இந்த கேள்விக்கும் பதில் எந்த கோணத்தில் தரமுடியும் என்றால், கடவுள் என்கிற கருத்து வேதத்தின் மூலம் மக்களுக்கு விளக்கிச் சொல்லப்படுகிறது என்பதால் உலகில் உள்ள பல்வேறு வேதங்கள் என்ன சொல்கிறது என்று அறிவது அவசியம்.
தமிழர் சமயம்
சைவ சித்தாந்த நூலான திருமூலரின் திருமந்திரம் இவ்வாறு இறைவன் உலகை படைத்ததை விளக்குகிறது.
445. உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே. 5
446. படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரமாகி நின்றானே. 6
447. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண் இலி தேவரை
ஆதி படைத்தது அவை தாங்கி நின்றானே. - திருமந்திரம் 445–447
கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே எங்குமாகி நிற்பனே. - சிவவாக்கியம் 241
இஸ்லாம்
‘வானங்களும், பூமியும் இணைங்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா ?… (திருக்குர்ஆன் 21:30)
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (திருக்குர்ஆன் 7:54)
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈ யைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன்:22:73.)
கிறிஸ்தவம்
துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். ஆதியாகமம் 1:1-2
முடிவுரை
இதுபோல எத்தனை வேத ஆகம மறை நூல்களை எடுத்து பார்த்தாலும் இறைவனுக்கு அந்த நூலில் பயன்படுத்தப்படும் சொல் பன்மையில் இல்லை. ஒருமையில் தான் உள்ளது. இதுவே ஒரே கடவுள் தான் இவ்வுலகை படைத்தார் என்பதற்கு போதுமான சான்று.மேலும் தர்க்க ரீதியாக யோசித்தால், பல்வேறு கடவுள்கள் உலகத்தை படைத்து இருந்தால் மனித உடல் கூறுகளையும் பண்புகளையும் உட்பட ஒவ்வொரு பொருளும் ஒரே அமைப்பில் ஒரே விதிக்கு கட்டுப்பட்டு உலகம் முழுதும் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை.
இங்கே மனிதனுக்கு எப்படி இரண்டு கண், ஒரு மூக்கு, ஒரு இதயம் போன்ற அனைத்து உறுப்புகளும் சீராக இருக்கிறதோ, அப்படிதான் உலகம் முழுதும் உள்ளது. இங்கு நெருப்புக்கு சுடும் பண்பும், ஆப்பிரிக்காவில் குளிரும் பண்பும் உள்ளதா என்ன? ஒரே இறைவன்தான் அனைத்தையும் படைத்தான் என்பதற்கு வேறு எந்த தர்க்கமும் தேவை இல்லை. படைப்பு பற்றிய தரவுகள் ஒவ்வொரு வேதத்திலும் முரண்படுகிறதென்றால் அதற்கான சரியான காரண காரியத்தை ஆய்ந்து அறிவது அறிவுடைமை.
மேல் & கீழ் உலகில் உள்ள அனைத்தும் இறைவனிடமிருந்துதான் வந்தது
பதிலளிநீக்குபைபிள்
யோவான் 1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
கொலோசெயர் 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
http://tamilbibleqanda.blogspot.com/2009/11/21-son-of-god-god.html
_____________________________________
திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0001.aspx
பரிபாடல்
ஓன்றனிற் போற்றிய விசும்பும் நீயே!
இரண்டி னுணரும் வளியும் நீயே!
மூன்றி னுணரும் தீயும் நீயே!
நான்கி னுணரும் நீரும் நீயே!
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே!.......' – (பாடல் 13: 14, 18-22)
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2183:2014-07-03-03-22-21&catid=56:2013-09-02-02-58-06
_______________________________________
குர்ஆன்
15:86. நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
http://www.tamililquran.com/qurantopic.php?topic=14
நெகேமியா 9:6
பதிலளிநீக்குநீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்!
பாடல் எண் : 28
பதிலளிநீக்குதேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே.
பொழிப்புரை : சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.
இந்த உலகை படைத்தவர் ஒருவராக தான் இருக்க முடியும். பல கடவுள் இருக்க முடியாது. இப்படி இருக்கயில் பல விதமான மதங்கள் இருப்பது குழப்பமாக இருக்கலாம் ஆனால் இவை அனைத்து ஒரு கடவுளையை மட்டுமே கூறுகிறது.
பதிலளிநீக்குகடவுள் ஒளி வடிவில் தான் என்று (சநாதன தர்மம், பைபிள், குரான், யூதர்கள் போன்ற ஆன்மீக நூல்களில் பல இடங்களில் கடவுளுக்கு ஒளி வடிவத்தையே கூறுகிறது இதை பலரும் வணங்குகின்றனர்.) ஆனால் கடவுள் பரிபூரணமானவர் (எந்த விதமான குறையும் அற்றவர்) என்றால் உருவம் இல்லாத நிலை கடவுளுக்கு குறையாக ஆகிவிடும். ப்ரம்மன் , பரமாத்மா, பகவான் என்ற மூன்று நிலையில் கடவுள் உள்ளார் என பாகவத புராணம் கூறியுள்ளது.
கிருஷ்ணரின் உடலில் இருந்து வெளி வரும் ஒளி ப்ரம்மன்,இதை பல மதங்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் வணங்குகின்றனர். ஒவ்வொரு ஆத்மாவிலும் உடன் இருப்பவர் பரமாத்மா (உள்ளும் புறமும் நிறைந்து இருப்பவர்) விஷ்ணு , முழுமையாக உள்ள முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். கடவுளை ஒலி வடிவத்தில் உச்சரிப்பது ஓம் என்ற பிரணவம். பகவான் என்றால் கிருஷ்ணர் மட்டுமே. இதை பகவத் கீதை, பாகவதம் மற்றும் பல வேத இலக்கியங்களில் உள்ளது. கடவுள் ஒருவரே அவர் நான் தான் என்று கிருஷ்ணர் கூறுகிறார். இதே போல் கடவுள் ஒருவரே என பைபிளிலும் குரானிலும் கூறுகிறார்.
கிருஷ்ணர், ஏசுகிருஷ்து, அல்லா, புத்தர் இந்த பெயர்கள் ஒருவரையே குறிக்கும். சூரியன் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர்களில் அழைப்பதால் வெவ்வேறு கடவுள் என ஆகாது. அது போல் கிருஷ்ணரைப் பற்றியே அனைத்து ஆன்மீக நூல்களும் கூறுகின்றன.
யகோவா & விஷ்ணு / கிருஷ்ணா - இருவரும் ஒன்றே !
கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டின் படி அவர்களது இறைவன் 'யஹோவா' என்பதே. இவர்களது இறைவனுக்கும், பகவான் விஷ்ணுவிற்கும் உள்ள தொடர்புகளை இங்கே தந்துளேன்....
பைபிளில் உள்ள 'யகோவா" (Yahwah) என்கிற கடவுளுக்கும், வேத இலக்கியத்தில் உள்ள விஷ்ணு என்கிற கடவுளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பின்வருமாறு..
"கடவுள் அழித்து கொண்டிருக்கும் நெருப்பாக வர்ணிக்கபடுகிறார்" - உபாகமம் 4.24
"பகவான் கொழுந்துவிட்டெரியும் நெருப்போடு ஒப்பிடபடுகிறார்" - வேத இலக்கியம், சைதன்ய சரிதமிர்தம் - ஆதி -7.116
"யஹோவா என்கிற கடவுள் விமோசனம் என்கிற கிரீடம் அணிந்து கொண்டுள்ளார்" - ஏசையா 59.16.18
"பகவன் ஸ்ரீ கிருஷ்ணர் அழகான ஒரு கிரீடம் அணிந்துள்ளார்" - ஸ்ரீமத் பாகவதம் 6.4.39
"அவர் குரல் இடி போன்று இருந்தது" - யோபு 40-9
"மகாவிஷ்ணு இடியை போல் குரலை உடையவர்" ஸ்ரீமத் பாகவதம் 4.30.7
"யகோவா கடவுள் கையில் ஒரு தடியையும், ஒரு குச்சியையும் வைத்திருப்பார்" சங்கீதம் 23.4, 89.32
"மகாவிஷ்ணு தன கையில் ஒரு கோலையும், கதையையும் வைத்திருக்கிறார்" ஸ்ரீமத் பாகவதம் 6.4.39, 4.30.7
"யகோவா கடவுள் தன் எதிரிகளை அளிக்க ஒரு நெருப்பை அனுப்புவார்" - சங்கீதம் 97.3,50.3, உபாகமம் 9.3
"விஷ்ணு தன எதிரிகளை அளிக்க ஒரு நெருப்பு சக்கரத்தை அனுப்புவார்" - ஸ்ரீமத் பாகவதம் 6.8.23
"யகோவா ஒரு கேடயத்தை எடுத்து செல்வார்" - உபாகம் 33.29, சங்கீதம் 6.4.39
அதே போல் மகாவிஷ்ணு -ஸ்ரீமத் பாகவதம் 6.4.39
பதிலளிநீக்குஇப்படி இத்தகைய ஒற்றுமைகளை கூறிகொண்டே போகலாம்.
விஷ்ணுவும், யகோவாவும் ஒரே கடவுள் தான் என்பதற்கு மேலும் வலிமை கொடுக்கும் மற்றுமொரு பொதுவான அம்சம் உள்ளது. டில்மன், டப் மற்றும் பல கல்விமான்கள் விஷ்ணுவின் பறவைக்கும், யகோவா கருடனுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்கிறார்கள். இவ்விசயம் யூதர்களின் கலை களஞ்சியம் என்கிற நூலில் 'Cherule' என்கிற வார்த்தை எப்படி வந்தது என்பதை ஆராயும் பகுதியில் உள்ளது.
"விஷ்ணு கருடன் மீது தான் அமைந்து செல்கிறார்" என்பது எல்லோருக்கும் தெரியும், அதுபோலவே யோகவாவும் ஒரே ஒரு பறவை மீது மட்டும் அமர்ந்து செல்கிறார். பைபிளில் பல பறவைகள் பற்றிய வர்ணனை உள்ள போதும், அவர் இந்த கருடன் மீது தான் செல்கிறார்.
எனவே, யஹோவா என்பது பகவான் விஷ்ணுவே தான் என்பதை இதன் முலம் அறிந்து கொள்ளலாம். ஆகவே, எல்லா மதங்களுமே பகவான் விஷ்ணு /கிருஷ்ணரை தான் சொல்கிறது. ஆனால், அவர்களால் இதை புரிந்து கொள்ள தான் முடியவில்லை.
யூதர்களின் ஆன்மீக நூல்(பழைய ஏற்பாடு) ஏசு வந்து அவர் கூறிய அறிவுரைகள் சேர்ந்த்தே பைபிள், அதன் பிறகு பழைய ஏற்பாடு உடன் நபிகள் கடவுளிடம் பெற்ற விசயங்களின் தொகுப்பே குரான் ஆகும். குரானில் ஏசு பரலோகத்தின் பரம பிதா அல்லாவின் இறைத்தூதர், ஈஷாநபி என்ற பெயரில் உள்ளது.
ஏசு, நபிகள் நாயகம், புத்தர் இவர்களைப் பற்றி மஹா பவிஷ்யத் புராணத்தில் கூறியுள்ளது. நபிகள் நாயகத்தை அதர்வண வேதத்தில் இரண்டு இடங்களில் கூறியுள்ளது. ஏசு தன்னை கடவுளின் மைந்தன் என கூறுகிறார். புத்தரை பத்ம புராணம் விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவத புராணங்களில் கூறிப்பிடப்பட்டு உள்ளது.
பத்ம புராணத்தில் ராமானுஜர் , மத்வாச்சாரியர், நிம்பக்கர், விஷ்ணுசாமி போன்ற ஆச்சார்யர்கள் கலியுகத்தில் தோன்றி கிருஷ்ணர் (நாராயணன்) மட்டுமே முழுமுதற் கடவுள் என நிருபிப்பார்கள் என உள்ளது.
ஆன்மீக நூல்கள் கூறுகிறது. கிருஷ்ணர் பரமபதத்தில் இருப்பதாகவும், பைபிள் குரானில் (ஏசு கிருஷ்து, அல்லா) பரலோகத்தில் இருப்பதாகவும் கூறுகிறது. கிருஷ்ணர் பரமபுருஷர் என்றும் பிற மத நூல்களில் பரம பிதா என்றும் கூறுகிறது. கீதையில் கிருஷ்ணர் நானே எல்லா வேதங்களிலும் அறிப்பட வேண்டியவன், அனைத்திற்கும் ஆதி மூலம். விதை அளிக்கும் தந்தை, எனது மேற்பார்வையின் கீழே இயற்கை இயங்குகிறது என கூறுகிறார். இதே போல பைபிள் குரானிலும் உள்ளது.
கடவுளுக்கு உருவம் இல்லை என்பது தவறு என உணர சில உதாரணங்கள்
யுதர்கள், பைபிள், குரான் போன்ற நூல்களில் (பரலோகத்தில் உள்ள பரம பிதாவின் பெயர்) யகோவா பற்றி கூறியுள்ளது. யகோவாவிற்கும் மஹா விஷ்ணுவிற்கும் உள்ள ஒற்றுமைகள் பல உள்ளன. அவற்றில் சில பார்ப்போம். யகோவா பறவையில் வருவார் (கருடனை குறிக்கும்) எதிரியை அழிக்க நெருப்பை அனுப்புவார் (சுதர்சன சக்கரத்தை குறிக்கும்)> ஒரு கேடயத்தை எடுத்துச் செல்கிறார். குச்சி, கனமான தடி வைத்திருப்பார் (புல்லாங்குழல் , கதையை குறிக்கும்), விமோசன கிரீடம் அணிந்திருப்பார். கொழுந்து விட்டெரியும் நெருப்பாக வர்ணிக்ப்படுகிறார். கடவுளின் குரல் இடி போல இருக்கும். கடவுள் மோசஸ்ஸூக்கு தன்னுடைய பின் பிறத்தை காட்டினார் என உள்ளது. எனவே முன்புறம் காட்டப்பட வில்லை.
கடவுளுக்கு நிச்சயமாக உருவம் உண்டு. அது பௌதீகமானது அல்ல ஆன்மீகமாக ஆகும். குறையுடைய பௌதீகப் பார்வையால் கடவுளின் உருவத்தை காண உண்டாக்கப்பட்டது உருவ வழிபாடு ஆகும்.
https://www.facebook.com/jaisrikrishnaparamatma/posts/2340789282859473?locale=hi_IN&_rdr
2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
பதிலளிநீக்குhttps://www.tamililquran.com/qurandisp.php?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&start=2#2:21
எபிரேயர் 11:3
பதிலளிநீக்குபிரபஞ்சம் கடவுளின் வார்த்தையால் உருவாக்கப்பட்டது என்பதை விசுவாசத்தின் மூலம் நாம் புரிந்துகொள்கிறோம், அதனால் காணக்கூடியவை புலப்படும் பொருட்களால் உருவாக்கப்படவில்லை.
https://www.openbible.info/topics/the_big_bang_theory
‘நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கின்றன, சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன.’ (வெளிப்படுத்துதல் 4:11)
பதிலளிநீக்குhttps://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
ஜான் 1:3 ESV / 34 பயனுள்ள வாக்குகள்
பதிலளிநீக்குசகலமும் அவர் மூலமாக உண்டானது, அவர் இல்லாமல் உண்டானது எதுவும் உண்டாகவில்லை.
விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்
பதிலளிநீக்குபடையுடை யான்பரி சேஉல காக்குங்
கொடையுடை யான்குணம் எண்குண மாகுஞ்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே. 4
உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே. 5
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே. 6
ஆதி படைத்தனன் ஐம்பெரும்1 பூதம்2
ஆதி படைத்தனன்1 ஆசில்பல் ஊழி3
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை1
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.1
Read more at: https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-2-arulal/#gsc.tab=0.
ரிக் வேதத்தில் படைப்பு
பதிலளிநீக்குhttps://medium.com/desiretothink/creation-in-the-rig-veda-8772c3569d20
பாடல் எண் : 20
பதிலளிநீக்குபின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.
அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்
எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்
தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.
பொழிப்புரை :
உடம்பைப் படைத்த இறைவன், அதனுள் வேண்டும் அளவிற்கே நெருப்பை அமைத்துள்ளான். நிலவுலகைப் படைத்த அவன் அளவின்றி எங்கும் பரந்து கிடப்பப்படையாது, ஏழென்னும் அளவிற்படவே படைத்தான். அவ்வாறே தமிழ் நூல் களையும் கற்பாரின்றி வீணேகிடக்கவையாது, அளவாக வைத்தான். பொருளையும் அவற்றால் மிகைபடாது இன்றியமையாத அளவிலே புலப்பட வைத்தான்.
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.
பொழிப்புரை :
தன்னை அறிகின்றவரது உள்ளத்தில் வீணையுள் இனிய இசைபோல மெல்ல எழுகின்றவனும், உலகத்தைப் படைத்த பிரமனாலும் தியானிக்கப் படுகின்றவனும் ஆகிய இறைவனது பெரு மையை, நிலைபெற்ற மெய்ந்நூல் வழியாகவும் சிறிது உணர்தல் கூடும்.
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே.
பொழிப்புரை :
உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_27.html
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
பதிலளிநீக்குஉடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.
பொழிப்புரை :
விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.
பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி
அருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றீரே.
பொழிப்புரை :
மறுமைக்கண் வருகின்ற சுவர்க்கச் செல்வத்தால் உளதாகின்ற இன்பம் வருமாற்றை மிக நினைந்து நும் அருஞ் செல்வ மாகிய வேள்வியை வேட்க விரும்புகின்ற அந்தணர்களே, பெரிய `செல்வம், வறுமை` என்னும் இரண்டன் காரணங்களையும் முதற் காலந்தொட்டே விளக்கி நிற்பதாகிய, அனைத்து நலங்களையும் தரும் வேதம் என்னும் அறிவுச் செல்வத்தை நுமக்குத் தந்த முதல்வனாகிய சிவபெருமானை நினையுங்கள்; பயன் எய்துவீர்.
பாடல் எண் : 7
முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்தன் அகலிடத் தானே.
பொழிப்புரை :
தனது உலகத்திலேயே விளங்கி நிற்பவனாகிய சிவபெருமான், துன்பத்தையே மிக உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையில், அத்துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் அடைதற் பொருட்டு `அன்பு` என்னும் பண்பினையும் படைத்து வைத்துள்ளான். அவ்வாறு அன்பை முன்னதாகவும், இன்பத்தை அதன் பின்னதாகவும் வைத்துள்ள அம்முதல்வனது அருளை அறிந்து, அவனிடத்தில் உலகர் அன்புசெய்கின்றாரில்லை.
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_82.html
பாடல் எண் : 1
பதிலளிநீக்குமால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே.
பொழிப்புரை :
`திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன்` என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற தேவர் தலைவனாகிய சிவபெருமான் ஏழுலகத்து இன்பத்தையும் படைத்துள்ளான்
பாடல் எண் : 6
புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே.
பொழிப்புரை :
உலகத்தைப் படைப்பவர் ஒருவனும், (சிவனும்) ஒருத்தியும் (சத்தியும்). அவர்கட்குப் புதல்வர் ஐவர். (சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன். எனவே, அவரைக்கொண்டு, அருளல் முதலியவற்றைச் செய்விப்பவன் என்றதாம்) ஐவருள் படைப்புத் தொழிலுக்குத்தான் செய்த புண்ணியத்தால் உரிமை பெற்ற வன் தாமரை மலரில் என்றும் இருந்து அத்தொழிலைச் செய்வான்.
பாடல் எண் : 24
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே.
பொழிப்புரை :
முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.
பாடல் எண் : 27
ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே.
பொழிப்புரை :
`படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழில்களை இயற்றுவோரும், அறிவுடைப் பொருள், அறிவில் பொருள் என்பவற்றில் தங்கிநின்று அவற்றை இயற்றுவோரும் பல்கோடி தேவர்களாகச் சொல்லப்படினும், அவர் யாவரும் சிவபெருமான் ஒருவனது ஆணையைத் தாங்கி அவன் குறிப்பின்வழி நின்று இயங்கும் ஒரு குழாத்தினரே யாவர்.
பாடல் எண் : 2
இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொழுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே.
பொழிப்புரை :
பின்னர் இன்பத்தைப் பெறுதற்குக் கருவியாம் பிறப்பை உயிர்கட்குக் கொடுத்த சிவன், அப்பிறப்பினுள் நிற்கும் பொழுது துன்பமயமான வினையால் விளையும் துயருள் அழுந்தவே வைத்துள்ளான். பிறவியால் வரும் மாசுடம்புகள் முன்னே சில காலம் துன்பத்தைத் தந்து, பின்பு ஓழிவனவாகும்.
பாடல் எண் : 1
மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே.
பொழிப்புரை :
`திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன்` என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில்
பாடல் எண் : 24
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே.
பொழிப்புரை :
முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.
பதிலளிநீக்குபாடல் எண் : 27
ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே.
பொழிப்புரை :
`படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழில்களை இயற்றுவோரும், அறிவுடைப் பொருள், அறிவில் பொருள் என்பவற்றில் தங்கிநின்று அவற்றை இயற்றுவோரும் பல்கோடி தேவர்களாகச் சொல்லப்படினும், அவர் யாவரும் சிவபெருமான் ஒருவனது ஆணையைத் தாங்கி அவன் குறிப்பின்வழி நின்று இயங்கும் ஒரு குழாத்தினரே யாவர்.
பாடல் எண் : 2
இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொழுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே.
பொழிப்புரை :
பின்னர் இன்பத்தைப் பெறுதற்குக் கருவியாம் பிறப்பை உயிர்கட்குக் கொடுத்த சிவன், அப்பிறப்பினுள் நிற்கும் பொழுது துன்பமயமான வினையால் விளையும் துயருள் அழுந்தவே வைத்துள்ளான். பிறவியால் வரும் மாசுடம்புகள் முன்னே சில காலம் துன்பத்தைத் தந்து, பின்பு ஓழிவனவாகும்.
பாடல் எண் : 3
இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.
பொழிப்புரை :
`உருத்திரன், மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்தாமும், மேல் உள்ள சீகண்ட உருத்திரரால் தமக்குத் தரப்பட்ட சிறந்த இயந்திரமாகிய உடம்புகள் கிடைக்கப் பெற்றுப் பொருந்தி நின்று உள்ளத்துள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவன் தம்மாட்டு வைத்த மறைப்பினை அறிய மாட்டார்கள்.
பாடல் எண் : 5
உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.
பொழிப்புரை :
சிவபெருமான் `சுத்தம், மிச்சிரம், அசுத்தம்` என்பனவாக உலகங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நல்லூழி, தீயூழி, பொதுவூழி` என்பனவாகக் காலங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நிலம், நீர், தீ, வளி, வான்` எனப் பூதங்களை ஐந்தாகப் படைத்ததும், உடம்பு களை, தேவஉடம்பு, மக்கள்உடம்பு முதலாக ஏழு வகையாகப் பலவேறு வகைப்படப் படைத்ததும் எல்லாம் உயிர்கள் உய்ய வேண்டும் என்று விரும்பியேதான்.
பாடல் எண் : 6
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.
பொழிப்புரை :
சிவபெருமான் மேற்கூறியவாறு பலவற்றையும் படைத்து, அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு, தான் தலைவனாய் நின்று, அவையனைத்தையும் ஆள்கின்றான்.
குறிப்புரை :
`ஆகவே, அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டுங் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல் அவனுக்குக் கடன்` என்பது குறிப்பெச்சம். ``பல சீவர்`` என்றது, தேவர் ஒழிந்த பிற உயிர்களை. தேவர், `அமரர்` (இறவாதவர்) எனப்படுதல்பற்றி அவர் பிறவாத வரோ என ஐயம் நிகழுமாதலின், அது நிகழாமைப் பொருட்டு அவரை வேறு கூறினார்.
இதனால் உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதல் அவனுக்குக் கடனாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 7
ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.
பொழிப்புரை :
மேற்கூறிய பலவற்றையும் படைத்த சிவபெருமான், படைத்ததனோடு ஒழியாது, அவற்றைக் காத்தும் நிற்கின்றான்.
குறிப்புரை :
`அதனால், அருளலும் அவனது கடன்` என்பது குறிப்பெச்சம். முதல் மூன்று அடிகள் அனுவாதம்.
இதனால், ஏதுக் காட்டி மேலது வலியுறுத்தப்பட்டது.
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_57.html
பாடல் எண் : 46
பதிலளிநீக்குதானே படைத்திட வல்லவ னாயிடும்
தானே அளித்திட வல்லவ னாயிடும்
தானேசங் காரத் தலைவனு மாயிடும்
தானே சிவனெனுந் தன்மைய னாமே.
பொழிப்புரை :
ஈசத்துவத்தைப் பெற்ற யோகி இறைவன் செய்யும் செயலெல்லாம் தானே செய்ய வல்லவனாவான். இதனால், `சிவன் இவனே` என உலகத்தாரால் எண்ணப்படும் தன்மை உடையவனாய் இருப்பன்
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_75.html
பாடல் எண் : 53
பதிலளிநீக்குஅஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.
பொழிப்புரை :
சிவபெருமான் தத்துவங்களைப் படைத்தும், அவற்றின் காரியமாகிய எண்பத்து நான்கு நூறாயிர வகைப்பிறவி களான உடம்புகளையும் ஆக்கி உயிர்கட்குத் தந்தும், அவைகளைக் காத்தும், அவ்வுயிர்கள் தன்னை மன மொழி மெய்களால் வழிபட்டு நலம் பெறுதற் பொருட்
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_41.html
பாடல் எண் : 4
பதிலளிநீக்குநெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முட் பாயகி லாவே.
பொழிப்புரை :
(இம்மந்திரம் பிறிது மொழிதல். இதன் நேர்பொருள் வெளிப்படை.)
இதன் குறிப்புப்பொருள்:- அறநெறியை வகுத்துணர்த்திய இறைவனே மறநெறியையும் வகுத்துணர்த்தினான். அதனால், அறநெறியின் வழுவியவழி மறநெறி உளதாய்த் துன்பம் விளைக்கும். ஆகவே, அறநெறியின் வழுவாது ஒழுக வல்லவர்கட்கு அந்நிலையில் மறநெறி தோன்றித் துன்பம் விளைக்க மாட்டாது.
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_44.html
பாடல் எண் : 17
பதிலளிநீக்குதானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனு மாமே.
பொழிப்புரை :
சிவபெருமானே எங்கணும் வியாபகனாய், ஐந் தொழிலையும் செய்யும் முதல்வனாயினும் அவன் அவன் அத்தன்மையனாய் நிற்றற்குக் காரணமாயிருப்பது அருளாயும், எல்லையின்றி விரிவதாயும், அனைத்தும் வல்லதாயும் அவனிடத்து உள்ள ஆற்றலேயாம்
பாடல் எண் : 10
ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்த(து)ஓர்
பான்ஐங் குணனும் படைத்துநின் றானே.
பொழிப்புரை :
பசுவினின்றும் பெறப்படுகின்ற அரிய பொருள் ஐந்தினாலும் திருமுழுக்காட்டித் தேவர் கூட்டம் வழிபட, ஆதியும், அந்தமும் இல்லாதவனாகிய சிவனது திருவருள் அவர்கள் உள்ளங்களில் மலர்ந்த தாமரை மலரில் தோன்பேல வெளிப்பட்ட விளங்கிற்று. (அதனால் அவர்கள் பேரின்பம் பெற்றனர் என்றபடி.) இங்ஙனம் தன்னை வழிபட்டு உய்தற்காகவே ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப் பத்து இந்திரியங்களையும் அவை செயற்படுதற்கு ஆற்றலைத் தருகின்ற தன்மாத்திரைகள் ஐந்தினையும் சிவன் உயிர்கட்குப் படைத்துக் கொடுத்தான்.
பாடல் எண் : 8
என்தாயொ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.
பொழிப்புரை :
எனக்குத் தாயாகியவளும், தந்தையாகியவனும் நான் பிறப்பதற்கு முன்பே தங்களைச் சிவனுக்கு அடிமை` என்று எழுதிக் கொடுத்த ஆளோலையை வைத்துத்தான் ஈரேழுலகங்களை யும் ஒக்கப் படைத்தவனாகிய பிரமதேவன் என்னைப் படைக்கும் பொழுது எனது தலையில், `இவன் சிவனுக்கு அடிமை` என்று எழுதினான். `அந்த எழுத்துப் பொய்யானதன்று, மெய்யானதே` என நிலை நாட்டுபவனாகவே காப்போனாகிய திருமால் அமைந்தான்.
பாடல் எண் : 15
மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன்
மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன்
மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள்
மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே.
பொழிப்புரை :
பிரமன், விட்டுணு, பிறதேவர் ஆகியோ ரெல்லாம் தாம் தாம் செய்யும் அதிகாரத்தைத் தமது ஆற்றலால் அமைந் தனவாகவே கருதி மயங்குவாரல்லது, `இவை பரம்பொருளாகிய சிவனது ஆணையின்வழி நமக்கு அமைந்தன, என்று உணர மாட்டார்கள் (அதனால் அவர்கள் மெய்யடியாராதல் இல்லை) அந் நிலையில், `நமக்குக் கிடைத்த நலங்கள் யாவும் பரம்பொருளாகிய சிவனது அருளால் கிடைத்தன` எனச் சிவனுக்கு மெய்யடியா ராயினாரே உணர்வார்கள்.
பாடல் எண் : 3
பரந்துல கேழும் படைத்த பிரானை
`இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.
பொழிப்புரை :
சிவபெருமானை உலக முதல்வனாக உணரா தவர்கள் அவன் இரத்தலை மட்டுமே நோக்கி அது பற்றி இகழ்ந் தொழிவர். அவர்கள் போலன்றி அவனை உலக முதல்வனாக உணர் பவர், `சிவன் ஏன் இரக்கவேண்டும்`என ஆழ்ந்து நோக்குவர். அங் ஙனம் நோக்குவார்க்கு, `அவன் அடியவர் உலகியலில் ஈடுபடாது பசி நீங்குதல் மாத்திரைக்குத்தன் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் நோக்குத் தப்பாது நிறைவெய்துதற் பொருட்டாம்` என்பது விளங்கும்.
பாடல் எண் : 7
இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த
கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின்
துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.
பொழிப்புரை :
இன்பத்தை நுகர்ந்து இனிதே வாழ்தற்கு உரியன வாகிய உயிர்கள் அவ்வாறின்றித் துன்பத்திற் கிடந்து துயர் உறுதலை அறிந்து அவை அத்துன்பத்தினின்றும் நீங்குதற்குரிய வழியை அமைத்துக் கொடுத்து, அதனாலே உறவாதற்குப் பொருந்தியவன் தானேயாய் நிற்கின்ற இறைவனைப் புகழ்ந்து போற்றி அதனால் தானும் என்றும் அழியாப் புகழைப் பெறுகின்ற அறிவன், ஐம்பொறிக ளாகிய பாம்புகள் ஐந்தும் தாம் படம் எடுத்து ஆடுகின்ற ஆட்டத்தை விடுத்துத் தமது புற்றிலே சென்று அடங்கிக் கிடக்கும்படி அடக்கி விடுவானாயின், அதன்பின், அவனும் துளையை உடைய அந்தப் புற்றுவழியாகவே இன்பம் பெற்று அமைதியை அடைவான்.
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_78.html
பாடல் எண் : 3
பதிலளிநீக்குநின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.
பொழிப்புரை :
`அடி தலை அறியும் திறம்` என்பது, `இறைவனது அடி தலைகளை அறிதல்` எனவும் பொருள் தரும். அம்முறையில் பார்க்கும்பொழுது, `அவனது அடி தலைகள் உயிர்களால் அறிய இயலாதவை` என்று அறிதலே மெய்யறிவாகும் அந்த உண்மையை அறிவிக்கவே அவன் மாலும், அயனும் போர் செய்தபொழுது அப்போரினால் மிக்க வலிமையையுடைய அசுரரும் - தேவருங்கூட அழியாது வாழ்தற்பொருட்டுத் தனது திருவடிகள் நிலம் முழுதும் கடந்து கீழாகவும், முடி அண்டங்களை யெல்லாம் கடந்து அவற்றிற்கு மேலாகவும் இருக்கும்படி நெடியதோர் உருவத்தோடு அவர்கட்கு இடையே தோன்றி நின்றான். (அவர்கள் அவனது அடியையும், முடியையும் தேடிக் காணாது இளைத்தனர். அங்ஙனமாகவே) உலகம் முழுவதையும் படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் முதல்வன் அவனே ஆகின்றான். அவன் `நந்தி` என்பதைத் தனது பெயராக உடையவன். அவனது திருவடியிணை தான் தலைமேல் உள்ளது.
பாடல் எண் : 10
நிலைபெற கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே.
பொழிப்புரை :
உலகனைத்தையும், `இவை சிலகாலம் நிலைபெற்றிருந்து, பின் `ஒடுங்குக` என்று சங்கற்பித்துப் படைத்த தலைவன் எங்கேயிருக்கின்றான்`` என்று அவனைக் காணத்தேடி என் உள்ளம் திகைத்தது. பின்பு அவன் தேட வேண்டாது எங்கும் நிறைந்து, உயிர்களின் புறத்தும், அவனைத்தேடித் திகைக்கும் உள்ளத்தும் `புறம், அகம்` என்னும் வேறுபாடின்றி விளங்குதலைக்கண்டு வியந்தேன்.
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_66.html