தேவர்கள்

தமிழர் சமயம்


விண்ணுலகம் என்ற ஓர் உலகம் இருக்கிறது, அங்கு தேவர்களும் தெய்வங்களும் வாழ்கிறார்கள் என்பது தமிழர்களிடம் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை வள்ளுவரிடமும் இருந்திருக்கிறது என்பதைத் திருக்குறள் பல இடங்களில் உணர்த்துகிறது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (குறள் எண் 18)

சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல். (குறள் எண் 84)

 மலர்ந்த முகத்துடன் எவனொருவன் விருந்தினரை உபசரிக்கிறானோ, அவன் இல்லத்தில் அகம் மலர்ந்து லட்சுமி வாசம் செய்வாள். (எனவே லட்சுமி தேவி விண்ணுலகில் வாசம் செய்கிறாள் என்பதும் அவள் மண்ணுலகம் வந்து வசிப்பாள் என்பதும் வள்ளுவம் வலியுறுத்தும் நம்பிக்கைகள்.)

 செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
 நல்விருந்து வானத் தவர்க்கு!

வானுலகில் வாழும் வானவரோடு இணைந்து வாழ்வதற்கு எளிதான வழி ஒன்றிருக்கிறது. வந்த விருந்தினரை உபசரித்து, வரும் விருந்தினரை எதிர்பார்த்து நாம் காத்திருப்போமானால், வானகத்துத் தேவர்கள் நம்மை விருந்தினராக ஏற்பார்கள்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்!’ (குறள் எண் 167)

பொறாமை உள்ளவன் வீட்டில் திருமகள் வந்து தங்கமாட்டாள். தன் அக்கா மூதேவிக்கு அவள் கைகாட்டி விடுவாள். எனவே மூதேவிதான் அவன் வீட்டில் வாசம் செய்வாள். (ஆக விண்ணுலகில் லட்சுமி, மூதேவி ஆகிய இருவரும் உறைகிறார்கள் என்பதும் அவர்கள் மண்ணுலகில் வந்து வசிப்பதுண்டு என்பதும் வள்ளுவர் கருத்தாக இருக்க வேண்டும்.)

மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாள் உளாள் தாமரையி னாள்! (குறள் எண்: 617)

(சோம்பல் உள்ளவனிடம் மூதேவிதான் குடியிருப்பாள். சோம்பல் இல்லாது உழைப்பவனின் காலடியில் தாமரைச் செல்வியான திருமகள் வாசம் செய்வாள். (இந்தக் குறளிலும் ஸ்ரீதேவி, மூதேவி என இருவர் இருப்பதை வள்ளுவர் ஏற்கிறார்.)

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
 வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.’(குறள் எண்: 24)

மனக் கட்டுப்பாடு என்ற அங்குசத்தால் ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்பவன் மேலுலகிற்கு விதை போன்றவன் ஆவான். (விண்ணுலகம் உண்டு என்பதை இக்குறளில் தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர்.)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.’ (குறள் எண்: 50)

 உலகத்தில் வாழவேண்டிய முறைப்படி எவன் வாழ்கிறானோ அவன் வானுலகில் உள்ள தெய்வத்தோடு வைத்து எண்ணப்படுவான்.

யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (குறள் எண்: 346)

 உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் தோன்றும் கர்வத்தை எவன் விட்டொழிக்கிறானோ அவன் வானவர்கள் வசிப்பதற்கும் மேலான உலகை அடைவான்.

தேவ ரனையர் கயவர் அவரும் தான்
மேவன செய்தொழுக லான்!’ (குறள் எண்: 1073)

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் வாழ்வதால் கயவர்கள் தேவர்களைப் போன்றவர். (வஞ்சப் புகழ்ச்சி அணியாகச் சொல்லப்பட்ட இக்குறளில் வள்ளுவர் தேவர் என்ற பிரிவினர்இருப்பதை ஏற்கிறார்.) தமிழின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் நிலங்களை ஐந்தாகப் பகுத்து ஒவ்வொரு வகை நில மக்களும் வழிபடுவதற்குரிய தெய்வம் எது என்பதையும் வரையறுத்து விளக்கியுள்ளது. 

கிறிஸ்தவம்


தேவதூதர்கள் மனிதர்களைவிட மகா பலசாலிகள், திறமைசாலிகள். (2 பேதுரு 2:11

அவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள்; பரலோகம் என்பது விண்வெளிக்கும் அப்பாற்பட்ட ஓர் இடம், ஆவி நபர்கள் வசிக்கிற மேலான இடம். (1 ராஜாக்கள் 8:27; யோவான் 6:38

ஆவி சிருஷ்டிகள் பல வசனங்களில் ‘தேவதூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.— (1 ராஜாக்கள் 22:21; சங்கீதம் 18:10)

இந்தப் பூமி படைக்கப்படுவதற்கு ரொம்பக் காலத்திற்கு முன்பாகவே தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள். கடவுள் இந்தப் பூமியைப் படைத்தபோது, தேவதூதர்கள் “சந்தோஷ ஆரவாரம்” செய்தார்கள்.— யோபு 38:4-7 (மாற்கு 12:25

அவர்களுடைய எண்ணிக்கையை பைபிள் சொல்வதில்லை; ஆனால், மிக அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் தேவதூதர்கள் இருக்கிற ஒரு காட்சியை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார்.— வெளிப்படுத்துதல் 5:11

இரண்டு தேவதூதர்களுடைய பெயர்கள் பைபிளில் இருக்கின்றன. ஒன்று மிகாவேல் மற்றொன்று காபிரியேல். (தானியேல் 12:1; லூக்கா 1:26)

 வேறுசில தேவதூதர்கள் தங்களுக்குப் பெயர் இருப்பதாக ஒத்துக்கொண்டபோதிலும், அவற்றைத் தெரிவிக்கவில்லை.—ஆதியாகமம் 32:29; நியாயாதிபதிகள் 13:17, 18

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிற தன் ஊழியர்களை வழிநடத்த தேவதூதர்களைக் கடவுள் பயன்படுத்துகிறார். (வெளிப்படுத்துதல் 14:6, 7

இதனால், அந்தச் செய்தியை அறிவிக்கிறவர்களும் சரி, கேட்கிறவர்களும் சரி, நன்மையடைகிறார்கள்.— அப்போஸ்தலர் 8:26, 27
 

இஸ்லாம்


மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள்’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும் ’மலகைன்’ இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன. 

1. வானவர்கள் என்றால் யார் ? 


மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)

இவர்கள் ஆண்களுமல்ல! பெண்களுமல்ல! இவர்களுக்கு ஊண், உறக்கம் எதுவும் கிடையாது. இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள். لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாவர்.

2. வானவர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள்?


அவர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள்? என்பது இறைவனைத்தவிர எவருக்கும் தெரியாது. குர்ஆனிலோ நபிமொழிகளிலோ இது பற்றிய எந்த தகவலும் இல்லை. அவர்கள் படைக்கப்பட்ட காலம் குறித்து சில நபிமொழிகள் காணப்படுகின்றன. அறிவிப்பாளர் தொடர் பலம் குன்றியதாலும் முன்பின் முரணான ஆதாரமற்ற செய்திகள் என்பதாலும் அவற்றை நாம் நம்பகரமான தகவலாக எடுத்துக் கொள்ள முடியாது. இருப்பினும் அவர்கள் ‘மனிதன் படைக்கப்படுமுன் படைக்கப் பட்டவர்கள்’  என்பதை ‘பூமியில் என் பிரதிநிதியைப் படைக்கப்போகிறேன் என வானவர்களிடம் இறைவன் கூறிய போது’ என வரும் 2.30-வது வசனத்தை ஆதாரமாகக் கொண்டு உறுதியாகக் கூறமுடியும்.

3. வானவர்களின் எண்ணிக்கை. وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُو


அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். ‘மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 74:30) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                                                                                                                          ‘மிஃராஜின் போது ‘பைத்துல் மஃமூர்’ (வானவர்கள்தொழுமிடம்) உயர்த்தப்பட்டபோது (இது எந்த இடம்?) எனஜிப்ரீலிடம் கேட்டேன்.இது ‘பைத்துல் மஃமூர்’ என்ற இடமாகும். இங்கு ஒவ்வொரு நாளும் 70,000 வானவர்கள் உள்ளே செல்வார்கள். சென்றவர்கள் மிண்டும் திரும்பி வருவதில்லை. (அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஸஃஸஆ, நூல்: புகாரி 3207, முஸ்லிம் 162.) மறுமைநாளில் நரகில் 70,000 கடிவாளங்கள் கட்டப்பட்டிருக்கும். அவற்றின் ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 வானவர்கள் இழுத்து வருவார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), நூல்கள் : முஸ்லிம் 2842-29, திர்மிதி : 2573)
 
இவர்களை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இதற்கு ஆதாரமாக ‘அல்லாஹ்வையும், வானவர்களையும், நம்பிக்கை கொண்டோரும்’என வரும் அல்குர்ஆனின் 2:285 வசனமேயாகும்..

4. வானவர்களை மனிதர்கள் பார்க்க முடியுமா?                                        


நபிமார்கள் வானவர்களை நேரிலே பார்த்தும் பேசியுமுள்ளனர். நாயகத்தோழர்களும் ‘திஹிய்யத்துப்னு கலீஃபத்துல் கல்பி’ எனும் ஸஹாபியின் தோற்றத்தில் பார்த்துள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஜிப்ரீல் (அலை) அவர்கள் திஹிய்யத்துல் கல்பி அவர்களின் உருவத்தில் வருவார்கள். (அதாரம்: அஹ்மத்)
மனித உருவத்தில் முன் வாழ்ந்த நபிமார்கள் பார்த்துள்ளனர் என்பதை குர்ஆன் தெளிவு படுத்துகிறது. இப்றாஹீம் (அலை) அவர்களிடம் வானவர்கள் மனித உருவத்தில் விருந்தினராக வந்தபோது லூத் நபியின் மக்களும் பார்த்தனர் என்ற செய்தியை 11.69 வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகத்தின் காலத்திற்குப்பிறகு எவரும் வானவர்களைப் பார்த்ததில்லை.இனி எவரும் பார்க்கவும் முடியாது. ஆயினும் மறுமையில் நிச்சயம் அவர்களைப் பார்க்க முடியும்.

5. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை நேரில் கண்டார்களா?                       


முதல் தடவையாக நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை (அலை) ஹிரா மலைக்குகையில் இயற்கையான தோற்றத்தில் கண்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) புகாரி:)

இரண்டாவது தடவையும் அவரது இயற்கைத் தோற்றத்தில் வானிற்கும் பூமிக்கும் இடையே ஒர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக்கண்டேன் என நபிகளார்(ஸல்) கூறியதாக ஜாபிர் (ரலி) தெரிவிக்கிறார்கள். (நூல்:புகாரி:4)

மூன்றாவது தடவையாக மிஃராஜின் போது கண்டார்கள் ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக்கண்டார். (53:13,13) அங்கே தான் சொர்க்கமெனும் தங்குமிடம் உள்ளது.(53:15)அந்த இலந்தை மரத்தை மூடவேண்டியது மூடியபோது அவரது பார்வை திசைமாறவில்லை. தாண்டவுமில்லை. (53:16,17) தமது இறைவனின் பெரும் சான்றுகளைக் கண்டார்.(53:18)தூய்மையான வெண்ணிற ஆடையில் ஒரு மனிதர் வந்தார் என அறிவிக்கும் நபி மொழி, ‘நபி(ஸல்) அவர்களும்,நாயத்தோழர் களும் மனித உருவத்தில் கண்டதற்கான ஆதாரமாகும்.’ (முஸ்லிம் 1-8)                                                     

(நபி (ஸல்) அவர்கள் ஜப்ரீலை அசல் தோற்றத்தில் இரு தடவைகள் தான் பார்த்துள்ளதாகவும் முதலாவது தடவை பார்த்தது மனித உருவத்தில் என்றும் கூறுகின்றனர். இறைவனே அறிந்தவன்)

6. மனிதர்கள் வானவர்களாக முடியுமா ?                                                       


மனிதர்கள் ஒருபோதும் வானவர்களாக முடியாது. ஆனால் வானவர்கள் விரும்பிய தோற்றத்தில் வரமுடியும்.

7. வானவர்கள் இறைவனின் பிள்ளைகளா ?  


சில மதத்தவர் வானவர்களை இறைவனின் பிள்ளைகள் எனக்கூறுவதையும் இறைமறை மறுக்கிறது.

‘ உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண்மக்களை வழங்கிவிட்டு தனக்கு வானவர்களை பெண்மக்களாக ஆக்கிக் கொண்டானா? (17:40) என்ற வசனமும், அவன் பெறவுமில்லை. பெறப்படவுமில்லை என்ற 112:1-4 வசனமும் இதற்கு ஆதாரமாகும்.

8. வானவர்கள் பெண்களா ? أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُون


வானவர்களை சிலர் தேவைதைகளாகவும் பெண்களாகவும்; சித்தரித்துக்கூறும் பொய்ச் செய்திகளையும் மறுத்து அவர்கள் பெண்களல்ல என இறைவனின் வசனங்கள் 43:19,37:150,53:27 தெளிவுபடுத்துகின்றன.

9. வானவர்களின் உருவத் தோற்றம்.


 நான் வானவர் ஜிப்ரீலை அவரின் அசல் உருவத்தில் பார்த்தேன். அவருக்கு 600 இறக்கைகள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது, ஆதாரம்: புகாரி,தப்ரானி). (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நன்னான்கு இறக்கைகள்; கொண்ட தூதர்களாக அனுப்புவான் (அல்குர்ஆன் 35:1)

‘அதன் மேல் (நரகின் மீது)கடுமையும்,கொடுமையும் கொண்ட வானவர்கள் உள்ளனர். 66:6  عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو مِرَّةٍ فَاسْتَوَى அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரீல்) அதைக்கற்றுக் கொடுக்கிறார். (53:5,6).  ‘அழகிய தோற்றமுடையவர்’ என 12:31 என்ற வசனமும் தெளிவு படுத்துகிறது. ذُو مِرَّةٍ ‘தூ மிர்ரத்தின்’ என்பதற்கு ‘அழகிய தோற்றமுடையவர்,பெரும் வலிமை மிக்கவர்’ என இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கமளிக்கிறார்கள்.

10. வானவர்களின் உணவு, பானம்


நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் கண்ணியமிக்க விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு காளைக் கன்றை பொரித்து வைத்ததும் உண்ணாததைக் கண்ட நபியவர்கள் பயந்துவிட்டார்கள். பயப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு நற்செய்தி கூறிவிட்டுச் செல்ல வந்த வானவர்கள்’ என்ற செய்தி 51:26,27 வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து மனதர்களின் உணவை உண்ணவோ,அருந்தவோ மாட்டார்கள் எனத் தெரியவருகிறது.

11. வானவர்கள்-வெட்கப்படுவார்கள்.


ஒருமுறை அபூபக்கர் (ரலி) ,உமர் (ரலி) நபிகளாரிடம் வந்தபோது, நபி(ஸல்)தமது ஆடைகளைச் சரி செய்யாத போது, உத்மான் (ரலி) வந்ததும் தமது ஆடையைச் சரிசெய்தார்கள். காரணம் வினவியபோது நபி (ஸல்) கூறினார்கள். ‘வானவர்கள் எவர் விசயத்தில் வெட்கப்படுகிறார்களோ அவர் விசயத்தில் நானும் வெட்கப்படுகிறேன்’ என்றார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் :முஸ்லிம்:2401)

12. வானவர்கள்-வேதனை-அடைகிறார்கள்


இறைவனின் நேசத்திற்குரியவரே மலக்குகளின் நேசத்திற்கும் உரியவர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘வெங்காயம், பூண்டு (போன்றவற்றை) உண்டுவிட்டு நமது பள்ளிவாசல் பக்கம் வரவேண்டாம். நிச்சயமாக ஆதமின் மக்கள் வேதனை அடையும் (துர்வாடை வீசும்) பொருட்களி லிருந்து வானவர்களும் வேதனை அடைகிறார்கள்.’ (அறிவிப்பவர்:ஜாபிர்இப்னு அப்துல்லாஹ்,நூல் முஸ்லிம்-1655)  
 

13. இறைவனின் விருப்பமே வானவர் விருப்பம்    

 

இறைவன் நேசிப்பவர்களை வானவர்களும் அவரவர் அமலுக்கேற்பவும், தகுதிக்கேற்பவும் நேசிப்பார்கள்.

‘உயர்வும், மாண்பும் மிக்க அல்லாஹ், ஒரு அடியாரை நேசிக்கும் போது வானவர் ஜிப்ரீலை அழைத்து ‘நான் இன்னாரை நேசிக்கிறேன். நீங்களும் அவரை நேசியுங்கள் எனக் கூறுவான்.அவ்வாறே ஜிப்ரீலும் அவரை நேசிப்பார்.பின்னர் ‘வானுலகில் அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள’ என அவரும் அழைத்துக் கூறுவார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். (அதன்படி மண்ணகத்தாருக்கு மத்தியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புகாரி: 7485) 
  

14. வானவர்கள் இறைவனை மிகவும் அஞ்சுவர். 

 

 தமக்கு மேலேயிருக்கும் தமது இறைவனை மிகவும் அஞ்வார்கள். கட்டiயிடப்பட்டதைச் செய்வார்கள் ( 16:50) 
 

15. முற்றிலும் அவனுக்கு வழிப்படுவர். 

 

அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (21:26,27) தமது இறைவனை போற்றிப்புகழ்ந்த வண்ணமிருப்பார்கள் (39:75) 
 

16. இறையில்லம், இறைமறை ஓதுமிடங்களில் வானவர்கள். 

 

உங்களில் உருவர் தொழுகையில் ஆமீன் கூறும்போது வானவர்களும்; ஆமீன் கூறுகின்றனர். எவரது ஆமீன் வானவர்களின் ஆமீனுக்கேற்ப உள்ளதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.(அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னு மாஜா-851).

நாயகத் தோழர் உஸைத் இப்னு குளைர் குர்ஆன் ஓதும் போது ஒளிஉருவில் வானவர்கள் வந்து கேட்டுக் கொண்டிருந்தனர். (புகாரி 5018-ஹதீஸின் சுருக்கம்)  
 

17. நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவர்.  

 

(வானவர்கள்) நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள் (42:5) 
 

18. தீயவர்களை சபிப்பர் (லஃனத்துல்லாஹி வல்மலாயிக்கத்தி)  

 

வானவர்கள் இறைவனுக்கு மாறுசெய்பவர்களுக்கு எதிராக சாபமிடுவார்கள்.

‘ ஏக இறைவனை மறுத்து,அதே நிலையில் இறந்தோர் மீது இறைவனின் சாபமும், வானவர்கள் நல்லோர்கள் அனைவரின் சாபமும் உள்ளது (2:161) 
 

19. உருவமுள்ள வீட்டில் நுழையார்.  

 

நாயும்,உருவப்படமும் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள். (புகாரி-3225,முஸ்லிம்-2112,திர்மிதி-2804, நஸய5347, இப்னுமாஜா3649, 
 

20. வானவர்களின் பணிகள்  

 

தூதுவச்செய்தியை அறிவிப்பது,மழைபொழிவிப்பது,காற்றை வீசச்செய்வது, கண்காணிப்பது, காப்பாற்றுவது,நன்மை தீமைகளை பதிவு செய்வது,உயிரைக்கைப்பற்றுவது,மண்ணறையில் விசாரணை செய்வது,நல்லவர்களுக்குப் பரிந்துரைப்பது,ஸூர்ஊதுவது, சுவர்க்கம் நரகத்தை காவல் புரிவது, அர்iஷ சுமப்பது போன்ற சில பொறுப்புகள் இறைவனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அத்தனையும் அல்லாஹ்வால் தான் செய்யப்படுகின்றன.ஆயினும் நிர்வாக சீரமைப்புக்காhவும், உலகின் ஒழுங்கு முறைக்காகவும்,கட்டுப்பாடான இயக்கத்திற் காகவும், மனிதன் பாடம் பெறுவதற்காகவும் வானவர்களிடம் இவ்வாறு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

யார் யாரிடம் என்னென்ன பொறுப்புகள் ?

இறைவன் வானவர்களுக்கு பல பொறுப்புகளை வழங்கியுள்ளான்.            

1. வஹி -இறை தூதின்- பொறுப்பு.

 இப்பொறுப்பு வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) அர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறைதூதர்களுக்கு (நுபுவ்வத் என்னும்) தூதுவச் செய்திகளை கொண்டு வருவதே இவர்களின் பணியாகும். (ஜிப்ரீலின் பெயர் குர்ஆனில் 2:97,2:98,66;4 ஆகிய மூன்று இடங்களில் வருகின்றன.) இவர்களுக்கு சில சிறப்புப் பெயர்களும் உள்ளன.1.ரூஹுல் குத்ஸ். (16:102) 2. ரஸூலுன் கரீம் ( 81:19) 3.தூ குவ்வத்( 81:20) 4. ரூஹுல் அமீன்(26:193) 5. ஷதீதுல் குவா (52:5)

2. மழை, காற்றின் பொறுப்பு.

இதன் பொறுப்பாளர் வானவர் மீக்காயீல். இவர் மழை, காற்று,மரம் செடி கொடிகள் முதலானவற்றுக்குப்; பொறுப்பாளர் ஆவார். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் மீக்காயீல் எதன் பொறுப்பாளர் எனக் கேட்டபோது,’ மரம் செடிகொடிகளுக்கும், மழைக்கும் என்றார்கள்.

3. சூர் ஊதுவதின் பொறுப்பு.

இதன் பொறுப்பாளர் இஸ்ராஃபீல் (அலை). இரண்டு தடவைகள் சூர் ஊதப்படும். முதல் தடவை ஊதும் போது உலகிலுள்ள யாவும் அழிந்து விடும்.
‘ சூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத்தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளளோர் மடிந்து விடுவர். (39:68) ஒரே ஒரு தடவை சூர் ஊதப்படுபோது (69:14), பூமியும்; மலைகளும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கித் தூள்தூளாக ஆக்கப்படும் போது (69: 13,14) இரண்டாவது தடவை சூர் ஊதப்படும் போது மரணித்தவர் யாவரும் உயிர்ப் பிக்கப்படுவர்.

‘ (இரண்டாவது தடவை) சூர்ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து இறைவனை நோக்கி விரைவார்கள். (36:51) பின்னர் மீண்டும் ஒருமுறை ஊதப்படும். அவர்கள் எழுந்து பார்ப்பார்கள் ( 39:68)

4. உயிரைக் கைப்பற்றும் வானவர். 
 
(மலக்குல் மவ்த்) உயிரைக்கைப்பற்றும் வானவருக்கு மலக்குல் மவ்த் எனக் குர்ஆன் கூறுகிறது. இவரை சிலர் ‘இஸராயீல்’ என்பர். இந்தப் பெயருக்கு நபி மொழிகளில் ஆதாரம் கிடையாது.

5. உயிரைக் கைப்பற்ற தனித்தனி வானவர்கள்.

நாம் நினைப்பது போல உயிகை;கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் கிடையாது. இது தவறான கருத்தாகும். ஒவ்வொருவரின் உயிரையும் கைப்பற்றுவதற்கு தனித்தனிவானவர் உள்ளனர் என குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ‘ உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரியவானவர் உற்களை கைப்பற்றுவார்.பிறகு உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள் (32:11) உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள்.அவர்கள் (அதில்) குறை வைக்கமாட்டார்கள். (6: 61) இதில் ஹஃபளத்தன்-பாதுகாவலர்கள், ருஸுலுனா-நமது தூதர்கள் என்பது வானவர்களைக் குறிக்கம். 
 
6. நல்லோரின் உயிரைக்கைப்பற்ற தனி வானவர்.

இறந்த அடியார் நல்லவராக இருந்தால் உயிரைப் கைப்பற்ற வரும் வானவர் நல்ல அழகிய தோற்றத்தில் வந்து நற் செய்தி கூறும் முகமாக ‘ ஸலாமுன் அலைக்கும், உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! நீங்கள் செய்த (நல்ல) வற்றின் காரணமாக சொக்க்கம் செல்லுங்;கள்’ எனக் கூறுவார்கள். (16: 32)

7. தீயோர் உயிரைக்கைப்பற்ற தனி வானவர்.

 இறந்த அடியார் தீயோராக-பாவியாக- இருப்பின் அவரிடம் வரும்வானவர் காணச்சகிக்காத விகாரமாகன பயங்கரத் தோற்றத்தில் வந்து தொண்டைக் குழியை நெருங்கும் அவனது உயிரை கருணை காட்டாது கடுமையாகப் பறித்துச் செல்வர்.

‘ ஒருவனது உயிர் தொண்டைக்குழியை அடையும் போது அந்நேரத்தில் நீங்கள் (எதுவும் செய்ய முடியாது) பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகிலிருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கமாட்டீர்கள். (56:83, 84,85) அவர் இறைவனுக்கு நெருக்கமான ஒருவராக இருந்தால் அவருக்கு உயர்வும், நறுமணமும், சுகந்தரும் சுவர்க்கச்சோலையும் உளளன. அவர் வலப் புறத்தைச் சார்ந்தவராக (சுவர்க்க வாசியாக) இருந்தால் வலது சாராரிடமிருந்து (சுவர்க்க வாசிகளிடமிருந்து) உமக்கு ஸலாம் உண்டாவதாக. (இறையாணைகளை) பொய்படுத்திய வழிகெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் வெந்துருகுவதும் விருந்தாகும். இது உறுதியான உண்மையாகும். எனவே மகத்தான உமது இறைவனைகப் (பணிந்து ) துதி செய்வீராக!

8. மனிதனை சதாவும் பாதுகாக்கும் வானவர்.

மனிதனது விழிப்பிலும், தூக்கத்திலும், ஓய்விலும், இயக்கத்திலும், பயணத்திலும் எல்லா நிலையிலும் வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பர்.

‘ மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை (இடி, மின்னல், விபத்துகள் போன்ற சகல ஆபத்துகளிலிருந்து இறைவனின் விதி வருவது வரை) காப்பாற்றுகின்றனர். (13:11)

9. மனிதனைக் கருவிலும் காக்கும் வானவர்

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

”அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு மலக்கை நியமனம் செய்கிறான்.கருவில் விந்து செலுத்தப்பட்ட பின் அதன் உவ்வொரு நிலை மாற்றத்தின் போதும், இறைவா! இப்போது விந்தாக இருக்கிறது. இறைவா! அடுத்து ‘அலக்’ (கருப்பை யின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் நிலை) ஆக இருக்கிறது.இறைவா! இப்போது சதைத்துண்டாக இருக்கிறது என்று கூறுவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது (1) ஆணா? பெண்ணா? (2) நல்லவனா? கெட்டவனா? (3) அவனுக்கு வழங்கப்போகும் உணவு எவ்வளவு? (4) அவனது வாழ்நாள் எவ்வளவு? என்பதை (முதலிலேயே தீர்மானித்துச்) சொல்லி விடுகிறான்.மனிதன் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) நூல் புகாரி : 318)

10. மனிதனின் நன்மை தீமைகளை பதிவு செய்யும் வானவர்கள்

மனிதன் செய்யும் நன்மை தீமை யாவற்றையும் பதிவு செய்வதற்காக கண்ணியத்திற்குரிய வானவர்களை அல்லாஹ் நியமனம் செய்துள்ளான்.

‘ வலப்புறமும் இடப்புறமும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது , அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (50: 17,18) வலது பக்கம் இருப்பவர் நன்மைகளைப் பதிவு செய்வார். இடது பக்கம் இருப்பவர் தீமைகளைப் பதிவு செய்வார். இவர்களின் பெயர்களை ரகீப், அத்தீத் என்று சொல்வார்கள். இது அவர்களின் பெயர்களல்ல. அவர்களின் பண்புப் பெயர்களாகும்.. வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ‘ரகீபுன் அத்தீத்’ கண்காணிக்கும் எழுத்தாளர் என்று சொல்லலாம். இவர்களை ‘கிராமன் காத்திபீன்’ கண்ணியத்திற்குரிய எழுத்தாளர்கள் என்று அல்லாஹ்வே சிறப்பிக்கிறான்.(82;:12)

11. இரவும் பகலும் சுற்றிவரும் வானவர்கள்.(பாதுகாப்புப்பணியினர்)

வானவர்களில் சிலரை ‘தனது நல்லடியார்களை கண்காணிக்கவும் பாதுகாத்து வரவும் கட்டளையிட்டுள்ளான்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

இரவிலும் பகலிலும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள்.அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையிலும், மாலை (அஸ்ரு)த் தொழுகையிலும் இருசாராரும் சந்திக்கின்றனர்.பின்னர் இரவுப் பணியிலுள்ளவர்கள் மேலேறிச் சென்றுவிடுவர். இறைவன் அறிந்து கொண்டே அவர்களிடம் என் அடியார்களை எவ்வாறு விட்டு வந்தீர்கள்? என விசாரிப்பான். (அதற்கவர்கள்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவர்களை (அங்கே) விட்டு வருகிறோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களிடம் போய் சேருகிறோம் என விடையளிப்பர். (நூல்: புகாரி :555)

12. லைலத்துல் கத்ர் இரவில் இறங்கும் வானவர்கள்.

லைலத்துல் கத்ர் என்னும் (மாண்பார்) இரவு ஆயிரம் மாதங்களை விட மாண்புடையது. வானவர்களும் (அவர்களின் தலைவர்) ரூஹும் (ஜிப்ரீலும்) தமது இறைவனின் கட்டளைப் படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். (97:3,4) 
 
13. கப்ரில் (மண்ணறையில்) வருகை தரும் வானவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ஒரு அடியான் கப்ரில் வைக்கப்பட்டு அவனது தோழர்கள் அங்கிருந்து நகரும் போது, அவன் அவர்களின் காலணிகளின் ஓசையை செவியுறுவான். அப்போது அவனிடம் இரு வானவர்கள் வந்து அமர்ந்து கொண்டு (பல கேள்விகளைக் கேட்டபின்னர், நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் கேட்பார்கள்) இந்த மனிதரைப்பற்றி என்ன சொல்கிறாய்? என்று கேட்பார்கள்.

(ஒரு முஃமின்)- நம்பிக்கை கொண்டவனாயின், ‘அவன் அல்லாஹ்வின் அடியாரும் அவனது திருத்தூதருமாவார்’என்று சாட்சி சொல்கிறேன் என்று கூறுவான். அப்போது அவனை நோக்கி, (இதோ, உனக்குத் தரப்படவிருந்த இடத்தைப் பார்! அதற்குப் பதிலாக உனக்கு சுவர்க்கத்தில் ஓரிடம் தரப்படவிருக்கிறது என்று அவனிடம் கூறப்படும். (அப்போது சுவர்க்கம், நரகம் ஆகிய) இரு இடங்களையும் அவன் பார்ப்பான். அறிவிப்பவர்:அனஸ் இப்னு மாலிக் (ரலி),நூல்: முஸ்லிம்: 2870).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் நிலைப்படுத்துகிறான். (14:27) என்ற இறைவசனம் கப்ருடைய வேதனை சம்மந்தமாக அருளப்பட்டது. (கப்ரில் அடக்கமாயிருக்கும்) அவனிடம், (மன் ரப்புக்க) உன் இரட்சகன் யார்? அதற்கவன் ‘அல்லாஹ் தான்’என்று பதிலளிப்பான்.( உனது நபி யார்? ) எனது நபி முஹம்மத்(ஸல்)அவர்களாவார் என்று பதில் கூறுவான். இதைத்தான் அல்லாஹ் (14:27-ல்) கூறுகிறான். (அறிவிப்பவர்:ஃபரா இப்னு ஆஸிஃப்(ரலி), நூல் : முஸ்லிம் :2871)
இவர்களின் பெயர்கள் முன்கர்,நக்கீர் என ஹதீஸ் நூல்களில் வருகின்றன.

14 பரிந்துரைக்கும் வானவர்கள்

அல்லாஹ் அனுமதியளித்தவர்களுக்காக வானவர்கள் பரிந்துரைப்பர்.

இறைமறை கூறுகிறது. ‘வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டோரைத்தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை பயன் தராது. (53:26)

15. மரணவேளையிலும், இறுதிநாளிலும் வாழ்த்தும் வானவர்கள்.

 ’எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி,

‘அஞ்சாதீர்கள்!கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ எனக்கூறுவார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் உங்கள் உதவியாளர்கள்.நிகரற்ற அன்புடைய மன்னிப்ப வனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும்.நீங்கள் கேட்பதும் கிடைக்கும் என்றும் கூறுவர். (41:30,31)

16. சுவர்க்கத்தின் காவலர்கள் (خزنة الجنة )

காஸின் என்பதன் பன்மைச் சொல்லே கஸனத் என்பதாகும். கஸனத்துல்ஜன்னா- சுவர்க்கத்தின் காவலர்கள்) ‘தமது இறைவனை அஞ்சியோர் சுவர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக கொண்டுவரப்படு வார்கள். அதன் வாசல்கள்திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் ‘உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும!(இனி)நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். நிரந்தரமாக தங்குவதற்காக இதில் நுழையுங்கள். (39:73.)

17. நரகின் காவலர்கள் (خزنة جهنم)

இவர்கள் ஸபானியாக்கள் என்றும் கூறப்படும்.(96:18).நரகிற்கு 19 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.’அதன் மேல் பத்தொன்பது வானவர்கள் உள்ளனர்’.74:30 என குர்ஆன் கூறுகிறது.

அதன் தலைவர் மாலிக் (அலை)ஆவார் என ஹதீஸ் நூல்களும் அறிவிக்கின்றன.இதை திருமறையும் உறுதிப்படுத்துகிறது.

‘ யாமாலிக்! (நரகக்காவலரான) மாலிக்கே! உமது இறைவன்    எங்கள் பிரச்சனையை விரைவில் முடிக்கட்டும் என்று (நரக வாசிகள்) அழைப்பார்கள்.’ நீங்கள் இங்கேயே கிடப்பீர்கள் என்று அவர் கூறுவார்.(43:77).

(ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகிற்கு இழுத்து வரப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் இறைதூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா? இந்த நாளை சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா? என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்பார்கள். எனினும் (ஏக இறைவனை மறுப்போருக்கு வேதனை என்னும் (கடும்) உத்தரவு உறுதியாகிவிட்டது. (39:71)

18. அர்ஷய் சுமக்கும் வானவர்கள்.

அர்ஷய் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர்.’ ஒவ்வொரு பொருளையும் (உன்) அருளாலும், அறிவாலும் சூழ்ந்திருக்கிறாய். எனவே (உன்னிடம்) மன்னிப்புக்கேட்டு உனது பாதையை பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகைவிட்டும் காப்பாயாக! என்று நம்பிக்கை கொண்டோருக்காக (அந்த வானவர்கள்) பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.(40:7); 
 
அர்ஷய் சுமப்பவர்களை’கரூபிய்யூன்-ஈச்சமரத்தின் அடிப்பாகம் கனத்திருப்பதைப் போன்ற பலமிக்க அகன்ற கால்களை உடையவர்கள்’ என பொருள் விரிக்கப்படுகிறது.

19. மலைகளைக்காக்கும் வானவர்கள் (முவக்கலுன் பில் ஜிபால்)

தாயிப் நகருக்கு இஸ்லாமியப் பிரச்சாரம் சென்றபோது பனூ அப்து யாலைல் சென்று திரும்புகையில் நீங்கள் இந்த மக்களிடையே பிரச்சாரம் செய்ததையும் அவர்கள் கூறிய பதில்களையும் இறைவன் செவியுற்றான்.’நீங்கள் விரும்பினால் இந்த மலைகளுக்கிடையே இவர்களை அழித்து விடுகிறோம்.’ அங்கே வானவர் ஜிப்ரீலும், மலைகளைக் காக்கும் அமரர்களும் வந்து கேட்டனர் என்ற நபி மொழி இதற்கு ஆதாரமாகும்.

20. பைத்துல் மஃமூரை வலம் வரும் வானவர்கள்

‘பைத்துல் மஃமூர்’ என்பது கஃபாவுக்கு மேலே வானிலுள்ள வானவர்கள் தொழுமிடமாகும்.. அங்கே நாள் தோறும் 70,000 வானவர்கள் உள்ளே செல்கிறார்கள். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதில்லை. (ஆதாரம்: புகாரி)

21. அணிவகுத்து நிற்கும் வானவர்கள்

‘நின்ற நிலையிலே சதாவும் நின்று வணக்கம் புரிபவர்கள்! நிமிராமல் ருகூவிலே குனிந்து வணங்குபவர்கள்! ஏழாமல் சுஜீதிலே சிரம் பணிந்து வணக்கம் புரிபவர்கள்!’ என அணிஅணியாக இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கும் இலட்சக்கணக்கான வானவர் படையும் உள்ளனர் என்பதையும் குர்ஆன், சுன்னா ஒளியில் நாம் ஈமான் (நமபிக்கை) கொள்ளவேண்டும். நம்ப மறுப்போர் நிராகரிக்கப்படுபவர்கள் என்றே கருதப்படும்

39 கருத்துகள்:

  1. ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
    வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
    அடிசிலும் பூவுந் தொடுத்தற்https://www.tamilvu.org/slet/l0100/l0100uri.jsp?song_no=1090&book_id=1&head_id=3

    பதிலளிநீக்கு
  2. தொல்காப்பியம் - மக்கள் வாழ்வின் இலக்கணம் https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQdjuMy.TVA_BOK_0002951/TVA_BOK_0002951_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_djvu.txt

    பதிலளிநீக்கு
  3. வருந்தி அழைத்தால் வருவான்

    வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
    தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்கள்
    ஆன்நின்று அழைக்கும் அதுபோல்என் நந்தியை
    நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே (30)
    விளக்கம் :-
    வறண்ட நிலத்துக்கு வான் மழை அவசியம். அதை வாவென்று அழைத்தால் வாராது. மழை பொழிய மேகம் கருக்க வேண்டும். இறையருளும் அப்படித்தான். ஆண்டவன் தானே வலிய வந்து அருள் புரிவான் என்று நம்பி இருப்பார், அவன் அருளைப் பெற முயலுவதில் தயக்கம் காட்டுவர். ஆண்டவன் தானே வலிய வந்தும் அருள் செய்வான்.எப்போது? யார் யாருக்கெல்லாம்? பசிக்கும் பால் வேண்டிக் கன்று தாய்ப்பசுவை அம்மா என்று அழைக்குமே, அது போலப் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆண்டவன் அருளைப் பெற அவனை நாடினால் - அவனும் அப்படிப்பட்டவர்க்கு வலிய வந்து உதவுவான். நானும் என் இறைவனை இந்தப் பரிபக்குவ ஞானம் பெறவே, "வா... வந்தருள் செய்!" என்று வருந்தி அழைக்கிறேன். ஆன்- பசு. நந்தி - சிவப் பரம்பொருள்.

    பதிலளிநீக்கு
  4. ஆன் எனும் சொல்லின் பொருள் பசு என்றால், பசு பெண்மையை குறிப்பதன் காரணத்தால் அச்சொல்லை பெண்னைக் குறிக்கவும் பயன்படுத்தலாமா?

    'ஆன்' என்பதன் பொருள் 'பசு என்றால்', என்னும் ஒரு எண்ணுதலே எவ்வாறு? அது பொதுவின் பால். "ஆநிரை மேய்த்தானை பாடிப்பற' என இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தில், 'ஆய்ச்சியர் குரவையில்' மாடுமேய்க்கும் இடையர்கள் கண்ணனை இப்படித்தான் பாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    'பசு' என்னும் சொல் தொடக்கத்தில் அனைத்து விலங்குகளையும் குறிப்பதாக இருந்து, பிறகு, காலப்போக்கில் அது இப்போது நாம் 'பசு' என அறியும் விலங்கை (பசுமாட்டை), 'பசுமாடு' எனக் குறிப்பதாக ஆகி, அதன் சுருக்கம் 'பசு' என்பதாகத் தற்போது ஆகி, என மாற்றங்கள் கண்டுள்ளது.

    எனவே, 'பசு' என்னும் சொல் பெண்மையைக் குறிப்பதாக எண்ணுதலே தவறு எனும்போது, வினாவே பொருளற்றது என்பது எனது கருத்து.

    பதிலளிநீக்கு
  5. வேட்டவி உண்ணும் விரிசடை நந்திக்குக்
    காட்டவும் யாம்இலம் காலையும் மாலையும்
    ஊட்டுஅவி ஆவன; உள்ளம் குளிர்விக்கும்
    பாட்டுஅவி காட்டுதும் பால்அவி ஆமே. (திருமந்திரம் 1824)

    விரிசடை நந்திக்குக் - விரிக்கும் இறக்கை உள்ள நந்திக்கு

    ''இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்நான்கும், இறக்கைகள் உள்ளவர்களாக வானவர்களைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக இறைவன் ஆக்கினான்.'' (அல்குர்ஆன் 35:01)

    ஜிப்ரில் (அலை) அவர்களை (முழுமையான தோற்றத்தில்) நான் பார்த்தேன். அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருந்தன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள். (நூல்: புகாரி)
    https://islamiyapuram.blogspot.com/2014/11/blog-post_859.html

    2 நாளாகமம் 3:11-13
    கேருபீன்களின் இறக்கைகள் இருபது முழம்; ஐந்து முழம் கொண்ட ஒன்றின் இறக்கை வீட்டின் சுவரைத் தொட்டது. ஐந்து முழம் கொண்ட மற்ற கேருபீனின் இறக்கை வீட்டின் சுவரைத் தொட்டது; ஐந்து முழம் கொண்ட அதன் மற்றொரு இறக்கை முதல் கேருபின் இறக்கையுடன் இணைக்கப்பட்டது. இந்த கேருபீன்களின் இறக்கைகள் இருபது முழம் நீண்டு, அவை பிரதான அறையை நோக்கி தங்கள் காலடியில் நின்றன.
    https://bible.knowing-jesus.com/topics/Angel~s-Wings

    பதிலளிநீக்கு
  6. தேவதைகளுக்கு சிறகுகள் இருந்ததா
    ஏசாயா 6:2
    அவருக்கு மேலே செராஃபிம் நின்றது. ஒவ்வொன்றுக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன: இரண்டால் அவர் முகத்தை மூடினார், இரண்டால் அவர் கால்களை மூடினார், இரண்டால் அவர் பறந்தார்.

    https://www.openbible.info/topics/did_angels_have_wings_

    பதிலளிநீக்கு
  7. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிற தன் ஊழியர்களை வழிநடத்த தேவதூதர்களைக் கடவுள் பயன்படுத்துகிறார். (வெளிப்படுத்துதல் 14:6, 7)

    இதனால், அந்தச் செய்தியை அறிவிக்கிறவர்களும் சரி, கேட்கிறவர்களும் சரி, நன்மையடைகிறார்கள். (அப்போஸ்தலர் 8:26, 27)

    தேவதூதர்கள் கடவுளுடைய சொல்கிறபடிதான் கேட்டு நடப்பார்கள், நாம் சொல்கிறபடி அல்ல. (சங்கீதம் 103:20, 21)

    உதவிக்கு தேவதூதர்களை நேரடியாய் கூப்பிடப்போவதாக இயேசுவும்கூட சொல்லவில்லை, உதவி கேட்டு கடவுளிடம் வேண்டிக்கொள்ளப்போவதாகத்தான் சொன்னார். (மத்தேயு 26:53)

    பதிலளிநீக்கு
  8. எபிரேயர் 1:7
    தேவன் தேவதூதர்களைப் பற்றிக் கூறும்போது, “தேவன் தன் தேவதூதர்களைக் காற்றைப் போன்றும் தன் ஊழியர்களை நெருப்பு ஜூவாலைகளைப் போன்றும் செய்கிறார்” எனக் குறிப்பிடுகிறார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%201%3A6%2D8&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  9. “படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிற இயேசுவின் மூலமாகக் கடவுள் தேவதூதர்களைப் படைத்தார். படைப்பு வேலையில் கடவுள் எப்படி இயேசுவைப் பயன்படுத்தினார் என்பதை பைபிள் இப்படிச் சொல்கிறது: “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம் . . . [இயேசு] மூலம்தான் படைக்கப்பட்டன.” (கொலோசெயர் 1:13-17) தேவதூதர்கள் திருமணம் செய்துகொள்வதோ பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதோ இல்லை. (மாற்கு 12:25) ‘உண்மைக் கடவுளின் மகன்களாக’ இருக்கிற இந்தத் தேவதூதர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் தனித்தனியாகப் படைத்தார்.— (யோபு 1:6)

    பதிலளிநீக்கு
  10. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களி லிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன். பார்ப்ப வன்.(22:75)

    பதிலளிநீக்கு
  11. ஆதி படைத்தனன் எண் இலி தேவரை
    ஆதி படைத்தது அவை தாங்கி நின்றானே. - திருமந்திரம் 445–447

    பதிலளிநீக்கு
  12. 3.031 3 -ஆம் திருமுறை பாடல் # 6 திருஞானசம்பந்தர்

    சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும்,
    இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்-
    மந்திரமறை வளர் மயேந்திரப்பள்
    அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே!

    பதிலளிநீக்கு
  13. ஸஹீஹுல் புகாரீ - தொடர் » 65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை
    65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை
    ஜாஃபர் அலி February 20, 2010 ஸஹீஹுல் புகாரீ - தொடர் Leave a comment 14,392 Views

    பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4701

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

    (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னு அப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) கூறினார்: (சுஃப்யான்(ரஹ்) அல்லாத) மற்றவர்களின் அறிவிப்பில், ‘(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான்’ என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது.

    https://www.islamkalvi.com/?p=3291

    பதிலளிநீக்கு
  14. என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்! என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான்.

    திருக்குர்ஆன் : 16:2

    வானவர்களிலும், மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

    திருக்குர்ஆன் : 22:75

    பதிலளிநீக்கு
  15. யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்.

    திருக்குர்ஆன் : 2:97

    பதிலளிநீக்கு
  16. எங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. நாங்கள் அணிவகுத்து நிற்பவர்கள். நாங்கள் துதிப்பவர்கள். (என்று வானவர்கள் கூறுவார்கள்)

    திருக்குர்ஆன் 37:164,165,166

    மேற்கண்டவாறு அல்லாஹ் கூறுவது போல் வாசக அமைப்பு இருந்தாலும் உண்மையில் இது வானவர்களின் கூற்றாகும். நாங்கள் துதிப்பவர்கள்; அணி வகுத்து நிற்பவர்கள் என்பது அல்லாஹ்வின் கூற்றாக இருக்க முடியாது. வாசக அமைப்பு அல்லாஹ்வே இவ்வாறு கூறுவது போலிருந்தாலும் வானவர்களின் கூற்றை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான் என்று புரிந்து கொள்கிறோம்.

    அதனால் தான் என்று வானவர்கள் கூறுவார்கள்என்பது மூலத்தில் இல்லாமல் இருந்தும் அடைப்புக் குறிக்குள் சேர்த்துள்ளோம். வாசக அமைப்பை வைத்து குர்ஆன் தெளிவில்லை என்று யாரும் கூறுவதில்லை. சொல்லாமலே விளங்கக் கூடிய இடங்களில் இது போல் பேசுவது எல்லா மொழிகளிலும் உள்ளது தான் என்ற அடிப்படையில் சரியாக நாம் விளங்கிக் கொள்கிறோம். இது போல் தான் ஹதீஸ்களையும் அணுக வேண்டும். அவ்வாறு அணுகினால் ஹதீஸ்கள் தெளிவில்லை என்று கூற மாட்டார்கள்.

    இது போல் அமைந்த மற்றொரு வசனத்தைப் பார்ப்போம்.

    (முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை (என்று இறைவன் கூறச் சொன்னான்)

    திருக்குர்ஆன் 19:64

    பதிலளிநீக்கு
  17. வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம். திருக்குர்ஆன் 6 : 9

    பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம் என்பதைக் கூறுவீராக! திருக்குர்ஆன் 17:95

    வானவர்களிலும், மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

    திருக்குர்ஆன் : 22:75

    பதிலளிநீக்கு
  18. வானவர்களின் பண்புகள்

    வானவர்களில் ஆண், பெண் என்ற பால்வேற்றுமை இல்லை – 17:40, 37:150, 43:19, 53:27

    இறைவனுக்கு அஞ்சி நடுங்குவார்கள் – 13:13, 16:50, 21:28, 78:38

    வானவர்கள் சாப்பிட மாட்டார்கள் – 11:70, 51:24

    50 ஆயிரம் ஆண்டுக்கு நிகரான ஒருநாள் வேகத்தில் பயணம் செய்வார்கள் – 70:4

    இறைவனின் கட்டளையில்லாமல் பூமிக்கு வரமாட்டார்கள் – 19:64

    வானவர்கள் இறைக்கட்டளையை எதிர்க் கேள்வியின்றி ஏற்றுச் செயல்படுவார்கள் – 7:206, 16:50, 21:19, 21:27, 66:6

    வானவர்களுக்கு இறக்கைகளும் இருக்கும் – 35:1

    வானவர்கள் மனித வடிவம் எடுப்பார்கள் – 19:17

    வானவர்கள் சோர்வடைய மாட்டார்கள் – 21:20, 41:38

    வானவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 2:,30,31,32, 16:77

    வானவர்கள் தூதர்கள் என்றும் கூறப்பட்டுள்ளனர் – 6:61, 7:38, 10:21, 11:69, 11:77, 11:81, 22:75, 29:31, 29:33, 35:1, 43:80

    பதிலளிநீக்கு
  19. பாடல் எண் : 21
    ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
    ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
    ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
    நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

    பாடல் எண் : 9
    நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
    நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
    நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
    நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

    பொழிப்புரை : நந்தி பெருமானுக்கு மாணாக்கராகிய எண்மருள், நந்திகள் எனப்பட்ட நால்வரும் எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், அறம் முதலாக நால்வகைப்பட்டுப் பற்பல வகையாக விரிந்த உறுதிப்பொருள் அனைத்தையும் உணர்ந்து, நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுவதாக என்னும் பேரருள் உடையராய், அதனால் சிவகணத்துள்ளே ஆசிரியராயினர்.

    நால்வரும் தேவராய் நாதரா னார்களே. -- ஆண்?
    ஞானத் தலைவிதன் நந்தி - பெண்?

    பதிலளிநீக்கு
  20. வானவர்களில் ஆண், பெண் என்ற பால்வேற்றுமை இல்லை – 17:40, 37:150, 43:19, 53:27

    பதிலளிநீக்கு
  21. வெளி 14:6
    மூன்று தேவதூதர்கள்
    பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%2014&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  22. மூன்று தேவதூதர்கள்
    6 பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான். 7 அவன் உரத்த குரலில், “தேவனுக்கு பயப்படுங்கள். அவருக்கு புகழ் செலுத்துங்கள். அவர் எல்லா மக்களுக்கும் நீயாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்திருக்கிறது. தேவனை வழிபடுங்கள். அவர் பரலோகத்தைப் படைத்தார். பூமியையும், கடலையும் நீரூற்றுக்களையும் படைத்தார்” என்றான்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%2014&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  23. மத்தேயு 13:39
    பிசாசே களைகளை விதைத்தப் பகைவன். உலகின் முடிவுக் காலமே அறுவடைக் காலம். தேவதூதர்களே அறுவடை செய்பவர்கள்.

    பதிலளிநீக்கு
  24. 2 பேதுரு 2:10
    குறிப்பாக பாவங்களால் நிறைந்து ஊழல்கள் மலிந்த வழியைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கர்த்தரின் அதிகாரத்தை மீறுகிறவர்களுக்கும் இத்தண்டனை கிடைக்கும். போலிப்போதகர்கள் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்வார்கள். மட்டுமன்றி, தங்களைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வார்கள். மகிமை மிக்க தேவதூதர்களைக் குறித்துத் தீயவற்றைப் பேசுவதற்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  25. சங்கீதம் 148:2-5
    Tamil Bible: Easy-to-Read Version
    2 தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது சேனைகள் [a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
    3 சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
    நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
    4 மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
    வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
    5 கர்த்தருடைய நாமத்தைத் துதி.
    ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+148%3A2-5&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  26. 11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  27. 11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.

    பதிலளிநீக்கு
  28. 2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.

    2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்

    பதிலளிநீக்கு
  29. தேவர்களுக்கு பிறப்பு கிடையாது - அனைவரும் இறைவனால் படைக்கப் பட்டவர்கள்

    பாடல் எண் : 25
    பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
    சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
    மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
    உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.

    பொழிப்புரை : தேவர் பலரும், பிறப்பில்லாத முதல்வனும், `நந்தி` என்னும் பெயருடையவனும் ஆகிய சிவபெருமானைத் தூய்மையுடன் சென்று கைதொழுது இம் `மந்திரமாலை` நூலை மறவாது மனத்துட் கொள்வர். ஆகவே, நீவிரும் இதனை உறுதியாக நின்று ஓதுதல் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  30. பாடல் எண் : 35
    தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
    முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்
    ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
    பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

    பொழிப்புரை : மன்னிய வாய் மொழியாகிய சிவாகமங்கள், வீடு பேற்றை அடைவதற்கு விரும்பியிருந்த முனிவரும், தேவரும் கருத்தொருமை கொண்டு உலகப் பயன் விரும்பும் மக்களை விடுத்துத் தனி இடத்திலிருந்து வேண்டிக் கொண்ட அன்பு காரணமாக இறைவன் உண்மை ஞானத்தைக் கயிலைத் தாழ்வரைக்கண் இருந்து உணர்த்தியருளிய நூல்களாம். பக்குவம் இல்லாதோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்.

    பதிலளிநீக்கு
  31. நந்திதேவர் பற்றி பாடல்கள்

    பாடல் எண் : 03
    முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
    தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
    தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
    பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.

    பொழிப்புரை : பொன்போலும் மேனியையுடைய, யானைத்தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், `முன்னோர், பின்னோர்` என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, ``அப்பா`` என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; (உம்மையால்) ``அம்மே`` என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.
    ****************************************************
    பாடல் எண் : 04
    தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
    ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
    சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
    தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

    பொழிப்புரை : நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.
    ****************************************************
    பாடல் எண் : 05
    பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
    பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
    என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
    தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

    பொழிப்புரை : என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெருமான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். ``நந்தி`` என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.
    ****************************************************
    பாடல் எண் : 06
    அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
    இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
    முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
    பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.


    http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10101

    பதிலளிநீக்கு
  32. பாடல் எண் : 17
    சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
    அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
    அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
    குருவை வழிபடிற் கூடலும் ஆமே.
    பொழிப்புரை :
    அளவற்ற தேவர்கள் சிவனையை நேராகச் சென்று கண்டு வழிபட்டனர். ஆயினும் அவர்கள் பின்பு துன்பம் இன்றி வாழ்ந்ததாக வரலாறில்லை. பின்பும் துன்பம் எய்தியதாகவே வரலாறுகள் உள்ளன. ஆகையால், என்றும் துன்பமில்லா வாழ்வைப் பெறும் வகையில் சிவனை வழிபடும் முறையைத் தெரிவிக்கின்ற குருவை வழிபட்டால், அவரது அருளால் அவ்வழிபாட்டில் நின்று துன்பம் இல்லாத நிலையை அடைதல் கூடும்.

    http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10738

    பதிலளிநீக்கு
  33. சைவ சமயத் தனி நாயகன் நந்தி
    உய்ய வகுத்த குருநெறி ஒன்றுஉண்டு;
    தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துஉய்ய
    வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே (திருமந்திரம். 1567)

    சைவ சமயத்தின் தனிமுதல் தலைவனாகிய நந்தி தேவர் , உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உய்வு அடைவதற்காக வகுத்து வைத்த குரு நெறி ஒன்று இருக்கிறது. அந்த நெறி சிவ நெறி. சன்மார்க்கம் என்கிற சைவ அறிவு நெறி.

    https://yarl.com/forum3/topic/201535-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

    சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

    சைவ சமைய தனி நாயகன் நந்தி
    உய்ய வகுத்தது ஒரு நெறி ஒன்று உண்டு
    தெய்வ அரன் நெறி சன்மார்க்கம் சேர்ந்தது
    வையத்து உள்ளவர்க்கு வகுத்து வைத்தானே.

    பதப்பொருள்: சைவ (சைவ) சமைய (சமயத்திற்கு) தனி (தனிப் பெரும்) நாயகன் (தலைவனாகவும்) நந்தி (குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன்)
    உய்ய (அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக) வகுத்தது (வகுத்து அருளிய) ஒரு (ஒரு) நெறி (வழி முறையில்) ஒன்று (அன்பு ஒன்று மட்டுமே) உண்டு (இருக்கின்றது)
    தெய்வ (அதுவே தெய்வீகமான) அரன் (இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறையாகும்) சன்மார்க்கம் (உண்மை வழி முறைகள் அனைத்தும்) சேர்ந்தது (அதனோடு சேர்ந்தே)
    வையத்து (உலகத்தில்) உள்ளவர்க்கு (உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு) வகுத்து (பல வழி முறைகளாக பிரித்து) வைத்தானே (வைத்து அருளினான் இறைவன்).

    விளக்கம்: சைவ சமயத்திற்கு தனிப் பெரும் தலைவனாகவும் குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன் அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக வகுத்து அருளிய வழி முறையில் அன்பு ஒன்று மட்டுமே இருக்கின்றது. அதுவே தெய்வீகமான இறைவனை அடைவதற்கான வழி முறையாகும். உண்மை வழி முறைகள் அனைத்தும் அதனோடு சேர்ந்தே உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு பல வழி முறைகளாக பிரித்து வைத்து அருளினான் இறைவன்.

    https://kvnthirumoolar.com/song-1567/

    பதிலளிநீக்கு
  34. 61. பரனாய்ப் பராபரம் காட்டி உலகில்
    தரனாய்ச் சிவதன்மம் தானே சொல் காலத்து
    அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
    உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே. 5

    அறிவாய் விளங்குபவன்! உலகத்தைத் தாங்குபவனும், சிவபுண்ணியம் அருளு பவனும், தேவர் வணங்கி வழிபடுபவனுமாகிய சிவபெருமானே பரஞானம், அபரஞானம் அறிவித்து ஆகமத்தில் அறிவாய் விளங்குகின்றான்.

    பதிலளிநீக்கு
  35. தேவலோகத்தில் உள்ள வானவர்கள் எல்லாம் சிவனைத் தான் போற்றி வணங்குகிறார்கள்.

    நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
    உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
    இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
    அன்பனை யாரும் அறியகி லாரே. – (திருமந்திரம் – 286)

    சிவபெருமான் அனைவராலும் நம்பப்படுபவன். அவன் எல்லாவிதப் பொருளாகவும் இருக்கிறான். தேவலோகத்தில் உள்ள வானவர்கள் எல்லாம் சிவனைத் தான் போற்றி வணங்குகிறார்கள். நமக்கெல்லாம் இன்பம் தருபவன் அந்த இறைவனே! நமது இன்பத்தில் நின்று தித்திக்கும் பொருளாக இருப்பவன் அவனே! அந்த அன்பு வடிவான சிவனை நாம் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.
    (இரதிக்கும் ; தித்திக்கும்)

    பதிலளிநீக்கு
  36. 10.0.04. குரு பாரம்பரியம்

    நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
    என்றிவர் என்னோ டெண்மரு மாமே.  1

    நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
    நந்தி அருளாலே மூலனை நாடினோம்
    நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
    நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.  2

    மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
    இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
    கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
    இந்த எழுவரும் என்வழி யாமே.  3

    நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
    நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
    நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
    நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.  4

    மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
    ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
    செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
    கழிந்த பெருமையைக் காட்டகி லானே.  5

    எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
    செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
    கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
    அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.  6

    Read more at: https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandirum-payiram-guru-parampariyam/#gsc.tab=0

    பதிலளிநீக்கு
  37. 43:19. அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.

    பதிலளிநீக்கு
  38. 43:19. அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.

    பதிலளிநீக்கு
  39. “மக்கள் தேவர் நரகர் உயர்திணை
    மற்றுயிர் உள்ளவு மில்லவும் அஃறிணை”
    (நன் -261)

    என்பது நன்னூல் நூற்பா

    இவ்வாறு உயர்ந்த ஒழுக்கம் உடைய மக்களை உயர்திணை என்று இலக்கண நூலாரும், உரையாசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். அம்மக்களே ஆடவரும் மகளிரும் ஆகும்.

    “முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ மகடூஉ மக்கள் எனப்படும். அவ்வாறு உணர்விலும் குறைவுபட்டாரைக் குறைந்த வகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப் பிறப்பினுள் சேர்த்துக் கொள்ள வேண்டும்” (2)

    என்று பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

    பதிலளிநீக்கு