மழை

கிறிஸ்தவம் / யூதம் 

மழைக்காலத்தில் மழைக்காகக் கர்த்தரிடம் ஜெபம் செய். கர்த்தர் மின்னலை அனுப்புவார், மழை விழும். ஒவ்வொருவரின் வயலிலும் தேவன் செடிகளை வளரச் செய்வார். (சகரியா 10:1)

இஸ்லாம் 

மழை உருவாகும் விதம் 

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைகளைப் போன்ற மேகக் கூட்டங்களிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான் ; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. (அல்குர்ஆன் : 24:43)

மழையின் மூலமே உணவுகள்

இறைவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும் , வானத்தை விதானமாகவும் அமைத்து , வானத்தினின்றும் மழை பொழியச்செய்து ; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22)

அல்லாஹ்வின் அருளை கொண்டே விளைச்சல் 

(ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை) களை வெளிப்படுத்துகிறது ; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம் . (அல்குர்ஆன் : 7:58)

மழை நீரை சேகரிப்பதில்

இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. (அல்குர்ஆன் : 15:22)

நூஹ் (நபி) காலத்தில் ஈமான் கொண்டவர்கள் கப்பலில் உயிர் பிழைத்தும்.அநியாயம் செய்தவர்கள் கன மழையால் அழிந்ததும். (அல்குர்ஆன் : 11:44)

பூமியே ! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்  என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது .

மூஸா (நபி) சமூகத்தார்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை 

ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும் , இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக ) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர். (அல்குர்ஆன் : 7:133)

லூத் (நபி) சமூகத்தவர்களின் அழிவு 

இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே , எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் : 27:58)

மறுமைக்கு மழை ஓர் உவமை

மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களைக் கிளப்பி ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வறண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வறண்டு இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது (அல்குர்ஆன் : 35:9).

மழையின் படிப்பினைகளை புரிந்து அல்லாஹ்வை நாடுவோம்

எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம். (அல்குர்ஆன் : 6:6)

என்னுடைய சமூகத்தார்களே ! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள் ; இன்னும் ( தவ்பா செய்து ) அவன் பக்கமே மீளுங்கள் ; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான் ; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள் ” (என்றும் எச்சரித்துக் கூறினார்) - (அல்குர்ஆன் : 11:52)

மழை வேண்டி பிரார்த்தனை 

அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (ஸஹீஹ் புகாரி : 1012)

பெரு மழையால் பாதிக்கப்பட்டால் பிரார்த்திப்பது 

அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'கால்நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் ஒருவர் வந்து, 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)' என்று பிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது.  (ஸஹீஹ் புகாரி : 1017)

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் அக்குள் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு (துஆச் செய்யும் போது) தம் கைகளை உயர்த்தினார்கள்.  (ஸஹீஹ் புகாரி : 1030)

தமிழர் சமயம் 

மழையின் சிறப்பு

கொடை வள்ளல்களில் சிறந்த இடத்திலுள்ள பாரியின்கொடைத்தன்மையைக் கூறவந்த சுபிலர்.

''மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே'' (புறம் 107)

எனக் கூறிப்பிடுகிறார். வள்ளுவரும் மழையின் சிறப்பை பத்துகுறட்பாக்களில் கூறுகிறார். அவற்றில்,

விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே

பசும்புல் தலைகாண்ப தரிது. (குறள் 16)

எனப் புல் வாழ்வதற்குக்கூட மழை மிக இன்றியமையாதது எனகுறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப்பாரக்கத் தக்கது.

மழையும் அறிவியலும்

சூரிய வெப்பத்தால் நீரானது நீராவியாக மாறி மேலே சென்று மேகமாகமாறுகிறது. இந்தச் செயல் மீண்டும் மீண்டும் நடைபெறும்போதுமேகத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இந்நிலையில் மேகங்கள் காற்றின்போக்கிற்கேற்ப செல்கிறது. இவ்வாறு செல்கிற மேகங்களை மலைகள்தடுக்கின்றன் மலைகளில் காணப்படும் தாவரச் சூழல் காரணமாகஅப்பகுதி குளிர்ச்சியாகக் காணப்படுகிறது இதனால் மேகங்களாகக்காணப்படும் நீராவியானது குளிர்ச்சியடைந்து மழையாக பெய்கின்றது.

அதேபோல ஒரு இரத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது அங்குள்ளவெப்பமானக் காற்று மேல்நோக்கி செல்கைறது அவ்வெற்றிடத்தைநிரப்புவதற்கு குளிர்ந்த காற்று வந்து சேர்கின்றது. இவ்வாறு குளிர்க்காற்றுவருவதும் மேகங்கள் மழைபொழிவதற்குக் காரணமாகிறது. காடுகள்மிகவும் அதிகாம இருப்பதாலும் சுற்றுசூழல் குளிர்விக்கப் பட்டுமழைப்பெய்கின்றது. இவையாவும் மழை பொழிவிற்கான அறிவியல்காரணங்களாகும்.

இலக்கியமும் மழையும்

மழை உருவாக்கத்திற்குரிய நீரில் பெரும் பகுதி நீண்டு விரிந்த கடலில்இருந்து பெறப்படுகிறது. ‘’ பெரும்பாகமான தண்ணீர் கடலில் இருந்துசூரியனால் நீராக்கப்படுகிறது. இந்த நீராவியை, பூமியின் காற்றுமண்டலத்தில் வீசிக்கொண்டிருக்கும் காற்றோட்டங்கள், நிலப்பரப்புக்குஇழுத்து வருகின்றன’’

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்

காலை வந்தன்றால் காரே (அகம் 183)

என்று குறிப்பிடப்படுகின்றது. பெருங்கடலில் முகந்து கொள்ளப்படும் நீர்ஆவியாகி மேலே செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும் நீர் மேகத்தின்அடர்த்தியைப் பொறுத்து அதுமிதந்து செல்லும் உயரம் அமைகிறது.

பெயில் உலர்ந்து எழுந்த பொங்கல் வெண்மழை [நெடு 20]

அதிக நீர் கொள்ளாத மேகம் மேலே உயர்ந்து செல்கின்றது. அதனால்மேகத்தில் அதிகளவு நீர்த்தன்மை இருக்கின்ற மேகம் உயர்ந்து செல்லாது,தாழ்ந்து செல்வதை,’’ கடுஞ்சூல் மகளிர்’’ போன்று இருப்பதாகக்குறுந்தொகை குறிப்பிடுகிறது.

காற்றும் மழையும்

மழைபொழிதலில் காற்றின் பங்கு மிக முக்கியமானஇடத்தைப்பெறுகின்றது. நீராவி மேகமாக மாறிய நிலையில் அதனைப்பிற இடங்களுக்கு அடித்துசெல்கின்ற பணியைக் காற்று செல்கிறது.இல்லையெனில் பல பகுதிகளில் மழை இல்லாமல் போய்விடும்.

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே ( ஐங். 492)

எனக்கார்கால மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறதுவிளக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப்பருவக்காற்று காலமே மழைப்பொழிவதற்குரிய காலமாகும்.இக்காலத்தில் காற்று வடக்கிலிருந்து வீசுகின்றது அது பருவ சுழற்சியின்காரணத்தாலும் தமிழகம் புவியின் நடுக்கோட்டின் கீழ் இருப்பதனாலும்கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசுகிறது இதை நன்குணர்ந்த பண்டைத்தமிழர்கள் மேகம் வலமாகச் சுற்றுவதை

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர

ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம் (ஐங். 469)

என்றும்

கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்

மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு (அகம். 43)

என்றும் சுட்டப்படுகின்றன. காற்று வலம் நோக்கி செல்வதற்கானகாரணத்தை மிகத்தெளிவாக பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது.

நனந்தலை உலகம் வளையி நேமியொடு

வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை (முல்லை. 1-2)

என்றும் முல்லைப் பாட்டு குறிப்பிடுகின்றது.

இதனை வலியுறுத்தும் விதமாக

பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி

தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ (அகம் 840

எனக் குறிப்பிடுகின்றது. காற்றின் போக்கினை தெளிவாக உணர்ந்திருந்தகாரணத்தால் அக்கால தமிழ் மக்கள் கடல் தொழில் செய்வதிலும்வல்லவர்களாக இருந்தனர். கீழ்காற்று கடல் தொழில் செய்வதற்குஏற்றதல்ல என்பதும் இக்காலத்தில் கடலிலிருந்து காற்று கரை நோக்கி வீசுவதால் பாய்மரத்தின் உதவியால் படகை கடலுக்குள் செலுத்தமுடியாது என்பதும் இக்காலம் மழைக்காலம் என்றும் அவர்கள் அறிந்துவைத்திருந்தனர்.

கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த [ நற். 140]

என்று நற்றிணை குறிப்பிடுவதையும் நாம் இங்கு நினைத்துப்பார்க்கத் தக்கதாகும்.

மலையும் மழையும்

காற்றுக்களால் அடித்துச் செல்லப்படும் மேகங்களை மலைகள்தடுக்கின்றன இவ்வாறு தடுக்கப்படும் மேகங்கள் அம்மலைகளில்காணப்படும் தாவரங்களின் குளிர்ச்சியால் நீரின் அடர்த்திஅதிகமாகின்றன. காடுகளில் வளர்ந்திருக்கும் பெருமரங்கள்தாவரங்கள் எல்லாமே அதிகளவு மழை நீரை வேர்களீன்மூலமாக உறிஞ்சுகினறன. ஆனால் மிக குறைந்த அளவுதண்ணீரையே தங்கள் உணவை தயாரிக்க பயன் படுகின்றன.இதனால் தான் மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்கள் எப்போதும்குளிர்ச்சியாக இருக்கும்.ஏனென்றால் எஞ்சிய பெருமளவு நீர்இலைத்துளைகளின் வழியாக நீராவியாக காற்று மண்டலத்தில்மீண்டும் செலுத்தப்படுகிறது.இந்த கருத்தை வலியுறுத்தும்விதமாக நற்றிணைப் பாடல் ஒன்று உள்ளது

நளி கடல் முகந்து செறிதக இருளி

கனை பெயல் பொழிந்து..(நற்றிணை 289)

இப்பாடல் அடர்த்தி அதிகமாகி மழைப் பொழிவதைக்காட்டுகிறது. அடர்த்தி அதிகரித்தல் என்பதை செறிதக எனும்சொல்லால் சுட்டபடுகிறது. காற்று வீசும் திசைக்கு குறுக்காகஉள்ள மலைகள் மழையைத் தடுப்பதை கூர்ந்து கவனித்தபுலவர்கள் தங்கள் பாடல்களில் அதனை பதிவு செய்துள்ளனர்.

கருவி வானம் தண்டளி தலைஇய

வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய .. [பதி. 31]

என்றும்

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்

நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி

தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து. (நற்றிணை 261)

என்றும் குறிப்பிடுகின்றன. இதற்கு மருதலையாக மலைகள்மேகங்களை தடுத்து சிகரங்களில் மழையை பெய்விக்கின்றன.இவ்வாறு காற்றினால் தள்ளப்படும் மேகம் மலையில் மழைப்பொழிவதை

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி

விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி

தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்.. [ பதி . 12]

எனும் பாடல் வரிகள் தெளிவாக விளக்குகின்றன.

சங்க இலக்கியங்கள் என்பவை காலத்தின் பெட்டகங்களாகபண்டை தமிழரின் அழகிய வாழ்வின் அடையாளங்களாக,அறிவியல் சிந்தனைகளின் புதையல்களாகக் காணப்படுகின்றன.அவ்வகையில் மழைக்கான அறிகுறிகளையும் அதற்கானக்காரணங்களையும் பண்டை தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதைஇகட்டுரையின் வழி அறிய முடிகின்றது.


12 கருத்துகள்:

  1. சங்க இலக்கியத்தில் மழை மற்றும் நீர் மேலாண்மை

    கெ. குமார் உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை மாநிலக் கல்லூரித்
    தன்னாட்சிச் சேப்பாக்கம் சென்னை 600005.

    சங்ககாலம் என்பது கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றாண்டு
    வரையான காலகட்டமாகும். கிரேக்க நாகரிகமும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தைச்
    சேர்ந்தது தான் ஆகும். கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன்
    அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் மற்றும் அதற்கு முன்பு இருந்த
    தேல்ஸ் ஆகிய கிரேக்க அறிஞர்கள் நீரியல் சுழற்சி பற்றிய தெளிவற்ற
    சிந்தனைப் போக்கைக் கொண்டிருந்தனர்.
    ‘கடலின் அடித்தளத்தில் நீர் உற்பத்தியாகிறது. கடலில் உள்ள நீர் மண்ணால்
    உறிஞ்சப்பட்டு பின் அது மலைகளில் இருந்து ஆறாக வெளிப்படுகிறது’.
    என்கிறார் தேல்ஸ். ‘குளிர்ச்சியான காலநிலைகளில் காற்று உறைந்து மழையாகப்
    பெய்கிறது’. என்கிறார் அரிஸ்டாட்டில்.
    ஆனால் அதே காலகட்டத்தைச் சேர்ந்த சங்ககால அறிஞர்கள் நீரியியல் சுழற்சி
    குறித்துத் தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தனர். இரண்டாம் கரிகாலனைப்
    பாடிய கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் தனது
    பட்டினப்பாலையில்,
    “வான்முகந்த நீர் மழை பொழியவும்
    மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
    மாரி பெய்யும் பருவம் போல்
    நீரின்றும் நிலத்து ஏற்றவும்
    நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
    அளந்து அறியாப் பல பண்டம்.” என்கிறார்.
    -பட்டினப்பாலை, 126-131.
    அதாவது ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது.
    மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடி கடலில் கலக்கிறது. அதுபோன்று
    புகார்த்துறையில் ஒருபக்கம் கப்பல்களில் இருந்து பல பண்டங்கள் வரிசையாக
    நிலத்துக்கு இறக்கப்படுகின்றன. மறுபக்கம் நிலத்திலிருந்து பல பண்டங்கள்
    வரிசையாக கப்பலுக்கு ஏற்றப்படுகின்றன என்கிறது இப்பாடல். இப்பாடலில்
    புலவர் நீரியல் சுழற்சியை புகார்த் துறையின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு
    ஒப்பிடுகிறார். நீரியல் சுழற்சி பற்றிய தெளிந்த சிந்தனை பழந்தமிழர்களிடம்
    இருந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது.
    பனிகடல் பருகி வலன்ஏர்பு
    கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
    பெரும்பெயல் பொழிந்த
    - முல்லைப்பாட்டு 1-6
    இப்பாடலில் மேகத்தின் இயக்கம் அறிவியல் முறையில் விளக்கப்பட்டுள்ளது.
    கடலில் நீர் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது நெடுந்தொலைவு பயணித்து
    மலையில் தங்கி பெருமழையை பொழிந்தது
    பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
    காலை வந்தன்றால் காரே
    - அகநானுறு183
    குளிர்ந்த கடலில் நீரை மேகங்கள் குடிப்பது பற்றி வருகிறது
    -----------
    இரு விசும்பு அதிர மின்னி
    கருவி மாமழை கடல் முகந்தனவே
    - நற்றிணை 329:11
    கருமையான வானம் பெரும் சத்தத்துடன் இடி இடித்து மின்னி மழைக்குரிய மேகக்
    கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்துவரும் கார்காலம்.
    (அதாவது மேகம் கடலில் இருந்து நீரை எடுத்து மழையாக பொழியும் மழைக்காலம்)
    ---------------
    மின்னு வசிபு
    அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
    கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
    - நற்றிணை 228:1
    மின்னலுடன் முழங்கும் பெரும் சத்தத்துடன் நீர் நிறைந்த மேகம்
    பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையை கண்தெரியாத இருளடைந்த நடு
    இரவில் பொழியும்.
    --------------------
    இன் நீர்த்
    தடங் கடல் வாயின் உண்டு சில் நீர்
    - நற்றிணை 115:3
    மேகங்கள் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு, எஞ்சிய கடலின்
    நீர் சிறிது என்னும்படி கொணர்ந்தன.
    (இது கடல் நீரை மேகங்கள் கொள்வதை சற்று மிகைப்படுத்திக் கூறுகிறது.
    அதாவது பாதிக்கும் மேல் உறிஞ்சிவிட்டதாம்!)
    -----------
    நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே
    - ஐங்குறுநூறு 492
    மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை கூறுகிறது
    -----------
    மேகங்களின் நகர்வு பற்றியும் குறித்துள்ளனர்,
    வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
    ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்
    - ஐங்குறுநூறு 469
    பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
    தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ
    - அகநானூறு 840
    கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
    - நற்றிணை 140
    கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
    மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
    - அகநானூறு 43
    போன்ற பாடல்கள் கடலில் உருவான மழைமேகம் மேற்கு நோக்கி (வலப்பக்கமாக)
    நகர்வதாக குறித்துள்ளனர்.
    அதாவது வடகிழக்குப் பருவக்காற்று பற்றி கூறப்பட்டுள்ளது.
    --------------
    நளி கடல் முகந்து செறிதக இருளி
    கனை பெயல் பொழிந்து
    - நற்றிணை 289
    கடல் நீரைக் குடித்து செறிவு (அடர்த்தி) அதிகமான மேகம் மழை பொழிவதாகக்
    கூறுகிறது இப்பாடல்
    -------------
    கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
    விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
    செழும்பல் குன்றம் நோக்கிப்
    பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
    - குறுந்தொகை - 287
    அதாவது நிறைமாத சூலி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல்
    தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கி செல்கின்றன என்று கூறுகிறது.
    ----------

    பதிலளிநீக்கு

  2. வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
    நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
    தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
    - நற்றிணை 261
    வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
    விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
    தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
    - பதிற்றுப்பத்து 12
    மேகங்கள் மலையில் மோதி மழைபொழிவதைக் கூறுகிறது
    ----------
    பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
    எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
    - அகநானுறு 217
    பெய்து தீர்த்த மேகம் வெண்மையான மென்பஞ்சுபோல ஆகிவிடும் என்று கூறுகிறது.
    -----------
    மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சங்ககாலத்திலேயே தமிழர்கள் அனைவரும் மழை
    எவ்வாறு பொழிகிறது என்று அறிந்திருந்ததை உணரமுடிகிறது.
    பெயிலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பிற் றுவலை கற்ப
    - நெடுநெல்வாடை 20
    மழை பெய்துவிட்ட வெண்மையான மேகம் மேலெழுந்து சாரலை ஏற்படுத்துவது பற்றி வருகிறது
    -----------------------
    மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,
    பொய்யா எழிலி பெய்விட நோக்கி
    முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
    சிறு நுண் ணெறும்பின்
    - புறநானூறு 173
    எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச்
    சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்
    -----------
    இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
    - புறநானூறு 35:7
    தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
    - புறம் 117:2
    வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
    திசை திரிந்து தெற்கு ஏகினும்
    தற்பாடிய தனி உணவில்
    புட்டேம்பப் புயன்மாறி
    வான்பொய்ப்பினும் தான் பொய்யா
    மலைத்தலைய கடற்காவிரி
    - பட்டினப்பாலை 1-6
    மேற்கண்டவை உணர்த்தும் பொருள் யாதெனில்,
    வானத்தில் வெள்ளி கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும்
    தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும்
    (ஆனாலும் காவிரி பொய்க்காது)
    ----------

    பதிலளிநீக்கு

  3. அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
    மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
    - பதிற்றுப்பத்து 13:25
    செவ்வாய்க் கோள் சென்ற வழியில் வெள்ளி கோள் செல்லாததால் மழை தேவையான
    இடங்களிலெல்லாம் உன் நாட்டில் மழை பெய்கிறது.
    (அதாவது வானில் கோள்கள் நகர்வு மூலம் மழையை கணித்துள்ளனர்)
    மனித வாழ்க்கையில் இயற்கைக்கு நிகராக இவ்வுலகில் ஒன்றுமில்லை என்பதை
    உணரமுடிகின்றன. நீரின் தன்மையைப் பற்றி பல்வேறு பாடல்களின்
    மூலமாகப்புலவர் பெருமக்கள் கூறியுள்ளார்கள். தம் பாடலடிகளின் மூலம் கூறிய
    செய்திகளை சங்க இலக்கிய நூல்கள் மூலமாகக் கூறியுள்ளார்கள்.
    பருவநிலையேற்றப் போல நீரின் தேக்கத்தைப் பற்றியும் இயற்யையாக உருவாக்கும்
    மழை நீர் தன்மையையும் பற்றியும் மனிதனின் ஆக்கப்பூர்மான ஓவ்வொரு
    செயலுக்கு இன்றியாமையாக ஒன்றாக நீர் அமைந்தது.
    சங்க காலத்தில் வாழ்ந்த நம் தமிழ் மக்கள் நீரின் இன்றியமையாமையை உணர்ந்து
    அவற்றைச் சேமித்து வந்துள்ளனர். திருவள்ளுவரும்
    “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு” (1)
    என்று நீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
    மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய ஓர் அடிப்படையான பொருள் தண்ணீர்.
    பயிர்வளம், இயற்கைவளம், விலங்குவளம் என்பனவற்றைச் செழிக்கச் செய்வதுடன்
    மனிதனின் அன்றாடத் தேவையில் தவிர்க்க இயலாத ஒன்றாகத் தண்ணீர் இடம்
    பெற்றுள்ளது.
    மழையின் வாயிலாகவும், ஆறுகளில் இருந்தும், நிலத்தினுள் இருந்தும் மனித
    சமூகம் நீரைப் பெற்று வருகிறது. ஆனால் இது திடீரென்று நிகழவில்லை.
    தொடக்கத்தில் இயற்கையாக ஓடும் காட்டோடைகளில் இருந்தும், ஆறுகளில்
    இருந்தும் மட்டுமே மனித சமூகம் தண்ணீரைப் பெற்று வந்தது. நீரைத்
    தேக்கிவைக்கவும், திசை திருப்பவும், பூமியின் உள்ளே இருந்து வெளிக்
    கொணரவும் படிப்படியாகக் கற்றறிந்தபோதுதான் மனிதசமூகம் வளர்ச்சி பெற்றது.
    இம்முயற்சியில் ஏற்பட்ட வெற்றியே அச்சமூகத்தின் முன்னேற்றத்தை முடிவு
    செய்தது. அத்துடன் அதன் நாகரிகம் பண்பாடு என்பனவற்றை வளர்த்தெடுத்தது.
    உலகின் தொன்மையான நாகரிகங்கள் ஆற்றங்கரை நாகரிகங்களாகவே இருந்துள்ளன.
    தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. பரிபாடலில் வையை ஆறும், சிலப்பதி
    காரத்தில் காவிரி ஆறும் அழகுற இடம்பெற்றுள்ளன. ‘கான்யாறு’ ‘விரிபுனல்’
    என்று ஆறுகளுக்குப் பெயரிட்டனர். தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைத்
    தேக்கி வைக்கும் முறை தமிழக வரலாற்றில் பழமையான ஒன்று. இத்தகைய
    நீர்நிலைகள், குளம், இலஞ்சி, பொய்கை, ஏரி, வாவி, கூவல், குழி எனப்
    பல்வேறு பெயர்களில் பண்டைத் தமிழர்கள் அழைத் துள்ளனர்.

    பதிலளிநீக்கு
  4. கிணறு வெட்டுதல்
    தொடர்பான நூல் ‘கூவநூல்’ எனப்பட்டது. இந்நூல் வல்லோர் ‘கூவநூலோர்’
    எனப்பட்டனர். வேளாண்மைப் பெருக்கத்திற்கு, காடுகளை அழிப்பதும் குளங்களை
    வெட்டுவதும் இன்றியமையாதன என்பதனைப் பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.
    இவ்வுண்மையை,
    காடு கொன்று நாடாக்கி
    குளம் தொட்டு வளம் பெருக்கி
    என்ற பட்டினப்பாலைத் தொடர்களால் (283-284) அறியமுடிகிறது. மன்னனது
    கடமைகளுள் ஒன்றாக நீரைத் தேக்குவதும், திசை திருப்பலும் இடம்பெற்றன.
    குடபுலவியனார் என்ற கவிஞர்
    நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
    உடம்பும் உயிரும் படைத் திசினோரே
    என்று பாடியுள்ளார் (புறநானூறு : 18:22-23). நிலம் திருத்தி, நீரின்
    துணையால் வேளாண்மை செய்வோர் உயிரும், உடலும் படைத்துக்காப்போர் என்பதே
    இத்தொடரின் பொருளாகும்.
    மழையைக் குறிக்கும் சொல்ல் மழை, பெயல், கார், மாரி, தூறல், துவலை, சாரல்,
    ஆலி ஆகியனவாகும். மழை என்ற சொல் பல்வேறு அடைமொழிகளோடு புலவர்களால்
    பயன்படுத்தப்பட்டுள்ளது. மழை'. அணி மழை", அழி மழை", ஆலித் தண்மழை". (இடி)
    மழை", ஏதில பெய்ம் மழை". கணமழை', கமஞ்சூல் மாமழை'. கலி மழை'. கழி மழை”,
    கார் மழை". கார் எதிர் கிளை மழை". கருவி மா மழை", கொண்டல் வான்மழை".
    தண்மழை தொய்யல் மா மழை”, தொழில் மழை". நள்ளென் யாமத்து மழை". நாள் மழை"
    நுண்மழை". படு மழை", பழ மழை (வழக்கமாகப் பொய்யும் மழை", பெருமழை" மாமழை".
    மாரி மா மழை". வள மழை", வீழ்ந்த மா மழை ஆகியன ஆகும். பெயல் என்ற மழையைக்
    குறிக்கும் சொல் பல்வேறு அடைமொழிகளோடு அதிர் பெயல்". அழி பெயல்", ஆர்
    பெயல்", ஆர் தளி பொழிந்த வார் பெயல்" இகு பெயல்", இமிழ் பெயல்", இரவுப்
    பெயல்", உளர் பெயல்", உரவுப் பெயல்", உறு பெயல்", எல்லுப் பெயல்", கதழ்
    பெயல்", கனைப்பெயல்", கார் பெயல்", தண் பெயல்", தலைப் பெயல்". தாழ்
    பெயல்", துள்ளுப் பெயல்", துளி தலைக் கொண்ட நளி பெயல்", துளி பெயல்",
    நடுநாள் களை பெயல்", பாட்டம்", பருஉப்பெயல்", பெயற் கடைநாளி", பெயல்",
    பெயல் கால்", பெயலும் ஓவாது", பொங்கு பெயல்" பெரும் பெயல்", மலி பெயல்",
    மால் பெயல்", மிகு பெயல்". வண் பெயல்". வம்பப் பெரும்பெயல்" எனப்
    பயன்படுத்தப்பட்டுள்ளது. மழையைக் குறிக்கும் மற்றொரு சொல்லான கார் எனும்
    சொல்
    கார்". கார்பயம் பொழிந்த நீர் திகழ் காலை". தளி தரு தண் கார்" எனப்
    பல்வேறு அடைமொழிகளோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. மழையைக் குறிக்கும் வேறு
    ஒரு சொல்லான துவலை, துவலை தூவ", தூஉம் துவலை", தூற்றும் திவலை" எனவும்,
    உறை என்ற சொல்
    பேர் உறை, உறை வீழ் ஆ m ", கதழ் உறை", பரூஉறைப் பல் துளி சிதறி', உறை".
    மாரிப் பேர்உறை" என அடைமொழிகளோடு வழங்கப்பட்டுள்ளன. மாரி என்ற மழையைக்
    குறிக்கும் சொல்
    கால மாரி". காலொடு பட்ட மாரி", பட்ட மாரி", பெருந்தணி மாரி", மாரி", வம்ப
    மாரி', வரையா மரபின் மாரி". விழுந்த மாரி" எனப் பல்வேறு அடைமொழிகளோடு
    பயன்படுத்தப்பட்டுள்ளது. சாரல் என்ற சொல்
    தளிபொழி சாரல்" எனவும் துளி என்ற சொல் அழிதுளி", ஆலி அழிதுளி", கனை துளி
    தலைஇ. குறுந் துளி". குரூஉத்துளி, துளி செரிந்தாங்கு", தூத்துளி', மலி
    துளி". தூவல்", மயங்கு துளி என அடைமொழிகளோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. மழை
    பெய்து முடிந்த நிலையைக் குறிக்கும் வண்ணம் மழை கழி விசும்பு", மழை கணி
    மாறிய, மழை பெயல் மறந்த" ஆகிய குறிப்புக்களும், தொலைவில் பெய்கின்ற
    மழையைக் குறிக்கும் வண்ணம் குறுந்தொகையில் ஒரு பாடலும் உள்ளன”. சங்க
    இலக்கியப் புலவர்கள் மனிதனின் அகவாழ்வையும் புற வாழ்வையும் பாடுவதையே
    முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்றாலும் நுணுக்கமான அறிவியற்
    கருத்துக்களும் பாடல்களில் இடம்பெறும் வண்ணம்
    பாடியுள்ளனர். இயற்கையோடு இயைந்த அக வாழ்வினைப் பாடிய இப்புலவர்களின்
    பாடல்களில் மழை பற்றிய இன்றைய வானிலை அறிவியல் கருத்துகளோடு
    ஒப்பிடக்கூடிய பல செய்திகள் இடம் பெற்றிருப்பதே இதற்குச் சான்றாகும்.
    கடல், ஏரிகள் முதலிய நீர்நிலைகளிலிருந்து நீர், சூரிய வெப்பத்தால்
    ஆவியாகிறது. அ வியான நீர் வளி மண்டலத்தின் மேலே செல்கிறது. மேலே
    செல்லச்செல்ல, நீராவி குளிரடைந்து, மேகமாக மாறி, மன பாக, ஆலங்கட்டி
    மழையாகப் பெய்கிறது. நீர் நிலைகளிலிருந்து நீர் ஆவியாவதும் பின்னர்
    மழையாகப் பொழிந்து ஆறுகளாக உருவெடுத்து மீண்டும் நீர் கடலிலோ ஏரிகளிலோ
    கலத்தலையே நீர் சுழற்சி ( hydrological cycle) என்கிறோம். இத்தகைய மழை
    பொழிதலின் இயற்பியல் அடிப்படை சங்க இலக்கியங்களில்
    குறிப்பிடப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு

  5. நற்றிணையில் இடம்பெறும் முல்லைத்திணைப் பாடலொன்றில் மேகம் கடலிலிருந்து
    நீர் முகந்து மழையாகப் பொழிவதை மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மாமழை" என
    இளந்திரையனாாரும் இன் நீர்த் தடங் கடல் வாயில் உண்டு, சில்நீர் என " எனப்
    பெயர் குறிப்பிடப்படாத புலவரும் வானம்
    நளி கடல் முகந்து, செறிதக இருளி கனை பெயல் பொழிந்து, 99 என மருங்கூர்ப்
    பட்டினத்துச் சேந்தன் குமரனாரும் பாடியுள்ளனர். இதே கருத்துப்படக்
    குறிஞ்சித்திணைப் பாடலொன்றில் 100 மாக்கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
    தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய் " எனப் பெருங்குன்றூர்க்கிழார்
    குறிப்பிட்டுள்ளார்.
    பன்னிரு திங்கள் வளர்ந்து நிறைந்த கருப்பத்தைப் பொறுத்தலால், தளர்ந்து
    நடக்கின்ற, வயா நோயினால் பசிய புளியின் வேட்கையுடைய மகளிரைப் போல, கடல்
    நீரை முகந்துகொண்டு, விண்ணில் ஏற முடியாமல் பொறையைத் தாங்கிக் கடலை
    அடுத்து உள்ள செழுமையான பல மலைகளைக் கண்டு, பெரிய ஆரவாரத்தையுடைய மேகம்
    எழுந்து வரும் கார்காலம் பற்றி முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசைஇ
    ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு,
    விசும்பு இவர் கல்லாது தாங்குபு புணரி செழும்பல் குன்றம் நோக்கி
    பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே" எனக்
    குறுந்தொகையில் முல்லைத்திணைப் பாடலொன்றில் கச்சிப்பேட்டு
    நன்னாகையார் குறிப்பிடுகிறார். தென்மேற்குப் பருவமழைக் காலத்தில்
    மேகங்கள் அரபிக் கடலுக்கு அருகே உள்ள பல மலைகளில் ஏறி மழை பொழிவதை
    இப்பாடல் சுட்டிக்காட்டுவதாகக் கொள்ளலாம்.
    கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் பற்றிப் பத்துப்பாட்டின் ஐந்தாம்பத்தில்
    பாடியுள்ள பரணர் கடலின் தன்மையை விளக்குமிடத்து மேகம் கடலினின்று நீர்
    முகந்து கொள்ளுதலை மழை கொளக் குறையாது, புனல் புக நிறையாது.

    பதிலளிநீக்கு
  6. விலங்கு வளி
    கடவும் துளங்கு இருங் கமஞ் சூல்" எனக் குறிப்பிடுகிறார்.
    மேகம் நீர் நிறைந்த கடலில் உள்ள நீரை எல்லாம் முகந்து கொண்டு விண்ணில்
    போய் எங்கும் பரவி, நீர் நிறைந்ததால் ததும்பி சுமந்து நிற்கும் தம் பாரம்
    தீர்ந்து இளைப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுப் பெய்வது போல மழையைப்
    பெய்ததையும் அவ்வாறு பெய்த மழை நீர் பெருவெள்ளமாகி நிலத்தை மறைத்து
    மூழ்கச்செய்யுமாறு எங்கும் ஓடி நிறைந்தது பற்றியும், நிறை கடல் முகந்து
    உராய், நிறைந்து, நீர் துளம்பும் தம் பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று
    வானம்; நிலம் மறைவது போல் மலிர் பினல் தலைத் தலைஇ .” பரிபாடலில்
    நல்லந்துவனார் குறிப்பிட்டுள்ளார். மேகமானது முழங்கும் அலைகளையும் கரிய
    நிறத்தையும் குளர்ச்சியையும் உடைய பெரிய கடல் வற்றிப்போகுமாறு அதன் நீரை
    நேராக முகந்து கொண்டு வந்தது. வலிமை மிக்க இடி சினத்துடன் முழங்கும்
    படியாக செய்தது. நீரின்பாரம் தாங்க முடியாமல் தன்னுடைய வயிறு கிழிந்தது
    போலவும், கரையுடைந்த குளத்தின் நீர் குளத்தினைவிட்டு வெளியேறுவதைப்
    போலவும் மேகம் பெருமழையைப் பெய்தது. சையமலையின் உச்சியில் பெய்யும்
    அப்பெருமழையினால் ஓடும் நீர் திரண்டு, வெண்மை அருவிகளின் நீராகப் பெருகி
    வீழ்ந்து, ஆற்றின் நீராகிப் பெருவெள்ளமாக வந்தது. இத்தகைய வையையின்
    நீர்ப்பெருக்கு உயிர்களுக்கு எல்லா நன்மைகளையும் விளைவித்து,
    மென்புலமாகிய மருத நிலத்தின் இயற்கை அழகினை மிகுத்து, குறிஞ்சி முதலிய
    வன்புலங்களின் வையை வளத்தைப்பெருக்கி வையை ஓடிவந்த இக்காட்சிடை பாடும்
    புலவர் மையோடக் கோவனாரின் பாடலில், திரை இரும் பனிப்பௌவம் செவ்விதா அற
    முகந்து, உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது, கரை உடை குளமௌக்
    கழன்று, வாள் வயிள அழிபு, வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி- இரவுஇருள்
    பகலாக, இடம் அரிது செவு என்னாது. வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
    நிலன் உற நிமிர் தானை நெடுநிரை நிவப்பு அன்ன- பெயலான் பொலிந்து,
    பெரும்புனல் பலநந்த, நலன் நந்த, நாடு அணி நந்த, புலன் நந்த, வந்தன்று,
    வையைப்புனல" மழை பொழிதலின் இயற்பியல் அடிப்படையோடு பலத்த மழையினைப்
    பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.
    தலைவன் தலைவியை மணந்து செல்லும் கருத்தின்றி நாளும் இரவுக் குறியிடத்து
    வந்து மீளுகிறான். ஒரு நாள் இரவில் சிறைப்புறமாகத் தலைவன் வந்து
    நிற்றலைக் கண்ட தோழி தலைவன் கேட்குமாறு மேகத்துக்குச் சொல்வாள் போல,
    தலைவனுக்குத் தலைவியை மணந்துகொள்ள அறிவுறுத்துகிறாள். அப்போது 25.
    பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ" எனப் பெருங்கடலிலிருந்து நீர்
    முகந்த மேகம் பற்றி அத்தோழியின் கூற்றாக வீரைவெளியன் தித்தனார் என்ற
    புலவர் அகநானூற்றில் குறிப்பிடுகிறார். இதே போன்ற மற்றொரு காட்சியில்
    தலைவியின் பிரிவாற்றாமைத் துன்பத்தைச் சிறைப்புறமாக உள்ள தலைவனுக்கு
    உணர்த்தும் தோழி குணகடல் முகந்த கொள்ளை வானம் எனக் கீழைக் கடலான
    வங்கக்கடலில் நீர் முகந்து மழை பொழியும் மேகங்களைப்பற்றிப் பாடுவதாக
    அகநானூற்றில் கபிலர் ஒரு காட்சியினைப் புனைந்துள்ளார். தற்போதைய சிவகங்கை
    மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகே உள்ள பிரான்மலை என
    வழங்கப்படும் பறம்புமலையில் பாரி மன்னருடன் வாழ்ந்த கபிலர் குணகடல்
    முகந்த கொள்ளை வானம் பற்றிப் பாடுவது அவரின் வடகிழக்குப் பருவமழை பற்றிய
    அறிவைப் புலப்படுத்துகிறது. வளமிகு மருதநில ஊரினைப் பகைவர் திறையாகக்
    கொடுக்க முன்வந்தபோதும் அதனை ஏற்காமல் போர்த்தொழில் செய்யும் அரசனது
    பாசறையில் உள்ள தலைவன் கார் காலத்தால் அழகுடைய முல்லை நில
    ஊரின்கண் உள்ள தலைவியை நினைந்து பாடுகையில், பணை முழங்கு எழிலி பௌவம்
    வாங்கி தாழ் பெயற் பெருநீர், வலன் ஏர்பு வளைஇ . மாதிரம் புதைப்ப
    பொழிதலின் 107 எனக் கடல் நீரை முகந்து கொண்டு திசையெல்லாம் மறையுமாறு
    மழையைப் பொழிவதை நினைப்பதனை மதுரை எழுத்தாளன் என்ற புலவர் அகநானூற்றில்
    பாடுகிறார். போர்த் தொழிலை மேற்கொண்டு சென்ற தலைவன் பகை வென்று வாகை
    சூடியபின் ஊருக்குத் திரும்பக் கருதி தேர்ப்பாகனைக் கார்காலம்
    வந்துவிட்டது எனவும் விரைந்து தேரினைச் செலுத்துமாறும் கூறுகையில்,
    பாடுஇமிழ் கடலின் எழுந்த சும்மையோடு பெருங்களிற்றுத் தடக்கை புரையக்கால்
    வீழ்த்து" 100 என ஒலி முழங்குகின்ற கடலின் நீரைப் பருகி எழுந்து
    மேகத்தைப் பற்றித் தலைவன் குறிப்பிடுவதாக மதுரைக்
    அமைத்துள்ளார். முழக்கம் செய்யும் கூத்தனார் பாடலை
    இத்தகைய இடைக்காடனார் திசையெல்லாம் சென்று இருண்டு மழையைப் பொழியும்
    மேகங்களைப் பற்றிக்
    குறிப்பிடுகிறார்.

    பதிலளிநீக்கு
  7. அகநானூற்றின் பாலைத்திணைப் பாடலொன்றில் மதுரையாசிரியர்
    நல்லந்துவனார் கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை" மேகங்கள் கடல் நீரை
    முகந்துகொண்டு உடையனவாகக் காட்சி தருவதைப் பாடியுள்ளார். பெருங்கூட்டமாக
    மேகங்கள் திரண்டு, சுருண்டு வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய
    துறைகளையும் உடைய பெருங்கடலினுள் சென்றதையும் அங்கு நீரினை மிகுதியாக
    உண்டதையும் உண்ட பின்னர் மேற்கு திசையில் சூலுற்ற யானைக் காட்சியினைப்
    மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி" என
    பாடும் மற்றொரு நிறைந்த எழுந்து கூட்டம் ஒலியுடன் மழையைப்
    பொழிவித்தற்குக் கார்காலம் என்பதைப் பாட வந்த கருவூர்க் கலிங்கத்தார்
    அகநானூற்றுப் மாக்கடல் சூலினை போல இடந்தோறும் பாடு ஆன்று பனித்துடிறப்
    பெருங்கடல் இறந்து, நீர்பருகி
    குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்குஏர்பு, வயவுப்பிடி இனத்தின்
    வயின்வயின் தோன்றி இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி, காலை
    வந்தென்றால் காரே- மாலைக் ) நீர் பாடலில் முகந்து, வந்து காலையே என
    தோன்றி வந்துவிட்டது என மழையை சுட்டியுள்ளார்.
    குமணனைப் பாடிப் பகடு பெற்றப் பெருஞ்சித்திரனார் ஒலிக்கின்ற, பெரிய
    பரப்பினையுடைய கடலிலிருந்து நீரை முகந்துகொண்டு, மலை போன்ற தோற்றமுடைய
    மேகம் இடியுடன் கூடிய மழையைப் பொழிவித்தது பற்றிப் புறநானூற்றில்
    பொழிதலின் நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு, ஈண்டு செலல் கொண்மூ
    வேண்டுவயின் குழிஇ, பெருமலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு. உரும் உரறு
    கருவியோடு, பெயல் கடன் இறுத்து, வளமழை இயற்பியல் எனப் பாடியுள்ளார்.

    பதிலளிநீக்கு

  8. அடிப்படையை
    கடல்நீரை முகந்ததனால் சூல் கொண்டு எழுந்த மேகங்கள், ஞாயிறும் திங்களும்
    தோன்றுகின்ற விண்ணிடத்தே நிறைந்து நின்று மழை பொழிந்தன என்பதனை கார்கோள்
    முகந்த கமஞ்சூல் மாமழை, கூாள்போழ் விசும்பில் வள்உறை சிதறி" எனத்
    திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. மிக தொண்டைமான் இளந்திரையனைக்
    பெரும்பாணாற்றுப்படையில் வலிய கடியலூர் கடலின்உருத்திரங்கண்ணனார் நீரை
    முகந்துகொண்டு அழகாகச் பாடிய முகிலினின்றும் பகற்காலத்தே பெய்த மழைத்துளி
    ஊடே மின்னல் ஓடினாற் போன்று விறலியின் தலையில் அணிந்திருந்த பொன்னாலான
    மாலை இருந்ததைப் பாடுகையில் உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப் பகற்பெயல்
    துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
    காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் கடல் நீரை
    முகந்துகொண்டு மேகம் உயர்ந்து நிற்றலை முல்லைப்பாட்டில் நனந்தலை உலகம்
    வளைஇ நேமியோடு வலம்புரி பொறித்த மாதாங்க தடக்கை நீர் செல, நிதிர்ந்த மால்
    போல, பாடுஇமிழ் பளிக்கடல் பருகி வலன் ஏர்பு. கோடு கொண்டு எழுந்த
    கொடுஞ்செலவு எழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுள் காலை எனப் பாடுகிறார்.
    குறிஞ்சிப்பாட்டில் கபிலர் நீர் நிறைந்த கடலின் நீர் குறைபடும்படி
    முகந்துகொண்டு, மெலிதாக இடித்து, முருகனின் வேல் போல மின்னி, மலைமிசை
    பொழிந்த மழையைப் பற்றி நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு அகல் இலு
    வானத்து வீசுவளி கலாலின் முரசு அதிர்ந்தன்ன இன்ழுரல் ஏற்றோடு நிரைசெலல்
    நிவப்பின் கொண்மூ மயங்கி இன் இசை முரசின், சுடர்ப்பூண், சேஎய் ஒன்னார்க்க
    ஏந்திய இலங்கிடுலை எஃகின் மின்மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென" எனக்
    குறிப்பிடுகிறார். கரிகால்வளவனைப் பாராட்டிப் பாடும் வகையில்
    காவிரிபூம்பட்டினச் சிறப்பைப் படம் பிடித்துக்காட்டும் பட்டினப்பாலையில்
    கடியலூர் உருத்திரங்கண்ணனார், வாள் முகந்த நீர் மலைப் பொழியவும், மலைப்
    பொழிந்த நீர் கடல் பரப்பவும், மாரி பெய்யும் பருவம் போல" என நீர்சுழற்சி
    பற்றி மிக அருமையாகக் குறிப்பிடுகிறார்.
    மழை நீரைச் சேமித்து வைப்பதற்காக நீர்நிலைகளை அமைப்பது என்பது முக்கியமான
    ஒன்றாகும்.

    பதிலளிநீக்கு
  9. இவற்றை நம் பழந்தமிழர்
    “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
    நீரு நிலனும் புணரி யோரீண்
    டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
    வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
    வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
    இறைவன் றாட்டுத வாதே யதனால்
    அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
    நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
    தட்டோ ரம்ம விவட்டட் டோரே
    தள்ளா தோரிவட் டள்ளா தோரே” (7)
    நீர் இல்லா நிலத்தில் நீர்நிலையுண்டு பண்ணுதல், ஆறு, ஏரி, குளம்
    முதலியவற்றால் நீர் வருவாயின்றி மழை வருவாயொன்றையே நோக்கிப் புன்செய்
    நிலங்கள் இருக்கின்றது என்று கூறுகின்றனர். மேலும் நிலனெளி மருங்கில்
    நெடிய நீண்ட கரையெடுத்து நீரைத்தேக்கி வேண்டுமளவிற் பயன்படுமாறு கட்டி
    வைக்கின்றனர் என்பதையும் இப்புறநானூற்றுப் பாடல் வரிகள் சுட்டிக்
    காட்டியுள்ளதை அறிய முடிகிறது. மேலும்;
    “நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
    துறுநீர்க் கடம்பின் துணையோர் கோதை” (8)
    சிறுபாணாற்று அடிகள் மக்களால் ஆக்கப்படாமல் இயற்கையாய் அமைந்த நீர்நிலை
    இருந்துள்ளதை விளக்குகிறது.
    மனித உணர்வுகளைப் போன்றே விலங்குகளுக்கும்; உள்ள உணர்வைக் காட்டகத்தே
    களிறு துடிபோலும் அடியையுடைய யானைக் கன்றுகள் இழிந்து தாயும் தந்தையும்
    உண்ண வேண்டும் என்று கருதாது கலங்கிய சிறிய நீரை, முதலில் தன் பிடிக்கு
    ஊட்டிப் பின்பு தான் உண்ணும் என்ற செய்தியை
    “துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
    புரிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முறைத்தனரே” (9)
    இப்பாடல் அடிகள் எடுத்துக்காட்டுகிறது.
    பயிர்த்தொழிலுக்கு நிலத்தை அடுத்து நீர்வளம் மிக முக்கியமான ஒன்றாகிறது.
    ஒரு நாட்டின் வளம் அந்நாட்டின் நீர்வளத்தைக் கொண்டே அமைகிறது. அதனால்
    பண்டைக் காலந்தொட்டே மக்கள் பயிர்த்தொழிலுக்குக் குறைவிலா நீர்வளம் தேவை
    என்பதை உணர்ந்திருந்தனர் என்பதை;
    “நீரின் றமையா வுலகம் போலத்
    தம்மின் றமையா நந்நயந் தருளி” (10)
    இப்பாடல் அடிகள் உணர்த்துகின்றது. மேலும் அருவிநீரும் சுனைநீரும்
    பயிர்த்தொழிலுக்குப் பயன்பட்டன என்பதை;
    “அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்ப” (11)
    என்ற பாடல் அடியின் மூலம் அகன்ற வாய்க்கால் அமைக்கப்பட்டிருந்ததை அறிய முடிகிறது.
    மழையினால் கிடைக்கும் நீரினையும், அருவிகளில் இருந்து கிடைக்கும்
    நீரினையும், சுனையில் சேமித்துப் பின் அகன்ற வாய்க்கால்களின் மூலம் நீர்
    பாய்ச்சியுள்ளனர் என்பதையும் விளக்கி நிற்கின்றன.
    மேலும் நீர் அதிகமான பகுதிகளில் மீன்கள் உலவும், நீர் நிறைந்த குளங்களில்
    குவளையும், தாமரையும் மலர்ந்து விளங்கும் நீர்வளம் வாய்ந்த ஊரின்
    சிறப்பினை;
    “கீழ்நீரான் மீன் வழங்குந்து
    மீநீராற் கண்ணன்ன மலர் பூக்குந்து
    கழிசுற்றிய விளை கழனி
    அரிப்பறையாற் புள்ளோப் புற்று” (12)
    புறநானூற்றுப் பாடல் அடிகள் எடுத்தியம்பியுள்ளதை அறியமுடிகிறது.
    ....................யாக்கைக்கு எல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே:
    உண்டி முதற்றே உணவின் பிண்டம்
    உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே:
    நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
    உடம்பும் உயிரும் படைத்திசினோரே: (புறம்-18) என்கிறார்.
    “உடலுக்கு உணவு கொடுத்தவர்கள் தான் உயிர் கொடுத்தவர்கள். உடல் இருக்க
    உணவே காரணம். உணவு என்பது நீரும் நிலமும் சேருவதால் உருவாக்கப்படுவது.
    ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களே உடம்பையும் உயிரையும்
    படைத்தவர்கள்.” இதுவே இதன் பொருள். இப்பாடல் மொத்தம் 30 வரிகளைக்
    கொண்டது. இதன் தொடக்கத்தில், “வேந்தனே நீ மறு உலகத்தில்
    பெருஞ்seசெல்வத்தோடும், பெரும்பேற்றோடும் இருக்க விரும்புகிறாயா? இந்த
    உலகம் முழுவதையும் வென்று அதன் பேரரசன் ஆக விரும்புகிறாயா? உலகம்
    உள்ளவரை உன் புகழ் நிலைத்து நிற்கவேண்டும் என்று விரும்புகிறாயா?
    அப்படியானால் நான் சொல்வதைக் கேள்” என்றபின் மேற்குறிப்பிட்ட பாடல்
    வரிகளைப் பாடுகிறார். அதன்பின், “நீர்வளத்தையும் நிலவளத்தையும்
    பெருக்கியவர்கள் தான் மக்கள்வளத்தைப் பெருக்கியவர்கள் ஆவர்.

    பதிலளிநீக்கு
  10. ஆகவே நீ நாடு
    முழுவதும் நீர்நிலைகளைப் பெருக்குவாயாக! இதனைச் செய்பவர்கள் தான் மூவகை
    இன்பத்தையும் பெற்று புகழ் பெறுவர்.” என்கிறார்.
    வெள்ளைக்குடி நாகனார் என்கிற இன்னொரு சங்ககாலப்புலவர் சோழன்
    குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம்,
    வருபடைத் தாங்கிப் பெயர்புறத்து ஆர்த்துப்
    பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
    ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே (புறம்-35)
    அதாவது, “போர்க்களத்தில் உனதுபடை எதிரியை வென்று ஆர்ப்பரித்துக்
    கொண்டாடுவதற்கு மூலகாரணம் யாதெனில் உன் நாட்டு உழவர்கள் நிலத்தில் ஆழ
    உழுது விளைவித்த நெற்குவியலே ஆகும்” என்கிறார். இவர் காலம் கி.மு. முதல்
    நுற்றாண்டு. இந்த இரண்டு பாடல்களும் அன்று உணவு உற்பத்தியே, வேளாண்மை
    வளர்ச்சியே நாட்டினுடைய எல்லா வெற்றிற்கும் மூலகாரணம் என்ற உண்மை
    நிலையையும், அதற்கு நீர்நிலைகளைப் பெருக்குவதே சிறந்த வழி என்பதையும்
    தெளிவுபடுத்துகிறது எனலாம். இன்றும் அது பெருமளவு பொருந்தும்.
    இரண்டாம் கரிகாலன் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில்,
    ‘காடு கொன்று நாடாக்கி
    குளம் தொட்டு வளம் பெருக்கி’ என்கிறார்.
    அதாவது கரிகாலன் காட்டை அழித்து, குளம் கட்டி, விளைநிலங்களைப்
    பெருக்கினான் என்கிறார். இவர் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு.
    ஏரிகள் அன்று மிகச்சிறந்த தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்டன என்பதும், ஏரி
    போன்ற நீர்நிலைகளின் அழிவு என்பது மிகப்பெரும் துயரச் சம்பவமாகக்
    கருதப்பட்டது என்பதும் கீழ்கண்ட சங்கப்பாடலால் நாம் அறியலாம். இதனைப்
    பாடியவர் மிக அதிகப் பாடலைப் பாடிப் புகழ் பெற்ற கபிலர் ஆவார். இவரின்
    காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு. பாரியின் பறம்பு நாடு மூவேந்தர்களால்
    தாக்கப்பட்டு தோல்வியடைந்தபின், அந்நாட்டில் உள்ள ஒரு குளம் பராமரிப்பு
    இன்றி, கவனிப்பாரற்றுப் பாழ்படுவதைப் பற்றிப் பாடிய பாடல் இதுவாகும்.
    அறையும் பொறையும் மணந்த தலைய
    எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
    தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
    கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
    தேர்வண் பாரி தண்பறம்பு நாடே
    ‘கூரிய வேலையும் திரண்டதோளையும் உடைய பாரியின் பறம்பு மலையில் உள்ள
    எட்டாம் நாள் பிறையை ஒத்த வளைந்த கரைகளையும் தெளிந்த நீரையும் உடைய
    சிறுகுளம் பாதுகாப்பார் இல்லாமையால் பாழ்படுகிறதே’ எனத் துயரப்படுகிறார்
    கபிலர். எட்டாம் நாள் பிறை வடிவில் அமைந்த குளம், குறைந்த நீளம் உடைய
    கரையைக் கொண்டு அதிகக் கொள்ளளவு கொண்ட நீரைக் கொண்டிருக்கும். அது போன்ற
    சிறப்புமிக்க இச்சிறு குளம் பாழாகிறதே என வருத்தப்படுகிறார் கபிலர்.
    ஆனால் இன்று குளம் அழிவது கண்டு வருத்தப்படும் உயர்ந்த மனிதர்கள் இல்லை.
    தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் மட்டுமின்றி அதனை நன்கு
    பாதுகாத்துப் பராமரிப்பதிலும் சிறந்து விளங்கினர். நக்கண்ணையார் என்ற
    சங்ககாலப் புலவர்,
    துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்
    தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்
    எறிதரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
    பெருங்குளம் காவலன் போல,
    அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே (அகம் 252), என்கிறார்.

    பதிலளிநீக்கு

  11. ‘கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கும் நடு இரவினிலே கூட தூங்காமல்,
    பெரிய குளம் ஒன்று உடைபடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அதன் காவலன்
    போல, என்னை அன்னை பாதுகாத்து வருகிறாள்’ என தலைவி தனது இக்கட்டான நிலை
    குறித்து தோழி மூலம் தலைவனிடம் சொல்லும் அகப்பாடல் இது. கடுமையாக மழை
    பெய்யும்பொழுது குளம் உடைய அதிக வாய்ப்புண்டு. ஆகவே அப்பொழுது அது
    உடையாமல் பாதுகாப்பது மிகமிக அவசியம். உடையும் நிலை ஏற்பட்டால் அதனை
    தடுப்பதும், முடியாதெனில் உரியவரிடம் சொல்லி உரிய ஏற்பாடு செய்வதும் அவன்
    பணி. இல்லையெனில் அது மிகப்பெரிய சேதத்தை உருவாக்கும்.
    ஆகவே தான் கடும்மழையில் நடுஇரவிலும் தூங்காமல் குளத்தை பாதுகாப்பது அவசியமாகிறது.
    இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள்
    மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
    "இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
    பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
    மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்''.

    (வரி.26 - 28)
    இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்" என்பதன் பொருள், முறையாகப்
    பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில்
    பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.
    இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு
    மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,
    "நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
    தட்டோரம்ம இவன் தட்டோரே
    தள்ளாதோர் இவண் தள்ளாதோரே''.

    (புறம் - 18,28 - 30)
    என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார்.
    இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர்
    நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப்
    புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.
    "அறையும் பொறையும் மணந்த தலைய
    எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
    தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ''.

    (புறம்.118)
    எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப்
    புறநானூறு வழி அறிய முடிகிறது.
    https://groups.google.com/g/brailleacl/c/Mutd7ZqS5Ag?pli=1

    பதிலளிநீக்கு