மற்ற மொழிகளைப் போல் அல்லாமல், தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் வரையறை உண்டு.
எனவே தெய்வம் என்ற சொல்லுக்கு தொல்காப்பியம் கூறும் இலக்கணம் என்பது,
பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால்பி ரிந் திசைக்கும். - (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 1:4)
உரை: பெண்மையைச் சுட்டியதும் ஆண்மை திரிந்ததுமாகிய மக்கட் சுட்டுடைய பெயர்நிலைச் சொல்லும் தெய்வத்தன்மையைக் கருதிவரும் பெயர்நிலைச் சொல்லும் இன்னபால் என அறியப்படும் பயனிலை பற்றிய ஈறுகள் அவை தமக்கில. ஆதலின் அவை உயர்திணையிடத்துப் பால் அறிவிக்கும் ஈறுகளொடு பிரிந்து இசைக்கும்.
குறிப்பு: ஆணினம் மற்றும் பெண்ணினம் என்ன திணை என்று இந்த பாடல் விளக்க வில்லை, மாறாக உடல் உறுப்பால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் இருக்க கூடிய மற்றும் உடல் உறுப்பால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் இருக்க கூடிய மனித பிறப்புகளின் தினை பற்றியும் இந்த நான்கிலும் அடங்காத தெய்வத்தின் திணை என்ன என்று விளக்கும் பாடல் இது. இறைவன் உயர் திணையை சார்ந்தவன் ஆனால் ஆணுமல்ல பெண்ணுமல்ல இடைப்பட்டவனுமல்ல என்பதே இதன் விளக்கம்.
அதே போல
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)
பொழிப்புரை: `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன் என்கிறது திருமந்திரம்.
எனவே பெண் எனும் இலக்கணத்துக்கு தெய்வம் எனும் இலக்கணத்துக்கு அணு அளவும் தொடர்பில்லை. எனவே தெய்வம் என்பது புராணங்களில் உள்ளதே தவிர, தமிழர் மறை நூல்களிலும் வெதமத ரிக் யஜுர் சாம நூல்களிலும் குறிப்பிடப் படவில்லை. எனவே இந்த கருத்தாக்கம் மனிதர்களின், கைவண்ணம். பொய்யாக இவர்களே உருவாக்கிய ஒன்றை இவர்களே நம்புவதும் மதிப்பதும் அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
இந்தியாவில் பெண் அடிமை பட்டு இருந்தார்கள் சில உதாரணங்கள் கீழே.
பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் ! நீங்க வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.
- உடன்கட்டை ஏறுதல் பற்றி நீங்கள் அறிந்திருக்க கூடும். இல்லை என்றால் தேடி படியுங்கள்.
- பார்ப்பன பெண்கள் கணவனை இழந்த பின் எவ்வாறு நடத்தப் பட்டார்கள் என்று உலகறியும்.
- திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப் பட்டு இருந்ததை போராடி நீக்கியதும் நூறாண்டுக்குள் தான் நடந்தேறியது.
- வரதட்சணை கொடுமையினால் எத்தனை பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஆய்வு செய்தால் அதிர்ந்து போவீர்கள்.
- பெண்களை படிக்க விடாத நிலை இதே இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தது என்பதையும் நாம் அறிவோம்.
இவைகளெல்லாம் நீங்கள் கூறிய இந்தியாவில் சமீப காலத்தில் தான் மாற்றம் பெற்றது என்பதை அறிக.
இந்தியா என்னும் பொழுது இந்து மதத்துடன் இணைக்காத நீங்கள் சவூதி என்றதும் இஸ்லாத்துடன் இணைப்பது முரணாக உள்ளது. நீங்கள் கடந்த நூற்றாண்டில் போராடி செய்த விடயங்களை எல்லாம் இஸ்லாம் 1460 வருடத்துக்கு முன்பே செய்துவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக