பொறாமை

தமிழர் சமயம்


திருக்குறள் அறத்துப்பால். - இல்லறவியல். - அழுக்காறாமை.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. குறள் 161

மணக்குடவர் உரை: ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். குறள் 162

மணக்குடவர் உரை: விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை. இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். குறள் 163

மணக்குடவர் உரை: தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான். இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. குறள் 164

மணக்குடவர் உரை: அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது. குறள் 165

மணக்குடவர் உரை: அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். குறள் 166

மணக்குடவர் உரை: பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும். இது நல்குரவு தருமென்றது.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். குறள் 167

மணக்குடவர் உரை: அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். குறள் 168

மணக்குடவர் உரை: அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (குறள் 169)

மணக்குடவர் உரை: அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (குறள் 170)

மணக்குடவர் உரை: அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.
 
ஔவியம் என்றால் என்ன? ஔவியம் என்றால் அழுக்காறு , பொறாமை என்பது பொருள்.

ஔவியம் பேசேல் - (ஆத்திச்சூடி 12)

ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு - (கொன்றை வேந்தன் 12)

(பதவுரை) ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல்- (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்திற்கு, அழிவு - கேட்டைத் தருவதாகும்.

(பொழிப்புரை) ஒருவன் பொறாமை வார்த்தை பேசுவது அவன்செல்வத்திற்கு அழிவைத் தரும்.

இஸ்லாம்


அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் மீது ,அவர்கள் மக்களைப் பொறாமைப்படுகிரார்களா ? - (அல்குர் ஆன் 4:54)

பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ - (திருக்குர்ஆன் 113:5)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும். (அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) அபூதாவூத் 4257)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானின் உள்ளத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேர்ந்து இருக்க மாட்டாது. - (நூல்: இப்னு ஹிப்பான் 4606)

கிறிஸ்தவம் & யூதமதம் 

'பொறாமையோ எலும்புருக்கி’ - (நீதி 14 : 30) 

உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? - (நீதிமொழிகள் 27:4)

பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம் - (ரோமர் 13 : 13)

 


ஜியோன்களின் இரகசிய திட்டம் 



5 கருத்துகள்:

  1. ஸஹீஹ் புகாரி : 1409

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).'

    அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

    பதிலளிநீக்கு
  2. தமிழர் சமயம்
    உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
    கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
    கடலோடி மீண்டும் கரையேறினால் என்
    உடலோடு வாழும் உயிர்க்கு - நன்னூல் வெண்பா : 6

    விளக்கம்: கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் ?


    இஸ்லாம்
    அல்லது மனிதர்களை அவர்களுக்கு அல்லாஹ் தன் பேரருளால் கொடுத்தவற்றின் மீது அவர்கள் பொறாமைப்படுகிறார்களா? .. குர்ஆன் 4:54

    பதிலளிநீக்கு
  3. அடுத்தரிடம் உள்ளது கண்டு பொறாமை?

    தமிழர் சமயம்
    உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
    கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
    கடலோடி மீண்டும் கரையேறினால் என்
    உடலோடு வாழும் உயிர்க்கு - நன்னூல் வெண்பா : 6

    விளக்கம்: கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் ?


    இஸ்லாம்
    அல்லது மனிதர்களை அவர்களுக்கு அல்லாஹ் தன் பேரருளால் கொடுத்தவற்றின் மீது அவர்கள் பொறாமைப்படுகிறார்களா? .. குர்ஆன் 4:54

    கிறிஸ்தவம்

    பதிலளிநீக்கு
  4. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானின் உள்ளத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேர்ந்து இருக்க மாட்டாது. நூல்: இப்னு ஹிப்பான் 4606.



    அல்பானி மற்றும் ஷுஐப் அல்-அர்ணாஊத் ஆகிய தற்கால ஹதீஸ் துறை ஆய்வாளர்கள் இதனை ஹஸன் தரத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  5. (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்.
    அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) அபூதாவூத் 4257

    கசப்புக்காய் தேனைப் பாழாக்கி விடுவதைப் போன்று பொறாமை இறைநம்பிக்கையைப் பாழாக்கி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முஆவியா பின் ஹீதா

    இந்தச் செய்தி அபூமன்சூர் அவர்களின் முஸ்னது தைலமீ எனும் நூலில் (பாகம் 2 பக்கம் 100) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் மகீஸ் பின் தமீம் என்பார் இடம் பெற்றுள்ளார். இவரது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இதை அபூஹாதம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
    (இலலுல் ஹதீஸ் பாகம் 1 பக்கம் 442)

    பதிலளிநீக்கு