கடவுளுக்கு வழிபடாதோர்

வழிப்படுதல் என்றால் என்ன?


தமிழில் வணக்கவழிபாடு என்பது இரு சொற்கள் இணைந்த ஒருசொல்.

வணக்கம் - வணங்குதல், தொழுதல் 
வழிபாடு - வழிபடுதல், உபதேசத்தை பின்பற்றுதல் 

இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு சொல்லாக அடையாள படுத்துவதற்கு ஓர் நோக்கமுண்டு. கடவுளை வணங்குவது மட்டுமல்லால் அவன் மறை நூல்கள் சொல்லும் நெறிகளை பின்பற்றுபவதன் மூலம் அவனுக்கு வழிப்பட வேண்டும். நெறிநூல்களை பின்பற்றுகிறீர்கள் ஆனால் கடவுளை வணங்கவில்லை என்றால் அதற்கும் மதிப்பில்லை. இரண்டும் ஒரு சேர இருந்தால் தான் அவன் உண்மையிலேயே ஆன்மீகவாதி ஆவான். 
 

தமிழர் சமயம் 


தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே -(திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

இஸ்லாம் 

 “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:32) 

எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ அத்தகைய அழகிய செயல் புரிவோரின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை. (அல்குர்ஆன் 18:30)

'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (அல்குர்ஆன் 29:2,3)

கிறிஸ்தவம் 


அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும், அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன். - (சங்கீதம் 89:30)

தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான். அவன் வஞ்சகன், பொய்யன். தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும். அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும். - (சங்கீதம் 43:1)

34 கருத்துகள்:

  1. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவதள்

    “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக!

    அல்குர்ஆன் 3:32

    அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

    அல்குர்ஆன் 3:132

    இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

    அல்குர்ஆன் 4:13

    அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

    அல்குர்ஆன் 4:69

    அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

    அல்குர்ஆன் 5:92

    நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!

    அல்குர்ஆன் 8:20

    அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

    அல்குர்ஆன் 8:46

    அல்லாஹ்வுக்கும், அவனதுதூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

    அல்குர்ஆன் 24:52

    அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கூறுவார்கள்.

    அல்குர்ஆன் 33:36

    அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

    அல்குர்ஆன் 33:71

    நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

    அல்குர்ஆன் 47:33

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்குர்ஆன் 2:62.

      ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

      நீக்கு
  2. கட்டுப்பட்டதால் தவிடுபொடியான கோபம்

    இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

    உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ, இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும்,ஆலோசகர்களாகவும் இருந்தனர்.

    ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத்தா’’ என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்’’ என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.

    உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை’’ என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!’ (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்’’ என்று சொன்னார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.

    நூல்: புகாரி 4642

    இந்த வசனத்தினுடைய இறுதி வாசகங்களைக் கவனித்துப் பார்த்தால் நபித்தோழர்களின் கட்டுப்படுதல் எந்த அளவுக்கு இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  3. கவுரவத்தை விட கட்டுப்படுதலே மேலானது

    கட்டுப்பட்டு நடக்கின்ற விஷயத்தில் இன்றைக்குப் பெரும்பாலோனோர் தங்களுடைய கவுரவத்தையே முதன்மையாகக் கருதுகின்றனர். இன்னும் சொல்வதாக இருந்தால் குர்ஆன், ஹதீஸ் ஒன்று சொல்லும் பொழுது, அதை நடைமுறைப்படுத்தினால் நம்முடைய கவுரவம் போய்விடுமோ என்ற பிடிவாதத்தினால் கட்டுப் படுவத்தை விட கவுரவம் தான் முக்கியம் என்று கருதுகின்றனர்.

    ஆனால் கவுரவத்தை விடக் கட்டுப்படுதலே மேன்மையானது என்பதை அற்புதமான முறையில் நிரூபிக்கும் சம்பவம் இதோ:

    இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

    உர்வா பின் ஸுபைர், சயீத் பின் முஸய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:)

    அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்’’ என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளினான். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான்.

    (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்’’ என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள்.மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். – அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்’’ எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான்.

    அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குச் (செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்’’ என்றும் கூறினார்கள்.

    நூல்: புகாரி 6679

    கொஞ்சம் இந்த ஹதீஸை ஆழமாகப் படித்துப் பாருங்கள்! தன்னிடமிருந்து உதவியைப் பெற்றுக் கொண்டு வாழ்கின்ற ஒருவர், தான் உயிருக்கு உயிராக நேசிக்கின்ற தன்னுடைய மகளை, அல்லாஹ்வின் தூதருடைய மனைவியையே அவதூறு கற்பித்த கூட்டத்துடன் சேர்ந்து அவதூறு கூறினார். இனிமேல் என்னுடைய புறத்திலிருந்து உதவியே தர மாட்டேன் என்று இறைவன் மீது அபூபக்கர் (ரலி) சத்தியம் செய்கின்றார்கள். ஆனால் இறைவனின் வசனம் இறங்கிய அடுத்த வினாடியே தன்னுடைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, இறைவனுக்காக மன்னித்து இறைவனின் வார்த்தைக்குக் கட்டுப்படுவது தான் மிகப் பெரியது என்பதை நிரூபித்திருக்கின்றார்.

    இன்றைய காலகட்டத்தில் சொத்து தகராறுக்காக, குடும்பப் பிரச்சனைகளுக்காக, கொடுக்கல் – வாங்கல் பிரச்சனைகளுக்காக, வியாபாரத்தில் கூட்டாக இருந்து கொண்டு மனஸ்தாபத்தினால் பிரிந்த பிரச்சனைகளுக்காக, இன்னும் ஏராளமான பிரச்சனைகளுக்காக நம்மில் பலர், சொந்த பந்த உறவினர்களைப் பகைத்து வருடக்கணக்கில் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்கின்றோம். நான் பல வருடங்களாக இவரோடு பேச மாட்டேன் என்று பீற்றிக் கொண்டு வேறு சொல்லித் திரிகின்றோம்.

    பதிலளிநீக்கு
  4. தோழர்களின் மிகச் சிறந்த கட்டுப்பாடு

    இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

    நல்லவர்களான அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். (ஹிஜ்ரீ 9ஆம் ஆண்டு) பனூ தமீம் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரியவர்களாக) வந்தனர். அப்போது (அபூபக்கர், உமர் ஆகிய) அந்த இருவரில் ஒருவர், பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ அல் ஹன்ழலீ (ரலி) அவர்களை (தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்; மற்றொருவர், இன்னொருவரை (தலைவராக்கும்படி) சைகை செய்தார்.

    அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எனக்கு மாறு செய்வதையே நீங்கள் விரும்புகிறீர்கள்’’ என்று சொல்ல, அதற்கு உமர் (ரலி) அவர்கள் “தங்களுக்கு மாறு செய்வது என் நோக்கமன்று’’ என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது தான், “இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்’’ எனும் (49:2ஆவது) வசனம் முழுமையாக அருளப்பெற்றது..

    இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

    இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் எதைப் பேசினாலும் இரகசியம் பேசுபவரைப் போன்று (மெதுவாகத்)தான் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.

    நூல்: புகாரி 7302

    பதிலளிநீக்கு
  5. “நீங்கள் (எவருக்கும்) கட்டுப்படாத வர்களாக இருந்து, (அதில்) நீங்கள் உண்மை யாளர்களாகவும் இருந்தால் அ(ந்த உயிரா ன)தை மீட்டுங்கள் பார்க்கலாம்.” (56:83-87)

    பதிலளிநீக்கு
  6. “அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததையா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. மேலும் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.” (3:83)

    பதிலளிநீக்கு
  7. சங்கீதம் 89:15
    தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. நீதிமொழிகள் 28
    9 ஒருவன் தேவனுடைய போதனைகளைக் கேட்க மறுத்தால், தேவன் அவனது ஜெபங்களையும் கேட்க மறுத்துவிடுவார்.

    பதிலளிநீக்கு

  9. Deuteronomy 11:26-28 sums it up like this: "Obey and you will be blessed. Disobey and you will be cursed."

    பதிலளிநீக்கு
  10. உபாகமம் 11:26-28

    இஸ்ரவேலர் தெரிந்துகொள்ள வேண்டிய ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள்

    26 “நீங்கள் தெரிந்துகொள்ள நான் இன்று உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறேன். இதோ! ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். இவற்றில் நீங்கள் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 27 நான் இன்று உங்களுக்குக் கூறியிருக்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தர் தந்த கட்டளைகளுக்கு செவிகொடுத்து கீழ்ப்படிந்து, அவற்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் ஆசீர்வாதம் பெறுவீர்கள். 28 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதையும், பின்பற்றுவதையும் மறுத்தால் சாபத்தைப் பெறுவீர்கள். ஆகவே, நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டபடி வாழ்வதை நிறுத்திவிடாதீர்கள். அதுமட்டுமின்றி அந்நிய பொய்த் தெய்வங்ளைப் பின்பற்றாதிருங்கள். கர்த்தரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது.

    பதிலளிநீக்கு
  11. 1 சாமுவேல் 15:23
    கீழ்ப்படிய மறுப்பது தவறு, அது பில்லிசூனியத்திற்கு இணையான பெரும் பாவம். நீ கீழ்ப்படிய மறுப்பது பிடிவாதமாக பிற விக்கிரகங்களை தொழுதுகொள்வதற்கு சமம் ஆகும். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தாய். அதனால் கர்த்தர் உன்னை அரசனாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.

    பதிலளிநீக்கு
  12. 2 நாளாகமம் 7:19
    “ஆனால் நான் அளித்த சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படியவில்லையென்றால், நீங்கள் மற்ற தெய்வங்களை தொழுதுகொண்டு சேவை செய்வீர்களானால், 20 நான் கொடுத்த எனது நிலத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வெளியேற்றுவேன். எனது நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகக் கட்டிய இவ்வாலயத்தை விட்டுவிலகுவேன். எல்லா நாட்டினரும் இவ்வாலயத்தைப் பற்றி தீயதாகப் பேசும்படி செய்வேன்.

    பதிலளிநீக்கு
  13. 2 நாளாகமம் 7:22
    அதற்கு மற்ற ஜனங்கள், ‘இதன் காரணம் என்னவென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது முற்பிதாக்களைப்போன்று தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிய மறுத்தனர். இந்த தேவன்தான் அவர்களை எகிப்தைவிட்டு வெளியே மீட்டுவந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவும் சேவைசெய்யவும் தொடங்கிவிட்டனர். அதனால்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இத்தகைய துன்பங்களைக் கொடுத்துள்ளார் என்பார்கள்’” என்றனர்.

    பதிலளிநீக்கு
  14. எரேமியா 11:10
    அந்த ஜனங்கள் தம் முற்பிதாக்கள் செய்த அதே பாவங்களைச் செய்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் எனது செய்தியை கேட்க மறுத்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்ளவும், பின்பற்றவும் செய்தனர். நான் அவர்களது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரவேலின் குடும்பத்தாரும், யூதாவின் குடும்பத்தாரும், உடைத்துவிட்டனர்” என்று கூறினார்.

    பதிலளிநீக்கு
  15. டைட்டஸ் 1:16 ESV / 616 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    அவர்கள் கடவுளை அறிந்திருப்பதாகக் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் தங்கள் செயல்களால் அவரை மறுக்கிறார்கள். அவர்கள் வெறுக்கத்தக்கவர்கள், கீழ்ப்படியாதவர்கள், எந்த நல்ல வேலைக்கும் தகுதியற்றவர்கள்

    பதிலளிநீக்கு
  16. 2 பீட்டர் 2:1-2

    ஆனால், பொய்யான தீர்க்கதரிசிகளும் மக்களிடையே தோன்றினர், பொய்யான போதகர்கள் உங்களுக்குள் தோன்றினர், அவர்கள் இரகசியமாக அழிவுகரமான துரோகங்களை வரவழைத்து, தங்களை விலைக்கு வாங்கிய குருவை மறுதலித்து, விரைவான அழிவை தங்களுக்குள் வரவழைத்துக்கொள்கிறார்கள். மேலும் பலர் அவர்களின் சிற்றின்பத்தைப் பின்பற்றுவார்கள், மேலும் அவர்களால் சத்திய வழி நிந்திக்கப்படும்

    பதிலளிநீக்கு
  17. லூக்கா 6:46 ESV / 410 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    “நான் சொல்வதைச் செய்யாமல் ஏன் என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று அழைக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  18. 2 தீமோத்தேயு 4:3

    ஏனென்றால், மக்கள் நல்ல போதனையை சகித்துக்கொள்ளாத காலம் வருகிறது, ஆனால் அரிப்புள்ள காதுகளை அவர்கள் தங்கள் சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களாகக் குவித்துக்கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
  19. டைட்டஸ் 1:16
    அவர்கள் கடவுளை அறிந்திருப்பதாகக் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் தங்கள் செயல்களால் அவரை மறுக்கிறார்கள். அவர்கள் வெறுக்கத்தக்கவர்கள், கீழ்ப்படியாதவர்கள், எந்த நல்ல வேலைக்கும் தகுதியற்றவர்கள்

    பதிலளிநீக்கு
  20. ஜேம்ஸ் 1:26 ESV / 7 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    ஒருவன் தன்னை மதவாதி என்று நினைத்து, தன் நாவைக் கடிவாளப்படுத்தாமல், அவனுடைய இருதயத்தை ஏமாற்றினால், அவனுடைய மதம் மதிப்பற்றது.

    பதிலளிநீக்கு
  21. நீதிமொழிகள் 19:23: "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கு வழிநடத்தும், அதை உடையவனுக்குத் திருப்தியாயிருக்கும்; அவன் தீங்கு நேரிடமாட்டான்."

    பதிலளிநீக்கு
  22. இப்ராஹிமுக்கு (அலை) அவனுடைய இறைவன் கூறினார். இப்ராஹீமே! பணிந்து விடு, கட்டுப்படு, எனக்கு முன்னால் சரணடைந்து விடு. இப்ராஹிம் (அலை) கூறினார்; என் இறைவா! அகிலங்களின் இறைவனாகிய உனக்கு நான் பணிந்துவிட்டேன். சரணடைந்துவிட்டேன். (அல்குர்ஆன்2 : 131)

    பதிலளிநீக்கு
  23. 10:13. (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  24. 9:70. இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

    பதிலளிநீக்கு
  25. 30:42. “பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்” என்று (நபியே!) நீர் கூறும்.

    பதிலளிநீக்கு
  26. 34:45. மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை; ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்)

    பதிலளிநீக்கு
  27. 35:25. இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  28. 39:25. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர்; ஆகவே அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது.

    பதிலளிநீக்கு
  29. 44:37. இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.

    பதிலளிநீக்கு
  30. பண் :
    பாடல் எண் : 4
    கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
    கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
    வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
    கல்லேன் கழியநின் றாடவல் லேனே.
    பொழிப்புரை :
    நான் சிவன்நெறியைக் கல்லாதிருக்கும் தன்மையர் முன் கல்வி இல்லாதவனாய்த் தோன்றுகின்றேன். அதனால், அவர் போல வினையைச் செய்ய வல்லேனல்லேன்; உலகியலில் நின்று துன் புறுவார்க்கும் அயலாகினேன். கிடைத்த பொருளைப் பலர்க்கும் வழங்க வல்லனாயினேன்; அதனால், எதற்கும் மனத்தில் அச்சங் கொள்ளமாட்டேன்; இவற்றால் பற்றுக்கள் பலவும் நீங்கி நின்று களிநடம் புரிய வல்லேனாயினேன்.
    குறிப்புரை :
    நாயனார் எவ்விடத்தும் தம்மை இழித்துக் கூறாது, தாம் பெற்ற பேற்றின் சிறப்பையே கூறுதலின், இம்மந்திரத்திற்கு அவர் தம்மை இழித்துக் கூறினாராக வைத்து உரைத்தல் பொருந்தாது என்க. இரண்டாம் அடியை முதலில் கொண்டு உரைக்க. தகைமை - தன்மை; தன்மை உடையாரை, `தன்மை` என அஃறிணையாகக் கூறினார்; இழிபு பற்றி. `அறியாத் தன்மையர்முன் கல்லேனாகின்றேன்` என் றதனால், `அறிந்த தன்மையர் முன் கற்றேனாய் விளங்குகின்றேன்` என்பது போந்தது. இதனால், கற்றாரைக் கல்லாதார் `அறிவிலர்` என்று இகழ்தல் பெறப்பட்டது. அதனை,
    உருவமும், உணர்வும், செய்தி ஒத்திரா; கன்மம் என்னின்
    மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண்டாகி
    வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன்? மதியி லாதாய்,
    பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே.
    -சிவஞானசித்தி பரபக்கம். உலகாயதன் மதம் - 9.
    என்பார் போல்பவரிடத்துக் காண்க.
    சிறியார் உணர்ச்சியுள் இல்லை, பெரியாரைப்
    பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. -குறள் 976
    என்றார் திருவள்ளுவரும். `வினை கில்லேன், தகைமையின் கல்லேன், பொருளே வல்லேன்` என முன்னே கூட்டி முடிக்க. ``தகைமையின்`` என்பதில் சாரியை நிற்க, `முன்` என்னும் பொருட்டாய கண்ணுருபு தொக்கது. ``வழங்கும் பொருளே வல்லேன்`` என்றாராயினும், `பொருள் வழங்கவே வல்லேன்` என்றல் கருத்து என்க. `உட்கலேன்` என்பது விரித்தல் பெற்றது.
    இதனால், கல்லாதார் வினை செய்தல், துயர்ப்படல், இவறன்மை, சாக்காடு முதலியவற்றிற்கு அஞ்சுதல் என்னும் குற்றங் களை உடையராதல், எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டன.

    http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10

    பதிலளிநீக்கு
  31. பண் :
    பாடல் எண் : 1
    ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
    நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
    இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
    படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.
    பொழிப்புரை :
    உலகப் பொருள்கள் மேற்பரந்து செல்லுதலை யொழிந்து இறைவனது திருவடிக்கீழே சென்று ஒடுங்கி நிலைப்பெற்ற உயர்ந்தோரதுஉள்ளங்கள் யாதொன்றற்கும் அஞ்சுதல் இல்லை ; அவர்கள்பால் கூற்றுவன் செல்லுதலும் இல்லை; எல்லாப் பற்றுக்களை யும் முற்றும் விடுத்த அவர்கட்கு வரக்கடவொரு துன்பமும் இல்லை; இரவு பகல் முதலிய கால வேறுபாடுகள் இல்லை; உலகத்தில் விளைவ தொரு பயனும் இல்லை.
    குறிப்புரை :
    `உலகப் பற்றினின்றும் மீட்ட உள்ளத்தைப் பின் இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிலைநிற்கச் செய்யும் முயற்சியே தவம்` என்பதனை, ``பற்றுவிட்டார்க்கு`` எனவும், ``ஒடுங்கி நிலை பெற்றஉள்ளம்`` எனவும் உடம்பொடு புணர்த்து, உணர்த்தினார். இதனானே மேலையதிகாரத்தோடு இதற்கு உளதாய இயைபு இனிது விளங்கும். உள்ளத்தைப் பற்றுக்களினின்றும் மீட்டு இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிற்கச்செய்யும் முயற்சி, தோன்றி நிகழும் காலத்தே `தவம்` எனவும், இனிது முற்றிய காலத்தே `ஞானம்` எனவும் நிற்கும். தவநிலையையே சிவநூல்கள், `சரியை, கிரியை, யோகம்` என மூன்றாகவும், `சிவ தன்மம், சிவ யோகம்` என ஓராற்றல் இரண்டாக வும் பகுத்துக்கூறுதல் வெளிப்படை. அவற்றின் இயல்பையெல்லாம் நாயனார் முன்னைத்தந்திரத்தில் இனிது விளங்க அருளிச் செய்தார். இங்கு அவை சிவகுருவைத் தலைப்பட வேண்டினார்க்கு இன்றி யமையாச் சிறப்பின் ஆதலையே குறிக்கின்றார்.
    ``நடுங்குவது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. ``இராப் பகல்`` என்றது உபலக்கணம். `நடுக்கமும், நமனும் இல்லாமை ஒடுங்கி நிலைபெற்றமையால்` என்பதும், `இடும்பை முதலியன இல்லாமை பற்று விட்டமையால்` என்பதும் குறிப்பால் தோன்ற வைத்தவாறு உணர்க.
    இவற்றை, ``சுண்ணவெண் சந்தனச் சாந்தும் ... ...
    ... ... உடையார் ஒருவர் தமர்நாம்;
    அஞ்சுவ தியாதொன்று மில்லை;
    அஞ்ச வருவதும் இல்லை`` 3
    ``வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்
    மால்வரையும்
    தானந் துளங்கித் தலைதடு மாறிலென்
    தண்கடலும்
    மீனம் படிலென் இருசுடர் வீழிலென்
    வேலைநஞ்சுண்
    டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட
    உத்தமர்க்கே`` l
    ``நாமர்க்குங் குடியல்லோம்; நமனை யஞ்சோம்``8 என்றாற் போலும் அனுபவமொழிகளான் அறிக. இம்மந்திரத்தின் ஈற்றடி.
    `படும்பழி பாவம் பயமில்லை தானே` எனவும், `கடும்பசி யில்லை கற்றுணர்ந்தார்க்கே` எனவும் பாடம் வேறு வேறாகவும் ஓதப் படுகின்றது.
    இதனால், `தவமாவது இது` என்பதும் அதன் பயனும் கூறப்பட்டன.

    http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10

    பதிலளிநீக்கு
  32. "நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை."
    (4 : 137)

    "உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்."
    (2 : 217)

    பதிலளிநீக்கு
  33. நெறியைப் படைத்தான்;

    நெருஞ்சில் படைத்தான்!

    நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!

    நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு

    நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

    பதிலளிநீக்கு