று அஃறிணை முடிபு தந்தார். ``பெருநிலம் முற்றும், கணம் பதினெட்டும் - எம் ஈசனே ஈசன் என்று இணங்கி, உன்னி, காண வணங்கி எழும்` என இயைந்து, ``காண வணங்கி`` என்பவற்றில் விகுதி பிரித்துக்கூட்டி, `கண்டு வணங்க எழும்` என முடிக்க. `வணங்கி` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. ``பிறைநுதல் வண்ணமாகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே``8 என்றதும் காண்க.
    பதினெண் கணங்கள் இவை என்பதை,
    ``விரவுசா ரணரே, சித்தர்,
    விஞ்சையர், பசாசர், பூதர்
    கருடர், கின்னரர், இயக்கர்,
    காந்தர்வர், சுரர், தைத்தியர்,
    உரகர், ஆகாச வாசர்,
    உத்தர குருவோர், யோகர்,
    நிருதர், கிம் புருடர், விண்மீன்
    நிறைகணம் ``மூவா றாமே``3
    என்னும் நிகண்டினால் அறிக. விஞ்சையர் - வித்தியாதரர். இயக்கர் - யட்சர். காந்தர்வர் - கந்தருவர். சுரர் - தேவர். தைத்தியர் - அசுரர். உரகர் - நாகர் உத்த குருவோர் - போக பூமியர். யோகர் - முனிவர். நிருதர் - அரக்கர். விண்மீன் - நட்சத்திர மண்டலர்.
    இதனால், `உயர்ந்தோர் நெறி சிவநெறியே` என்பது வலியுறுத்தப்பட்டது.

    எண் : 9
    வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
    தானவர் முப்புரம் சென்ற தலைவனை
    கானவன் என்றும் கருவரை யான்என்றும்
    ஊனத னுள்நினைந் தொன்று படாரே.
    பொழிப்புரை :
    தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களது மூன்று கோட்டைகளைத் தன் சிரிப்பினாலே ஒரு நொடியில் சாம்பலாக்கி அழித்த தலைவன் சிவன். அவனைச் சிலர், `காட்டிலே ஆடுபவன்` என்றும், `கரிய மலையில் வாழ்பவன்` என்றும் தங்கள் ஊன் உடம்பின் உள்ளுக்குள்ளாகவே இகழ்ந்து, அவனைக்கூடார் ஆயினார்.
    குறிப்புரை :
    `அஃதவர் வினையிருந்தவாறே என்பது குறிப்பெச்சம்.
    `ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண்கொளீஇ
    ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
    பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
    கறைமிடற் றண்ணல்``3
    என்பனபோலும் சான்றோர் மொழியினை உணராதார் பிணங்குவர் என்பது முதல் இரண்டடிகளில் குறிக்கப்பட்டது. `ஒன்றுபட்டார்` என்பது பாடமாயின், `அவனது பெருமையை உணர்வினால் உணர்ந்து, அகமாகிய உள்ளத்துள் தியானித்துச் சமாதி நிலை கூடினர்` என உரைக்க. சிவன் இருப்பது வெள்ளிமலையாயினும், முகில்கள் தவழ்தலும், பசுமை படர்ந்திருத்தலும் பற்றி, `கருவரையான்` என்றார். `ஒன்றுபட்டார்` என்பதையே பாடமாகக்கொள்வார், `கரு - பிறப்பை. வரையான் - ஏற்காதவன்` என உரைப்பர்.
    இதனால், உண்மை உணராதார் பத்திசெய்து பயன் பெறும் இடம் அறியாமை கூறப்பட்டது.

    பதிலளிநீக்கு
  31. பாடல் எண் : 8
    நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
    பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
    வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
    பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
    பொழிப்புரை :
    நல்லோர்கள், நவகண்டமாகிய ஒன்பது கூறுபட்ட இடங்களிலும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ்தற் பொருட்டுத் தேவர் பலரும், `எமக்கு விரைந்து அருள்செய்க` என வேண்ட, மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானே, தீய அசுரர்கள் அழியும்படி ஒளிவிடுகின்ற நெருப்பாகிய அம்பைத் தொடுத்தான்.
    குறிப்புரை :
    அவ்வாறாக, அத்தேவர் தக்கன் வேள்வியில் அவியை உண்ண அப்பெருமானை விலக்கித் தாம் மட்டுமே சேர்ந்திருந்தது என்னை` என்பது குறிப்பெச்சம். மாணிக்கவாசகரும் இவ்வாறே,
    ``சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம் அஞ்சி
    ஆவஎந் தாய்என் றவிதா இடும்நம் மவர் அவரே``
    - தி.8 திருச்சதகம், 4
    எனத் தேவரது இரங்கத்தக்க நிலையை எடுத்தோதியருளினார். `நல்லோர் இன்புற` என இயையும். `நவகுண்டம்` என்பது பாடம் அன்று. ``ஒன்பதும்`` என்றது, `முழுதும்` என்றவாறு. `ஒன்பதன் கண்ணும்` என உருபு விரிக்க. நாவலம்பொழில் ஒன்பது கண்டமாதல் பற்றி, உலகத்தை `நவகண்டம்` எனக் குறித்தல் வழக்கு. ஐ - தலைவன். `ஐயே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். `பொன்றும்படிக்கு விளங்கு எரி கோத்தனன் வில்லார் வரை ஐ` எனக் கூட்டுக. மூன்றாம் அடியின் பாடம் பலபட ஓதப்படுகின்றன.
    இதனால், தேவர்கள் தக்கன் வேள்வியில் சென்றமை நன்றி கோறலாதல் கூறப்பட்டது.

    எண் : 1
    அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
    வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
    வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
    வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.
    பொழிப்புரை :
    சிவபெருமான் உலகம் முழுவதையும் அழித்ததும், கடல்நீரை மிக்கு வாராதவாறு அடங்கியிருக்கச் செய்ததும், முப்புரத் தவர் முதலிய அசுரர்களை அழித்ததும் நெருப்பை உண்டாக்கியே யாம். அதனால், நெருப்பே அவன் கையம்பாய் விளங்குகின்றது.
    குறிப்புரை :
    கடவுட் கொள்கை இல்லாதவருள் சிலர் (உலகாய தரும், மீமாஞ்சகரும்) `உலகம் தோன்றலும்,அழிதலும் இல்லாது என்றும் உள்ளதேயாகும்` என்பர். கடவுட் கொள்கை உடையவ ருள்ளும் சிலர் (பாஞ்சராத்திரிகள் முதலியோர்) `உலகத்தைக் கடவுள் அழிக்கமாட்டான்` என்பர். `அவரெல்லாரும் `நெருப்பு` என்ற ஒரு பொருள் இருப்பதை உற்று நோக்குவாராயின், தமது மயக்கம் நீங்குவர்` என்றற்கு நெருப்பு இறைவனுக்கு அழித்தற் கருவியாய்ப் பயன்படுமாற்றைக் கூறினார். ``அழிப்பு இளைப்பாற்றல்`` (சிவஞானசித்தி. சூ. 1.37) என்று இதனை முதற்கண் எடுத்துக் கூறியதும் இதுபற்றி என்க. உலகம் அழி பொருளாதலை உணர்வார் எவரும் அது தோற்றம் உடைத்து என்பதையும் உணர்வர் என்க. பூதங்கள் ஐந்தனுள் ஆகாயம் ஒழிந்த, காட்சிப் பொருளாய் நிற்கும் ஏனை நான்கும் படைத்தல் முதலிய மூன்றனையும் செய்யுமாயினும் நிலத்திற்கு உரிமைத் தொழில் படைத்தலும், நீருக்கு உரிமைத் தொழில் காத்தலும், நெருப்பிற்கு உரிமைத் தொழில் அழித்தலும் ஆதல் பற்றி அதனையே இறைவனுக்கு அழித்தற் கருவியாக அருளிச்செய்தார். `நிலம், நீர், தீ` என்ற மூன்றற்கும், `பிரமன், மால், உருத்திரன்` என்பவரை உரிமைக் கடவுளராகக் கூறலின், சிவாகமங்கட்கும் கருத்து இதுவாதல் அறிந்து கொள்ளப்படும்.
    இதனால், `இறைவன் உலகத்தைப் படைத்தல் காத்தல் களுடன் அழித்தலும் செய்வன்` என்பது கூறப்பட்டது

    பதிலளிநீக்கு
  32. பாடல் எண் : 2
    முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
    விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
    அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
    தளிர்ந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.
    பொழிப்புரை :
    `தேவர்` எனவும், `அசுரர்` எனவும் சொல்லப் படுவோர் பேராற்றல் உடையவர்போலச் சொல்லப்படினும், அவரெல்லாம் வினைவெப்பத்தில் அகப்பட்டு உயர்கின்றவர்களும், அழிகின்றவர்களுமேயாவர். அதனால், அவர் திரிபின்றி நிலைபெறும் உணர்வை அடைந்திலர். ஆகவே, தன்னை உணர்வாரது உணர்வில் அமுதம் கசிந்து ஊறுவதுபோல ஊறி நின்று இன்பம் பயக்கும் சிவபெருமானை நினைந்து உள்ளம் குளிர்பவர்க்கல்லது உண்மை ஞானத்தைப் பெறுதல் இயலாது.
    குறிப்புரை :
    `அமரர்` எனப் பெயர் பெற்றாராயினும் கற்ப காலங்களை வருணிக்கும் நூல்களில் அவர் இறந்தமை நன்கெடுத்துக் கூறப்படுதலாலும், அசுரர் பலர் தம் அகந்தையால் அழிந்தமை, பலராலும் நன்கறியப்பட்டதாகலானும், ``எல்லாம் விளிந்தவர்`` என்றும், இறப்பைக் கடக்க மாட்டாமையால் வினையின் நீங்காமை பெறப்படுதலால், ``முளிந்தவர்`` என்றும், வினையுள்ள துணையும் ஞானம் விளங்காதாகலின், ``மெய்ந்நின்ற ஞானம் உணரார்`` என்றும் கூறினார். மெய்ம்மை - திரிபின்மை. `மெய்யாய்` என ஆக்கம் விரிக்க. `தாமே ஞானத்தை எய்தாதார் பிறர்க்கு ஞானத்தைத் தருதல் எவ்வாறு` என்பது கருத்து. `உயிர்கட்குப் பெருந்துன்பந் தருவது அஞ்ஞானமும், பேரின்பம் தருவது மெய்ஞ்ஞானமுமேயாகலின், அவற்றை முறையே போக்குதலும், ஆக்குதலும் மாட்டாதாரைப் புகழ்தலும், அவை வல்லானை இகழ்தலும் பேதைமைப் பாலவாம்` என்றவாறு. அறிவுடையோர் பலர் தேவரைப் புகழ, அறிவிலார் சிலர் அசுரரையும், அவரொடு ஒத்த தீய தெய்வங்களையும் (துர்த்தேவதைகளையும்) புகழ்ந்து அடைதல் பற்றித் தானவரையும் எடுத்தோதினார். தளிதல் - குளிர்தல்; அன்பு செய்து மகிழ்தல். தாங்குதலுக்கு மேல் நின்ற `ஞானம்` என்னும் செயப்படுபொருளை வருவிக்க.
    இதனால், சிவநிந்தை குற்றமாதற்கு ஏதுக் கூறப்பட்டது

    மகிழ்தல். தாங்குதலுக்கு மேல் நின்ற `ஞானம்` என்னும் செயப்படுபொருளை வருவிக்க.
    இதனால், சிவநிந்தை குற்றமாதற்கு ஏதுக் கூறப்பட்டது.

    பண் :
    பாடல் எண் : 3
    அப்பகை யாலே அசுரருந் தேவரும்
    நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
    எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
    பொய்ப்பகை செய்யினும் பொன்றுப தாமே.
    பொழிப்புரை :
    அசுரரும், தேவரும் அறியாமையாகிய பகை தம் உணர்விலே நின்று கெடுத்தலால் தம்முள் மிக்க பகைகொண்டு தம் வாழ்நாள் முடிவதற்கு முன்பே அழிந்தனர். ஆகவே, சிவபெருமானை உண்மையில் இகழும் கருத்தினரல்லாதவரும், அவனை இகழ்வார்க்கு அஞ்சித் தாமும் இகழ்வார் போல நிற்பினும் அவர் அழிவே எய்துவர்.
    குறிப்புரை :
    `பகையாகிய தீக்குணம் அழிவைத் தருதலல்லது ஆக்கத்தைத் தாராது` என்பது உணர்த்துதற்குத் தேவாசுரரது நிலைமையை எடுத்துக் காட்டினார். `இவ்வாறு எவ்விடத்தும் தீமையையே பயக்கும் பகை, சிலரது உள்ளத்தில் சிவபிரானைப் பற்றித் தோன்றின், அவர் பெருந்தீங்கிற்கு உள்ளாதல் சொல்ல வேண்டுமோ` என்பது பின்னிரண்டு அடிகளால் பெறப்படும் கருத்து.
    தேவர்கட்கு இறப்பில்லையாயினும், இறந்தாரொடு ஒப்பக் கரந்துறைதலும், அசுரர்க்கு அடிமைசெய்து நிற்றலும் ஆகிய நிலையை இறத்தலாக வைத்துக் கூறினார். ``எப்பகையாகிலும் எய்தார்`` என்றது, `உள்ளத்தில் சிறிது பகையும் இல்லாதவர்` என்றவாறு. தமக்குப் பகையில்லையாயினும், பகைகொண்டாரைத் திருத்தும் வலியின் மையால் தாமும் பகைகொண்டு சிவபிரானை இகழ்வார்போல நிற்பார் அழிதற்கு, தக்கன் வேள்வியில் சென்றிருந்த தேவர்களே சான்றாவர். `எய்தாரும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.
    இதனால், எளியன் என்று எண்ணும் எண்ணத்தினாலன்றிப் பகையால் சிவநிந்தை செய்தலின் குற்றமும், அச்செயலுக்கு உடன் படுதலின் குற்றமும் கூறப்பட்டன.

    பதிலளிநீக்கு
  33. 7. முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
    தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
    தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்
    பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. திருமந்திரம் 7

    தேவர் அசுரர் இயக்கருக்கு மூத்தவன்.
    தனக்கு உருவில், ஆற்றலில், குணத்தில், அன்பில், பண்பில், வலிமையில் ஒப்பாக யாரும் இல்லாத தலைமகன்.
    அப்பா என்று அழைத்தால் அப்பனை போல அறிவு தந்து பாதுகாப்பவன். பொன்போன்ற மதிப்புடைய போதனையை வழங்குபவன்.

    https://www.chennailibrary.com/saiva/thirumanthiram.html

    பதிலளிநீக்கு
  34. 44. போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
    போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
    போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
    போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. 44

    அன்பினுள் விளங்க வைத்தேன்! வானவரும், அசுரரும், மனிதரும் இறைவனை வாழ்க என அன்பின்றி வாழ்த்துவர். நான் அப்பெருமானை வணங்கி அன்பினுள் விளங்குமாறு நிலைபெறும்படி செய்தேன். சிவனது திருவடியை அன்போடு வணங்க வேண்டும். திருமந்திரம் 44

    அசுரர் - அமரர் - மனிதர்

    பதிலளிநீக்கு
  35. தேவர் அசுரர் நரர்

    83. செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
    வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
    பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
    ஒல்கின்ற வான்வழி யூடுவந்தேனே. 11

    திருமூலர் வந்த வழி! காமத்தை வெல்கின்ற அறிவு பொருந்திய ஞான முனிவ ரான சிவனை நினைந்து திருக்கைலாயத்திலிருந்து செல்லு கின்ற சூக்குமமாயுள்ள விண் வழியாக இவ்வுலகு வந்தேன் என்கிறார் திருமூலர்.

    https://www.chennailibrary.com/saiva/thirumanthiram.html

    பதிலளிநீக்கு