வேதத்தை ஓதி வீடு பெற முடியுமா?

ஆம், வேதம் ஓதி வீடுபெறலாம்.

தமிழர் சமயம்

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)

பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)

பதவுரை: நண்ணல் - நெருங்குதல் 
 
பொழிப்புரை: மூலன் உரைசெய்த மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்தி பெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் காலையில் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் உலகத்தின் தலைவனை நெருங்கலாமே. 
 
இஸ்லாம்

நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் (மறுமையில் செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படும்) நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். (முஸ்லிம்)

இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழி தவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி)

கிறிஸ்தவம் & யூதமதம் 

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். ஆகையால் துன்மார்க்கர் நியாயத் தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும். - (சங்கீதம் 1:2-6) 

 

ஆனால் ஓதினால் மட்டும் போதாது, பிறருக்கும் கூற வேண்டும் 

கிறிஸ்தவம்யூதமதம்  
 
இயேசு கூறினார் “ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்" (மத்தேயு 5:19,20)

தமிழர் சமயம்


யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. - (திருமந்திம் 147) 
 
பொருள்"இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்."  
 
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திரு - 7ஆம் தந்திரம் - 1795)

பொருள்: சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, சிவனைக் குறித்துப் பிறருக்கு எடுத்துக் கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது.   
 

இஸ்லாம்

வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)  
 
நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? - (குர்ஆன்  2:44) 
 
ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! -  (குர்ஆன் 103:3) 

பிறருக்கு உபதேசித்தல் மட்டும் போதாது, நாமும் அது கூறும் அறத்தின் படி வாழ வேண்டும்!

தமிழர் சமயம்

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. (குறள் 847: புல்லறிவாண்மை அதிகாரம்)

பொருள்: அரு மறை –  மறை நூல்களை; சோரும் – கடைபிடிக்காது தவறும்; அறிவிலான் – பேதையர், அறிவீனர்கள்; செய்யும் – செய்து கொள்வர்; பெரு மிறை – பெரிய துன்பத்தை; தானே தனக்கு – தாமே தமக்கு (வேறு யாருமே செய்யவேண்டாம்)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின்
 பேதையார் இல். - (திருக்குறள் : பொருட்பால் : பேதைமை 834)

பொருள்: நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அதை செய்யாத பேதையார் போலப் பேதையார் உலகத்தில் இல்லை

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக. - (குறள் 391)
 
பொருள்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே! - (சிவவாக்கியம் 140)

வேதம் உரைத்தானும் ஆகிலன்
வேதம் உரைத்தாலும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. - (திருமந்திரம் 3. வேதச் சிறப்பு - 2)

பொருள்: வேதத்தை உரக்கப் படிப்பதனால் மட்டும் ஒருவன் வேதம் அறிந்த வேதியன் ஆகிவிட மாட்டான். வேதத்தை உரைத்த இறைவன் மக்களுக்கு பிரம்ம தத்துத்தை நன்கு விளக்கவும், வேதியர்கள் வேள்வி ("வேள்விஎன்பதற்கு அறச்செயல் என்று பொருள்) செய்வதற்காக, உண்மைப் பொருளை உணர்த்துவதற்காகவும், வேதத்தைக் கூறி அருளி உள்ளான்.

இஸ்லாம்

நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? - (குர்ஆன்  2:44)

நீங்கள் செய்யாததை(ப்பிறருக்கு)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப்பெரியதாகி விட்டது. (குர்ஆன் 61:3)

நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்; பின்னர், என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி நிச்சயமாக வரும்போது எவர் என்னுடைய (அந்)நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு (மறுமையின் காரியங்களில்) யாதொரு பயமுமில்லை;(மேலும் இவ்வுலகில் எதைவிட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.” -  (குர்ஆன்  2:38

கிறிஸ்தவம்

இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். - (யோசுவா 1:8)

பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார்,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.(மத்தேயு 23:1-3)

ஏனென்றால் வேதத்தை விட்ட அறமில்லை!

கிறிஸ்தவம் 


அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான். (2 தீமோத்தேயு 3:16,17)   

தமிழர் சமயம்  


வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)

பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.  

வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. (திருமந்திரம் பாடல் எண் : 52)

பொருள் : வேதத்தை ஒத்துகின்றவன் வெஹியான் அல்ல, வேதத்தை ஓத வேண்டும் அதை விளங்கி கொள்வதற்கு, வேதத்தை ஓதி அதை செயல் படுத்தவேண்டும், இதுதான் வேதம் உரைத்தல் என்பதன் மெய்ப்பொருள் ஆகும்.

இஸ்லாம்  

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி (திருக்குர்ஆன் 2:2)

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (திருக்குர்ஆன் 2:185)

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே தவிர உமக்கு இவ்வேதத்தை நாம் அருளவில்லை. (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது. (திருக்குர்ஆன் 16 : 64)

முடிவுரை


வேதத்தை ஓதி மட்டும் வீடுபேறு அடைய முடியாது ஏனென்றால் வேதம் வழங்கப்பட்ட காரணம் அதை ஓதி அதன்படி வாழ்க்கையை அமைத்து கொள்வதற்காகவே. எனவே நாம் ஓதும் வேத பாடல்களின் வசனங்களின் பொருள் உணராமல் ஓதுதல் ஆகாது.  எனவே ஓதுதல் மட்டும் நோக்கமல்ல, ஓதுவதை புரிந்து நாமும் அதன்படி வாழ்ந்து பிறர்க்கும் உபதேசிப்பது நோக்கமாகும்.


ஓதி, உணர்ந்து, பிறர்க்கு சொல்லி, தானும் கடைபிடிப்பவன் வீடுபேறு அடைவான்!

24 கருத்துகள்:

  1. ஆதியின் தொல்சீர் அறநெறிச் சாரத்தை
    ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்குச் - சோதி
    பெருகிய உள்ளத்த ராய் வினைகள் தீர்ந்து
    கருதியவை கூடல் எளிது. பாடல் - 1

    விளக்கவுரை : அனைத்ததின் தொடக்கமுமான தெய்வத்தின் மிக பழமையான சீர்மிகுந்த அறநெறிச்சாரம் என்னும் இந்நூலைக் கற்றும் கேட்டும் புரிந்தவர், ஞான ஒளி மிக்க மனம் உடையவராய், தீய வினைகள் நீங்கப்பெற்று, அவர்கள் கருதியவை எளிதில் முடியும்

    பதிலளிநீக்கு
  2. இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
    அறந்தானும் இஃதே சென்று ஆற்றத் - துறந்தார்கள்
    தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து
    நம்புக நல்ல அறம். அறநெறிச்சாரம் பாடல் - 39

    விளக்கவுரை இல்லறத்தை விட்டு நீங்கி அகப்பற்று, புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே பெற்றுக் கூறியதால் மிகவும் சிறந்த நூல் எம்முடையதே; தெய்வமும் இதுவே; அறமும் இதுவே ஆகும். நன்றாக ஆராய்ந்து சிறந்த அறமான இதை நம்பி மேற்கொள்வீராக!

    பதிலளிநீக்கு
  3. தன் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்
    இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்
    நான்மறையாளர் வழிச் செலவும், - இம் மூன்றும்
    மேல் முறையாளர் தொழில். - திரிகடுகம் 2


    தனது குடிப்பிறப்பின் சிறப்பு குறையாத ஒழுக்கமும், இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களைச் செய்வதும், வேதங்கள் கூறிய வழியில் நடத்தலும், மேன்மையானவர் செய்யும் தொழில்களாகும். http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam.html

    பதிலளிநீக்கு

  4. உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி,
    உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான்
    அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார் -
    பெருந் தவம் செய்தார், பெரிது. ஏலாதி 64


    எல்லாரினு முயர்ந்தவன் றலைவனாவானென் றுள்ளங்கொண்டு, மாற்றவர்க்குச் சொன்ன நன்மையானே யொக்க வாராய்ந்து, உயர்ந்தவனாற் சொல்லப்பட்ட வாகமத்தை யோதி, அவ்வாகமத்திற் சொன்ன வகையானேயடக்க முடையவனாய்; அவ்வுயர்ந்தவன் சொல்லிய வரிய தவத்தை மிகவுஞ் செய்தால், பிறப்பில்லாத வீடாமென்று சொல்லினார், மிகவும் பெருந் தவஞ்செய்தார்.

    பதிலளிநீக்கு
  5. திருவள்ளுவரின் திருக்குறள் : பொருட்பால் : பேதைமை

    ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையின் பேதையார் இல். குறள் 834

    நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை.

    http://www.kuralthiran.com/KuralThiran/KuralThiran0834.aspx

    திருமூலரின் திருமந்திரம் 51.

    வேதம் ஓதி வீடு பெறலாம்
    வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
    ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
    வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
    வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.

    வேதம் கூறாமல் விட்டு விட்ட அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.

    மெய்ப்பொருள் காட்டவே!
    வேதம் உரைத்தானும் ஆகிலன்
    வேதம் உரைத்தாலும் வேதா விளங்கிட
    வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
    வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

    வேதத்தை உரக்கப் படிப்பதனால் மட்டும் ஒருவன் வேதம் அறிந்த வேதியன் ஆகிவிட மாட்டான். வேதத்தை உரைத்த இறைவன் மக்களுக்கு பிரம்ம தத்துத்தை நன்கு விளக்கவும், வேதியர்கள் வேள்வி செய்யும் பொருட்டும், உண்மைப் பொருளை உணர்த்துவதற்காகவும், வேதத்தைக் கூறி அருளி உள்ளான்.

    https://thirumanthiram1.wordpress.com/1-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/51-to-55/
    ___________________________________________

    இஸ்லாம் :

    நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? - 2:44.

    http://www.tamililquran.com/qurandisp.php?q=%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&start=2#2:44
    ______________________________________________

    இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாய் இருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

    This book of instruction must not depart from your mouth; you are to recite it day and night so that you may carefully observe everything written in it. For then you will prosper and succeed in whatever you do. Josh 1:8

    https://www.tamil.biblewordings.com/joshua-1/
    https://bible.knowing-jesus.com/words/Recite

    பதிலளிநீக்கு
  6. யார் என் நினைவூட்டலைப் புறக்கணிப்பாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. (அல்குர்ஆன் 20:124)

    பதிலளிநீக்கு
  7. “விசுவாசம் கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள். நீங்கள் செய்யாததை கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிக பெரிதாகி விட்டது.(61:2,3)

    பதிலளிநீக்கு
  8. 3320. காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
    *ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது*
    வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே.

    பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர்
    பெருகி தன்னை ஓதுபவர்களை நன்னெறிக்குக்
    ஊக்குவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக
    விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின்
    திருநாமம் ‘நமச்சிவாயன் ஆவான்.

    குறிப்பு: உளப்பூர்வமாக நம்பி கண்ணீர் சிந்தி ஒதுவதன் மூலம் ஓதுபவரை அது கூறும் நன்னெறியை செய்யத் தூண்டுவான் நான்கு மறைக்கும் ஒரே இறைவனான சிவன்.

    நான் மறை என்பது திசைக்கு ஒரு மறை எனவே அனைத்து மொழி சமய மறைநூல்களையும் இது குறிக்கும்

    https://www.tamilvu.org/slet/l1100/l1100pag.jsp?
    book_id=20&pno=412

    இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 5:83)

    நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (அல்குர்ஆன் 8:2)

    https://www.bayanapp.indiabeeps.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81/

    பதிலளிநீக்கு
  9. கொண்டு படிப்பினை பெறக் கூடியவர் உண்டா?" (54: 17)

    'உமக்கு நாம் இறக்கியிருக்கும் இவ்வேதம் பரக்க த்துப் பெற்றதாகும். எனவே, அதைப் பின்பற்றுங் கள்." (06:155(

    ஆகவே எவர் குர்ஆனை ஓதுவதிலும் அதை மனனம் செய்வதிலும் மாத்திரம் தமது முயற்சியையும் கவனத்தையும் மட்டுப்படுத்திக் கொள்கிறாரோ அவர்கள் அல்குர்ஆனை ஆராய்ந் தறிதல் மற்றும் அமல் செய்தல் ஆகிய இரண்டு முக்கிய விடயங் களையும் விட்டு விடுபவர்களாக இருக்காமல் அவதானித்துக் கொள்ள வேண்டும்.

    http://www.lankarani.com/tam/shi/3.htm

    பதிலளிநீக்கு
  10. மத்தேயு 5:19

    ஆகையால், இந்தக் கட்டளைகளில் மிகச்சிறிய ஒன்றைத் தளர்த்தி, அதையே மற்றவர்களுக்குக் கற்பிப்பவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்று அழைக்கப்படுவான், ஆனால் அவற்றைச் செய்து அவற்றைப் போதிப்பவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்று அழைக்கப்படுவான்

    பதிலளிநீக்கு
  11. உபாகமம் 18:20-22

    ஆனால் நான் கட்டளையிடாத ஒரு வார்த்தையை என் பெயரால் பேசுவதாகக் கருதும் தீர்க்கதரிசியோ, மற்ற தெய்வங்களின் பெயரில் பேசுகிறாரோ, அதே தீர்க்கதரிசி மரணமடைவார். மேலும், ' ஆண்டவர் பேசாத வார்த்தையை நாங்கள் எப்படி அறிவோம்?' என்று நீங்கள் உங்கள் இதயத்தில் சொன்னால், ஒரு தீர்க்கதரிசி கர்த்தருடைய நாமத்தில் பேசும்போது, ​​அந்த வார்த்தை நிறைவேறாமலோ அல்லது நிறைவேறாமலோ இருந்தால், கர்த்தர் சொல்லாத வார்த்தை ; தீர்க்கதரிசி அதை ஆணவத்துடன் பேசியுள்ளார். நீங்கள் அவருக்கு பயப்பட தேவையில்லை

    பதிலளிநீக்கு
  12. 147. நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
    வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
    ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
    தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

    (ப. இ.) திருவருளால் திருவடியுணர்வால் அடியேன் பெற்ற இறவாப் பேரின்பம் இவ்வையகம் பெற்று இன்புறுமாக. செந்நெறிச் செல்வர்களாகிய நற்றவத்தான் உயர்ந்தோர், இடையறாது பெருங் காதலால் பற்றி நின்ற விழுமிய முழுமுதற் சிவம் மறைப்பொருளாகும். அப்பொருளினை எய்தும் மெய்நெறி சொல்லிடின், ஊனாகிய நெஞ்சத்திடத்து ஓசை அருவாய் நிற்கும். அதன்பின் ஆருயிரின்கண் அவ்வோசை உணர்வுருவாய்த் திகழும். அம் மந்திரம் செந்தமிழ் நான்மறைச் 'சிவசிவ' இந்தத் தனிப்பெருந் தமிழ்மறையினை ஆருயிர் இடையறாது அழுந்த அழுந்தக் கணிக்கக் கணிக்கத் திருவடியில் தலைக்கூடும். ஊன் நெஞ்சம் - ஆகுபெயர். உருவால் வரி அருவாம் ஓசையுணர்வின், உருவால் உயிரின்பாம் ஓர்.

    (அ. சி.) ஊன் பற்றி - தசைபொதி நாவைப் பற்றி.

    பதிலளிநீக்கு
  13. லூக்கா 6:46 ESV / 7 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    “நான் சொல்வதைச் செய்யாமல் ஏன் என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று அழைக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  14. யோசுவா 1:8
    வசன கருத்துக்கள்
    இந்த நியாயப்பிரமாணப் புத்தகம் உன் வாயிலிருந்து விலகாமல், இரவும் பகலும் அதைத் தியானித்து, அதிலே எழுதியிருக்கிறபடியெல்லாம் செய்யும்படி எச்சரிக்கையாயிருப்பாய். ஏனென்றால், அப்போது நீ உன் வழியை செழுமையாக்குவாய், அப்போது உனக்கு வெற்றி கிடைக்கும்.

    Source: https://bible.knowing-jesus.com/topics/Worship-Day-And-Night

    பதிலளிநீக்கு
  15. சங்கீதம் 1:2
    வசன கருத்துக்கள்
    ஆனால் அவனுடைய மகிழ்ச்சி கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் இருக்கிறது ,
    அவன் இரவும் பகலும் அவருடைய நியாயப்பிரமாணத்தில் தியானிக்கிறான்.

    Source: https://bible.knowing-jesus.com/topics/Worship-Day-And-Night

    பதிலளிநீக்கு
  16. எருசலேமே! உனது மதில்களில் காவலர்களை (தீர்க்கதரிசிகள்) வைப்பேன்.
    அந்தக் காவலர்கள் மௌனமாக இருக்கமாட்டார்கள்!
    அவர்கள் இரவும் பகலும் ஜெபம் செய்வார்கள்!

    ஏசாயா 62:6

    Source: https://bible.knowing-jesus.com/topics/Worship-Day-And-Night

    பதிலளிநீக்கு
  17. கருத்து அறிந்து ஓத்திடின்

    பாடல் எண் : 36
    மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
    ஞாலம் அறியவே நந்தி அருளது
    காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
    ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே..

    பொழிப்புரை : மூலன் பாடிய மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்தி பெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர்.

    பதிலளிநீக்கு

  18. முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
    அடிகள் உறையும் அறனெறி நாடில்
    இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
    கடிமலர்க் குன்றம் அலையது தானே (திருமந்திரம் பாடல் எண் : 16)

    பதவுரை: கடிமலர் - சிறப்பு;

    பொழிப்புரை : உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் முன்னமே படைத்த தலைவன் கூறும் அறநெறியைக் பின்பற்றாவிடில், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  19. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாய் இருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

    This book of instruction must not depart from your mouth; you are to recite it day and night so that you may carefully observe everything written in it. For then you will prosper and succeed in whatever you do. Josh 1:8

    https://www.tamil.biblewordings.com/joshua-1/
    https://bible.knowing-jesus.com/words/Recite

    பதிலளிநீக்கு
  20. தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை,
    யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
    ஓதுமின், கேள்மின், உணர்மின், உணர்ந்தபின்
    ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே (திருமந்திரம் 301)

    பொருள்: தேவருக்கெல்லாம் தலைவன் ! அழகுக்கெல்லாம் அழகன்!’ என்று சொல்லப்படுகிற கடவுளை அறிந்தபின், அவனது மறைநூலை ஓதி, அதன் விளக்கத்தை கேட்டு, அதை புரிந்து, புரிந்தபின் நிறுத்திவிடாமல் மீண்டும் மீண்டும் ஓதி உணர்ந்து அதில் ஒடுங்குவதன் மூலம் ஓங்கின் நின்றார்.

    https://yarl.com/forum3/topic/201535-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  21. மந்திரங்களெல்லா மயங்காம லுண்ணினைந்து
    முந்தரனை யர்ச்சிக்கு மாறு. 78

    மந்திரங்கள் எல்லாவற்றையும் மயக்கம் இல்லாமல் உள்ளத்தில் நினைத்துப் பார்த்து தன் அகக் கண் முன்னே நிற்கும் அரன் என்னும் சிவனை அருச்சிப்பதே முறைமை.

    https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_4.html?m=1

    பதிலளிநீக்கு
  22. தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை,
    யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
    ஓதுமின், கேள்மின், உணர்மின், உணர்ந்தபின்
    ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே (திருமந்திரம் 301)

    பொருள்: தேவருக்கெல்லாம் தலைவன் ! அழகுக்கெல்லாம் அழகன்!’ என்று சொல்லப்படுகிற கடவுளை அறிந்தபின், அவனது மறைநூலை ஓதி, அதன் விளக்கத்தை கேட்டு, அதை புரிந்து, புரிந்தபின் நிறுத்திவிடாமல் மீண்டும் மீண்டும் ஓதி உணர்ந்து அதில் ஒடுங்குவதன் மூலம் ஓங்கின் நின்றார்.

    https://yarl.com/forum3/topic/201535-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  23. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
    ஞாலம் அறியவே நந்தி அருளது
    காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
    ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)

    பொருள்: நந்தியின் உதவியினால் திருமூலர் மூலம் தமிழில் 3000 பாடல்கள் உலக மக்கள் அறிவதற்காக வழங்கப்பட்டது. அதை கருத்து அறிந்து ஒதிடின் உலகத்தின் இறைவனை பொருந்திகொள்ளலாமே

    பதிலளிநீக்கு
  24. குறைந்த பட்சம் தற்போது எனக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை. நான் ஏன் வேதங்களை கற்க வேண்டும்?

    சம்ஸ்கிருத வேதங்களை பற்றி கேட்டீர்களானால், இன்றைய தேதிக்கு வேத வசனத்தை நீங்கள் பேசினால் நன்றாக சம்பாதிக்கலாம்.. நீங்க வேதத்தை பற்றிய உண்மையை பேசுறீங்களா பொய் பேசுறீங்களானு யாருக்கும் தெரியாது, ஏனென்றால் யாரும் அதை வாசிப்பது இல்லை. ஒருவேளை பொய் என்று தெரிந்தால் கூட அதை ஒருவர் நிறுவ முடியாது, ஏனென்றால் அதை யாரிடம் நிறுவ வேண்டுமோ அவர்களுக்கும் வேதம் தெரியாது. வேத வசனத்தை கூறி ஒரு பிரச்சனைக்கு விளக்கம் கூறுவோரை நீங்கள் கண்டதுண்டா? அதை நீங்க செய்தால், நீங்க தான ராஜா.. கல்லா கட்டலாம்.

    ஆபிரகாமிய வேதங்களை பற்றி கேட்பீர்களானால், யூதர்கள் முதல் முஸ்லிம்கள் வரை பலர் அதில் உள்ள அறிவியல் செய்திகளை எடுத்து ஆய்வுசெய்து அறிவியல் அறிஞர்கள் ஆகிறார்கள்.. எனவே அதையும் கற்கலாம்.

    தமிழ் வேதத்தை பற்றி கேட்பீர்களானால், நாம் தமிழர்கள் ஆகையால், கடவுளின் வார்த்தைகளை நேரடியாக நமது மொழியில் வாசிக்கும் பொழுது அது கொடுக்கும் தெளிவு, நமக்கு கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு