தமிழர் சமயம்
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே - திருமூலர்
பொருள்: அனைத்திலும் கலந்தும், கலக்காமலும் இருப்பவன், கண்ணனுக்குத் தெரியாதவன், பரந்த சடையுடையவன், பசும்போன்னிரத்தில் இருப்பவன், நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவன், அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே.
மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்போயின நாடறி யாதே புலம்புவர்தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. - திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் - 28.1
பொருள்: கண்ணால் காண இயலாத இறைவனை மனம் என்னும் தேர் ஏறி பொய் தேடி ஆவான் நாடு இடம் அறியாமல் புலம்புவர் தேகம் என்னும் நாட்டுக்குள் தேடி திரிந்து ஊன் என்னும் நாட்டிடை கண்டுகொண்டேன் என்ப்று கூறுவதன் மூலம் இறைவனை உணரத்தான் முடியும் என்கிறார்.
உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோதிரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)
பொருள்: கடவுளை வருணிக்க முடியாது. கரை காண முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள் எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான் [தெரிபட மாட்டன்]
இஸ்லாம்
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 291)
கிறிஸ்தவம்
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் 1:18)
