முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக

 குர்ஆன் வசனம் 8:65 "நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக…" (முஃமின் என்றால் நம்பிக்கையுள்ள முஸ்லிம் என்று பொருள்). இவ்வாறு வன்முறையைத் தூண்டும் இஸ்லாம் எப்படி அமைதி மார்க்கமாக முடியும்?

போருக்கு ஆர்வமூட்டுவது இஸ்லாம் மட்டும்தானா?

தமிழர் சமயம்

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை. (குறள்: படைமாட்சி - 761)

உரை: எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து. (குறள்: 767)

தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.

சனாதனம்

அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||கீதை 2-18||

பொருள்: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: “ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

கிறிஸ்தவம் / யூதம்

16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)

எனவே சமயங்கள் அனைத்தும் அரசியலையும் போதிப்பதால், அதில் போருக்கு வரும் எதிரிகளை கையாளும் விதிகளையும் கூறுகிறது. இக்கேள்வி யின் மூலமான குர்ஆன் 8:65 என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

சரி இந்த வசனத்தின் சூழலை அறிவோம் வாருங்கள்!

8:58. (உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

8:60 அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.

8:61 அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

8:62 அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.

நபிகளார் காலத்தில் எதிரிகள் போட்ட உடன்படிக்கையை மீறுவார்கள் என்று அறியும் பொழுதும், அவர்கள் சமாதானத்துக்கு வர மாட்டார்கள் என்ற நிலையில் போருக்கு ஊக்குவிக்கும்படி இந்த வசனம் சொல்கிறது.

எவன் வேடுமானாலும் அடிக்கட்டும், உங்களுடன் போடும் ஒப்பந்தத்தை மீறட்டும் ஆனால் நீங்க அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினால் அதற்க்கு பெயர் தான் அமைதி மார்கமோ? அப்படி பார்த்தால் உலகில் எக்காலத்திலும் அமைதியான சமயம் மட்டுமல்ல, அமைதியான அரசாங்கமும் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக