எது உண்மையாக இறைவனின் மதம், சமையம் [அ] மார்க்கம் !


மதங்கள் இரண்டு வகை வகைப்படும் 
  • உண்மை சமயம் - கறைபடா அல்லது முடிவுறா மறைநூலை கொண்டது.
  • பொய் சமயம் - கறைபட்ட, முடிவுற்ற அல்லது மனிதன் எழுதிய மறைநூலை கொண்டது. 
"கறைபடா" என்றால், அது எவ்வாறு வழங்கப் பட்டதோ அவ்வாறே இன்றுவரை மாறாது முதல் நூலுக்கான அல்லது வழிநூலுக்கான இலக்கணத்தோடு இருத்தல் என்று பொருள். 
 
"முடிவுறா" என்றால், இன்றும் அது நடைமுறைப் படுத்த வேண்டிய சட்டமாக இருத்தல் என்று பொருள். அதாவது அதற்குப் பிறகு எந்த வழிநூலும் வழங்கப் படவில்லை என்றும், அந்த சொற்களில் திரிபு ஏதும் ஏற்படுத்தவில்லை என்றும் பொருள். 
 
"கறைபட்ட" என்றால், அதில் புது செய்திகள் உரிமையில்லா ஆசிரியர் மூலம் இணைக்கப்பட்டோ, நீக்கப்பட்டோ இருத்தல் என்று பொருள். தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட நபர்தான் அந்த குறிப்பிட்ட மறைநூலில் சேர்க்கவோ நீக்கவோ உரிமையுள்ளவர். 
 
"முடிவுற்ற" என்றால், அந்த நூல் பல காரணங்களளால் ஓதி உணர தகுதியற்றதாக மாறியிருப்பதாகும். பொருள் திரிதல், மறுவுதல், பாரம்பரியமாக கற்றுத்தரும் ஆசிரியர் அற்றுப் போதல், அதன் அடுத்த வழி நூல் தோன்றி இருத்தல் போன்றவைகள் சில காரணங்களாம். முடிவுற்ற மறைநூல்களிலேயே மக்களால் கறைபடுத்த முடியும் என்பது கூடுதல் தகவல். 
 
"மனிதன் எழுதிய" மறைநூல் என்றால், கற்ற சிறந்த மொழி அறிவைக்கொண்டு நூல் எழுத்து அதை இறைவனிடமிருந்து வந்தது என்று கூறி ஒரு சமயத்தை துவங்குவது. 
 
இதன் அடிப்படையில் மறைநூல்களின் வரையறையினையும் அதன் முழு வடிவமைப்பை ஆய்வு செய்யும் பொழுதும் உண்மை சமயம் எது பொய் சமயம் எது என்று கண்டறியலாம்.

இறைவனின் ஒவ்வொரு நூலும் அது பேசும் சமயம் தான் உண்மை மார்க்கம் என்று கூறுவதை பார்க்கலாம். உதாரணங்கள்,

தமிழர் சமயம்

சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்;
தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

பொருள்: சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவமாகவே ஆகிவிடுகிற தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது; பிற மதங்களின் வழியாகக் கடவுளைக் கண்டுகொள்வோம் என்று முயல்கிறவர்களின் முயற்சி வீண் முயற்சியே அல்லாமல் வேறில்லை. ஆகவே வேண்டாத வேலைகள் செய்வதைவிட்டு, நல்லபடியாகச் சிவத்தின் திருவடி சேர்ந்து விடுதலை பெறத் தலைப்படுங்கள். 
 
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. (திருமந்திரம் பாடல் எண் : 38)

இஸ்லாம்

‘….இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (குர்ஆன் 5:3
 
‘...நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (ஏற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (குர்ஆன் 3:19) 
 
‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85) 

கிறிஸ்தவம்

சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்; உங்களுடைய வார்த்தைதான் சத்தியம். - (யோவான் 17:17)

முடிவுரை

உண்மை மதமும் இறைவனும் உண்மை மறைநூல் வழியாகவே அறியப் படுகின்றனர். அந்த வழிமுறை வேதங்கள் தலைப்பில் ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.  

31 கருத்துகள்:

  1. “அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததையா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. மேலும் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.” (3:83)

    பதிலளிநீக்கு
  2. பாசண்டி மூடம்

    மாசுண்ட மார்க்கத்து நின்றாரைப் பூசித்தல்
    பாசண்டி மூடம் எனல். - அருங்கலச்செப்பு 33

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  3. மதங்கள் இரண்டு வகை வகைப்படும்:
    >உண்மை சமயம் - கறைபடா அல்லது முடிவுறா மறைநூலை கொண்டது.
    >பொய் சமயம் - கறைபட்ட, முடிவுற்ற அல்லது மனிதன் எழுதிய மறைநூலை கொண்டது.
    உண்மை சமயம் பொது நலத்தோடும், பொய் சமயம் சுயநலத்தோடும் காணப்படும்.
    மதம் மனிதர்கள் உருவாக்கியது அல்ல அதனால் உலகம் அழியும் வரை அது உயிர்ப்புடன் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. நீதிமொழிகள் 4:27

    வலப்புறமும் இடப்புறமும் திரும்பாதே;
    தீமையிலிருந்து உங்கள் பாதத்தைத் திருப்புங்கள்.

    (பொருள் : நன்மை நேர்வழியில் செல்வதுதான் )

    பதிலளிநீக்கு
  5. “மந்திர மாவதும் மாமருந் தாவதும்
    தந்திர மாவதும் தானங்க ளாவதும்
    சுந்தர மாவதும் தூநெறி யாவதும்
    எந்தை பிரான்தன் இணையடி தானே” (1604)

    பதிலளிநீக்கு
  6. உண்மை மதமும் உண்மை தெய்வமும் உண்மை மறைநூல் வழியாகவும் உண்மை குரு வின் வழியாகவும் மட்டுமே அறியப் படுகின்றனர். எனவே அவற்றிற்கான வரையறைகளை கற்று உண்மையை கண்டறிவது ஒவ்வொருவரின் கடமை.

    பதிலளிநீக்கு
  7. மயக்கு இன்மை

    பாவ நெறியாரைச் சேர்ந்த மதிப்பின்மை
    மோவம் இலாத உறுப்பு. 20

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  8. சமய முடிவு

    இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
    அறந்தானும் இஃதே சென்று ஆற்றத் - துறந்தார்கள்
    தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து
    நம்புக நல்ல அறம். அறநெறி சாரம் பாடல் - 39

    விளக்கவுரை இல்லறத்தை விட்டு நீங்கி அகப்பற்று, புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே பெற்றுக் கூறியதால் மிகவும் சிறந்த நூல் எம்முடையதே; தெய்வமும் இதுவே; அறமும் இதுவே ஆகும். நன்றாக ஆராய்ந்து சிறந்த அறமான இதை நம்பி மேற்கொள்வீராக!

    பதிலளிநீக்கு
  9. சிறந்த அறமாவன

    ஒன்றொடு ஒன்று ஒவ்வாத பாசண்டத் துள்எல்லாம்
    ஒன்றொடு ஒன்று ஒவ்வாப் பொருள்தெரிந்து - ஒன்றொடுஒன்று
    ஒவ்வா உயிர்ஓம்பி உள்தூய்மை பெற்றதே
    அவ்வாய தாகும் அறம். பாடல் - 40

    விளக்கவுரை ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட அயல் சமய நூல்கள் பலவற்றுள்ளும், ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட பொருள் இவை என ஆராய்ந்து அறிந்து பல்வேறு வகையான உயிர்களைக் காத்து அகத்தூய்மை பெறுவதே மேலான அறமாகும்.

    பதிலளிநீக்கு
  10. நூலை உணரும் முறை

    நிறுத்துஅறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
    அறத்தினும் ஆராய்ந்து புக்கால் - பிறப்புஅறுக்கும்
    மெய்ந்நூல் தலைப்பட லாகும்மற்று ஆகாதே
    கண்ணோடிக் கண்டதே கண்டு. பாடல் - 41

    விளக்கவுரை (பொன்னை) நிறுத்தும் அறுத்தும் தீயால் சுட்டும் உரைத்துப் பார்த்தும் பொன்னை வாங்குபவனைப் போல், அற நூல்களையும் பலவற்றால் தேடி ஆராய்ந்தோமானால் பிறப்பினை நீக்கும்படியான உண்மை நூலைப் பெறலாகும்; (மாறாக) கண்போய்ப் பார்த்ததையே பார்த்து விரும்பி உண்மை எனக் கற்றால் உண்மை நூலை அடைய இயலாது

    பதிலளிநீக்கு
  11. அருங்கலச்செப்பு

    மயக்கு இன்மை

    பாவ நெறியாரைச் சேர்ந்த மதிப்பின்மை
    மோவம் இலாத உறுப்பு. 20

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  12. எட்டு மதங்கள்

    பிறப்புக் குலம்வலி செல்வம் வனப்புச்
    சிறப்புத் தவமுணர்வோடு எட்டு. 34

    மதத்தின் விளைவு

    இவற்றால் பெரியேம்யாம் என்றே எழுந்தே
    இகழ்க்கில் இறக்கும் அறம். 35

    பதிலளிநீக்கு
  13. ** மயக்கமின்மை

    20. பாவ நெறியாரைச் சேர்ந்த மதிப்பின்மை
    மோவம் இலாத உறுப்பு.

    * தீவினைக்கு ஏதுவான மாறுபட்ட நெறியினைச் சேராமையும், அந்நெறியாரைப் போற்றாமையும், 'மயக்கம் இன்மை' உறுப்பாகும்

    https://marainoolkal.blogspot.com/2022/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  14. இறைவனிடம் இருக்கத் தக்கவை

    7. கடைஇல்அறிவு, இன்பம், வீரியம், காட்சி
    உடையான் உலகுக்கு இறை

    * வரம்பு இல்லா அறிவு, இன்பம், வீரியம், காட்சி இந்நான்கும் உடையவன் உயிர்களுக்கு இறைவன்

    ________________________________

    ** இறைவனிடம் அறத்தினை உரைத்தல்

    8. தெறித்த பறையின் இராகாதி இன்றி
    உரைத்தான் இறைவன் அறம்

    * வேறுபாடு இன்றி முழங்கும் முரசு போல விருப்பு வெறுப்பு இன்றி அறங்களை உரைத்தவன் இறைவன்

    ________________________________

    ** நூல்

    9. என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு
    நின்றது நூல்என்று உணர்

    * உலகில் எப்போதும் நிலைத்துள்ள அறமானது ( கலத்தால் மறைக்கப்பட்டு) இறைவனால் ஒலி வடிவில் வெளிப்பட்டு, பிறகு எழுத்தில் நிலைபெற நின்றது நூல் என உணர்க.

    https://marainoolkal.blogspot.com/2022/10/blog-post.html?sc=1664645600114#c7287047981392710224

    பதிலளிநீக்கு
  15. 30:32. தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரிந்து, (பல) பிரிவினர்களாக ஆகிவிட்டனரே, அத்தகையோரில் (நீங்கள் ஆகிவிட வேண்டாம் அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு பிரிவோரும் தங்களிடமுள்ள (தவறான)தைக் கொண்டு சந்தோஷப்படுபவர்களாக இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  16. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. [அல்குர்ஆன் 2:120.]

    பதிலளிநீக்கு
  17. அயல்நெறி விலக்குவார், பெரு நட்பாளர்

    நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
    பட்டாம் பலபிறப்புத் துன்பம் என்று - ஒட்டி
    அறநெறி கைவிடாது ஆசாரம் காட்டிப்
    பிறநெறி போக்கிற் பவர். - பாடல் - 94

    விளக்கவுரை ஆராயுமிடத்து நட்பினர் எனக் கூறுதற்குரியவர், இப்பூமியில் பல பிறவிகளால் துன்பம் அடைந்தோம் எனக் கூறித் துணிந்து அறநெறியைத் தளரவிடாமல் ஒழுக்கத்தை உணர்த்தி மற்ற நெறியினின்றும் நீக்குபவர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  18. சமையங்களுக்கு இடையே வேற்றுமைகள் ஏன் உள்ளன?

    இந்த வேற்றுமைகள் இரண்டு வகைப்படும்

    1) உள் வேற்றுமை: ஒரே பண்பாட்டில் வெவ்வேறு காலங்களில் தோன்றிய நூல்களுக்கு இடையேயான வேற்றுமை
    2) வெளி வேற்றுமை: வெவ்வேறு பண்பாடுகளில் உள்ள நூல்களுக்கு இடையேயான வேற்றுமை

    தமிழில் தொல்காப்பியம் முதல் நூலுக்கும் வழி நூலுக்கும் கொடுக்கும் வரையறையின் மூலம் ஒரே பண்பாட்டில் உள்ள காலத்தால் வேறுபட்ட நூல்களுக்கு இடையில் சில வேறுபாடுகள் இருக்கும் என்பதும் ஆனால் அடிப்படையில் எந்த மாறுபாடும் இருக்காது என்பதும் புலனாகிறது.

    வெவ்வேறு பண்பாடுகளில் உள்ள வேற்றுமைக்கான காரணத்தை திருமந்திரம் சொல்கிறது.

    நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
    என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே. - திருமந்திரம் 1

    அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
    நந்தி அருளாலே மூலனை நாடினோம்
    நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
    நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.- திருமந்திரம் 2

    நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
    நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
    நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
    நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. - திருமந்திரம் 3

    நான்கு திசையில் உள்ள பண்பாடுகள் நான்கு விதமான பொருள்களை பெற்றவர்களாக இருப்பதால் இந்த வேற்றுமை. இங்கும் அடிப்படை ஒன்று, நம்மை தீமையில் சில வேற்றுமை கொடுக்கப்பட்டுளள்து. எனவே ஒற்றுமையை இங்கே பட்டியலிட்டுள்ளோம். வேற்றுமையை பிறகு பார்ப்போம்.

    இந்த சான்றுகளெல்லாம், குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப் பட்டது என்பதை மறுக்கிறது. ஏனென்றால் குர்ஆனில் உள்ள வசனங்கள் பைபிளில் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து மத மறை நூல்களிலும் உள்ளது. இதன் பொருள் குர்ஆன் அனைத்து மறைநூல்களையும் எவன் வழங்கினானோ அவனிடமிருந்து வந்தது என்பதாம். எனவே குர்ஆனில் உள்ள சட்டங்களும் இறைவனை நம்பி வழிபடும் அனைத்து சமைய மக்களாலும் வாசிக்கப் பட வேண்டிய ஒன்றாம்.

    பதிலளிநீக்கு
  19. தந்திரம் 5- பதிகம் 17. புறச் சமய தூடணம்-பாடல்கள்: 020


    பாடல் எண் : 01
    ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
    காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
    மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
    பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.

    பொழிப்புரை : முதுநூல்களின் கூற்றை அறவே புறக்கணித்து, முழுதும் தம் அறிவைக் கொண்டே ஆராய்தலாகிய அத்தொழிலில் நிற்கின்ற புறச்சமயங்கள் புறப்பொருள்களை எவ்வளவு ஆராய்ந் துணரினும், அவ்வாராய்ச்சி அறிவினுள் தானே உள்ள கடவுளைக் காணமாட்டாதனவாகின்றன. அதனால், அவை பொய்மையாகிய குழியில் வீழ்ந்து கெடுவன ஆகின்றன. ஆகையால், அவையெல்லாம் மனைவி மக்கள் முதலாகிய தளையில் அகப்பட்டுத் துன்புறுதற்கான வழிகளேயாகும்.
    ==============================================
    பாடல் எண் : 02
    உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன்
    வள்ளற் றலைவன் மலருறை மாதவன்
    பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
    கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

    பொழிப்புரை : உயிர்க்கு உயிராய் அவற்றின் அறிவில் பொருந்தியிருத்தலை விரும்பி, அண்டத்தில் உலகெங்கும் நிறைந்தும், பிண்டத்தில் உள்ளக் கமலத்தில் தியானப் பொருளாய் விளங்கியும் நிற்பவனும், அருள்வள்ளலும், அனைத்துல கிற்கும் தலைவனும், பொள்ளல் நிறைந்த உடலில் உயிர்ப்பாய், உட்புகுதல் வெளிவருதல்களைச் செய்தும் உயிர்களால் அறியப்படாது மறைந்து நிற்பவனும் ஆகிய முதற்பெருங்கடவுளாம் சிவபெருமானைப் புறச்சமயிகள் தங்கள் கருத்தில் கொள்ளமாட்டாதவர்களாகின்றனர்.
    ==============================================
    பாடல் எண் : 03
    உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க்
    குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை
    உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
    குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

    பொழிப்புரை : எங்கள் இறைவனாகிய சிவபெருமானை அகச்சமயிகள் பொதுவாகவும், சிறப்பாகவும், `அகம், புறம்` என்னும் இரண்டிடங்களிலும் உள்ளவனாக அறிந்து, இயன்ற அளவில் அவனை அணுக முயல்கின்றனர். அவர்கட்கு அவன் அவர்களது தகுதிக்கு ஏற்ப அவ்விடங்களில் ஏற்ற பெற்றியால் அகப்படுகின்றான். புறச்சமயிகள் அவனை `எவ்விடத்திலும் இலன்` எனக் கூறிப் பிணங்குகின்றார்கள், அவர்கட்கு அவன் அவற்றுள் ஓரிடத்தும் காணப்படுதல் இல்லை.
    ==============================================
    பாடல் எண் : 04
    ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
    ஆறு சமயப் பொருளும் அவனலன்
    தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
    மாறுதல் இன்றி மனைபுக லாமே.

    பொழிப்புரை : புறச்சமயங்கள் ஆறனையும் தோற்றுவித்தவர்கள் மெய்ப் பொருளைக்கண்டு அதனைப் பிறருங் காணவழி கூறினாரல்லர். அதனால் சிவன் அந்த ஆறுசமயப்பொருளில் ஒன்றேனும் ஆயிற்றிலன். இந்த உண்மையை, உலகீர், தெளிமின்கள்! நன்கு தெளி மின்கள்!! தெளிந்தீர்களாயின், அதன்பின் தவற்றின் நீங்கி, நேர் வழியை அடைந்து, வீடு பெறுதல் கூடும்.
    ==============================================
    பாடல் எண் : 05
    சிவமல்ல தில்லை இறையே சிவமாம்
    தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்
    கவமல்ல தில்லை அறுசம யங்கள்
    தவமல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.

    பொழிப்புரை : சிவம் அல்லது வேறு பதிப்பொருளும், சிவமாம் பயனைத் தருகின்ற தவம் அல்லது வேறு தவமும் இல்லை. ஆறாகக் கூறப்படுகின்ற புறச்சமயங்கள் தம்மை அடைந்தவர்க்கு இவ்வுலகில் வீண் முயற்சியாவதன்றி வேறு இல்லை. அதனால், அவை தவமாதல் இல்லை. ஆகையால் மெய்ப் பொருளை அடைய விரும்புகின்ற வர்களே, நீங்கள் சிவபெருமானது திருவடியைச் சார்ந்து பிழைமின்கள்.
    ==============================================

    பதிலளிநீக்கு

  20. பாடல் எண் : 06
    அண்ணலை நாடிய ஆறு சமயரும்
    விண்ணவ ராக மிகவும் விரும்பியே
    முண்ணின் றழியும் முயற்றில ராதலின்
    மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.

    பொழிப்புரை : சிவபிரானை இகழாது போற்றுகின்ற அகச் சமயங்கள் ஆறிலும் நிற்போர் அவ்வச்சமயக் கடவுளரது உலகத்தை அடைந்து இன்புற்றிருக்க, புறச் சமயிகள் அவற்றை விடுவித்துப் பிற விண்ணுலகங்களை அடைதலை மிகவும் விரும்பி, வினைக்கட்டினின்றும் வெளிப்படமாட்டாது, அதனுள் நின்றே அழிகின்ற அவச் செயலாதலால், அவர்கள் பிரகிருதிக்கு மேல் செல்லும் வழியை அறியாதவர்களேயாவர்.
    ==============================================
    பாடல் எண் : 07
    சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
    பவகதி பாசப் பிறவிஒன் றுண்டு
    தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
    அவகதி மூவரும் அவ்வகை ஆமே.

    பொழிப்புரை : சிவனது உலகத்தையும், சிவனையும் அடைவதே பிறவியற்ற முத்தியாம். அவையன்றி, `முத்தி` எனப் பிறராற் கூறப் படுவன எல்லாம் முத்தியல்லாத பிறப்பு நிலையேயாம். அதனால், அவைகளில் எல்லாம் பாசத்தால் வருகின்ற பிறவியாகிய ஒரு பெருந்துன்பம் இருக்கவே செய்யும். அதனால், சிவனை நோக்கிச் செய்யப்படுவனவாகிய சரியை முதலிய நெறிகள் ஒருவனுக்குக் கிடைக்குமாயின், முத்தியுலகம் அல்லவாய்ப் பிறவி யுலகங்களாகிய `அயன், அரி, அரன்` என்னும் குணமூர்த்திகள் மூவரது பதவிகளும் அத்தன்மையவாய்ப்போம்.
    ==============================================
    பாடல் எண் : 08
    நூறு சமயம் உளவாம் நுவலுங்கால்
    ஆறு சமயம்அவ் ஆறுட் படுவன
    கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா
    ஈறு பரநெறி இல்லா நெறியன்றே.

    பொழிப்புரை : சமயங்களைப் பற்றிச் சொல்லுமிடத்துச் சிறியனவும், பெரியனவும் ஆகிய பல வேறுபாடுகளால் சமயங்கள் மிகப்பலவாய் உள்ளன. `அகம், புறம்` என்பவற்றுள் `ஆறு` என ஒருவாறு வரையறுத்துக் கூறப்படும் சமயங்கள் மேற்கூறிய பலவற்றுள்ளே உள் ளனவாம். அங்ஙனம் சொல்லப்படும் சமயங்கள் பலவும் `உண்மை` எனக் கொண்ட நெறிகளிலே மக்கள் நின்று இறுதியாக அடையும் மேலான் நெறி, மேற் கூறிய அவற்றுள் ஒன்றிலும் இல்லாத நெறியாம்.
    ==============================================
    பாடல் எண் : 09
    கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
    சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்
    குற்றந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
    பித்தேறி நாளும் பிறந்திறப் பார்களே.

    பொழிப்புரை : தம் குரல் பிற உயிர்கட்கெல்லாம் கடியனவாய் வெறுக்கப் படுதலை அறியாது உவகையால் உரத்துக் கத்துகின்ற கழுதைகள்போலப் பாழ்நெறி நூல்களை உரத்து ஓதுகின்ற கன்மிகள், தம் குற்றத்தை உணர மாட்டார்கள். தூயனவாகிய சிவன் எல்லாப் பொருளிலும் நிறைந்து நின்றும், ஒன்றிலும் தோய்வின்றி நிற்கின்ற சிறப்பை அறிவு நூல்களைக் கற்கும் முகத்தால் உணர்ந்து பாராட்டமாட்டார்கள். மற்று, மயக்கம் மிகுந்து, வீணே பிறந்தும், இறந்தும் உழல்வார்கள்.
    ==============================================
    பாடல் எண் : 10
    மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரை
    முயங்கி இருவினை மூழை முகப்பா
    இயங்கப் பெறுவரேல் ஈறது காட்டில்
    பயங்கெட் டவர்க்கோர் பரநெறி ஆமே.

    பொழிப்புரை : புறச் சமயங்களில் நின்று அறிவு மயங்குகின்றவர்களும் சைவ சமயத்தை அடைந்து அறிவு தெளிந்தவர்கள்பால் சென்று கூடி, இருவினைப் பயன்கள் அகப்பையால் முகக்கும் அளவில், உடலூழாய்க் கழியும்படி ஒழுக வல்லவராயின், அவர்கட்கு அவ்வுடல் வாழ்க்கை முடிகின்ற நிலை தோன்றும் பொழுது யமபயம் இல்லாது ஒழிய, ஒப்பற்ற பரமுத்தி நிலை கிடைக்கும்.
    ==============================================
    பாடல் எண் : 11
    சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி
    தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
    மாயன் மயக்கிய மானுட ராம்அவர்
    காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

    பொழிப்புரை : சேயர்க்குச் சேயனாயும், அணியர்க்கு அணியனாயும் நின்று, ஒன்றிலும் தொடக்குண்ணாதிருக்கின்ற அவனதுபெயர் `நந்தி` என்பதாகும். அவன்தன்னை அலைவின்றி ஒரு பெற்றியே நோக்கி நிற்பார்க்குத் தெளிவைத் தருபவனாயும், அங்ஙனம் நோக்கா தார்க்கு மயக்கத்தைத் தருபவனாயும் இருக்கின்றான். அவனது மாயத்தால் மயங்கிய மக்களாகிய புறச்சமயிகள் தமக்குக் கிடைத்துள்ள மக்கள் உடம்பு தரும் பயனை அறியும் அறிவிலராய் அப்பயனை இழப்பர்.
    ==============================================
    பாடல் எண் : 12
    வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான
    வழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
    சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
    றழிவறி வார்நெறி நாடகில் லாரே.

    பொழிப்புரை : `பிறப்பு, வீடு` என்னும் இருவழிகட்கும் வித்தாய் உள்ளது, நிலவுலகில் வாழ்தலாகிய ஒரே வழியாம். அதனால், இவ்வுலகில் வாழ்பவர் யாவராலும் அடையப்படுவது, பிறவிச் சூழலின் நிலையை அறிந்து, அதனை அகற்ற வல்ல ஆசிரியனது உபதேசமாகிய வழியே. ஆயினும், அத்தகைய ஆசிரியன் உளனாதலைக் கண்டு வைத்தும், தாம் கெடும் நெறியை அறிந்து அந்நெறியிலே செல்வோர் அவ்வாசிரியன் அறிவுறுத்தும் நெறியைப் பெற விரும்புதல் இலர்.
    ==============================================

    பதிலளிநீக்கு

  21. பாடல் எண் : 13
    மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர்
    நாதம தாக அறியப் படும்நந்தி
    பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில்
    ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.

    பொழிப்புரை : பெரிய தவத்தையுடையோர் யாவரும், `மகா தேவன்` என்பதைத் தன்பெயராக உடைய சிவனே முதல்வன் என ஒருபடித்தாகக் கூறுவர். அதனால், அவர் கூறியவாறே அறியப்படுபவ னாகிய சிவனைச் சிறிதும் வேறுபடாத அக்கருத்துடன், `முதல்வனே` என்று அழைத்துக் கும்பிட்டால், அந்தச் சிவனும் நன்னெறியாய் நின்று நலம் தருவான்.
    ==============================================
    பாடல் எண் : 14
    அரநெறி அப்பனை ஆதிப் பிரானை
    உரநெறி யாகி உளம்புகுந் தானை
    பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
    பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே.

    பொழிப்புரை : `உலகியலின் மேம்பட்ட வீட்டு நெறியாது` என்று ஆராய்கின்ற அன்பர்களது உள்ளம், சிவநெறித் தந்தையும், முதற் கடவுளும், ஞான நெறியாய் ஞானிகளது உள்ளத்து விளங்குபவனும் ஆகிய சிவனை அறியா தொழியுமாயின், அவ்வுள்ளங்கள் பலவகையாலும் வீட்டுநெறிக்கு மிகச்சேய்மைப்பட்டனவேயாகும்.
    ==============================================
    பாடல் எண் : 15
    பரிசறி வானவன் பண்பன் பகலோன்
    பெரிசறி வானவர் பேற்றில் திகழும்
    துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
    அரிதவன் வைத்த அறநெறி தானே.

    பொழிப்புரை : மாணவனே, உயிர்களது வினையின் தன்மைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அவைகளைப் படைப்புத் தொழிலிற் படுத்துகின்ற பிரமன், உயர்குணமாகிய `சத்துவ குணத்தை உடையன்` எனக் கூறப்படுகின்ற மாயோன். பகலவன், மக்களோடு படுத்து நோக்குங்கால் உயர்ந்தோராக எண்ணப்படுகின்ற இந்திரன் முதலிய தேவர்கள் இவர்களது பதவியில் விளங்க விருப்பும் உனது விருப்பம் அறும்படி நீதூய மாணிக்கம் போலும் நிறத்தை உடைய சிவனைநினை; ஏனெனில் அவன் அருளிச்செய்த சிவநெறி ஒன்றே அடைதற்கு அரிய நல்ல நெறியாகும்.
    ==============================================
    பாடல் எண் : 16
    ஆன சமயம் அது இதுநன் றெனும்
    மான மனிதர் மயக்க மதுவொழி
    கானங் கடந்த கடவுளை நாடுமின்
    ஊனங் கடந்த உருவது வாமே.

    பொழிப்புரை : `அதுவே பொருத்தமான சமயம், இதுவே நன்றான சமயம்` என ஓரோர் காரணம் பற்றிப் பற்றுக் கொண்டு பிதற்றுகின்ற மக்களது பிதற்றலால் உண்டாகின்ற மயக்கம் உம்மை விட்டு நீங்க, நீவிர் நாதம் கடந்த கடவுளாகிய சிவனை நினையுங்கள்; ஏனெனில், அந்த நினைவே குற்றமற்ற வகைமையைத் தருவதாம்.
    ==============================================
    பாடல் எண் : 17
    அந்நெறி நாடி அமரர் முனிவரும்
    சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின்
    முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
    செந்நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

    பொழிப்புரை : தேவர்களும், முனிவர்களும் `சிறப்புடைய நெறி யாது` என ஆராய்ந்து உணர்ந்து சென்ற நெறியையே நேரிய நெறியாகக் கொண்டு ஒழுகி, அதனால், சிவனேயாய் நின்ற பேற்றினைப் பெற்றார் சத்திநிபாதர். மற்றுச் சத்திநிபாதம் இல்லாதவர் தம் மனம் சென்ற நெறியையே நேரிய நெறியாக் கொண்டு முற்கூறிய நேரிய நெறியிற் செல்லமாட்டாது, பிறவிக் கடலுட் கிடந்து கலங்குகின்றது இரங்கத்தக்கது.
    ==============================================

    பதிலளிநீக்கு

  22. பாடல் எண் : 18
    உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
    பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
    அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே
    இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.

    பொழிப்புரை : அடையத்தக்க நல்ல நெறியை அறிய எழுகின்ற அறிவைச் சாருமாற்றை அறிந்துவிடுமாயின், பிழை யாதும் இல்லையாகும். ஆனால், அறிவில்லாத மக்கள், குற்றங்கள் யாவும் எரிந்தொழிதற்கு ஏதுவாம் நெருப்பாகிய அந்த அறிவினுள் புகுந்து தம் அல்லலை ஒழியுமாற்றை அறிகின்றார்களில்லை.
    ==============================================
    பாடல் எண் : 19
    வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையம்
    கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
    சுழிநடக் குந்துய ரம்மதி நீக்கிப்
    பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

    பொழிப்புரை : பிறவிச்சுழலிலே கிடந்து எய்துகின்ற துன்பங்களை யெல்லாம் போக்கி, அதனால், அறிவுடையவர் பழிக்கும் பழியையும் போக்கிக்கொள்ள விரும்புவார்க்கு நிலத்திலே பயணம் செய்தல் போன்ற நல்லவழி ஒன்று உண்டு. அதைப் போற்றி அடைதல் அத்துன்பங்கள் நீங்கும் காலம் வரப்பெறாதோ ரெல்லாம் சுழிவழியே பயணம் செய்வோர் போலப் புறச் சமயிகள் கூறும் கற்பனை உரைகளை `மெய்` என்று கேட்டு அவற்றின்படியே நடப்பர்.
    ==============================================
    பாடல் எண் : 20
    வழிசென்ற மாதவம் வைக்கின்ற போது
    பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
    அழிசெல்லும் வல்வினை ஆர்திறம் விட்டிட்
    டுழிசெல்லில் உம்பர் தலைவன் முன்ஆமே.

    பொழிப்புரை : ``வையத்தின் கண் வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு`` என மேற்கூறப்பட்ட வழியிலே சென்றதாகிய பெரிய தவம் தனது பயனைக் கொடுக்கின்ற காலத்தில் மக்கள் தங்கட்குப் பழிவரக் கூடியதான வலிய வினைக் கட்டினை அறுத்தொழித்து, அது காரணமாக, முன்பெல்லாம் அழிவு வழியில் சென்று கொண்டிருந்த அச்செயலில் பொருந்துதலாகிய தன்மையை விடுத்து நல்ல இடத்தை அடைவர். அங்ஙனம் அடைந்தால், தேவர் பிரானாகிய சிவன் வெளிநின்று அருள் புரிவான்.

    பதிலளிநீக்கு
  23. பாடல் எண் : 20
    பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
    பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
    பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
    பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
    பொழிப்புரை :
    மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.

    http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10104

    பதிலளிநீக்கு
  24. நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்!
    நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
    நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
    நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே!
    (திருமந்திரம், 1617)

    பாதை ஒன்றை படைத்தான் ; பாதைக்குப் பக்கவாட்டிலோ நெருஞ்சில் படைத்தான். பாதை பிறழாமல் நடப்பீர்கள் என்றால் பாதங்களில், நெருஞ்சில் முள் பாயாது. பாதை பிறழ்ந்தால் பாயும். எனவே பாதை பிறழாது நடவுங்கள்.

    பதிலளிநீக்கு
  25. செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை;

    வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை;

    இல்லை எனினும் பெரிதுஉளன் எம்இறை;

    நல்ல அரன்நெறி நாடுமின் நீரே. (திருமந்திரம், 2103)

    அறியுங்கள். எவ்வளவு தொலைவுக்கு உங்கள் அறிவு செல்லுமோ செலுத்துங்கள். எட்டிய தொலைவு என்ன, உங்களுக்குக் கிட்டிய பொருள் என்ன என்பதை மெய்யாகவே விளக்குங்கள். மறைபொருள் என்று ஒன்று இல்லை என்னும் முடிவுக்கு நீங்கள் வந்தாலும், மறைபொருள் பெரிதும் உண்டு. அதை அறியமுடியாமல் போவதற்குக் காரணம், அதனுடைய இன்மை அன்று; அறியும் முயற்சியின் போதாமை. அறியும் முயற்சியைப் போதுமானதாக ஆக்கிக் கொள்வதற்குப் பொருத்தமான நெறியை நாடுங்கள்

    பதிலளிநீக்கு
  26. அவ்விநயம் ஆறு பாடல் -60

    அச்சமே ஆசை உலகிதம் அன்புஉடைமை
    மிக்கபா சண்டமே தீத்தெய்வம் - மெச்சி
    வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
    குணங்களில் குன்றா தவர்.

    விளக்கவுரை மாட்சிமைப்பட்ட குணங்களில் குறையாத சான்றோர்கள் அச்சமும் ஆசையும் லெளகிகமும் அன்புடைமையும் இழிவு மிகுந்த புறச் சமயமும், கொடிய தெய்வத்தைப் பாராட்டி வணங்குவதும் விநயம் அல்லாதது என்று கூறுவர்.

    பதிலளிநீக்கு
  27. இந்நூல் முழுக்க விரவிக்கிடக்கும் தகவல்களின்படி ஒரே இறைவனிடமிருந்துதான் அனைத்து வேதங்களும், சமயங்களும் தோன்றியுள்ளது. எனவே நாம் விரும்பும் சமயத்தை நாம் பின்பற்றலாமா? என்பதுதான் எல்லோர் மனதிலும் எழும் இயல்பான கேள்வியாக உள்ளது.

    இதற்கான பதிலையும் நாம் கற்பனையில் கூறமுடியாது.



    அருங்கலச்செப்பு

    எட்டு மதங்கள்

    பிறப்புக் குலம்வலி செல்வம் வனப்புச்
    சிறப்புத் தவமுணர்வோடு எட்டு. 34

    மதத்தின் விளைவு

    இவற்றால் பெரியேம்யாம் என்றே எழுந்தே
    இகழ்க்கில் இறக்கும் அறம். 35

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html







    ஏலாதி 75 Elati 75
    அறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி, மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின் மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே ஆசாரியனது அமைவு. 75

    அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
    மறுவரவு மாறாய நீக்கி - மறுவரவின்
    மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
    ஆசா ரியன தமைவு. 75

    ஆறு வகையான சமயத்தவர் நூல்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
    அவற்றின் உணர்வுகளைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
    அவற்றில் வரும் குற்றங்களை நீக்க வேண்டும்.
    தம் உணர்வுக்கு மாறாக விளங்கும் கருத்துகளையும் நீக்க வேண்டும்.
    குற்றங்களை நீக்கும்போது ஒழுக்க நெறியில் மேம்பட்ட பெரியவனாக விளங்க வேண்டும்.
    தம் கருத்துக்கு மறுதலைச் சொல் இருக்குமானால் மாற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

    இது ஆசாரியன் நடந்துகொள்ள வேண்டிய அமைதி இலக்கணம் ஆகும்.
    அறு சமயம் : - உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பட்டாசாரியம்.


    அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்
    பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -
    மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு
    இறை புரிந்து வாழ்தல் இயல்பு. - ஏலாதி கடவுள் வாழ்த்து

    பொருள்: ஒவ்வொரு நந்தியும் வழிகாட்ட ஆறு நாதர்களாம், ஆக நான்கு நந்திகளுக்கு இருபத்தி நாலு நாதர்கள் ஆய்ந்து அறியவேண்டிய புகழ் கொண்டவனின், பாதம் சேவகம் செய்யும் நான்கு நந்திகளும், முறையாக வழங்கி பெறப்படும் நான்மறைகளை விரும்பி வழிபடுவானேயானால் மண்ணுலகினின்றும் நீங்கி தேவர்களுக்கு தலைமைபூண்டு இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும்

    (இ-ள்.) அறுநால்வர் - ஒவ்வொரு நந்தியும் வழிகாட்ட ஆறு நாதர்களாம், ஆக நான்கு நந்திகளுக்கு இருபத்தி நாலு நாதர்கள்
    ஆய்புகழ் - ஆய்ந்து அறியவேண்டிய புகழ் கொண்டவனின்,
    சேவடி - பாதம் சேவகம் செய்யும்
    ஆற்றப்பெறு நால்வர் - நான்கு நந்திகளும்,
    பேணிவழங்கி - முறையாக வழங்கி,
    பெறும் நால் மறை - பெறப்படும் நான்மறைகளை,
    புரிந்து - விரும்பி,
    வாழுமேல் - வழிபடுவானேயானால்,
    மண் ஒழிந்து - மண்ணுலகினின்றும் நீங்கி,
    விண்ணோர்க்கு -தேவர்களுக்கு,
    இறை புரிந்து - தலைமைபூண்டு,
    வாழ்தல்இயல்பு - இன்பத்துடன் வாழ்தல் உண்மையாகும்.
    குறிப்பு: நால்நந்திகள் தரும் நான்மறைகளை வழிபடும் (பின்பற்றும்) ஒருவன் வானுலகத்துக்கு தலைவனான இயல்பு. எனவே ஏலாதியும் இயற்க்கை வழிபாட்டை கூறவில்லை.

    வேதம்+அந்தம்

    பாடல் எண் : 04
    திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
    பெருநெறி யாய பிரானை நினைந்து
    குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
    ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

    பொழிப்புரை : வீட்டு நெறியாவது, ஞானாசிரியன்வழி உளதாவதாய், சித்தும், அசித்தமாய் இருதிறப்பட்டு நிற்கும் உலகத்தை நினையாமல், அவை அனைத்தையும் கடந்து நிற்கும் சிவபெருமான் ஒருவனையே நினைந்து அவனாந் தன்மையைப் பெறுகின்ற ஒரு நெறியே` என வேத முடிவு ஒருதலையாக அறுதியிட்டுக் கூறும்.

    பதிலளிநீக்கு
  28. "ஆயத்துள் நின்ற அறுசம யங்களும்
    காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
    மாயக் குழியில் விழுவர், மனைமக்கள்
    பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே". (திருமந்திரம் - 1530)

    "ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர்
    ஆறு சமயப் பொருளும் அவனலன்
    தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
    மாறுதல் இன்றி மனைபுகலாமே". (திருமந்திரம் - 1533)

    https://www.kamakoti.org/tamil/ttm1.htm

    பதிலளிநீக்கு
  29. மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம் பாடல் எண் : 3

    அந்நெறி இந்நெறி என்னாதே அட்டாங்கந்
    தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
    நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
    புன்னெறி ஆகத்திற் போக்கில்லை யாகுமே.

    பொழிப்புரை :
    `நாம் கொண்ட நெறி நன்றோ, இது வல்லாத பிறிதொரு நெறி நன்றோ` என்று ஐயுற்று அலமராது, எந்நெறிக்கும் வேண்டப்படுவதாகிய அட்டாங்கத்தை உடைய யோக நெறியிலே சென்று, உம்மால் விரும்பப்படுகின்ற பொருளிலே உள்ளம் ஒடுங்குங்கள். இவ்வாறு ஒடுங்கும் நன்னெறியில் நிற்பவர்க்கு ஞானத்தை எளிதில் தலைப்படுதல் கூடும். பின்பு அந்த ஞானத்தின் பயனாகப் பிறவியாகிய இழி நெறியிற் செல்லுதல் இல்லையாம்.

    http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10301

    பதிலளிநீக்கு
  30. நிச்சயமாக ஈமான் கொண்டவர்கள், யூதர்கள், ஸாபியர்கள், கிறிஸ்தவர்கள், மாஜிக்கள், உருவ வழிபாடு செய்பவர்கள் ஆகியோருக்கு இடையே அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.

    சூரத்துல் ஹஜ் 22:17

    பதிலளிநீக்கு
  31. எப்படி

    அரேபிய
    ஆப்பிரிக்க
    ஐரோப்பிய
    இந்திய
    பண்பாட்டுகளுக்கு இடையே வேற்றுமை மலையளவு உள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களோ, அதே போல

    வடநாட்டு சமயங்களுக்கும்
    தென்நாட்டு சமயங்களுக்கும்
    இடையே

    தத்துவ ரீதியாக,
    பண்பாட்டு ரீதியாக,
    மறை நூல் ரீதியாக,
    கடவுள் கொள்கை ரீதியாக
    வேற்றுமை மலைக்கும் மடுவுகுக்குமான அளவு உண்டு என்று உணர்ந்து இருப்பது அறிவாளித்தனம் இல்லையா?

    அதேபோல

    உலகமும் ஒன்று
    இறைவனும் ஒன்று
    என்கிறபோது உலக சமயங்களும் பண்பாடும் அந்த ஒருவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்று அறிந்து இருப்பது அறிவாளித்தனம் இல்லையா?

    ஒரே இறைவனிடமிருந்து வந்த சமயங்களிடையே

    கால அடிப்படையில் ஒரு வகையான தொடர்பும்,
    திசை அடிப்படையில் ஒரு வகையான தொடர்பும்,
    மொழி அடிப்படையில் ஒரு வகையான தொடர்பும்,
    மரபு அடிப்படையில் ஒருவகையான தொடர்பும்
    இருக்க வேண்டும் என்று அறிந்து இருப்பது அறிவாளித்தனம் இல்லையா?

    மதங்கள் அனைத்தும் ஒவ்வொரு இறைவனிடமிருந்து வந்து இருநதாலும் இவற்றுக்கு இடையே தொடர்புகள் இருந்தாலும் அவைகளை இணைக்க மனிதர்களுக்கு உரிமை இல்லை என்று அறிந்து இருப்பது அறிவாளித்தனம் இல்லையா?

    மதம் என்பது அறம் சார்ந்தது, அதை இனம் சார்ந்ததாக, மொழி சார்ந்ததாக, நிலம் சார்ந்ததாக கையாள துவங்கினால் அந்த அறத்தை மறந்து அநீதி இழைக்க நேரிடும் என்று அறிந்து இருப்பது அறிவாளித்தனம் இல்லையா?

    சமயங்கள் கூறும் அறத்தை மறந்து அந்த மதத்துக்காக வாதிடுவதால் எந்தபயனும் இல்லை என்பதை அறிந்து இருப்பது அறிவாளித்தனம் இல்லையா?

    உண்மையில் தனிமனிதனின் அறிவாளித்தனம் என்று பெருமை பட எதுமில்லை எல்லாம் இறைவனின் கருணை, அருள், அவன் கொடுத்த அறிவு, அவ்வளவுதான். உங்களுக்கும் எனக்கும் அதை வழங்க இறைவன் போதுமானவன்.

    பதிலளிநீக்கு