திருமந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமந்திரம் & திருக்குர்ஆன் கூறும் இறைவன்:

ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
எழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே.

(திருமந்திரம் கடவுள் வாழ்த்து)




















2000 முதல் 3000 ஆண்டுகள் பழமையான திருமந்திரத்துக்கு கிபி 1900 களின் நடுவில் பொழிப்புரை எழுதிய பொழிப்புரையாளர்களின் விளக்கத்தை விளக்கி வைத்துவிட்டு  இந்த பாடலுக்கான விளக்கத்தை திருமந்திரத்தில் இருந்தே எடுப்பதுதான் சரியான வழிமுறை. பிறகு அதனோடு இஸ்லாமிய போதனைகளை ஒப்பிடுவோம்.

இந்த திருமந்திர கடவுள் வாழ்த்துப் பாடலானது இறைவனின் பண்புகளை பட்டியலிடக் கூடியதாக இருக்கிறது. இந்த பட்டியலின் விளக்கமாகவும் இந்த பண்புகளை உடைய இறைவன் தான் இதில் உள்ள அறங்களை மக்கள் பின்பற்ற வகுத்து கொடுத்துள்ளான் என உணரும் முகமாக இந்த நூல் அமைந்துள்ளது. எனவேதான் இப்பாடலுக்கான விளக்கத்தை இதற்க்கு தொடர்பில்லாத வேறு நூல்களில் இருந்து எடுப்பது தவறான வழிமுறை ஆகும் குறிப்பாக மாற்று மொழி நூலிலிருந்து முதல் பொழிப்புரை வழங்குவது பிழை. இப்பாடல்கள் உண்மையான விளக்கத்தை திருமந்திரத்தை கொண்டு விளக்கிய பிறகு மாற்று வேதநூல்களோடு ஒப்பிடுவதன் மூலம் அது நமது தத்துவத்தோடு ஒத்துபோகிறதா இல்லையா என்று வேண்டுமானால் கண்டறியலாம். இந்த அணுகுமுறையை கொண்டே இந்த ஒப்பீடு செய்யபப்டுகிறது.

திருமந்திரம் & திருக்குர்ஆன் ஒப்பீட்டாய்வு:


ஒன்றவன் தானே (
ஒன்று அவன் தானே): ஒரே ஒருவனாய் தானே உருவானவன்: ஒரே இறைவன் என்பது வேறு இணை துணைகள் இல்லை என்பதன் நேரடி கூற்று. அவன் யாரோடும் எதனோடும் உருவிலும் குணத்திலும் அருளிலும் ஆற்றலிலும் ஒப்பிட முடியாதவன் எனபதுதான் ஒன்று என்பதன் விளக்கம். மிக முக்கிய தகவல் "தானே", அதாவது அவன் அவனாகவே உண்டானவன், எவனாலும் எதனாலும் படைக்க படாதவன். எனவே மனிதன் செய்யும் லிங்கமும் சிலையும் படமும் புராணமும் அவனை குறிக்கும் குறியீடு அல்ல எனபதை இது உணர்த்துகிறது. 

திருமந்திரம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - (திருமந்திரம்)

திருக்குர்ஆன்  

அல்லாஹ் ஒருவனே! அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. (குர்ஆன் 112:1&3)

இரண்டவன் இன்னருள் (
இரண்டு அவன் இன் அருள் நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்க் கொள்வது அறக்கருணை. தீயநெறி நடக்கும் அசுர குணத்தவர்களை அழித்து ஆட்க் கொள்வது மறக்கருணை என இரண்டு வகையான அருளை கொடுப்பவன். எனவே இறைவன் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல் அருளை வழங்குபவனாக இருக்கிறான்.

திருமந்திரம் 

செற்றிலென்? சீவிலென்? செஞ்சாந்து அணியிலென்?
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்?
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. (திருமந்திரம் ஊழ் 2848)

பொழிப்புரை: கூரியவாள் கொண்டு உடலைத் துணித்தால் தான் என்ன? நறுமணம் கமழும் செஞ்சாந்து கொணர்ந்து பூசினால் தான் என்ன? தலையில் உளியால் அடித்து மரிக்கச் செய்தால் என்ன? தத்துவ ஞானிகள் இவைகள் எல்லாம் வித்தகன் விகிர்தன் (நன்மை தீமை எல்லாம்) சிவன் இச்சைப்படியே நிகழ்கின்றன என்று எண்ணி தம் பொறுமையை இழக்காமல் இருப்பார்கள்

திருக்குர்ஆன்   

அவர்களுக்கு ஏதேனும் நன்மை நேர்ந்தால், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கிறார்கள்; ஆனால் தீமை நேர்ந்தால், “இது உம்மிடமிருந்து வந்தது” (நபியே!) என்கிறார்கள். நீர் கூறுவீராக: “எல்லாமே அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன.” ஆனால், இந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது, ஒரு உண்மையைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகும் அளவிற்கு? உனக்கு நேர்வது எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வருகிறது; உனக்கு நேரிடுவது எல்லாம் உன்னிடமிருந்தே வருகிறது… (குர்ஆன்  4:78-79)

நின்றனன் மூன்றினுள் (
நின்றனன் மூன்றினுள்நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாடு,  இறைவன் ஏற்பாடு அல்ல.

திருமந்திரம் 

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. (திருமந்திரம் 404)

பொழிப்புரை: உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் ஒருவன் தானே. 

திருக்குர்ஆன்   

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40) 

இந்த முத்தொழிலில் இறைவன் தன்னுடன் யாரையாவது கூட்டாக அல்லது தனக்கு இணையாக வைத்துள்ளானா? அதாவது முத்தொழில் அழிக்கும் தொழிலை மட்டும் தான் ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு மற்ற தொழிலை பொறுப்பு கொடுக்கும் வேலை நடைபெற்றதா? இல்லை என கீழ்வரும் பாடல் சொல்லுகிறது. 

திருமந்திரம்  

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. (திருமந்திரம் 110)
 
பொழிப்புரை: இறைவனை மூன்று ஐந்து என கருதுபவர்கள் ஆதியானவனை அறியாத அறிவில்லாத குருடர்கள் ஆவர். நீதி செலுத்துவது சிவன் விஷ்ணு மற்றும் பிரம்மன் எனும் மூவர் என்று பிரித்து கூறுகிறவர்கள் உளறுகிறாரே தவிர வேறு இல்லை.

திருக்குர்ஆன்   

(நபியே!) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை. (குர்ஆன் 18:26)
 
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர (படைத்தது காத்து அழிக்க) வேறு நாயன் இல்லை  (குர்ஆன் 5:73)

நான்கு உணர்ந்தான் (நான்கு உணர்ந்தான் நான்மறைகளையும் உணர்ந்தவன். நான்மறை என்பது என்ன? அது உலகில் உள்ள அனைத்து வேதங்களையும் குறிக்கிறது.

திருமந்திரம் 

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. (திருமந்திரம்)

திருக்குர்ஆன்   

நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும். (குர்ஆன் 43:4)

குறிப்பு: உலக நான்மறைகள் னைத்தும் இந்த  லவ்ஹுல் மஹ்ஃபூளின் ஒரு பகுதியாகும்.

ஐந்து வென்றனன் (ஐந்து வென்றனன்)  1) பிறப்பு, பசி, காமம், தூக்கம், இறப்பு என ஐந்தின் பிடியில் இல்லாதவன். அல்லது 2) இது ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை வென்றவன் என்று பொருள்படும். இது உடலின் ஐம்பொறி ஆசைகளை அடக்கிய முழுமையான கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. அல்லது 3) ஐம்பெரும் பூதங்களான புவி, ஆகாயம், காற்று, நீர் மற்றும் நெருப்பு ஆகியவைகளின் தேவை இல்லாதவன் என்றும் பொருள் கொள்ளலாம். இன்மூன்று விளக்கங்களும் ஒரு மனிதனுக்கு இருக்க கூடிய தேவைகள் எதுவும் இல்லாதவன் இறைவன் என்ற பொருளை தருகிறது. பெரும்பாலான விலக்குறைகளில் கொடுக்கப்பட்ட முதல் ஐந்தை கணக்கில் கொண்டு ஆய்வு செய்வோம்.

திருமந்திரம் 

 

திருக்குர்ஆன்   

அல்லாஹ் எப்படிப்பட்டவன்? 

பிறப்பற்றவன்: அவர் (அல்லாஹ்) யாரையும் பெறவில்லை; எவராலும் பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

பசியற்றவன்: அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை (குர்ஆன் 6:14)

காமமற்றவன்: மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். (குர்ஆன் 35:15)

தூக்கமற்றவன்: அவனைத் தூக்கமோ, உறக்கமோ பீடிப்பதில்லை (குர்ஆன் 2:255)

இறப்பற்றவன்அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; (குர்ஆன் 2:255)

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன் (குர்ஆன் 112:2.) 

ஆறு விரிந்தனன் (ஆறு விரிந்தனன் மந்திரம்:மறை, பதம்:உணவு, வன்னம்:எழுத்து, புவனம்:உலகம், தத்துவம்:உண்மை, கலை:மொழி என்னும் ஆறாக விரிந்தனன் என்று 19 ஆம் நூற்றாண்டில் விளக்கம் கொடுக்கப்பட்ட்டது. ஆனால் ஆறு நாட்களில் உலகை படைத்தான் என்பதுதான் உண்மைக்கு நெருக்கமான விளக்கம் ஆகும். 

திருமந்திரம் 

 

திருக்குர்ஆன்   

“நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் ; மேலும், அவன் அர்ஷில் உறுதியாக நிலைபெற்று, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி ஆளுகிறான். அவனது அனுமதியைப் பெற்றாலன்றி, எந்தப் பரிந்துரைப்பவரும் அவனிடம் முறையிட முடியாது. இவனே உங்கள் இறைவன் அல்லாஹ்; எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள்: நீங்கள் அறிவுரை பெற மாட்டீர்களா?” (ஸூரா யூனுஸ் 10.3)

எழு உம்பர் சென்றனன் (
ஏழ் உம்பர்ச் சென்றனன்பின் ஏழாவது சொர்க்கம் சென்றான்.

திருமந்திரம் 

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே. - (திருமந்திரம் 1551)

(ப. இ.)  ஏழு உலகங்கள் அனைத்திற்கும் அப்பால் இருப்பவன், அவன் நல்லார்  உள்ளத்து மிக்க அருள் செய்தல்போல்....

திருக்குர்ஆன்   

ஏழு வானங்களுக்கு மேல் அல்லாஹ் தனக்கென படைத்த மாபெரும் இருக்கைக்கு ‘அர்ஷ்’ என்று சொல்லப்படும்.

இருந்தான் உணர்ந்து எட்டே (
தான் இருந்தான் உணர்ந்து எட்டே தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.

திருக்குறள் & திருக்குர்ஆன்  

தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.
    1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).
    2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).
    3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).
    4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).
    5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).
    6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).
    7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).
    8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).
திருமூலரின் திருமந்திரம் குறிப்பிட்ட இறைவனது எட்டு குணங்களை திருக்குறளிலிருந்து விளக்கியதன் காரணம் ஓளவையார்.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர் - (நல்வழி 40)

மனிதன் அழைத்தால் எட்டும் தூரத்தில் சிவன் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

திருமந்திரம் 

 

திருக்குர்ஆன்    

நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்; அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் பிடரிநரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம் (குர்ஆன் 50:16) 
 
முடிவுரை :

உலகம் முழுவதும் ஒரே குலம் உலகம் முழுமைக்குக்கும் ஒருவனே தேவன்.

சான்று :
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa104.htm
http://yozenbalki.blogspot.in/2010/03/blog-post_07.html
https://www.facebook.com/aranerivilakkam/posts/152130261914893
http://www.ssivf.com/ssivf_cms.php?page=262
http://blogtomuslims.blogspot.in/2010/06/blog-post.html

http://www.ottrumai.net/TArticles/48-WhereIsAllah.htm