"நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம்" என்ற VIRAL பதிவிற்கு இந்து புத்தகங்களின் பதில்கள்

இந்துவாக பெருமை கொள்ளுங்கள்!
அதோடு கொஞ்சம் அதன் உண்மை நிலையை வாசியுங்கள், ஆய்வு செய்யுங்கள்.


இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...
கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...
மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...

கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...
நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...
கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...

காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...
சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....

உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....




1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்?

அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் சஸம்ஷயாத்மா வினஷ்யதி நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மன - கீதை 4:40

பொருள்: ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை. - பகவத் கீதை 4.40

பதில் : இறை உணர்வை அடையாதவர்களுக்கு இன்பம் இல்லை எனவே குற்றம் என்றுதானே இந்துமதம் சொல்கிறது.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்?


பதில்: கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது 
என்பது இந்துமத மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் பழமொழி. - கோவில் எதற்கு? 

ஆலயம் தொழுவது சாலமும் நன்று - ஆத்திச்சூடி 
என்பதற்கு என்ன பொருள்?

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்?

பதில்: மற்ற மதமும் கட்டாய படுத்துவதில்லை, எல்லாமே வசதி வாய்ப்பை பொறுத்துதான். மேலும் தமிழர்களை அவர்கள் கட்டயப் படுத்த முடியாது ஏனென்றால் இந்து வேறு சைவம் வேறு.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்?

பதில்: வேதத்தை விட்ட அறமில்லை – வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாம் உள – தருக்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே! (திருமந்திரம் 51)

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்?

பதில்: திருநீர் இடுவதும், ராமம் போடுவதும், கையிலும் கழுத்திலும் கயிறு காட்டுவதும், காது குத்துவதும், தாலி கட்டுவதும், தலையில் சிண்டு வைப்பதும், பூணூல் போடுவதும் தாழ்ந்த சாதிகளை தவிர அனைவரும் கட்டாயம். தாழ்ந்த சாதிகள் எதுவும் அணியததே இங்கு அடையாளம் தான்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

பதில்: இந்தியாவிற்கு வாரணாசியிலும், தமிழகத்திற்கு காஞ்சியிலும் இருக்கும் சங்கராச்சாரிகள் காதில் விழாமல் பேசுங்க சகோ. இப்பொழுது ஆர்.எஸ்.எஸ் அதை கையில் எடுக்க முயற்சிப்பது அனைவரும் அறிந்தது.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

பதில்: பிறகும் நித்தியானந்தா போன்றவர்கள் பின்னே செல்பவரும் இந்துக்களே. உண்மையில் இது போன்றவர்களை தலையை துண்டிக்கும் தைரியம் கொண்ட மதங்களும் உண்டு. தமிழர்களுக்கு இதுபோன்ற சாமியார்ளும் தேவையில்லை, ஏமாற்றமும் தேவையில்லை.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.?

👉மரமும் கடவுள், 👉கல்லும் கடவுள், 👉நீரும் கடவுள்(கங்கை), 👉காற்றும் கடவுள் (வாயு), 👉குரங்கும் கடவுள் அனுமன், 👉நாயும் கடவுள் (பைரவர்), 👉பன்றியும் கடவுள் (வராகம்).

பதில்: என்ன? இழி பிறவி என்று ஏதுமில்லையா?

‘‘ப்ராஹ்மனோஷ்ய முஹமாஸீத் பாஹு ராஜ்ன்யூ க்ரூதஹ் ஊரு ததஸ்ய்ய யதைவஷ்யஹ் பத்பியாம் ஸுரூத்ரோ அஜாயத’’ (ரிக் வேதம் 10:90:12)

பொருள்: கடவுளின் முகத்திலிருந்து பிராமணர்களும் அவனின் கரங்களிலிருந்து சத்திரியர்களும் முதுகிலிருந்து வைஷ்யர்களும் பாதங்களிலிருந்து சூத்திரர்களும் பிறந்தனர்.

இயற்கையாக தோன்றியது என்று ஏதுமில்லை, அனைத்தும் படைக்கப் பட்டது என்பது இந்து வேதேங்களின் கூற்று.

இயற்கை கடவுளா?

'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே' - யஜீர்வேதா அதிகாரம் 40 :9 
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.'

9. நீயும் கடவுள், நானும் கடவுள்... பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

பதில்: நீயும் நானும் கடவுள் என்றால்,

"எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக் கிறேன். துயரப் படாதே.” (கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்) என்பது கடவுளுக்கு கடவுள் இட்ட கட்டளையா?

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பண்ணிருதிருமறை?

பதில்: என்னிடம் 12 வீடு உள்ளது ஆனால் நடைபாதயில் உறங்குகிறேன் என்பது போல் உள்ளது. மக்களிடம் போதிக்க படாத மக்களை பண்படுத்த பயன்படாத நூல்கள் 1000 இருந்து என்ன பயன். பண்ணிருதிருமறை சைவ சமய நூல்.. சைவத்திற்கும் வைணவத்திற்கும் வரலாற்றில் யுத்தம் நடந்தது ஏன்?

பெண் ஆசையை ஒழிக்க 👉இராமாயணம், -
மண் ஆசையை ஒழிக்க 👉மகாபாரதம்,

பதில்: ராமயாணம் மற்றும் மகாபாரதங்கள் வேதங்கள் இல்லை, இதிகாசங்கள் இரண்டுக்கும் மாபெரும் வேறுபாடு உள்ளது. நான் சொல்லல, வேதாந்திகள் சொல்வது.

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த 👉பகவதம்,
அரசியலுக்கு 👉அர்த்தசாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு 👉காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு 👉சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு 👉வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு 👉யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு 👉வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு 👉கோள்கணிதம்.

பதில்: இவை அனைத்தும் வெவ்வேறு கொள்கை மற்றும் வெவ்வேறு பிராந்திய பண்பாடு மற்றும் கலாச்சார நூல்களின் தொகுப்பு, ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் அடிப்படை கொள்கையில் முரண்கள் பல.

11. யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்...?

பதில்: தமிழகத்தல் சமண மதம் அழிந்த வரலாறும் சைவ வைணவ மதங்களுக்கான இடையில் நடந்த யுத்தங்களும் பதியபடாமல் இல்லை. ரிக் யசுர் வேதங்களே மத யுத்தத்தின் வரலாற்று பதிவுகளே..

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து "கொல்லாமை " "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்?

புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே! - சிவ வாக்கியர் பாடல் 147

13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது?

பதில்: வேதங்களே புனிதமானவை என்று கீதை சொல்கிறது 

முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்?

பதில்: அனைத்து மதத்தினரும் முயற்சிப்பது இதற்காகவே.. யார் வழி சரி என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று..

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.?


பதில்: சகிப்புத்தன்மைக்கும் முறையான வரையறை அற்ற தன்மைக்கும் வேறுபாடுகள் உண்டு.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்?

எந்த மதம் இதற்கு விதி விலக்கு ?

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......

எல்லாவற்றையும் தக்க முறையான காரணத்துடனும் ஆதரத்துடனும் மறுத்து கொண்டேயும் போகலாம்

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்?

இந்து இயற்க்கையாலன் அல்ல..! ஓர் இறைவன் மேலே இருக்கிறான் என்பது இயற்கையாக எல்லோர் மனதிலும் உள்ள ஓர் கருத்துக்கு முரணான பல கடவுள் கொள்கை கொண்டவன் எப்படி இயற்கையாலனாவான்? அவரவரின் நம்பிக்கையை புகழ்வது பிழையில்லை, மற்றவரை இழிப்பது பிழை..

முடிவுரை

இந்த பதிவு சொல்லும் அனைத்து காரணங்களும் புரிதல்களும் அறியாமையின் வெளிப்பாடு ஆகும் அல்லது தெரிந்தே மறைக்கும் செயலாகும். மேலும் எதிர்மறை கருத்துக்களை நேர்மறையாக சித்தரிக்கும் முயற்ச்சி.. இவை அனைத்தும் தமிழன் ஏன் இந்துவாக இருக்க கூடாது என்பதற்கான பட்டியல்.

நடைமுறைக்கு ஏற்ற எதார்த்தமான சாதிய ஏற்ற தாழ்வற்ற முரண்பாடற்ற நெறியை பின்பற்றுவதில் தெளிவு பெறுவோம்.

6 கருத்துகள்:


  1. சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இதோ உங்கள் அறிவுரைகளுக்கு தக்க அறிவுரைகள்
    பகவத்கீதையிலிருந்தும் ஏன் திருக்குர்ஆனிலிருந்தும் கொடுக்கிறேன்
    செவிதாழ்த்திக் கேளுமய்யா?


    1. "எனைத் தவிர வேறு தெய்வம் இந்த உலகத்தில் இல்லை" என்கிறது ஒரு
    தெய்வம்!

    சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே தாங்கள் இங்கு சுட்டிக்காட்டும் வாக்கியம்
    இந்துமத்திலும் உள்ளது. அதாவது உங்கள் கிருஷ்ண பரமாத்மா மனிதர்களை நோக்கி
    தன்னையே கடவுள் என்றும் தன்னிடமே சரண் புக வேண்டும் என்றும் கூறுகிறார்.
    அப்படியானால் அவர் தன்னை மட்டுமே கடவுள் என்றுதானே கூறுகிறார்.

    பகவத் கீதையில் கிருஷ்ணன் தன்னை ‘பரமேஸ்வரன்' என்று பிரகடனப்படுத்திக்
    கொண்டார்; அதாவது, அவருடைய பக்தர்கள் அவரை "தேவாதிதேவன்'
    கடவுளர்க்கெல்லாம் கடவுள் என்று நம்புகின்றனர்.

    ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் - 'நான் எல்லாவற்றுக்கும் பிதா,
    என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை
    வழிபடுகிறார்கள்' (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)


    இதையே பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான் அதை மறுக்கிறீரா?

    எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான்
    உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன். துயரப் படாதே." (கீதை 18-
    ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்)


    இந்துக்களின் வேதங்களின் அடிப்படையில் பார்த்தால் மனிதன் செய்யும்
    பாவங்களை விடுவிப்பவர்தானே கடவுளாக முடியும். சரி சற்று யோசியுங்கள்
    நீங்கள் 10 பாவங்களை செய்கிறீர்கள் அந்த 10 பாவங்களையும் 1 கடவுள்
    மன்னிப்பாரா அல்லது 10 கடவுள்களும் ஒவ்வொரு பாவங்களை மன்னிப்பார்களா?
    உங்களுடைய ஒரு பாவம் கிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை எனில் அவர்
    மன்னிக்கமாட்டார் அப்படியென்றால் மற்ற 9 பாவங்களை முறையே ஈஸ்வரன்,
    விநாயகர், முருகன் மன்னிக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம் இப்படிப்பட்ட
    நிலையில் கிருஷ்ணனுக்கு என்ன மரியாதை இருக்கிறது.


    சரி, சிவன் ஒரு பாவத்தை மன்னிக்கவில்லை உடனே பார்வதியிடம் தாங்கள்
    செல்கிறீர்கள் அவரும் மன்னிக்கவில்லை உடனே அர்த்தநாரீஸ்வரனிடம்
    செல்கிறீர்கள் அந்த இருவரும் சிவன் மற்றும் பார்வதியின் பாதி அங்கமே
    அப்போ சிவனும் பார்வதியும் தனித்தனியாக இருக்கும் போது மன்னிக்கமாட்டேன்
    என்று கூறிய வாக்கை அர்த்தநாரீஸ்வரராக இருக்கும்போது மன்னிப்பார்களா?
    தங்கள் வாக்கை மாற்றிக்கொள்வார்களா? வாக்கு மாற்றுவது இறைவனின் இயல்பா!
    எனவேதான் இஸ்லாம் ஒரு கடவுள்தான் உள்ளது மற்றொரு கடவுள் இல்லை என்று
    கூறுகிறது. மேலும் அல்லாஹ் என்ற சொல் அரபுச் சொல்லாகும் அதற்கு தமிழ்
    விளக்கம் கொடுப்பதாக இருந்தால் அது ”இறைவன்” என்றும், கிருத்தவ பாணியில்
    கூறுவதாக இருந்தால் ”பிதா” என்றும் ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால்
    ”GOD” என்றும் தான் அர்த்தம்.


    2. தெய்வத்திற்கு, தான் தான் தெய்வம் என்றால், எப்படி அந்த தெய்வத்திற்கு
    மற்ற தெய்வங்கள் இருப்பது தெரியும்?

    ஒரு தெய்வம் தான் உலகத்தில் உள்ளது பல தெய்வம் இருந்தால் தெய்வீகம்
    எப்படி வரும் அப்படியானால் பல தெய்வங்கள் ஒன்றோடொன்று கருத்து வேறுபாடு
    கொண்டு சண்டையில் நிற்கும் இதற்கு ஆதாரம் தங்களிடமே உள்ளதே அதாவது மாம்பழ
    கதைதான்” (ஈஸ்வரன், பார்வதி, விநாயகர், முருகன் தகராறுகள்)

    பதிலளிநீக்கு

  2. 3. அதுமட்டுமா? "என்னைத் தவிர மேலேயோ,
    கீழேயோ................இல்லை........", என்றெல்லாம் ஒரு தெய்வம்
    சொல்கிறதென்றால், அத்தகைய நிலை, உண்மை தெய்வத்திற்கு இருக்காது.

    சகோ. வேதபிரகாஷ் கிருஷ்ணனின் வாக்கை பாருங்கள்
    'நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம்
    என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப்
    பாவங்களினின்றும் விடுபடுகிறான்' - (கீதை 10-ஆம் அத்தியாயம், 3-ஆம்
    சுலோகம்)


    திருச்சிற்றம்பலம்
    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ், சோதியை யாம்பாடக்கேட்டேயும்
    வாள்தடங்கள், மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான், மாதேவன்வார்கழல்கள்
    வாழ்த்திய வாழ்த்தொலிபோய், வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி
    மெய்மறந்து , போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன், ஏதேனும்
    ஆகாள் கிடந்தாள் என்னே என்னே, ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155

    சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இந்த திருச்சிற்றம்பலப் பாடலுக்கு
    விளக்கமென்ன?

    பதிலளிநீக்கு

  3. 4. எனவே தெய்வத்திற்கேத் தெரிகிறது போலும், மற்ற தெய்வங்கள் இருப்பது!

    மனிதன் குலம், கோத்திரமாக வாழந்து வருபவன் அவன் கடவுளை அவ்வாறுதான்
    எடைபோடுகிறான் எனவேதான் ஒரு தெயவம் என்று கூறாமல் அவனுக்கு அம்மா, அப்பா,
    பிள்ளை என்று குடும்பத்தை உருவாக்கிவிடுகிறான். விநாயகரை கடவுள்
    என்கிறீர்கள் சரி அந்த விநாயகருடைய தலையை யுத்த களத்தில் வெட்டி
    விடுகிறார்கள் ஆனால் சக கடவுள்கள் அவரை காப்பாற்ற முடியவில்லை உடனே சிவன்
    யானையின் தலையை அணிவித்து அவரை யானைமுகத்தான் என்று கூறுகிறார். இந்த
    கதையை படிக்கும் போது ஒரு கடவுள் மற்ற கடவுளுக்கு குறித்த நேரத்தில் உதவ
    இயலவிலலை என்றுதானே வருகிறது. அப்படியானல் கடவுள்களுக்கு பலவீனம் உள்ளதோ?
    ஆனால் கடவுள் எனப்படுபவருக்கு தீங்கு ஏற்படாது என்று இஸ்லாம் கூறுகிறது.
    எனவேதான் உங்கள் கொள்கையை மறுக்கி றோம்.


    5. பிறகு தெய்வத்தை விட்டு, மனிதன் நிலைக்கு வந்தால், அவன்
    அத்தெய்வத்திற்கு பெயர் வைக்க ஆரம்பிக்கிறான்.

    கிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்பட்டார்
    என்று சட்ட மேதை அம்பேத்கார் கூறுகிறார்.

    இது மனித இயல்பு மனிதனை திருத்த முடியாது. ஆனால் ஆதிபராசக்தி என்று
    கூறுகிறீர்கள் ஆதிபராசக்தி என்பதற்கு அர்த்தமென்ன ஆதி – பரா – சக்தி
    (அதாவது உலகம் தோன்றியதற்கு முன் உள்ளது ஆதி எனப்படும் பரா என்பது
    எல்லாவற்றையும் பெரியது எனப்படும், சக்தி என்பது எதற்கும் இல்லாத ஆற்றல்
    எனப்படும்) இதற்கு முழுமையாக விளக்கம் தர வேண்டுமானால் உலகம்
    தோன்றியதற்கு முன் தோன்றி எல்லா வஸ்துக்களையும் விட பெரிய அளவு கொண்டு
    ஒரு மிகப் பெறும் ஆற்றல் படைத்தவன் என்று பொருள்படும். அதைதான் ஈஸ்வரன்,
    பிதா, அல்லாஹ் என்று ஆதிகாலத்தில் மக்கள் கூறிக் கொண்டு வந்தனர் ஆனால்
    பிற்காலத்தில் வந்த மனிதர்கள்தான் அந்த ஆதி+பரா+சக்தி-யை முக்கடவுளாக
    அதாவது 3 கடவுள்களாக பிரித்து 10 கைகளை கொடுத்து ஒரு புராணத்தையும்
    கொடுத்து அதன் ஒவ்வொரு கைகளிலும் ஆயுதத்தை கொடுத்து அழகு பார்த்தன.
    சகோதரர் வேத பிரகாஷ் அவர்களே இந்த மனிதர்களை தாங்கள் என்ன கூற இயலும்,
    அல்லது அந்த ஆதிபராசக்தி தன்னை விக்ரஹமாக வணங்க கூறியதா?

    இதோ விக்ரஹ் வணக்கத்தை கூடாது என்று பறைசாற்றும் பைபிள் வசனம்

    ஏசாயா 44:9 (Isaiah 44:6,9-20)9.
    விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால்
    இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும்,
    ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத்
    தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;
    அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

    (பைபிள்) சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
    3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையு
    மாயிருக்கிறது.

    5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும்
    முகராது.

    6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும்
    நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

    7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும்,
    அவைகளைப்போலவே இருக்கி றார்கள்.

    ஆனால் பாவம் கிருத்தவ நண்பர்கள் இயேசு நாதர், மரியாள், மற்றும்
    சிலுவைகளை விக்ரஹங்களாக வழிபடுகின்றனர் அந்தோ பரிதாபம்!


    6. நான் சொன்ன பெயரில் உள்ளதுதான் தெய்வம், மற்றபெயர்களில்
    இருப்பதெல்லாம் தெய்வம் இல்லை என்று மனித சண்டை ஆரம்பித்துவிடுகிறது!
    தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டைதான்!

    நான் அல்லாஹ்தான் கடவுள் என்கிறேன் அது பெயர் இல்லை மாறாக அது மேலே
    குறிப்பிட்ட படி தமிழில் ”இறைவன்” என்றும், கிருத்தவ பாணியில் கூறுவதாக
    இருந்தால் ”பிதா” என்றும் ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால் ”GOD” என்றும்
    தான் அர்த்தம். மேலும் ரஹ்மான் என்கிறோம் அதற்கு அளவற்ற அருளாளன் என்று
    பெயர் ரஹீம் என்று கூறுகிறோம் நிகரற்ற அன்புடையோன் என்று பெயர். இன்னும்
    அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் உள்ளன அதில் உள்ள
    ஒவ்வொரு பெயருக்கும் இறைவனுடைய தன்மைகள்தான் பொருளே தவிர அவை இறைவனின்
    பெயரல்ல! இதோ அல்லாஹ்வின் பெயர்களின் தன்மைகள் கொண்ட அஸ்மாவுல் ஹுஸ்னா
    அட்டாச்மென்டை காணவும்!

    சரி, கிருஷ்ணன் என்று கூறுவதற்கு என்ன பொருள்,
    ராமன், சீதை, முருகன், என்பதற்கு என்ன பொருள்

    பதிலளிநீக்கு


  4. 7. அத்தகைய ஆணவம் மேன்மேலும் பொங்கியெழும்போது, "என் தெய்வம்தான்
    தெய்வம், அதுவும் உண்மையான தெய்வம், உனது தெய்வம், தெய்வம் இல்லை", என்று
    எக்காளமிட ஆரம்பித்து விடுகிறான் நம்பிக்கையாளான பக்தன்!

    இங்கே ஆணவம் என்ற பேச்சுக்கு இடமில்லை அய்யா! என் புறத்தில் உள்ள
    நியாயத்தை பேசுகிறேன் நீங்கள் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை
    பேசுகிறீர்கள் இதில் என்ன ஆணவம். நான் அல்லாஹ் (இறைவன்) கடவுள்
    என்கிறேன் அந்த சர்வசிருஷ்டியைத் தவிர யாரும் சிருஷ்டிக்க முடியாது
    என்கிறேன் ஆனால் தாங்களோ பல கடவுள்கள் உள்ளன என்கிறீர்கள். நான் ஆணவம்
    கொள்வதாக இருந்தால் தாங்கள் என்ன கொள்கிறீர்கள் ஆணவமா? அல்லது அடக்கமா?
    என்னய்யா! உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா?


    8. ஆகவே, எப்பொழுது அம்மாதிரி தெய்வத்திற்காக நம்பிக்கையாளர்கள்
    சண்டைபோடுகிறர்களோ, வேதபிரகாஷ் வேதனைப் படுகிறான்.

    இங்கு வேதபிரகாஷ் மட்டும் வேதனைப் படுகிறான் என்று கூறுகிறீர்கள்
    உங்களுக்கு மட்டும்தான் உள்ளம் உள்ளதோ எனக்கு இல்லையோ நானும்
    வேதனைப்படுகிறேன் வேதனைப் படுபவர்களும் வேதனைப்படுகிறார்கள் அதுதான்
    உண்மை!

    பதிலளிநீக்கு


  5. 9. இந்து-முஸ்லிம் உரையாலுக்கு தாராளமாக இங்கே வாருங்கள்:
    http://islamindia.wordpress.com/ தொடருவோம், அலசுவோம், எந்த
    பிரச்சினையும் இல்லை.

    என்னிடமும் வளைப்புக்கள் உள்ளன அதையும் சற்று படியுங்கள், தங்களுக்கு
    ஆங்கிலம் தெரியவில்லை எனில் தமிழ் படிக்கலாம், தமிழ் தெரியவில்லை எனில்
    ஆங்கிலம் படிக்கலாம். மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறுபாண்மை
    இஸ்லாமி யர்களின் பங்கையும் படிங்கலாம். ஓரளவு தெளிவும் கிடைக்கும்.

    http://islamicparadise.wordpress.com
    http://amazingmuslims.wordpress.com
    http://salemexpress.blogspot.com

    10. ஆண்டவனின் கிருபையினால் "கடைசி தினம்" வரும் வரை, மரணம் இல்லை. ஆகவே,
    மரணிக்கும் வரை பிரச்சினை செய்யவேண்டாம். இதற்கும் "தமிழன்" பெயரை
    இழுக்கவேண்டாம்!

    இந்த கட்டுரையின் சாரமும் உங்களின் முதல் முக்கிய நோக்கமுமே வம்புக்கு
    இழுப்பதுதான் அப்படி வம்புக்கு இழுத்துவிட்டு கிளைமேக்சில் (Climax)ல்
    பிரச்சினை வேண்டாம் என்பது நியாயமாகப்படுகிறதா? அன்புச் சகோதரரே!


    சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இதோ உங்களுக்கு அழகிய அறிவுரை உங்கள்
    பகவத்கீதையிலிருந்தே கொடுக்கிறேன் செவிதாழ்த்திக் கேளுமய்யா?

    பகவத் கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்
    எல்லா ரகஸ்யங்களிலும் மேலான பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு
    மீட்டுமொருமுறை சொல்லுகிறேன், கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டனானதால்,
    உனக்கு நன்மை சொல்லுகிறேன்"

    அல்குர்ஆன்: 10:31,32
    (நபியே! இவர்களிடம்) கேளும்: “வானத்த்லிருந்தும் பூமியிலிருந்தும்
    உங்களுக்கு உணவளிப்பவன் யார்? மேலும் உங்களிடமுள்ள கேட்கும் மற்றும்
    பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன? மேலும்
    உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும்
    தோற்றுவிப்பவன் யார்? இன்னும் அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன்
    யார்?” அதற்கவர்கள், ‘அல்லாஹ்தான்’ எனப் பதில்.கூறுவார்கள்
    “அப்படியாயின் நீங்கள் (உண்மைக்குப் மாறாக நடப்பதை) தவிர்த்து கொள்ளக்
    கூடாதா?” என்று கேளும். ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன்.
    இந்த உண்மையை கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன
    மிஞ்சியிருக்கும்?


    பகவத் கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்
    எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான்
    உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடு விக்கிறேன். துயரப் படாதே."


    திருக்குர்ஆன் 25:70
    ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்)
    செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களு டைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி
    விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க
    கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

    கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்
    புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந்
    துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே
    திறமையானது

    திருக்குர்ஆன் 6:54
    நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள்
    மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும்,
    உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்;
    உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப்
    பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன்
    (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.


    பகவத் கீதையில் கடவுள் தன்மை

    பகவான், 'எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப்
    பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்' என்கிறார்


    பகவத் கீதை, 5-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்
    ''மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும்
    அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவ துமில்லை.
    எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.''


    இஸ்லாம்
    லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ்

    பொருள்
    வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்)
    அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்!

    பதிலளிநீக்கு